கோதை நாச்சியார் தாலாட்டு
( ஆசிரியர் யார் என தெரியவில்லை)
|
தென்புதுவை விஷ்ணுசித்தன் திருவடியை நான்தொழுது இன்பமுடன் தாலாட்டு இசையுடனே யான்கூறத் | 1 |
|
தெங்கமுகு மாலானைச் சிறந்தோங்கும் "ஸ்ரீ ரங்கம் நம் பெருமாள்" பாதம் நமக்கே துணையாமே. | 2 |
|
சீரார்ந்த கோயில்களும் சிறப்பாகக் கோபுரமும் காரார்ந்த மேடைகளும் கஞ்சமலர் வாவிகளும் | 3 |
|
மின்னார் மணிமகுடம் விளங்க அலங்க்ருதமாய்ப் பொன்னாலே தான்செய்த பொற்கோயில் தன்னழகும் | 4 |
|
கோபுரத்து உன்னிதமும் கொடுங்கை நவமணியும் தார்புரத் தரசிலையும் சந்தனத் திருத்தேரும் | 5 |
|
ஆரார் தலத்தழகும் அம்மறையோர் மால்திரமும் சீரார் தனத்தழகும் சிறப்பான உத்ஸவமும் | 6 |
|
வேத மறையோரும் மேன்மைத் தலத்தோரும் கீத முறையாலே கீர்த்தனங்கள் தான்முழங்க | 7 |
|
பாவலர்கள் பாமாலை பாடி மணிவண்ணன் ஆவலாய்ப் போற்றி அனுதினமும் தான்துதிக்கக் | 8 |
|
கச்சுமுலை மாதர் கவிகள் பலபாட அச்சுதனர் சங்கம் அழகால் தொனிவிளங்க | 9 |
|
தித்தியுடன் வீணை சகமுழுதுந் தான்கேட்க மத்தளமுங் கைமணியும் அந்தத் தவிலுடனே | 10 |
|
உத்தமர் வீதி உலாவியே தான் விளங்கப் ...................................................................... | 11 |
|
பேரிகையும் எக்காளம் பின்பு செகண்டிமுதல் பூரிகை நாதம் பூலோகம் தான்முழங்கத் | 12 |
|
தும்புருவும் நாரதரும் துய்யகுழ லெடுத்துச் செம்பவள வாயால் திருக்கோயில் தான்பாட | 13 |
|
அண்டர்கள் புரந்திரனும் அழகு மலரெடுத்துத் தொண்டர்களும் எண்டிசையுந் தொழுது பணிந்தேத்த | 14 |
|
வண்டுகளும் பாட மயிலினங்கள் தான்பாடத் தொண்டர்களும் பாடத் தொழுது பணிந்தேத்த | 15 |
|
பண்பகரும் பாவலர்கள் பல்லாண் டிசைபாட செண்பகப்பூ வாசனைகள் திருக்கோயில் தான்வீச | 16 |
|
இந்திரனும் இமையோரும் இலங்கும் மலர்தூவச் சந்திரனும் சூரியனுஞ் சாமரங்கள் தான்போடக் | 17 |
|
குன்றுமணி மாடங்கள் கோபுரங்கள் தான்துலங்கச் சென்றுநெடு வீதியிலே திருவாய் மொழி விளங்க | 18 |
|
அன்னம் நடைபயில் அரிவையர் மடலெழுதச் சென்னல் குலைசொரியச் செங்குவளை தான்மலரக் | 19 |
|
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக் கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க | 20 |
|
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத் தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் | 21 |
|
சென்னல் விளையச் செகமுழுதும் தான்செழிக்கக் கன்னல் விளையக் கமுகமரம் தான்பழுக்க | 22 |
|
வெம்புலிகள் வாழும் மேரு சிகரத்தில் அம்புலிகைக் கவளமென்று தும்பி வழிபறிக்கும் | 23 |
|
மும்மாரி பெய்து முழுச் சம்பாத் தான்விளையக் கம்மாய்கள் தான்பெருகிக் கவிந்து வழிந்தோட | 24 |
|
வாழையிடை பழுத்து வருக்கைப் பிலாபழுத்துத் தாழையும் பூத்துத் தலையாலே தான்சொரியப் | 25 |
|
புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ அன்னமும் பேசும் அழகான தென்புதுவை | 26 |
|
தலையருவி பாயும் தடஞ்சூழ்ந்த முக்குளமும் மலையருவி பாயும் வயல் சூழ்ந்த தென்புதுவைப் | 27 |
|
