| 1. எழுத்ததிகாரம் | |
| 1.1 எழுத்தியல் | 5 |
| 1.2 பதவில் | 15 |
| 1.3 புணரியல் | 29 |
| 2. சொல்லதிகாரம் | |
| 2.1 பெயரியல் | 84 |
| 2.2 வினையியல் | 112 |
| 2.3 இடையியல் | 151 |
| 2.4 உரியியல் | 166 |
| 3. தொடர் மொழியதிகாரம் | |
| 3.1 தொகைநிலைத் தொடரியல் | 169 |
| 3.2 ஒழியியல் | 178 |
| 3.3 பகுபத முடிபு | 202 |
| 3.4 சொல்லிலக்கணங்கூறுதல் | 213 |
| 3.5 சொற்றொடரிலக்கணங் கூறுதல் | 215 |
வினை நிகழ்ச்சிக்குக் காரணம்
229. வினையானது வினைமுதல், கருவி,
இடம், செயல், காலம், செயப்படு பொருள் என்னும் இவ்வாறுங் காரணமாவேணும், இவற்றுட் பல
காரணமாகவேனும், நிகழும்.
உதாரணம்.
வனைந்தான்: இத்தெரிநிலை வினை, வினைமுதன்
முதலிய ஆறுங் காரணமாக, வந்தது. வினைமதல் குயவன்; முதற்கருவி மண்; துணைக்கருவி
தண்டசக்கர முதலியன் இடம் வனைதற்கு ஆதாரமாகிய இடம்; செயல் வனைதற்கு மதற்காரணமாகிய
செய்கை; காலம் இறந்தகாலம்; செயப்படு பொருள் குட முதலியன.
இருந்தான்:
இத்தெரிநிலை வினை, வினைமுதன் முதலிய ஆறுங் காரணமாக, வந்தது.
உடையன்:
இக்குறிப்பு வினை, கருவியுஞ் செயப்படு பொருளுமொழிந்த நான்குங் காரணமாக
வந்தது.
-----
230. வினை முதன் முதலிய ஆறனுள்ளே, தெரிநிலை வினைமுற்றின் கண்,
விணைமுதலுஞ் செயலுங் காலமுமாகிய மூன்றும் வெளிப்படையாகவும், மற்றை மூன்றுங்
குறிப்பாகவுந் தோன்றும்.
தெரிநிலை வினைப் பெயரெச்ச வினையெச்சங்களின்கண்
செயலுங் காலமுமாகிய இரண்டும் வெளிப்படையாகவும், மற்றை நான்கும் குறிப்பாகவுந்
தோன்றும்.
வினைமுதல் பால் காட்டும் விகுதியினாலும், செயல் பகுதியினாலும்,
காலம் இடைநிலையும் விகுதியும் விகாரப்பட்ட பகுதியுமாகிய மூன்றனுள் ஒன்றினாலுந்
தொன்றும். எச்ச வினைகட்குப் பால் காட்டும் விகுதி யின்மையால், அவற்றில் வினைமுதல்
வெளிப்படத் தோன்றதாயிற்று.
உதாரணம்.
உண்டான்: இத்தெரிநிலை வினைமுற்றிலே,
பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும், விகுதியால் வினைமுதலும் வெளிப்படையாகவும்,
மற்றவை
உண்ட: இத் தெரிநிலைவினைப் பெயரெச்சத்திலே, பகுதியாற் செயலும்,
இடைநிலையாற் காலமும் வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.
உண்டு:
இத்தெரிநிலை வினையெச்சத்திலே, பகுதியாற் செயலும், இடைநிலையாற் காலமும்
வெளிப்படையாகவும், குறிப்பாகவுந் தோன்றின.
---
231. வினைக்குறிப்பு முற்றிக்கண்
வினை முதன் மாத்திரம் வெளிப்படையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந்
தோன்றும்.
வினைக்குறிப்பு வினையெச்சங்களின் கண், வினைமுதன் முதலியவெல்லாங்
குறிப்பாகவே தோன்றும்.
உதாரணம்.
கரியன்: இக்குறிப்பு வினைமுற்றிலே,
விகுதியால் வினைமுதல் வெளிப்டையாகவும், மற்றவையெல்லாங் குறிப்பாகவுந்
தோன்றும்.
கரிய: இக்குறிப்புவினைப் பெயலெச்சத்திலே, வினைமுதன்
முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.
இன்றி: இக்குறிப்புவினை
வினையெச்சத்திலே, வினைமுதன் முதலியவெல்லாங் குறிப்பாகவே தோன்றின.
காலம்
232. காலம், இறப்பு, நிகழ்வு, எதிர்வு, என
மூவகைப்படும்.
இறப்பாவது தொழிலது கழிவு நிகழ்வாவது தொழில் தொடங்கப்பட்டு
முற்றுப் பெறாத நிலமை. எதிர்வாவது தொழில் பிறவாமை.
வினைச்சொற்களின் வகை
233. இக்காலத்தோடு புலப்படுவனவாகிய
வினைச்சொற்கள், தெரிநிலைவினையுங் குறிப்பு வினையும் என, இருவகைப்படும்.
---
234.
தெரிநிலை வினையாவது, காலங்காட்டும் உருப்புண்மையினாலே, காலம் வெளிப்படத்
தெரியும்படி நிற்கும் வினையாம்.
உதாரணம்.
நடந்தான்: இது, தகரவிடை
நிலையினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை
வினை.
உண்கும்: இது, கும் விகுதியினால் எதிர்காலம் வெளிப்படத் தெரியும் படி
நிற்றலினாலே, தெரிநிலை வினை.
பெற்றான்: இது, பெறு, பெற்று என விகாரப்பட்டு
நின்ற பகுதியினால் இறந்தகாலம் வெளிப்படத் தெரியும் படி நிற்றலினாலே, தெரிநிலை
வினை.
தெரிநிலை வினைகள் தோன்றுதற்குரிய முதனியடிகள் இவையென்பது பதவியலில்
நாற்பத்தாறம் வசனத்திற் கூறப்பட்டது.
---
235. குறிப்பு வினையாவது,
காலங்காட்டும் உறுப்பின்மையினாலே, காலம் வெளிப்படத் தெரிதலின்றிச் சொல்லுவோனது
குறிப்பினாலே தோன்றும்படி, நிற்கும் வினையாம்.
உதாரணம்.
பொன்னன்: இது,
பொன்னையுடையனாயினான் என இறந்தகாலங் கருதியாயினும், பொன்னையுடையனாகின்றான் என
நிகழ்காலங் கருதியாயினும், பொன்னையுடையனாவான் என எதிர்காலங் கருதியாயினுந் தன்னை
ஒருவன் சொல்ல, அக்காலம் அவனது குறிப்பாட் கேட்போனுக்குத் தோன்றும் படி நிற்றலினாலே,
குறிப்பு வினை.
பொன்னன் என்பது, பொன்னுடைமை காரணமாக ஒருவனுக்குப் பெயராய்
நின்று எழுவாய் முதலிய வேற்றுமையுரு பேற்கும் போது பெயர்ச் சொல்; முக்காலம் பற்றிப்
புடை பெயரும் ஒருவனது வினை நிகழ்ச்சியை உணர்த்திப் பெயருக்குப் பயனிலையாய் வரும்
போது குறிப்பு வினைமுற்றுச் சொல்; அங்ஙனம் வினைமுற்றாய் நின்று பின் அவ்வினை
நிகழ்ச்சி காரணமாக அவனுக்குப் பெயராகி எழுவாய் முதலிய வேற்றுமையுருபேற்கும் போது
குறிப்பு வினையாலணையும் பெயர்.
குறிப்பு வினைகள் தோன்றுதற் குரிய
முதனிலையடிகாள் இவையென்பது பதவியலில் நாற்பத்து நான்காம் வசனத்திற்
கூறப்பட்டது.
---
236. தெரிநிலைவினை குறிப்புவினை என்னும் இரண்டும், முற்றும்,
பெயரெச்சமும், வினையெச்சமும், வினையெச்சமும் என்பன மும்மூன்று வகைப்படும். எனவே,
தெரிநிலைவினைமுற்றும், தெரிநிலைவினைப் பெயரெச்சமும், தெரிநிலை வினையெச்சமும்,
குறிப்பு வினைமுற்றும், குறிப்பு வினைப்பெயரெச்சமும், குறிப்பு வினை வினையெச்சமும்
என, வினைச்சொற்கள் அறுவகையாயின.
---
237.இவ்வறுவகை வினைச்சொற்களும்,
உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வரும்.
உடன்பாட்டு வினையாவது. தொழிலினது
நிகழ்ச்சியை உணர்த்தும் வினையாம். உடன்பாட்டு வினையெனினும்,
பொருந்தும்.
உதாரணம்.
நடந்தான் நடந்த நடந்து
பெரியன் பெரிய
மெல்ல
எதிhமறை வினையாவது, தொழில் நிகழாமையை உணர்த்தும் வினையாம்.
எதிர்மறைவினையெனினும், மறைவினையெனினும், பொருந்தும்.
உதாரணம்.
நடவான் நடவாத
நடவாது
இலன் இல்லாத இன்றி
---
238. வினைச்சொற்கள், இருதிணையைம்பான் மூவிடங்களுள் ஒன்றற்கு உரிமையாகியும், பலவற்றிற்குப் பொதுவாகியும், வழங்கும்.
முற்று வினை
239. முற்று
வினையாவது, பால் காட்டும் விகுதியோடு கூடி நிறைந்து நின்று பெயரைக் கொண்டு முடியும்
வினையாம்.
இம்முற்றுவினை கொள்ளும் பெயர்களாவன் பொவுட் பெயர், இடப்பெயர்,
காலப்பெயர், சினைப்பெயர், குணப்பெயர், தொழிற்பெயர் என்னும் அறுவகைப்
பெயருமாம்.