பவளமுடன் வச்சிரம் பச்சை மரகதமும் தவளமொளி முத்துத் தான்கொழிக்கும் தென்புதுவைக் | 28 |
|
காவணங்கள் மேவிக் கதிரோன் தனைமறைக்கும் பூவணங்கள் சூழ்ந்து புதுவை மணங்கமழும் | 29 |
|
தென்னை மடல்விரியச் செங்கரும்பு முத்தீனப் புன்னை முகிள்விரியப் புதுவை வனந்தனிலே | 30 |
|
திரு அவதாரம் சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில் ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு | 31 |
|
வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே; | 32 |
|
பூமிவிண்டு கேட்கப் புகழ்பெருகு விஷ்ணுசித்தன் பூமிவிண்ட தலம்பார்த்துப் போனார்காண் அவ்வேளை | 33 |
|
ஆடித் திருப்பூரத்தில் அழகான துளசியின்கீழ் நாடி யுதித்ததிரு நாயகியைச் சொன்னாரார்! | 34 |
|
அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச் செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!! | 35 |
|
"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும், மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!! | 36 |
|
அப்போது கேட்டு அருளப் பரவசமாய்ச் செப்பமுடன் பெண்ணேந்தித் திருக்கோயில் தான்புகுந்து; | 37 |
|
பூந்துளவ மணிவண்ணன் பொன்னடிக்கீழ்ப் பெண்ணைவிட ஊர்ந்து விளையாடி யுலாவியே தான்திரியப் | 38 |
|
பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப் 'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார் | 39 |
|
அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச் செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார் | 40 |
|
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார். | 41 |
|
சொன்னமொழி தப்பாமல் சுந்தரியைத் தானெடுத்துக் கன்னல் மொழி விரசைசு கையிலேதான் கொடுக்க | 42 |
|
அப்போது விரசையரும் அமுதுமுலை தான்கொடுக்கச் செப்பமுடன் தொட்டிலிலே சீராய் வளரவிட்டு | 43 |
|
மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் | 44 |
|
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, | 45 |
|
அன்னமே தேனே அழகே அரிவையரே சொன்னமே மானே தோகையரே தாலேலோ. | 46 |
|
பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, | 47 |
|
பிள்ளைகளும் இல்லாத பெரியாழ்வார், தனக்குப் பிள்ளைவிடாய் தீர்த்த பெண்ணரசே தாலேலோ, | 48 |
|
மலடி விரசையென்று வையகத்தோர் சொல்லாமல் மலடு தனைத் தீர்த்த மங்கையரே தாலேலோ, | 49 |
|
பூவனங்கள் சூழும் புதுவா புரிதனிலே காவனத்தில் வந்துதித்த கன்னியரைச் சொன்னாரார். | 50 |
|
கண்ணேயென் கண்மணியே கற்பகமே தெள்ளமுதே பெண்ணே திருமகளே பேதையரே தாலேலோ, | 51 |
|
மானே குயிலினமே வண்டினமே தாறாவே தேனே மதனாபிஷேகமே தெள்ளமுதே | 52 |
|
வானோர் பணியும் மரகதமே மாமகளே ஏனோர் கலிநீங்க இங்குவந்த தெள்ளமுதே, | 53 |
|
பூமலர்கள் சூழும் பூங்கா வனத்துதித்த மாமகளே சோதி மரகதமே தாலேலோ, | 54 |
|
வண்டினங்கள் பாடும் மதுவொழுகும் பூங்காவில் பண்டுபெரி யாழ்வார் பரிந்தெடுத்த தெள்ளமுதே, | 55 |
|