உதாரணம்.
செய்தான் சாத்தன் நல்லன் சாத்தன்
குளிர்ந்தது நிலம்
நல்லது நிலம்
வந்தது கார் நல்லது கார்
குவிந்தது கை நல்லதுகை
பரந்தது
பசப்பு நல்லது பசப்பு
ஒழிந்தது பிறப்பு நல்லது பிறப்பு
படர்க்கை வினைமுற்று
240. படர்க்கை வினைமுற்று,
உயர்திணையாபாலொருமைப் படர்க்கை வினைமுற்றும், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கை
வினைமுற்றும், உயர்திணைப் பலர்பாற் படர்க்கை வினைமுற்றும், அஃறிணையொன்றன் பாற்
படர்க்கை வினைமுற்றும், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை வினைமுற்றும் என ஐந்து
வகைப்படும்.
---
241. அன், ஆன், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச்
சொற்கள், உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு
வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி
அவன்
நடந்தனன்
நடந்தான் நடக்கின்றனன்
நடக்கின்றான் நடப்பன்
நடப்பான்
குழையன்
குழையான்
---
242. து, று, என்னும் விகுதிகளை இறுதியில் உடைய
வினைச் சொற்கள், உயர்திணைப் பெண்பாலொருமைப் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங்
குறிப்பு வினை முற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி
அவள்
நடந்தனள்
நடந்தாள் நடக்கின்றனள்
நடக்கின்றாள் நடப்பள்
நடப்பாள்
குழையள்
குழையாள்
----
243. அர், ஆர் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய
வினைச் சொற்கள், உயர்திணைப் பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு
வினை முற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி
அவர்
நடந்தனர்
நடந்தார் நடக்கின்றனர்
நடக்கின்றார் நடப்பர்
நடப்பார்
குழையர்
குழையார்
செய்யுளிலே பலர்பாற் படர்க்கைத் தெரிநிலை
வினைமுற்றுக்கு, இவ்விகுதிகளின்றி, ப, மார் என்னம் விகுதிகளும் வரும். அவை
இடைநிலையின்றித் தாமே எதிர் காலங் காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
உதாரணம்.
நடப்ப நடமார் - அவர்
இவ்விரண்டற்கும் நடப்பார் என்பது பொருள்.
---
244.
து, று என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் அஃறிணையொன்றன் பாற்
படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம். இவற்றுள், றுவ்விகுதி,
இறந்தகால விடைநிலையோடன்றி, நிகழ்கால வெதிர்காலவிடைநிலைகளோடு கூடி
வராது.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி
அது
நடந்தது
கூயிற்று நடக்கின்றது
---- நடப்பது
--- குழையது
அற்று
றுவ்விகுதி, வந்தன்று, உண்டன்று, சென்றன்று எனத்தடற வொற்றிடைநிலைகளின்
முன்னும், புக்கன்று விட்டன்று, பெற்றன்று, என விகாரப்படடிறந்நகாலங் காட்டுங் கு,
டு, று வீற்றுப் பகுதிகளின் முன்னும், அன்சாரியை பெற்று வரும். இவை, முறையே,
வந்தது, உண்டது, சென்றது, புக்கது, விட்டது, பெற்றது எனப் பொருள்படும். றுவ்
விகுதி, கூஙிற்று, ஓடிற்று என இன்னிடை நிலையின் முன் மாத்திரம், சாரியை பெறாது
வரும்.
அற்று, இற்று, எற்று என்பவை, சுட்டினும் வினாவினும் வந்த
வினைக்குறிப்பு முற்றுக்கள். இவை,
தந்தின்று என, றுவ்விகுதி
தகரவிடைநிலையின் முன் இன்சாரியை பெற்றதன்றோ எனின்; அன்று. அது, தந்தன்று, என்னும்
உடன்பாட்டு வினையை மறுத்தற்குத் தகரவிடைநிலைக்கும் றுவ் விகுதிக்கும் இடையே
இல்லென்னும் எதிர்மறையிடை நிலையேற்று வந்த மறைவினையென்றறிக. தந்தின்று
தந்ததில்லையென பொருள்படும்.
முறையே, அத்தன்மைத்து, இத்தன்மைத்து,
எத்தன்மையித்து எனப் பொருள் படும்.
டுவ் விகுதியை இறுதியில் உடைய வினைச்
சொல் அஃறிணையொன்றன்பாற் படர்க்கை குறிப்பு வினைமுற்றாம், இவ் விகுதி
தெரிநிலைவினைமுற்றிற்கு இல்லை.
உதாரணம். பொருட்டு (ஸ்ரீ
பொருளையுடையது)
ஆதிரைநாட்டு (ஸ்ரீ ஆதிரை நாளினிடத்தது)
குண்டுகட்டு (ஸ்ரீ
ஆழமாகிய கண்ணையுடையது) அது
---
245. அ என்னம் விகுதியை இறுதியில் உடைய
வினைச்சொல், அஃறிணைப் பலவின்பால் படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை
முற்றுமா.
இவ்விகுதி, அன்சாரியை பெற்றும், பெறாதும், வரும்
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி. அவை
நடந்தன
நடந்த
நடக்கின்றன
நடக்கின்ற நடப்பன
நடப்ப கரியன
கரிய
ஆ என்னும் விகுதியை
இறுதியில் உடைய வினைச் சொல், அஃறிணைப் பலவின்பாற் படர்க்கை, யெதிர்மறைத்
தெரிநிலைவிணை முற்றாம். இவ்விகுதி குறிப்பு வினை முற்றிற்கு
இல்லை.
உதாரணம்.
நடவா -- அவை
• நடப்ப என்னும் உயர்திணைப்
பலர்பாற்படர்க்கைத் தெரிநிலை வினை முற்று, வேறு, நடப்ப என்னும் அஃறிணை பலவின்பாற்
படர்க்கைத் தெரிநிலை வினைமுற்றும், வேறு, முன்னையது, நட என்னும் பகுதியும், பா
என்னும், எதிர்கால பரர்பற்படர்க்கை விகுதியுமாகப், பகுக்கப்பட்டு வரும். பின்னையது,
நட என்னும் பகுதியும், இப்பென்னும் எதிர்காலவிடைநிலையும், ஆ என்னும் பலவின்பாற்
படர்க்கை விகுதியுமாக, பகுக்கப்பட்டு வரும்.
தன்மை வினைமுற்று
246. தன்மை வினைமுற்று,
தம்மையொருமை, வினைமுற்றும் தன்மைப் பன்மை வினைமுற்றும் என, இரு வகைப்படும்.
---
247. என், ஏன், அன் என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள்,
தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்று குறிப்பு
வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி.
யான்
உண்டனென்
உண்டேன்
உண்டனன் உண்கிறனென்
உண்கிறேன்
உண்கிறனன்
எ. தெரி. குறி
உண்குவென்
உண்பேன்
உண்பன்
குழையினென்
குழையினேன்
குழையினன்
செய்யுளுளிலே தன்மையொருமைத்
தெரிநிலை வினைமுற்றுக்கு இவ்விகுதிகள்களன்றி, ஆல் கு, டு து று என்னும் விகுதிகளும்
வழங்கும்.
இவைகளுள், ஆல் விகுதி எதிர்காலவிடைநிலைகளோடு மாத்திரம் வரும்.
மற்றைநான்கு விகுதிகளும் இடைநிலையின்றி தாமே காலங்காட்டுதல் பதவியளிற்
பெறப்பட்டது.
(உதாரணம்)
விகு. இ.தெ. எ.தெ.
யான்
அல்
கு
டு
து
று -
-
உண்டு
வந்து
சென்று
உண்பல்
உண்கு
-
வருது
சேறு
---
248. அம், ஆம், எம், ஏம், ஓம்
என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள், தன்மைப் பன்மைத் தெரிநிலை
வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி.
யாம்
உண்டனம்
உண்டாம்
உண்டெனம்
உண்டேம்
உண்டோம்
உண்கின்றனம்
உண்கின்றாம்
உண்கின்றனெம்
உண்கின்றேம்
உண்கின்றோம்
எ.
தெரி. குறி.
உண்பம்
உண்பாம்
உண்பெம்
உண்பேம்
உண்போம்
குழையினம்
குழையினாம்
குழையினெம்
குழையினேம்
குழையினோம்
செய்யுளிலே, தன்மைப் பன்மை தெரிநிலை வினைமுற்றுக்கு, இவ் விகுதிகளின்றி,
கும், டும், தும், றும் என்னும் விகுதிகளும் வழங்கும் இடைநிலையின்றித் தாமே
காலங்காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
விகு. இ. தெரி. எ. தெரி.
யாம்
கும்
டும்
தும்
றும் -
உண்டும்
வந்தும்
சென்றும்
உண்கும்
-
வருதும்
சேறும்
முன்னிலை வினைமுற்று
249. முன்னிலை வினைமுற்று
முன்னிலையொருமை வினைமுற்றும் முன்னிலைப் பன்மை வினைமுற்றுமென இரு வகைப்படும்.
---
250. ஐ ஆய் இ என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள்
முன்னிலையொருமைத் தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு
வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி. தெரி. எ. தெரி. குறி.
நீ
உண்டனை
உண்டாய்
உண்டி உண்கின்றனை
உண்கின்றாய்
உண்ணாநின்றி
உண்பை
உண்பாய்
சேறி குழையினை
குழையாய்
வில்லி
இகரவிகுதி
எதிர்காலத்தை இடைநிலையின்றி தானே காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
251.
இர், ஈர், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய விசை; சொற்கள். முன்னிலைப் பன்மை
தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினைமுற்றுமாம்.
உதாரணம்.
இ. தெரி. நி.