சென்னல்களை முத்தீன்று செழிக்கும் புதுவையிலே அன்னமே மானே ஆழ்வார் திருமகளே | 56 |
|
"வேதங்க ளோதி வென்றுவந்த ஆழ்வார்க்குச் சீதைபோல் வந்துதித்த திருமகளைச் சொன்னாரார்"! | 57 |
|
முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, | 58 |
|
"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும் பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!! | 59 |
|
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, | 60 |
|
"எந்தை தந்தையென்று இயம்பும்பெரி யாழ்வார்க்கு மைந்தர் விடாய்தீர்த்த மாதேநீ" தாலேலோ, | 61 |
|
"பொய்கைமுத லாழ்வார்க்கும் பூமகளாய் வந்துதித்த மைவிழிசோதி மரகதமோ" தாலேலோ! | 62 |
|
"உலகளந்த மாயன் உகந்துமணம் பண்ணத் தேவாதி தேவர் தெளிந்தெடுத்த தெள்ளமுதோ"! | 63 |
|
"சொல்லை நிலையிட்ட சுந்தரராம் ஆழ்வார்க்குச் செல்லப் பெண்ணாய்" வந்த திருமகளைச் சொன்னாரார்! | 64 |
|
நாராணனை விஷ்ணுவென்று நண்ணுமெங்க ளாழ்வார்க்குக் காரணமாய் வந்துதித்த கற்பகத்தைச் சொன்னாரார்! | 65 |
|
உள்ள முருகி ஊசலிடும் பட்டருக்குப் பிள்ளை விடாய்தீர்த்த பெண்ணமுதே தாலேலோ! | 66 |
|
பாகவ தார்த்தம் பாடுமெங்க ளாழ்வார்க்குத் தாகவிடாய் தீர்த்த தங்கமே தாலேலோ! | 67 |
|
தென்புதுவை வாழும் ஸ்ரீவிஷ்ணு தீர்த்தனுக்கு அன்புடனே வந்துதித்த அன்னமே தாலேலோ! | 68 |
|
சாஸ்திரங்கள் ஓதும் சத்புருஷன் ஆழ்வார்க்குச் சோஸ்திரஞ் செய்து துலங்கவந்த கண்மணியோ! | 69 |
|
வாழைகளும் சூழ்புதுவை வாழுமெங்க ளாழ்வார்க்கு ஏழையாய் வந்துதித்த ஏந்திழையே தாலேலோ! | 70 |
|
கன்னல்களுஞ் சூழ்புதுவை கார்க்குமெங்க ளாழ்வார்க்குப் பன்னுதமிழ் என்னாளும் பாடநல்ல நாயகமோ! | 71 |
|
பல்லாண்டு பாடும் பட்டர்பிரா னாழ்வார்க்கு நல்லாண்டில் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார்! | 72 |
|
எந்தாகம் தீத்து ஏழேழு தலைமுறைக்கும் வந்தாளும் செல்வ மங்கையரே தாலேலோ! | 73 |
|
என்றுநிதம் கோதையரை எடுத்து வளர்க்கையிலே; 'அன்றொருநாள் விஷ்ணுசித்தன் முதுமலர் தொடுத்துவைக்கத், | 74 |
|
தொடுத்துவைத்த மலரதனைச் சூடி நிழல்பார்த்து விடுத்துவைத்துக் கோதையரும் விளையாட்டி லேதிரிய | 75 |
|
அப்போது விஷ்ணுசித்தன் அனுஷ்டான முதலசெய் தெப்போதுங் போல்கோயிற் கேகவே வேணுமென்று | 76 |
|
தொடுத்த மாலைதனைச் சுவாமிக்கே சாத்தவென்று எடுத்தேகு மாழ்வாரும் என்கையிலே கேசங்கண்டு | 77 |
|
பெண்ணரசி கோதை குழல்போலே யிருக்குதென்று பெண்ணான கோதைக்குக் காட்டியே தானுருக்கிப் | 78 |
|
பின்பு வனம்புகுந்து பிரியமாய்ப் பூக்கொய்து அன்புடனே மாயனுக் கலங்கார மாய்ச்சாத்த". | 79 |
|
அப்போது மணிவண்ணன் ஆழ்வாரைத் தான்பார்த்து "இப்போது மணங்காணேன் ஏதுகா ணாழ்வாரே" | 80 |
|
என்று சொல்ல, ஆழ்வாரும் இருகையும் தான்கூப்பித்; "துன்றிவளக் கோதையரும் சூடியே தானும்வைத்தாள். | 81 |
|
அம்மாலை தள்ளி அழகான பூக்கொணர்ந்து நன்மாலை கொண்டு நானுனக்குச் சாத்தவந்தேன்" | 82 |
|
என்றுசொல்ல, மணிவண்ணன் இன்பமாய்த் தான்கேட்டு, "நன்றாக ஆழ்வாரே நானுனக்குச் சொல்லுகிறேன்:- | 83 |
|
ஒன்மகளும் பூச்சூட்டி ஒருக்கால் நிழல்பார்த்து பின்பு களைந்து பெட்டியிலே பூ வைப்பாள். | 84 |
|
அம்மாலை தன்னை ஆழ்வாரே நீ ரேத்துவந்து இம்மாலை சாத்தி யிருந்தீ ரிதுவரைக்கும். | 85 |
|
இன்றுமுதல் பூலோக மெல்லாந் தானறிய அன்றுமலர் கொய்து அழகாகத் தான்தொடுத்துக் | 86 |
|
கோதை குழல்சூடிக் கொணருவீர் நமக்குநிதம் கீதமே ளத்தோடும் கீர்த்தனங்கள் தன்னோடும் | 87 |
|
இன்றுமுதல் சூடிக்கொடுத்தா ளிவள்பேரும் நன்றாகத்தான் வாழ்த்தும் நன்மையே தான்பெறுவீர்! | 88 |
|
என்றுரைக்க மணிவண்ணன் யேகினர்காண் ஆழ்வாரும் சென்றுவந்த மாளிகையில் சிறப்பா யிருந்துநிதம் | 89 |
|
நீராட்டி மயிர்முடித்து நெடுவேற்கண் மையெழுதி சீராட்டிக் கோதையரைச் சிறப்பாய் வளர்க்கையிலே | 90 |
|
ஊரார் உறமுறையார் உற்றார்கள் பெற்றோர்கள் சீரான ஆழ்வாரைச் சிறப்பாகப் பெண்கேழ்க்க; | 91 |
|
அப்போது விஷ்ணுசித்தன் அழகான கோதையரை செப்பமுடன் மடியில் வைத்துத் திருமாலைதான் கொடுத்து | 92 |
|
'உனக்கேதம் பிள்ளைகட் குகந்தே மலர்சூடி மனைக் காவலனென்றும் மகிழ்ந்தேத்தி வாழும் என்றார். | 93 |
|
அவ்வார்த்தை கேட்டு அழகான கோதையரும் செவ்வான வார்த்தையென்று திரும்பியே தானுரைப்பாள் | 94 |
|
வையம் புகழய்யா மானிடவர் பதியன்று! "உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர் | 95 |
|
இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!! அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் | 96 |
|
இவ்வார்த்தை கேட்டு இனத்தோரெல்லோரும் செவ்வான வடிதேடித் தேசத்தே போனார்கள் | 97 |
|
போனபின்பு விஷ்ணுசித்தன் பொன்னே புனமயிலே ஞானமுடன் வந்துதித்த நாயகியைச் சொன்னாரார். | 98 |
|
இப்படிக் கோதையரும் இருந்து வளருகையில், ஒப்பிலாள்நோம்பு உகந்துதான் நோர்க்கவென்று | 99 |
|
மணிவண்ணர் தனைத்தேடி மனக்கருத்தை யவர்க்குரைத்துப் பணிசெய்த விருதுகளைப் பாரிப்பாய்த் தான்கேழ்க்க! | 100 |
|
மகிழ்ந்து மணி வண்ணன் மனமுவந்து மறையோர்க்குப் புகழ்ந்துதான் உத்தரவு பொருமுதலுந் தான்கொடுக்க!! | 101 |
|
உத்தரவு வாங்கி உலகெலாந் தான்நிறைய; 'ந்த்தமொரு நோன்பு நேத்தியாய்த் தான்குளித்து | 102 |
|
மாயவனை நோக்கி வந்தி மலரெடுத்து மாயவனைப் போத்தி மணம்புணர வேணுமென்று | 103 |
|
மார்கழி நீராடி மகிழ்ந்து திருப்பாவை சீர்கள் குறையாமல் சிறப்பாகத் தான்பாடிப் | 104 |
|
பாடிப் பறைகொண்டு பரமனுக்குப் பூமாலை சூடிக் கொடுத்து தொழுது நினைத்திருக்க' | 105 |
|
மாயவனும் வாராமல் மாலைகளுந் தாராமல் ஆயன்முகங் காட்டாமல் ஆரு மனுப்பாமல் | 106 |
|
இப்படிக்குச் செய்தபிழை யேதென்று நானறியேன் செப்படி தோழியரே! திங்கள்முகக் கன்னியரே, | 107 |
|
தோழியரும் தானுரைப்பாள் 'துய்யவட வேங்கடவன் ஆழியுடன் வந்து அழகாய் மணம்புணர்வார்' | 108 |
|
என்றுசொலக் கோதையும் இதையுங் குழைந்து நிதம் அன்றில் குயில்மேகம் அரங்கருக்குத் தூதுவிடத், | 109 |
|
'தூதுவிட்டும் வாராமல் துய்ய வேங்கடவன் எதிரிருந்து கொண்டார் இனிமேல் மனஞ்சகியேன் | 110 |
|