தெரி. எ. தெரி. குறி. நீர்
உண்டனிர்
உண்டீர் உண்கின்றனீர்
உண்கின்றீர்
உண்பிர்
உண்பீர் குழையினிர்
குழையீர்
எதிர்மறை
வினைமுற்று
252. எதிர்மறை குறிப்பு வினைமுற்றுக்கள், ஆல், இல் என்னும்
எதிர்மறைப் பன்படியாக தோன்றிப் பால் காட்டும் விகுதிகளை பெற்று
வருவனாவாம்.
உதாரணம்.
படர்க்கை - அல்லன், அல்லள், அல்லர் அன்று அல்ல
ஜஅல்லனஸ
இலன் இலள் இலர் இன்று இல ஜ இல்லனஸ
தன்மை - அல்லேன் அல்லேம் இலேன்
இலேம்
முன்னிலை - அல்லாய் அல்லீர் இலாய் இலீர்
இன்மை என்பது ஒரு
பொருளினது உண்மைக்கும் ஒரு பொருளை உடமைக்கு மறுதலை உண்மை உளதாதல்.
உதாரணம்.
உண்மை இன்மை
இங்கே சாத்தனுளன்
இவனிடத்தே அறமுண்டு இங்கே
சாத்தானிலன்
இவனிடத்தே அறமின்று
உடமை இன்மை
இவன்
பொருளுடையன்
இது குணமுடையது இவன் பொருளிலன்
இது
குணமில்லது
அன்மையென்பது ஒரு பொருள் சுட்டியதொரு பொருளாதற்கு மருதலை, பிரிது
பொருளாதலைக் காட்டும். என்றபடி
உதாரணம்.
இவன் சாத்தனல்லன்: ஜ கொற்றன்
ஸ
இஃதறனன்று: ஜ மறம் ஸ
---
253. எதிர்மறத் தெரிநிலை முற்றுக்கள், இல் ஆல், ஆ,
என்னும் எதிர்மறையிடைநிலைகளோடு பால் காட்டும் விகுதிகளைப் பெற்று வருவனவாம்.
இவற்றுள் இல் இடைநிலை இறந்தகால இடைநிலையோடும் விகாரப்டிறந்த காலங்காட்டும்
பகுதியோடும். நிகழ்கால விடைநிலையோடும். கூடி வரும். இனி இடைநிலையோடு கூடாது, இல்
இடைநிலை குஞ்சாரியை பெற்றும் ஆல் இடைநிலை குஞ்சாரியை பெற்றும் பெறாதும்
ஆகாரவிடைசாரியை பெறாதும் எதிர்காலம் உணர்த்தி
வரும்.
உதாரணம்.
நடந்திலன், பெற்றிலன், நடக்கின்றிலன், நடக்கிலன், எ-ம்.
நடக்கலன், உண்ணலன், எ-ம். நடவான், எ-ம். வரும். மற்ற விகுதிகளோடு இப்படியேயொட்டிக்
கொள்க.
• இல், அல், ஆ, இவ் மூன்றையும் எதிர்மறை விகுதி என்பர் சிலர்.
எதிர்மறை இடைநிலையெனபதே சேனாவரையார். சிவஞான முனிவர். முதலியோர் துண்வு நடவா
என்னும் அஃறிணைப்பலவின் பால் படர்க்கை வினைமுற்றில் ஆகாரம் வெரு விகுதி வேண்டாது
தானே, எதிர்மறை பொருளோடு பலவின்பாற் படர்க்கைப் பொருளையுந் தந்து நிற்றலின், அங்கு
மாத்திரம் விகுதியோ யென்றறிக.
அகரவிடைநிலை வருமெழுத்து உயிராயவழிக்
கெடுதல் பதவியலிற் பெறப்பட்டது.
இங்ஙனமன்றி உடன்பாட்டு தெரிநிலை
முற்றுக்களே ஆல் என்னும் பன்படியாக தோன்றிய எதிர்மறை சிறப்பு
வினைக்குறிப்போடாயினும் இல்லை யென்னும் எதிர்மறைத்த தெரிநிலை வினைமுற்றுக்களாயும்
வரும்.
உதாரணம்.
உண்டானல்லன், உண்டேனல்லன், உண்டாயல்லை, எ-ம். வந்தானில்லை,
வந்தேனில்லை, வந்தாயில்லை, எ-ம். வரும்.
முன்னிலையேவல்
விiனுமுற்று
254. முன்னிலையேவல் வினைமுற்று, முன்னிலையேவலொருமை வினைமுற்று
முன்னிலையேவற் பன்மை வினைமுற்றும் என இரு வகைப்படும்.
---
255. ஆய், இ, ஆல்,
ஏல், ஆல், என்னும் விகுதிகளை இருதியில் உடைய வினைச்சொற்களும் ஆய் விகுதி புணர்ந்து
குன்றிப் பகுதி மாத்திரையாய் நிற்கும் விசை; சொற்களும் முன்னிலையேவாலொருமை தெரிநிலை
வினைமுற்றுக்களாம். இவற்றுல் அல், ஏன், ஆல், என்னும் மூன்று விகுதிகளும்
எதிர்மறையிடத்து வரும்.
உதாரணம்.
உதாரணம். உண்ணாய்
உண்ணல்
உண்ணுதி
உண்ணேல் உண்
மாறல் நீ
ஏவல் விகுதிகள் இடைநிலையின்றி தாமே
எதிர்காலங்காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
எதிர்மறையாலொருமை
வினைமுற்றுக்கள், உண்ணாதே, உண்ணாதீ, என எதிர்மறை ஆகாரவிடை நிலையின் முன்
தகரவெழுத்து பெற்றோடு எகர விகுதி இகரவிகுதிகளுள் ஒன்று பெற்றும் வரும்.
---
256. ஈர், உம், மின், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள்
முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்களாம்.
உதாரணம்.
உண்ணீர்,
உண்ணும் உண்மின் - நீர்
எதிர்மநையேவற் பன்மைவினை முற்றுக்கள் உண்ணமின்,
நடவன்மின் என, பகுதிக்கும் வின் விகுதிக்கும் இடையே எதிர்மறை அல் இடைநிலை பெற்று
வரும்.
(1) உண்ணாய், என்னும் முன்னிலையொருமை யெதிர்மறை தெரிநிலை
வினைமுற்று வேறே: உண்ணாய் என்னும், முன்னிலையேவலொருமை தெரிநிலை வினைமுற்றும் வேறே:
முன்னையது உண்ணென்னும் பகுதியும் பெற்று அகரவிடைநிலை கேட்டு முடிந்நது. பின்னையது
உன் என்னும் பகுதியும் ஆய் விகுதியும் பெற்று முடிந்தது.
(2) உண்ணீர் என்னும்
முன்னிலைப் பன்மையெதிர்மறை தெரிநிலை வினைமுற்றும், வேறே: உண்ணீர் என்னும்
முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலைவினைமுற்று வேறே: முன்னையது உண் என்னும் பகுதியும்
ஆவன என்னும் எதிர்மறை இடைநிலையும் ஈர் விகுதியும் பெற்று இடைநிலை ஆகாரம் கேட்டு
முடிந்தது. பின்னையது உண் என்னும் பகுதியும் ஈர் விகுதியும் பெற்றும்
முடிந்தது.
தேர்வு வினாக்கள் - 254. முன்னிலையேவல் வினைமுற்று எத்தனை
வகைப்படும்? 255. முன்னிலையேவலொருமை தெரிநிலை வினை முற்றுக்கள் எவை? இவற்றுள் எவை
எதிர்மறையிடத்து வரும்? எதிர்மறையேவலொருமை வினைமுற்றுக்கள் என்னும் எப்படி வரும்?
256. முன்னிலையேவற் பன்மைத் தெரிநிலை வினைமுற்றுக்கள் எவை? எதிர்மறையேவற்
பன்மைவினைமுற்றுக்கள் எவை?
வியங்கோல் வினைமுற்று
257. க, இய, இயர்,
அ, அல், என்னும் விகுதிகளை இறுதியில் உடைய வினைச் சொற்கள் வியங்கோள்
வினைமுற்றுக்களாம்.
வியங்கோளாவது, இருதிணையைம்பாண் மூவிடங்கட்கும் பொதுவாகிய
ஏவல்.
ககரவிகுதி - வாழ்க
இயவிகுதி - வாழிய
அகரவிகுதி -
வர
அல்விகுதி - ஒம்பல் உண்க
உண்ணிய
உண்ணியர்
உண்ண
எனல்
யான்,யாம்
நீ, நீர்
அவன்,
அவள், அவர்,
அது, அவை
வாழிய என்பது,
ஆ, வாழி, அந்தணர் வாழி எனப் பெரும்பாலும் ஈற்றுயிர் மெய் கெட்டு வரும்.
வா
ஸ்ரீ வருக, உன்னை ஸ்ரீ உன்க
ஒம்பல் ஸ்ரீ ஒம்புக, எனல் ஸ்ரீ
என்க
சிறுபான்மை, இவை, இக்காலத்து உலக வழக்கிலே நடக்கக்கடவுன்,
நடக்கக்கடவுள், எ-ம். நடப்பானாக நடப்பாளாக நடப்பாராக. எ-ம். பாலிடங்களுள் ஒன்றற்
குரியாவாய் வருமெனவுங் கொள்க.
எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள், மறவற்க,
உண்ணற்க அல் இடைநிலை பெற்று வரும்.
அன்றியும், ‘மகனெல்’ என்னுமிடத்து
மகனென்று சொல்லற்க எனவும், ‘மாPஇயதொரால்’ என்னுமிடத்து மாPயதொருவற்க. எ-ம்.
பொருள்பட நிற்றலால், அல், ஆல் இரண்டும் எதிர்மறை வியங்கோள் விகுதிகளாய் வருமெனவும்
அறிக.