என்று மனம்நொந்து இருக்க நிதங் கோதையரும் சென்றுவந்து தோழியர்கள் செப்பவே பாவையர்க்கு | 111 |
|
'அச்சேதி கேட்டு ஆழ்வார் நடுநடுங்கி அச்சுதனைப் பாடும் அழகான கோதையர்க்குச் | 112 |
|
சென்றுவந்து பிள்ளைவிடாய் தீர்த்த திருமகட்கு மன்றலுஞ் செய்யாமல் வச்சிருந்தால் மோசம்வரும், | 113 |
|
என்று திருமகளை எடுத்துச் சிவிகைவைச்சு சென்று திருவரங்கம் சேவிக்க வேணுமென்று | 114 |
|
நல்லநாள் பார்த்து நடந்து திருவரங்கம் எல்லையுங் கிட்டி இருந்துதென் காவிரியில் | 115 |
|
நீராட்டஞ் செய்து நெடும்போது செபஞ்செய்து சீராட்ட வந்து திருமகளத் தான்தேடப் | 116 |
|
பல்லக்கில் காணாமல் பந்தொடியார் காணாமல் எல்லாருங் காணாமல் என்மகளை யாரெடுத்தார் | 117 |
|
நின்று மனம்நொந்து நாற்றிசையும் தான்தேடி சென்று திருவரங்கத் திருக்கோயில் தான்புகுந்து | 118 |
|
ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம் திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்! | 119 |
|
என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர் சென்றெங்களய்யர் திருவடியைத் தான்தொழுவார்! | 120 |
|
அப்போது கோதையரும் அரங்கர் அடியைவிட்டு இப்போதும் அய்யர் இணையடியைத் தான்தொழுதாள்!! | 121 |
|
வாழ்த்தியே அய்யர் மகிழ்ந்து மகள்தனக்கும் வாழ்த்தியே முற்று மகிழ்ந்து ரெங்கருக்கும். | 122 |
|
வாழிமுதல் பாடி மங்களமும் தான்பாடி 'ஆழிநீர் வண்ணனுக்கு அழகாய் மணம்புணர்வாய்! | 123 |
|
என்று சொல்லி யாழ்வாரும் இன்பமாய் ரெங்கர்தனை மன்றல்செய்ய வாருமய்யா மணவாளா என்றழைத்தார்! | 124 |
|
பங்குனி மாசப் பவர்ணமையில் உத்திரத்தில் அங்கூரஞ் செய்து அழகாய் மணம்புணர | 125 |
|
வாருமைய்யா வென்று மகிழ்ந்தேத்தி ரெங்கரையும் சீரணிந்த கோதைதனைச் சிறப்பாகத் தானழைக்க!!! | 126 |
|
அப்போது நம்பெருமாள் ஆழ்வாரை விடைகொடுத்துத் தப்பாமல் நான்வருவேன் தார்குழலி தன்னோடும். | 127 |
|
என்றுசொல்லி ஆழ்வாரும் ஏகியே வில்லிபுத்தூர் சென்றுதிரு மாளிகையில் சிறப்பாகத் தானிருந்து | 128 |
|
கோதையருக்கு மன்றல் கோஷமாய்ச் செய்யவென்று ..................................................................................... | 129 |
|
சீதையர்க்கு மன்றல் சிறப்பாய்ச் செய்யவென்று, ஓலை யெழுதி உலகெலாம் நாளனுப்பிக் | 130 |
|
.............................................................. கரும்பினால் கால்நிறுத்திக் கற்பகத்தால் பந்தலிட்ட | 131 |
|
கரும்பினிடை வாழை கட்டிக் கஞ்சமலர் தொங்கவிட்டுப் ................................................................ | 132 |
|
பூக்கள் கொணர்ந்து பூம்பந்தல் தான்போட்டு ................................................................. | 133 |
|
மாங்கனிகள் தூக்கி வருக்கைப் பிலாதூக்கித் தேங்கனிகள் தூக்கிச் சிறப்பா யலங்கரித்து. | 134 |
|
மேளமுடன் மத்தளமும் மேல்முரசுந் தானடிக்கக் காளமுடன் நாகசுரம் கலந்து பரிமாற. | 135 |
|
வானவர்கள் மலர்தூவி வந்து அடிபணியக் கானவர்கள் பூக்கொய்து கலந்து பணிந்தேத்த. | 136 |
|