மேற்கூறிய ஏவல் விகுதிகளும் இவ்வியங்கோள் விகுதிகளும் இடைநிலையின்றித்
தாமே எதிர்காலங் காட்டல் பதவியலிற் பெறப்பட்டது.
தேர்வு வினாக்கள் - 257.
வியங்கோள் வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள்
வினைமுற்றுக்கள் எவை? வியங்கோளாவது என்ன? எதிர்மறை வியங்கோள் வினைமுற்றுக்கள்
எவை?
செய்யுமென் முற்று
258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநலை
வினைமுற்றுச் சொற்கள், படர்க்கையிடத்தனவாகிய ஐம்பால்களுக்குள்ளே பலர்பாலொழிந்த
நான்கு பால்களுக்கும் பொதுவாக வரும்.
உதாரணம்.
அவண்ணும்
அவளுண்ணும்
அதுவுண்ணும் அவையுண்ணும்
இம்முற்று வினைச் சொல்லில் உம்
விகுதி நிகழ்காலமும் எதிர்காலமுங’ காட்டுதல் பதவியலிற் பெறப்பட்டது.
தேர்வு
வினா - 258. செய்யுமென்னும் வாய்ப்பாட்டுத் தெரிநிலை முற்றுக்கள் எவ்வாறு பொதுப்பட
வரும்?
பொதுவினைக் குறிப்பு
259. வேறு, இல்லை, உண்டு, என்னும்
இம்மூன்று வினைக்குறிப்பு முற்றுச்சொற்களும், யார் என்னும் வினா வினைக்குறிப்பு
முற்றுச் சொல்லும், இருதிணையம்பான் மூவிடங்கட்கும் பொதுவாகி
வரும்.
உதாரணம்.
அவன்
அது
யாம் அவள்
அவை
நீ
அவர்
யான்
நீர் வேறு, இல்லை, உண்டு, யார்
இல்லையென்பது
‘எஞ்ஞான்னுமில்’ எனக் கடைக் குறைந்து வருதலுமுண்டு.
அஃறிணையொருமைக்குரிய
டுவ்விகுதி பெற்று நிற்கும் உண்டு என்னம் வினைக்குறிப்பு முற்றும் வேறே:
விகுதியின்றிப் பொதுச் சொல்லாயே நிற்கும் இவ்வுண்டென்னும் வினைக்குறிப்பு முற்றும்
வேறே: முன்னையது இன்று என்பதற்கு மறுதலை: பின்னையது இல் என்பதற்கு மறுதலை:
பின்னையது இல் என்பதற்கு மறுதலை.
யார் என வகரங்கெட்டு நிற்கும் பலாபாற்
படர்க்கை வினைப் பெயரும் வேறே: யார் என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே: யார்
என்னும் இவ் வினா வினைக்குறிப்பும் வேறே.
யாரென்பது ஆரென விகாரப்பட்டும்
வரும்.
260. எவன் என்னும் வினைவினைக் குறிப்பு மற்றுச் சொல்
அஃறிணையிருபாற்கும் பொதுவாகி வரும்.
உ-ம்
அஃதெவன் அவையெவன்.
எவன்
என்னும் உயர்திணையாண்பாற் படர்க்கை வினாப்பெயரும் வேறே: எவன் என்னும் இவ்வினா
வினைக்குறிப்பும் வேறே.
எவன் என்பது என், என்ன, என்னை, என விகாரப்பட்டும்
வரும்.
தேர்வு வினாக்கள் - 259. வேறு, இல்லை, உண்டு என்னும் இம்மூன்று
வினைக்குறிப்பு முற்றுச் சொற்களும், யார், என்னம் வினாவினைக் குறிப்புமுற்றுச்
சொல்லும், எவ்வாறு பொதுப்பட வரும்? 260. எவன் என்னும் வினா வினைக் குறிப்பு
முற்றுச் சொல் எவ்வாறு பொதுப்பட வரும்?
பெயரெச்சம்
261.
பெயரெச்சமாவது, பாhல் காட்டும். முற்று விகுதி பெறாத குறைச்சொல்லாய்ப் பெயரைக்
கொண்டு முடியும் வினையாம்.
இப்பெயரெச்சங் கொள்ளும் பெயர்களாவன், வினை,
முதற்பெயர், கருவிப் பெயர், இடப்பெயர், தொழிற்பெயர், காலப்பெயர், செயற்பாட்டுப்
பொருட்பெயர் என்னும் அறவகை பெயருமாம்
உதாரணம்.
உண்டசாத்தன் -
வினைமுதற்பெயர்
உண்ட கலம் - கருவிப்பெயர்
உண்ட வீடு - இடப்பெயர்
உண்ட ஊண்
- தொழிற்பெயர்
உண்ட நாள் - காலப்பெயர்
உண்ட சோறு - செயப்படு
பொருட்பெயர்
262. தெரிநிலைவினைப் பெயரெச்சம், செய்த வென்னும்
வாய்ப்பாட்டிறந்தபாலப்பெயரெச்சம் எனவும் செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு
நிகழ்காலப் பெயரெச்சம் எனவும் செய்யும் என்னும் வாய்ப்பட்டெதிர்காலப் பெயரெச்சம்
எனவும் மூவகைப்படும்.
263. செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்த காம்,
பெயரெச்சங்கள் இறந்த காலவிடைநிiயோடு வகாரப்பட்டிறந்தகாலங் காட்டும் தகுதியோடும் அகர
விகுதி பெற்று வருவனவாம்.
உதாரணம்.
வந்த குதிரை போய குதிரை
உண்ட குதிரை
புக்க குதிரை
தின்ற குதிரை விட்ட குதிரை
வருந்தின குதிரை உற்ற
குதிரை
264. செய்கின்ற வென்னும் வாய்ப்பாட்டு நிகழ்கால பெயரெச்சங்கள்,
நிகழ்கால, விடைநிலையோடு அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உதாரணம்.
உண்ணாநின்ற
குதிரை உண்கின்ற குதிரை
உண்கிற குதிரை
266. எதிர்மறைத் தெரிநிலை
வினைப்பெயரெச்சங்கள், எதிர்மறை ஆகாரவிடைநிலையுந் தகரவெழுத்துப் போற்றோடு கூடிய
அகரவிகுதியும் பெற்று வருவனவாம்.
செய்யாத என்பது செய்த, செய்கின்ற, செய்யும்
என்னும் மூன்றற்கும் எதிர்மறையாம். இவ்வெதிர்மறை பெயரெச்சம் செய்கலாத, செய்கிலாத,
என அல், இல் என்னும் இடைநிலைகளை ஆகாரச் சாரியையோடு பெற்று
வரும்.
உதாரணம்.
உண்ணாத குதிரை நடவாத குதிரை
உண்ணாக் குதிரை, வடவாக்
குதிரை என ஈற்றுயிர் மெய்கெட்டும் வரும்.
267. குறிப்பு வினைப்பெயரெச்சங்கள்
அகரவிகுதி பெற்று வருவனவாம்.
உதாரணம்.
கரிய குதிரை, பெரிய களிறு,
நெடியவில்
செய்ய மலர், தீய சொல், புதிய நட்கு
உள்ளபொருள் முகத்த யானை படத்த
பாம்பு
268. எதிர்மறைத் குறிப்பு வினைப்பெயரெச்சங்கள் அல், இல. என்னம்
பன்படியாகத் தோன்றி ஆகாரசச் சாரியையுந் தகரவெழுத்து பெற்றேடு கூடிய அகர விபுதியும்
பெற்று வருவனவாம்.
உதாரணம்.
அல்லாத குதிரை இல்லாத
பொருள்
அல்லாக்குதிரை இல்லாப் பொருள் என ஈற்றுயிர் மெய் கெட்டு
வரும்.
269. பெயரெச்சங்கள் இருதணையைம்பான் மூவிடங் கடகும்
பொதுவாகவரும்.
உதாரணம்.
உண்ட யான், யாம்
நீ நீர்
அவன், அவள், அவர்,
அது, அவை
தேர்வு வினாக்கள் - 261. பெயரெச்சமாவது யாது? பெயரெச்சம் கொள்ளும்
பெயர்கள் எவை? 262. தெரிநிலை வினைப்பெயரெச்சம், எத்தனை வகைப்படும் எவை? 263.
செய்தவென்னும் வாய்ப்பாட்டிறந்தகாலப் பெயரெச்சங்கள் எவை? 264. செய்கின்ற வென்னும்
வாய்ப்பாட்டு நிகழ்காலப் பெயரெச்சங்கள் எவை? 265. செய்யுமென்னும்
வாய்ப்பாட்டெதிர்காலப் பெயரெச்சங்கள் எவை? 266. எதிர்மறைத் தெரிநிலை வினைப்
பெயரெச்சங்கள் எவை? செய்யாத வென்பது எவற்றிற்கு எதிர்மறை? இவ்வெதிர்மறைப்
பெயரெச்சம் இன்னும் இங்ஙனம் வரும்? 267. குறிப்பு வினை பெயரெச்சங்கள் எவை? 268.
எதிர்மறைக் குறிப்பு வினைப் பெயரெச்சங்கள் எவை? 269. பெயரெச்சங்கள் எவ்வாறு
பொதுப்பட வரும்?
வினையெச்சம்
270. வினையெச்சமாவது பால் காட்டும்
முற்றுவிகுதி பெறாத குறைசெ சொல்லாய் வினைச்சொல்லைக் கொண்டு முடியும்
வினையாம்.
இவ்வினையெச்சங் கொள்ளும் வினைச்சொற்களாவன உடன்பாடும் எதிர்மறையும்
பற்றிவரும் தெரிநிலையுங் குறிப்புமாகிய வினைமுற்றும் பெயரெச்சமும், வினையெச்சமும்,
வினையாலணையும், பெயரும், தொழிற்பெயரும் ஆகிய ஐ வகை
வினைச்சொற்களுமாம்.
உதாரணம்.
1. தெரிநிலைவினையெச்சந் தெரிநிலை வினை
விகற்பங்கள் கொள்ளுதற்கு
உதாரணம்.
உண்டு வந்தான்; உண்டுவாரான் -
தெரிநிலை வினைமுற்று
உண்டுவந்த் உண்டுவராத -
தெரிநிலைப்பெயரெச்சம்
உண்டுவந்து; உண்டுவராது - தெரிநிலை
வினையெச்சம்
உண்டுவந்தவன்; உண்டு வாராதவன் - தெரிநிலை வினையாலணையும்
பெயர்
உண்டுவருதல்; உண்டுவராதவன் - தெரிநிலைத் தொழிற் பெயர்
2. தெரிநிலை
வினையெச்சங் குறிப்புவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
கற்றுல்லவன் -
குறிப்புவினைமுற்று
கற்றுவல்ல - குறிப்பு வினைப்பெயரெச்சம்
கற்றுவல்லவன் -
குறிப்புவினையாலனையும் பெயர்
கற்று வன்மை - குறிப்புத் தொழிற்பெயர்
3.
குறிப்பு வினையெச்சந் தெரிநிலைவினை விகப்பங்கள் கொள்ளுதற்கு
உதாரணம்:-
அறமன்றிச் செய்தான்; அறமன்றிச் செய்யான் -
தெரிவினைமுற்று
அறமன்றிச் செய்த் அறமன்றிச் செய்யாத -
தெரிபெயரெச்சம்
அறமன்றிச் செய்து; அறமன்றிச் செய்யாமை - தெரிதொழிற்
பெயர்
4. குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினையெச்சங் குறிப்பு வினை
விகப்பங்கள் கொள்ளுதற்கு உதாரணம்:-
அறமன்றியிலன் - குறிப்பு
வினைமுற்று
அறமன்றியில்லாது - குறிப்பு வினைப்பெயரெச்சம்
அறமன்றியில்லாது -
குறிப்பு வினையெச்சம்
அறமன்யில்லாதவன் - குறிப்பு வினையாலணையும்
பெயர்
அறமன்யின்மை - குறிப்புத் தொழிற்பெயர்
271. பதவியலிற்
கூறப்பட்ட வினையெச்ச விகுதிகளும் உகர விகுதி இறந்தகால விடைநிலையோடு கூடிவரும் என
விகுதி, இறந்தகாலவிடைநிலையோடும் விகாரப்பட்டிருந்த காலங்காட்டும் பகுதியோடும்
கூடிவரும். மற்றை விகுதிதி யெல்லாம் இடைநிலையின்றித் தாமே
காலங்காட்டும்.
272. தெரிநிலை வினையெச்சங்கள் செய்து என்னும்
வாய்ப்பாட்டிறந்த கால வினையெச்சம் எனவும், செயவென்னும் வாய்ப்பாட்டு
முகலத்திற்குமுரிய வினையெச்சம் எனவும் செயின் என்னும் வாய்பாட்டெதிர்கால
வினையெச்சம் எனவும் மூவகைப்படும்.
273. செய்து என்னும் வாய்ப்பாட்டு
இறந்தகால வினையெச்சங்கள், உ, இ, ய் என்னும் விகுதிகளை இறுதியிற் பெற்று தன்
கருத்தாவின் வினையையே கொண்டு முடிவனவாம்.
இங்கே இறந்தகாலம் என்பது
முடிக்கும் சொல்லால் உயரப்படும் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும்.
தொழில்முன்னிகழ்தலை.
(உதாரணம்)
உகரவிகுதி நடந்து
உண்டு
சென்று
தேர்ந்து
கேட்டு
கற்று வந்தான்
இகரவிகுதி
யகரவிகுதி ஆடி
ஆய்
எண்ணி
போய் வந்தான்
இங்கே வினையெச்சத்தால்உயரப்படுந் தொழிலை
நிகழ்த்தினா வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு வினைமுதலாகக்
காண்க.
விகுதி விகரப்பட்டு, விகுதிபெறாது சில பகுதியே விகாரப்படும்
இச்செய்தெனடவாய்ப்பட்டிறந்த கால வினையெச்சங்களாய்
வரும்.
தழுவிக்கொண்டான்
மருவிவந்தான் தழீஇக்கொண்டான்
மாPஇவந்தான்
விகுதி விகாரப் பட்டு வந்தன
புகு
விடு
பெறு புக்கு வந்தான்
விட்டு
வந்தான்
பெற்று வந்தான் விகுதி பெறாது சில பகுதியே விகாரப்பட்டு
வந்தன
இச்செய்னெச்சம், ஒரோவிடத்து காரப் பொருட்டாயும்
வரும்.
உதாரணம்.
கற்றறிந்தான்
அறம் செய்த
புகழ்பெற்றான்
செய்யுளிலே இச்செய்தென்வாய்பபாட் டிறந்தகால வினையெச்சங்கள்,
பு, ஆ. ஊ, என்னும் விகுதிகளைப் பெற்றும்
வரும்.
உதாரணம்.
புகரவிகுதி
ஆவிகுதி
ஊவிகுதி
உண்குபு
உண்ணா
உண்ணுh தேடுபு
தேடா
தேடு வந்தான்
274. செய
என்னும் வாயடப்பாட்டு முக்காலத்திற்கும் உரிய வினை யெச்சம் அகரவிகுதியை இறுதியிற்
பெற்றுத் தான் கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு
முடிவதாம்.
(3) செய வெண் வாய்ப்பாட்டு வினையெச்சம் இறந்த காலத்திலே காரணப்
பொருளில் வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின் வினையையும் கொண்டு
முடியும்.
காரணப் பொருளில் வருதலாவது முடிக்குந் சொல்லால் உணரப்படும்
தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில் காரணம் என்பது பட வருதல்.
உதாரணம்.
மழை பெய்ய புகழ்பெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை பெய்ய நெல் விளைந்நது -
பிறகருத்தாவின் வினை
மழை பெய்ய புகழ்பெற்றது என்றவிடத்து வினையெச்சந்தால்
உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலே முடிக்குஞ் சொல்லால் உணரப்படும் தொழிற்கு
வினைமுதலாதல் காண்க.
மழைபெய்ய நெல்லு விளைந்தது எனற விடத்து வினையெச்சத்
தால் உணரப்படும் தொழிலை நிகழ்த்தின வினைமுதலும் வேறே: முடிக்குஞ் சொல்லால்
உணலப்படும் தொழிலை நிஷைகழ்த்தின வினைமுதலும் வேறேயாதல் காண்க.
செய்யுளிலே
இச் செயன்வென்வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் என என்னும் விகுதியை பெற்றும்
வரும்.
உதாரணம்.
மழை பெயடதெனப் புகழபெற்றது - தன்கருத்தாவின் பெயர்
மழை
பெய்தென நெல் விளைந்நது - பிறகருத்தாவின் வினை
(4) செயவென் வாய்ப்பாட்டு
வினையெச்சம் எதிர்காலத்திலே கரியப் பொருளில வந்து தன் கருத்தாவின் வினையையும் பிற
கருத்தாவின் வினையையும் கொண்டு முடியும்.
காரியப் பொருளில் வருதலாவது
முடிக்குஞ் சொல்லால் உணலப்படுந் தொழிற்கு வினையெச்சத்தால் உணரப்படும் தொழில்.
காரியம் என்பது பட வருதல்.
உதாரணம்.
தானுண்ணவந்தான் - தன்கருத்தாவின்
பெயர்
யானுண்ணத்தந்தான் - பிறகருத்தாவின் வினை
இச்செயவென்வாய்ப்பாட்
டெதிர்கால வினையெச்சம் கு என்னும் விகுதியைப் பெற்றும்
வரும்.
உதாரணம்.
தானுணற்கு வந்தான் - தன்கருத்தாவின்
பெயர்
யானுணற்குத் தந்தான் - பிறகருத்தாவின் வினை
உணணும்படி, உண்ணும்
பொருட்டு, உண்ணும் வண்ணம், உண்ணும் வகை என்பன உணற்கென்னும் பொருள்பட
வரும்.
செய்யுளிலே, இச்செயவென்வாய்ப்பாட் டெதிர்கால வினையெச்சம், இய, இயர்,
வான், பான், பாக்கு என்னும் விகுதிகளைப் பெற்றும் வரும். இவற்றுள் முன்னைய இரண்டு
விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையையும் பிற கருத்தாவின்வினையையுங் கொண்டு
முடியும்; பின்னைய மூன்று விகுதி பெற்றவை தன் கருத்தாவின் வினையைக் கொண்டு
முடியும்.
உதாரணம்.
இயவிகுதி நீரிவைகாணியவம்மின் - தன்
கருத்தாவின் வினை
அவர் காணிய வம்மின் - பிற கருத்தாவின் வினை
இயர்விகுதி
நாமுண்ணியர்வந்தேம் - தன் கருத்தாவின் வினை
நீருண்ணியர் வழங்குவேம் - பிற
கருத்தாவின் வினை
வான்விகுதி - தான் கொல்வான் சென்றான்
பான்விகுதி -
தானலைப்பான் புகுந்தான்
பாக்குவிகுதி - தான்றருபாக்கு வருவான் தன் கருத்தாவின்
வினை
(5) செயவென்வாய்ப்பாட்டு வினையெச்சம், தனக்கென நியமமாக உரிய
நிகழ்காலத்திலே, இது நிகழா நிற்க இது நிகழ்ந்தது என்னும் பொருள்பட வந்து,
பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடியும்.
இங்கே நிகழ்காலமென்றது,
முடிக்குஞ் சொல்லால் உணரப்படுந் தொழிலோடு வினையெச்சத்தால் உயரப்படுந் தொழில்
முற்பிற் பாடின்றி உடனிகழ்தலை.