இந்திரனும் எண்டிசையும் இறைஞ்சி மலர்தூவச் சந்திரனுஞ் சூரியனும் சாமரங்கள் தான்போட. | 137 |
|
ரத்னமணி யாசனமும் ரத்தினக் கம்பளியும் சித்ரமணி மண்டபமும் செம்பொன் குறடுகளும். | 138 |
|
ஆழ்வார் கிளையும் அயலோர்கள் எல்லோரும் ஆழ்வார் திருமகளை அன்பாகப் போற்றவந்த | 139 |
|
தூபம் கமழத் தொண்டர்களுந் தான்பாடத் தீபம் துலங்க ஸ்ரீவைஷ்ண வோரிருக்க | 140 |
|
வேதந் துலங்க மேன்மேலும் சாஸ்திரங்கள் கீதம் முழங்கக் கீர்த்தனங்கள் தான்முழங்க. | 141 |
|
வாத்திமார் புல்லெடுத்து மறைகள் பலஓதப். ................................................................ | 142 |
|
பூரண கும்பமுதல் பொற்கலசம் தானும்வைத்து நாரணனைப் போத்தி நான்மறைகள் தானோத. | 143 |
|
இப்படிக்கு ஆழ்வாரும் எல்லாருங் காத்திருக்க சத் புருடன் வாராமல் தாமசமாய்த் தானிருக்க. | 144 |
|
கொற்றப் புள்ளியில் ரெங்கர் கொடிய வனங்கடந்து வெற்றிச் சங்கூதி வில்லிபுத்தூர் தன்னில்வந்து. | 145 |
|
மணவாள ராகிமணவறையில் தானிருந்து மணஞ்செய்யும் வேளைகண்டு மறையோர்க்குத் தான்கொடுத்தார் | 146 |
|
ஆடைமுத லாபரணம் அவனிமுதல் பால்பசுக்கள் கோடைமுதல் தானங் கொடுத்து நிறைந்தபின்பு | 147 |
|
மந்தரமார் கோடியுடுத்து மணமாலை யந்தரி சூட்டி அழகான கோதையர்க்கு | 148 |
|
மத்தளம்கொட்ட வரிசங்கம் நின்றூத முத்தாலித் ததும்ப நிரைதரளப் பந்தலின்கண் | 149 |
|
கைத்தலம் பத்திக் கலந்து பரிமாற. ....................................................... | 150 |
|
ஆழ்வார் திருமகளை அழகாகத் தான்வாங்கி. | 151 |
|
மன்றலுஞ் செய்து மகிழ்ந்து மதுவர்க்கம் கன்றலு மூன்று கழித்து அரங்கருந்தான் | 152 |
|
அக்கினி வளர்த்து அழகா யலங்கரித்து அக்கினியைப் போத்தி அக்ஷதையும் தான்தூவி | 153 |
|
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால். ..................................................................... | 154 |
|
பஞ்சிலை நாணற் படுத்துப் பரிவைத்து ............................................................... | 155 |
|
ஓமங்கள் செய்து ஒருக்காலும் மலர்தூவி ................................................................. | 156 |
|
காசின் பணங்கள் கலந்துதா னெங் கொடுத்து ................................................................ | 157 |
|
தீவலஞ் செய்து திரும்பி மனையில்வந்து ................................................................. | 158 |
|
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பார்த்தவாய் நம்மை யுடையவன் நாராயணன் நம்பி | 159 |
|
செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி அம்மி மிதித்து அருந்ததியும் தான்பார்த்து | 160 |
|
அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப் பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை | 161 |
|
அக்ஷதைகள் வாங்கி அரங்கர் மணவரையில் பக்ஷமுட னிருந்து பாக்கிலையுந் தான்போட்டுக் | 162 |
|
கோதையுடன் கூடிக் குங்குமச் சப்பரத்தில் சீதையுடன் கூடிச் சிறப்பாகத் தானிருந்தார். | 163 |