உதாரணம்.
சூரியனுதிக்க வந்தான் -
பிறகருத்தாவின் வினை
275.செயின் என்னும் வாய்ப்பாட்டு எதிர்கால
வினையெச்சங்கள், இன், ஆல், கால், கடை, வழி, இடத்து, உம் என்னும் விகுதிகளை
இறுதியிற் பெற்றுக் காரணப்பொருளில் வந்து, தன் கருத்தாவின் வினையையும் பிற
கருத்தாவின் வினையையும் பிறகருத்தாவின் வினையையும் கொண்டு
முடிவனவாம்.
இவ்வினையெச்சம், எதிர்காலச் சொல்லையே முடிக்குஞ் சொல்லாகக்
கொள்ளும். இவ்வினையெச்சத்தால் உணரப்படுந் தொழில், ஒருதலையாகவே சொல்லுவான். சொற்குப்
பின்னிகழ்வதாயும், முடிக்குஞ்சொல்லால் உணரப்படுந் தொழிற்குக்
காரணமாகமுன்னிகழ்வதாயும் உள்ளது; ஆதலால், இவ்வினையெச்சம் எதிhடகாலம் பற்றிக்
காரணப்பொருளில் வருவதாயிற்று. ஒருதலை - துணிவு.
(உதாரணம்)
இன்
யாணுண்ணி னுவப்பேன்
உண்ணிற் பசிதீரும் தன்கரு பிறகரு
ஆல் நீ வந்தால்
வாழ்வாய்
நீ வந்தான் யான் வாழ்வேன் தன்கரு பிறகரு
கால் நீ
கற்றக்காலுவப்பாய்
உண்டக்காற் பசிதீரும் தன்கரு பிறகரு
கடை நல்வினை தானுற்றக்
கடையுதவும்
நல்வினை தானுற்றக்கடைத் தீவினை வராது தன்கரு பிறகரு
வழி நல்வினை
தானுற்ற வழியுதவும்
நல்வினை தானுற்றவழித் தீவினை வராது தன்கரு பிறகரு
இடத்து
நல்வினை தானுற்றவிடத்துதவும்
நல்வினை தானுற்றவிடத்துத் தீவினைவராது தன்கரு
பிறகரு
உம் உண்டலு முவப்பாய்
உண்டலும் பசி தீரும் தன்கரு
பிறகரு
வந்தால் என்பது துச்சாரியை பெற்றது. உண்டக்கால் என்பது
துச்சாரியையும் அகரச்சாரியையும் பெற்றது. உற்றக்கால், உற்றக்கடை, உற்றவழி,
உற்றவிடத்து என்பன அகரச்சாரியை பெற்றன. உண்டலும் என்பது துச்சாரியையும் அல்லுச்
சாரியையும் பெற்றது.
உண்பானேல் உண்பானெனின், உண்பானாயின், உண்பானேனும் என,
முற்று வினைகள், ஏல், எனின், ஆயின், ஏனும், என்னும் நான்கனோடும் இயைந்து, ஒரு
சொன்னீர் மைப்பட்டுச் செயின் என்னும் வாய்ப்பாட்டு வினையெச்சங்களாய் வருமெனவும்
அறிக.
276. எதிர்மறைத் தெரிநிலை வினையெச்சங்கள் எதிர்மறை ஆகாரவிடைநிலையோடு
உ, மல், மே, மை, மைக்கு, கால், கடை, வழி, இடத்து என்னும் விகுதிகளைப் பெற்று
வருவனவாம்.
செய்யாது என்பது செய்து, செய்பு, செய்யா, செய்யூ என்பவற்றிற்கு,
எதிர்மறையாம். செய்யாது என்பதிலே தகரம் எழுத்துப்பேறு. செய்யாது என்பது, செய்கலாது,
செய்கிலாது என, அல் இல், என்னும் இடைநிலைகளை ஆகாரச்சாரியையோடு பெற்றும்
வரும்.
செய்யாமல் என்hது, செய என்பதற்கு எதிர்மறையாம்.
செய்யாமல்,
செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு என்னும் நான்கும், செயற்கு, செய்யிய, செய்யியர்
என்பவற்றிற்கும், செயற்கு என்பது படவருஞ் செயவேனெச்சத்திற்கும்
எதிர்மறையாம்.
செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி, செய்யாவிடத்து என்னும்
நான்கும், செயின் என்பதற்கும், அப்பொருள்பட வருவனவாகிய செய்தால், செய்தக்கால்,
செய்தக்கடை, செய்தவழி, செய்தவிடத்து என்பனவற்றிற்கும்
எதிர்மறையாம்.
(உதாரணம்)
விதிவினை யெச்சம் மறைவினையெச்சம்
உண்டு
வந்தான் உண்ணாது வந்தான்
மழை பெய்யப் பயிர் தழைத்தது மழை பெய்யாமற் பயிர்
வாடிற்று
இங்கே பெய்யாமல் என்பதற்கு
பெய்யாமையால் என்பது பொருள்
அவன்
காணவந்தேன்
அவன் காணாமல் வந்தேன்.
இங்கே காணாமல் என்பதற்குக்
காணாதிருக்க
என்பது பொருள்.
நீ வீடெய்தற்கு வணங்கு
நீ நரகெய்தாமல் வணங்கு
நீ
நரகெய்தாமே வணங்கு
நீ நரகெய்தாமை வணங்கு
நீ நரகெய்தாமைக்கு வணங்கு
இஙகே
எய்தாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது
பொருள்
யானுணற்கு விதித்தான் யானுண்ணாமல் விதித்தான்
யானுண்ணாமே
விதித்தான்
யானுண்ணாமை விதித்தான்
யானுண்ணாமைக்கு விதித்தான்
இங்கே
உண்ணாமல் என்பது முதலிய
நான்கிற்கும் எய்தாதொழியும் பொருட்டு
என்பது
பொருள்
யானுண்ணின்
மகிழ்வென் யானும்ணாக்கான் மகிழேன்
யானும்ணாக்கடை
மகிழேன்
யானும்ணாவழி மகிழேன்
யானும்ணாவிடத்து மகிழேன்
இங்கே உண்ணாக்கால்
என்பது முதலிய
நாந்கிற்கும் உண்ணாதொழியின் என்பது
பொருள்
உண்ணிற்
பசிதீரும் உண்ணாக்காற் பசி தீராது
உண்ணாக்கடை பசி
தீராது
உண்ணாவழிப் பசி தீராது
உண்ணாவிடத்து பசி தீராது
277.
உடன்பாட்டுக் குறிப்பு வினையெச்சங்கள், பண்படியாகத் தோன்றி அகரவிகுதியைப் பெற்று
வருவனவாம்.
உதாரணம்.
மெல்லப் பேசினான் சாலப்பல
பைய நடந்தான் உறக்கரிது
வலியப் புகுந்தான் மாணப் பெரிது
மெல்ல என்பது, ல, ளவொற்றுமைபற்றி,
மௌ;ளவெனவும் வழங்கும்.
278. எதிர்மறை குறிப்புவினையெச்சங்கள், அல், இல்
என்னும் எதிர்மைபண்படியாகத் தோன்றி, றி டு மல் மே மை ஆல் கால் கடை வழி இடத்து
என்னும் விகுதிகளைப் பெற்று
வருவனவாம்.
உதாரணம்.
றி
து
மல்
மே
மை
ஆல்
கால்
கடை
வழி
இடத்து
அறமன்றிச்செய்யான்
அறமல்லாதில்லை
அறமல்லதில்லை
அறமல்லாமலில்லை
அறமல்லாமேயில்லை
அறமல்லாமையில்லை
நீயல்லாலில்லை
அவனல்லாக்கானீயார்
அவனலடலாக்கடைநீயார்
அவனல்லாவழிநீயார்
அவனல்லாவிடத்து
நீயார்
அருளின்றிச் செய்தான்
அருளில்லாது செய்தான்
---
யானில்லாமல்
வந்தான்
யானில்லாமே வந்தான்
யானில்லாமை வந்தான்
--
யானில்லாக்கால்
வருவான்
யானில்லாக்கடைவருவான் யானில்லாவழி வருவான்
யானில்லாவிடத்து
வருவான்
இவ்வினையெச்சக் குறிப்புக்களில் வரும் ஆகாரமும் அகரமுஞ்
சாரியை.
279. வினையெச்சங்கள், இருதிணையைம்பான் மூவிடங்கட்கும் பொதுவாக
வரும்.
உதாரணம்.
நடந்து வந்தான், வந்தேம்
வந்தாய், வந்தீர்
வந்தான்,
வந்தாள், வந்தார், வந்தது, வந்தன
280. தன் கருத்தாவின் வினையே
கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் சினை வினையாயின், அவை அச்சினைவினையைக் கொண்டு
முடிதலுமன்றி, ஒற்றுமைபற்றி முதல் வினையையும் கொண்டு
முடியும்.
உதாரணம்.
சாத்தன் காலொடிந்து வீழ்ந்தான். இங்கே ஒடிதல் சினைவினை;
வீழ்தல் முதல் வினை ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தான் என்னும்
முதல் வினைகொண்டு முடிந்தது.
காலொடிந்து வீழ்ந்தது. இங்கே ஒடிதலுஞ் சினை
வினை; வீழ்தலுஞ் சினைவினை. ஆதலின் ஒடிந்து என்னுஞ் சினைவினையெச்சம் வீழ்ந்தது
என்னும் சினைவினை கொண்டு முடிந்தது.
மாடு காலொடிந்து வீழ்ந்தது. இங்கே
வீழ்தல் மாட்டின் வினையாதலிற் சினைவினையெச்சம் முதல் வினைகொண்டு
முடிந்தது.