|
அச்சேதி கேட்டு ஆழ்வார் மனமகிழ்ந்து இச்சேதி வைபவங்கள் எங்குங் கிடையாது. | 164 |
|
என்று பெரியாழ்வார் இளகி மனமகிழ்ந்து குன்று குடையெடுத்த கோனை மகிழ்ந்துநிதம். | 165 |
|
வாழி முதல் பாடி மங்களமும் தான்பாட ஆழிமுதல் பாடி ஆழ்வாரும் போற்றிநின்றார் | 166 |
|
வாழும் புதுவைநகர் மாமறையோர் தான்வாழி ஆழிநிறை வண்ணன்முதல் ஆழ்வார்கள் தான்வாழி | 167 |
|
கோதையரும் வாழிகோயில்களும் தான்வாழி சீதையரும்வாழி செகமுழுதும் தான்வாழி. | 168 |
|
கரும்பு கலகலெனக் கஞ்ச மலர்விரிக்கக் கரும்பு குழலூதத் தோகை மயில்விரிக்க | 20 |
|
மாங்கனிகள் தூங்க மந்தி குதிகொள்ளத் தேன்கூடு விம்மிச் செழித்து வழிந்தோடச் | 21 |
|
......... புன்னையும் பூக்கப் புறத்தே கிளிகூவ அன்னமும் பேசும் அழகான தென்புதுவை | 26 |
|
அப்போது விஷ்ணுசித்தன் அலர்மகளைத் தானெடுத்துச் செப்பமுடன் "கண்ணே திருவாய் மலர்ந்தருள்வீர்"!! | 35 |
|
"அய்யா உமக்கடியேன் அருமை மகளாக்கும், மெய்யார்ந்த தாயார் மென்மைத் துளசி" என்றார்!!! | 36 |
|
பெண்கொணர்ந்த விஷ்ணுசித்தன் பெருமாளைத் தானோக்கிப் 'பெண்வந்த காரணமென் பெருமாளே சொல்லு" மென்றார் | 39 |
|
அப்போது மணிவண்ணன் 'அழகான பெண்ணுனக்குச் செப்பமுடன் வந்த திருக்கோதை நாயகியார் | 40 |
|
என்று பேருமிட்டு எடுத்துக் குழந்தைதனை உன்றன் மனைக்கு உகந்துதான் செல்லும்' என்றார். | 41 |
|
மாணிக்கங் கட்டிவயிர மிடைக்கட்டி ஆணிப்பொன் னால்செய்த வண்ணச் சிறுதொட்டில் | 44 |
|
பேணி யுனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக்கமே தாலேலோ மங்கையரே தலேலோ, | 45 |
|
அன்னமே தேனே அழகே அரிவையரே சொன்னமே மானே தோகையரே தாலேலோ. | 46 |
|
பொன்னே புனமயிலே பூங்குயிலே மாந்துளிரே மின்னே விளக்கொளியே வேதமே தாலேலோ, | 47 |
|
முத்தே பவளமே மோகனமே பூங்கிளியே வித்தே விளக்கொளியே வேதமே தாலேலோ, | 58 |
|
"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும் பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே"!! | 59 |
|
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ, | 60 |
|
வையம் புகழய்யா! மானிடவர் பதியன்று. "உய்யும் பெருமாள் உயர்சோலை மலையழகர் | 95 |
|
இவர்கள் தாம்பதி இரண்டாம் பதியரில்லை!! அவர்கள் தம்பாட்டில் அனுப்பியே வையும்!!! என்றார் | 96 |
|
ஒருமகளை யானுடையேன் உலகளந்த மாயவனாம் திருமகளைத் தானெடுத்து செங்கண்மால் கொண்டொளித்தாய்! என்றாழ்வா ருஞ்சொல்ல இரங்கித் திருவரங்கர் சென்றெங்களய்யர் திருவடியைத் தான்தொழுவார்! |
| நம்மை யுடையவன் நாராயணன் நம்பி | 159 |
|
செம்மையுடைய திருக்கையால் தாழ்த்தி அம்மி மிதித்து அருந்ததியும் தான்பார்த்து | 160 |
|
அரிமுதன் அச்சுதன் அங்கைமேலும் கைவைத்துப் பொரி முகந்தபடிப் போத்தி மறையோரை............ |
|
சீராரு மெங்கள்விஷ்ணு சித்தர்நந் தாவனத்தில் ஏராருந் துளசிமுல்லை யேகமாய்த் தானும்வச்சு | 31 |
|
வச்ச பயிர்களுக்கு வளரவே நீர்பாய்ச்சி உச்சிதமாய்ப் பயிர்கள்செய் துகந்திருக்கும் வேளையிலே; | 32 |