281. பிற கருத்தாவின் வினையைக் கொள்ளும் வினையெச்சங்கள்;
தன்கருத்தாவின் வினையைக்கொள்ளும் வினையெச்சங்களாக திரிந்தும் வரும். திரிபினும்,
அவற்றின் பொருள்கள் வேறுபடாவாம்.
உதாரணம்.
ஞாயிறு பட்டு வந்தான். இங்கே பட
வென்னுஞ் செயவென் வாய்ப்பாட்டுவினையெச்சம் பட்டு என திரிந்து
நின்றது.
மழைபெய்து நெல் விளைந்தது. இங்கே பெய்ய என்னுங் காரணப் பொருட்டாகிய
செயவென் வாய்ப்பாட்டிறந்தகால வினையெச்சம் பெய்து என திரிந்து நின்றது.
தேர்வு வினாக்கள் - 270. வினையெச்சமாவது யாது? வினையெச்சங் கொள்ளும் வினைச்
சொற்களாவன எவை? 271. வினையெச்ச விகுதிகளுள், எவ்விகுதிகள் காலங்காட்டும்
இடைநிலையோடு கூடிவரும்? எவ்விகுதிகள் இடைநிலையின்றி தாமே காலங்காட்டும்? 272.
தெரிநிலை வினையெச்சங்கள் எத்தனை வகைப்படும்? 273. செய்து என்னும் வாய்ப்பாட்டு
இறந்தகால விiயெச்சங்கள் எவை? இங்கே இறந்தகாலம் என்பது எவை? இச் செய்தென்
வாய்ப்பாட்டு இறந்தகால வினையெச்சங்கள் வேறு விகுதிகளைப் பெற்று வருமோ? 274.
செயவென்னும் வாய்ப்பாட்டு முக்காலத்திற்குமுரிய வினையெச்சம் யாது? செயவென்
வாய்ப்பாட்டு வினையெச்சம், இறந்தகாலத்திலே எப்பொருளில் வந்து, எவ்வினையைக் கொண்டு
முடியும்? காரணப்பொருளில் வருதலாவது என்னை? இச் செயவென் வாய்ப்பாட்டிறந்தகால
வினையெச்சம் வேறு விகுதியைப் பெற்று வருமோ? செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம்,
எதிர்காலத்திலே எப்பொருளில் வந்து, எவ் விகையைக் கொண்டு முடியும்? காரியப் பொருளில்
வருதலாவது என்னை? இச்செயவென் வாய்ப்பாட்டெதிர்கால வினையெச்சம் - வேறு விகுதியைப்
பெற்றும் வருமோ? வேறெவைகள் உணற்கென்னும் வரும்? செய்யுளிலே செயவென்
வாய்ப்பாட்டெதிர் கால வினையெச்சம் வேறு விகுதிகளைப் பெற்றும் வருமோ? இவற்றுள்,
எவ்வௌ; விகுதி பெற்றவை எவ்வௌ; வினையைக் கொண்டு முடியும்? இங்கே நிகழ்காலம் என்றது
எதை? 275. செயினென்னும் வாய்ப்பாட்டு எதிர்கால வினையெச்சங்கள் எவை? இவ் வினையெச்சம்
எக்காலச் சொல்லை முடிக்கும் சொல்லாகக் கொள்ளும்? செயினென்னும் வாய்ப்பாட்டு
வினையெச்சங்களாய் வருவன பிறவும் உளவோ? 276. எதிர்மறை தெரிநிலை வினையெச்சங்கள் எவை?
செய்யாது என்பது எவைகளுக்கு எதிர்மை? செய்யாது என்பது இன்னும் எப்படி வரும்?
செய்யாது என்பது எதற்கு எதிர்மறை? செய்யாமல், செய்யாமே, செய்யாமை, செய்யாமைக்கு
என்னும் நான்கும் எவைகளுக்கு எதிர்மறை? செய்யாக்கால், செய்யாக்கடை, செய்யாவழி,
செய்யாவிடத்து என்னும் நன்கும் எவைகளுக் எதிர்மறை? 277. உடன்பாட்டு குறிப்பு
வினையெச்சங்கள் எவை? 278. எதிhமறைக் குறிப்பு வினையெச்சங்கள் எவை? 279.
விiயெச்சங்கள் எவ்வாறு பொதுப்பட வரும்? 280. தன் கருத்தாவின் வினையையே
கொள்ளுதற்குரிய வினையெச்சங்கள் பிறகருத்தாவின் வினையைக் கொண்டு முடிதல் இல்லையோ?
281. பிறகருத்தாவின் வினையைக் கொள்ளும் வினை யெச்சங்கள் தன் கருத்தாவின்
வினையெச்சங்களாக திரிந்து வருதல் இல்லையோ?
முற்றுவினை எச்சப்பொருளைத்
தருதல்
282. தெரிநிலை வினைமுற்றுங் குறிப்பு வினை முற்றுங் குறிப்பு
வினைமுற்றும், தமக்குரிய பயனிலை கொள்ளுமிடத்து வினையெச்சத்திற்குரிய பயனிலை
கொள்ளுமிடத்து வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பயனிலை கொள்ளுமிடத்து
வினையெச்சப் பொருளையும், பெயரெச்சத்திற்குரிய பணனிலை கொள்ளுமிடத்துப் பெயரெச்சப்
பொருளையுந் தரும்.
உதாரணம்.
கண்டனன் வணங்கினன்; இங்கே கண்டனன், என்னுந்
தெரிநிலை வினைமுற்று, கண்டு என வினையெச்சப் பொருளைத்
தந்நது.
உண்டான்சாத்தனூர்க்குப் போயினான்; இங்கே உண்டான் என்னுந் தெரிநிலை
வினைமுற்று உண்டடெனப் பெயரெச்ச பொருளைத் தந்தது.
உச்சிக்கூப்பிய கையினர்
தற்புகழ்ந்து இங்கே கையினார் என்னுங் குறிப்பு வினைமுற்று, கையையுடையனவராகி என
வினையெச்சப் பொருளைத் தந்தது.
வெந்திறலினான் விரல் வழுதியோடு; இங்கே
திரலினால் என்னும் குறிப்பு வினைமுற்று திறலினனாகிய எனப்பெயரெச்சப் பொருளைத்
தந்தது.
தேர்வு வினா - 282. வினைமுற்றுக்கள் எச்சப் பொருளை தருதல் இல்லையோ?
இருவகைவினைக் குறிப்பு
283. வினாக்குறிப்புச் சொற்கள், ஆக்கவினைக்
குறிப்பும் இயற்கை வினைக்குறிப்பும் என இரு வகைப்படும்.
அவற்றுள்,
ஆக்கவினைக் குறிப்பாவது காரணம்பற்றி வரும் வினைக்குறிப்பாம் அதற்கு ஆக்கச்சொல்
விருந்தாயினும் தொக்காயினும் வரும்.
உதாரணம்.
கல்வியாற் பெரியனாயினான்
கல்வியாற் பெரியன்
கற்றுவல்லராயினார் கற்றுவல்லர்
இயற்கை
வினைக்குறிப்பாவது காரணப்பற்றாது இயற்கையை உணர்த்தி வரும் வினைக்குறிப்பாம், அது
ஆக்கச்சொல் வேண்டாதே வரும்.
உதாரணம்.
நீர் தண்ணிது
தீ
வெய்து
தேர்வு வினாக்கள் - 283. வினைக்குறிப்புச் சொற்கள் இன்னும் எத்தனை
வகைப்படும்? ஆக்கவினைக்குறிப்பாவது யாது? இயற்கை வினைக்குறிப்பாவது
யாது?
தெரிநிலை வினைப்பகுப்பு
284. தெரிநிலை வினைச் சொற்கள்,
செயப்பாடு பொருள் குன்றிய வினை, செயப்பாடு பொருள், குன்றாத வினை, எ-ம். தன்வினை,
பிறவினை, எ-ம். செய்வினை, செயப்பாட்டு வினை, எ-ம். வௌ;வேறே வகையிற் பிரிவுபட்டு
வழங்கும்.
285. செயப்படுபொருள் குன்றிய வினையாவது, செயப்பாடு பொருளை
வேண்டாது. வரும்முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
உதாரணம்.
நடந்தான்,
வந்தான், இருந்தான், உறங்கினான்.
இவை, இதை நடந்தான், இதை வந்தான் எனச்
செயப்படு பொருளேற்று வாராமை காண்க.
286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது
செயப்படுபொருளை வேண்டி நிற்கும் முதனிலை அடியாகத் தோன்றிய வினையாம்.
உதாரணம்.
உண்டான், கொடுத்தான், கண்டான், படித்தான், இவை, சோற்றையுண்டான்,
பொருளைக் கொடுத்தான் எனச் செயப்படும் பொருளேற்று, வருதல் காண்க.
287.
தன்வினையாவது தன்னெழுவாய் கருத்தாவின் றொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலை அடியாகத்
தோன்றிய வினையாம் இத்தன்வினை இயற்றுதற் கருத்தாவின்
வினையெனப்படும்.
செயப்பாடு பொருள் கன்றிய முதனிலை செயப்பாடு பொருள் குன்றாத
முதனிலை என்னும் இரு வகை முதலினையும் தன்வினைக்கு முதனிலையாக
வரும்.
உதாரணம்.
சாத்தனடைந்தான், தச்சன் கோயிலைக்
கட்டினான்.
இவைகளிலே, நடக்கையுங் காட்டலுமாகிய முதனிலைத் தொழில்கள்
எழுவாய்க் கருத்தாவின் றொழிலாதல் காண்க.
288. பிறவினையாவது தன்னெழுவாய்
இக்கருத்தா வல்லாத பிறகருத்தாவின் தொழிலை உணர்த்தி நிற்கும் முதனிலையடியாக தோன்றிய
வினையாம். இப்பிறவினை ஏவுதற் கருத்தாவின் வினை எனப்படும்.
செயப்படு பொருள்
குன்றிய முதனிலை, செயப்படுபொருள் குன்றாத முதனிலை என்னும் இரு வகை முதனிலைகளும்
பிறவினை விகுதி பெற்றேனும் தாம் விகாரப்பட்டேனும், விகாரப்பட்டு விகுதிபெற்றேனும்,
பிற வினைப் பகுதிகளாய், வருதல் பதவியலிற் கட்டுவித்தான்.
இவைகளிலே
நடக்கையுங் கட்டலுமாகிய முதனிலை தொழில்கள், எழுவாய் கருத்தாவின் தொழிலாகாது
பிறகரத்தாவின் தொழிலாதல் காண்க.
செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத்
தோன்றிய பிற வினைகள், அம் முதனிலைக் கருத்தாவைக் தமக்குச் செயப்படு பொருளாக கொண்டு
வரும்.
உதாரணம்.
கொற்றான் சாத்தனைக் கடைப்படித்தான்
அரசன் றச்சனாற்
கோயிலைக் கட்டுவித்தான்
289. தன் வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாக நிற்கும்
முதனிலைகளுக்குஞ் சிலவுளவாம்.
உதாரணம்.
முதனிலை தன்வினை பிறவினை
அழி
நீ யழி காட்டை யழி
கெடு நீ கெடு அவன் குடியைக் கெடு
வெளு நீ யுடம்படுவெளு
துணியை வெளு
கரை நீ கரை புளியைக் கரை
தேய் நீ தேய் கட்டையைத்
தேய்
இம்முன்னிலைகளால் வினைச்சொற் பிறத்தல் வருமாறு.
முதனிலை
தன்வினை பிறவினை
அழி அழித்தான்
அழிக்கின்றான்
அழிவான்
அழித்தான்
அழிக்கின்றான்
அழிப்பான்
கெடு
கெட்டான்
கெடுகின்றான்
கெடுவான்
கெட்டான்
கெடுகின்றான்
கெடுப்பான்
வெளு
வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
வெளுத்தான்
வெளுக்கின்றான்
வெளுப்பான்
கரை
கரைந்தான்
கரைக்கின்றான்
கரைவான்
கரைந்தான்
கரைக்கின்றான்
கரைப்பான்
தேய்
தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்வான்
தேய்ந்தான்
தேய்கின்றான்
தேய்ப்பான்
290. பிறவினைகள்,
ஒரோவிடத்துப் பிறவினைவிகுதி தொக்கும் வரும்.
உதாரணம்.
அரசன் செய்த தேர்:
இதிலே செய்வித்த என்னும் பிறவினை செய்த என விவ்விகுதி தொக்கு நின்றது.
கோழி
கூலிப் பொழுது புலர்ந்தது: இதிலே கூவிலித்து என்னும் பிறவினை கூவி என விவ்விகுதி
தொக்கு நின்றது.
291. செய்வினையாவது, படு விகுதி புணராத முதனிலை அடியாகத்
தோன்றி, எழுவாய்க் கருத்தாவைக் கொண்டு வரும்
வினையாம்.
உதாரணம்.
சாத்தனடந்தான் நடப்பித்தான்
சாத்தன் கட்டினான்
கட்டுவித்தான்
292. செயப்பாட்டு வினையாவது, படு விகுதி புணர்ந்த முதனிலை
அடியாகத் தோன்றி, வினைமுதல் மூன்றாம் வேற்றுமையிலும், செயப்படு பொருள் எழுவாயிலும்
வரப்பெறும் வினையாம்.
பிறவினை முதனிலைகளும், செயப்படு பொருள் குன்றாத தனவினை
முதனிலைகளும், படு விகுதியோடும், இடையே அகரச்சாரியையேனும், குச்சாரியையும்
அகரச்சாரியையுமேனும் பெற்று, செயப்பாட்டு வினை முதனிலைகளாக
வரும்.
உதாரணம்.
சாத்தனா லிம்மாடு நடப்பிக்கப்பட்டது
கொற்றான லிச்சோ
றுண்ணப்பட்டது.
293. செயப்பாட்டுவினை, ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும்
வரும்.
உதாரணம்.
“இல்வாழ்வானென்பான்“, இங்கே எனப்படுவான் என்னுஞ்
செயப்பாட்டு வினை என்பான் எனப் படுவிகுதி தொக்கு நின்றது.
உண்டசோறு: இங்கே
உண்ணப்பட்ட என்னுஞ் செயப்பாட்டு வினை உண்ட எனப் படு விகுதி தொக்கு
நின்றது.
தேர்வு வினாக்கள் - 284. தெரிநிலை வினைச் சொற்கள் இன்னும்
எவ்வௌ; வகையிற் பிரிவு பட்டு வழங்கும்? 285. செயப்படு பொருள் குன்றிய வினையாவது
யாது? 286. செயப்படு பொருள் குன்றாத வினையாவது யாது? 287. தன்வினையாவது யாது? தன்
வினைக்கு முதனிலையாக வருவன எவை? 288. பிற வினையாவது யாது? பிற வினைக்கு மதனிலையாக
வருவன எவை? செயப்படு பொருள் குன்றிய முதனிலை அடியாகத் தோன்றிய பிறவினைகள் எதனைத்
தமக்குச் செயப்படுபொருளாக கொண்டு வரும்? செயப்படு பொருள் குன்றாத முதனிலை அடியாகத்
தோன்றிய பிறவினைகள் அம் முதனிலைக் கருத்தாவை யாதாகக் கொண்டு வரும்? 289.
தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய் நிற்கும் முதனிலைகள் உளவோ? 290. பிறவினைகள்
ஒரோவிடத்து பிறவினை விகுதி தொக்கும் வருமோ? 291. செய்வினையாவது யாது? 292.
செயப்பாட்டு வினையாவது யாது? எவ்வௌ; முதனிலைகள் எவ்வௌ;வாறு செயப்பாட்டு வினைக்கு
முதனிலைகளாக வரும்? 293. செயப்பாட்டு வினை ஒரோவிடத்துப் படு விகுதி தொக்கும் வருமோ?
வினையாலணையும் பெயர் விகாரப்படுதல்
294. வினையாலணையும் பெயர்கள்,
சிறுபான்மை இயல்பாகியும், பெரும்பாலும் விகாரப்பட்டும்
வரும்.
உதாரணம்.
நடந்தானை, குழையானை, குழையினனை, எ-ம். நடந்தோன், குழையோன்,
நடந்தவன், குழையவன், எ-ம். நடந்தன, குழையன, எ-ம். நடந்தவை, குழையவை. எ-ம்.
வரும்.
தேர்வு வினா - 294. விணையாலணையும் பெயர்கள் எங்ஙனம்
வரும்.
வினையியல் முற்றிற்று
3. இடையியல்
295.
இடைச்சொல்லாவது, பெயரும் வினையும் போலத் தனித்து நடக்கும் ஆற்றல் இல்லாததாய்,
அப்பெயரையும் வினையையுஞ் சார்ந்து வருஞ் சொல்லாம்.
தேர்வு வினா - 295. இடைச்
வொல்லாவது யாது?
இடைச்சொற்களின் வகை
296. இடைச் சொல்: 1.
வேற்றுமையுருபுகள், 2. விகுதியுருபுகள், 3. இடைநிலையுருபுகளும், 4.
சாரியையுருபுகளும், 5. உவமவுருபுகளும், 6. பிறவாறு தத்தமக்கரிய பொருள்களை உணர்த்தி
வருபவைகளும், 7. ஒலி, அச்சம், விரைவு இவற்றைக் குறிப்பால் உணர்த்தி வருபவைகளும், 8.
இசை நிறையே பொருளாக நிற்பவைகளும் என, ஒன்பது வகைப்படும்.
இவைகளுள்,
வேற்றுமையுருபுகள் பெயரியலிலும், விகுதியுருபுகளும் இடைநிலையுருபுகளுஞ்
சாரியையுருபுகளும் பதவியலிலுஞ் சொல்லப்பட்டன.
இசைநிறை என்பது, வேறுபொருள்
உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து நிற்பது.
அசை நிலை என்பது, வேறு
பொருள் உணர்த்தாது பெயர்ச்சொல்லோடும் வினைச்வொல்லோடுஞ் சார்த்திச் சொல்லப்பட்டு
நிற்பது. அசைத்தல் - சார்த்துதல்.
தேர்வு வினாக்கள் - 296. இடைச் சொல்
எத்தனை வகைப்படும்? இசை நிறையென்பது யாது? அசைநிலையென்பது
யாது?
உவமைவுருபிடைச் சொற்கள்
297. உவமைவுருபிடைச் சொற்களாவன, போல,
புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏயப்ப, நேர, நிகர, பொருவ, அன்ன, அனைய
முதலியனவாம்.
இவைகளுள்ளே, போல எனபது முதலிய பதினொன்றும், இடைச் சொல்லடியாகப்
பிறந்த வினையெச்ச வினைகள. அவைகளிலே, போல், புரை, ஒ, உறழ, மான், கடு, இயை, ஏய்,
நேர், நிகர், பொரு என்னு முதனிலைகளே இடைச் வொற்கள்.
அன்ன, அனைய என்பவைகள்,
இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக் குறிப்புக்கள் அவைகளிலே, அ என்னு
முதனிலையே இடைச்சொல் அன்ன என்பதில் னகரமெய் சாரியை: அனைய என்பதில் னகரமெய்யும்
ஐகாரமும் சாரியை.
தேர்வு வினாக்கள் - 297. உவமவுருபிடைச் சொற்களாவன எவை?
இவைகளுள்ளே, இடைச் சொல் அடியாகப் பிறந்த வினையெச்ச வினைகள் எவை? அவைகளிலே இடைச்
சொற்கள் எவை? இடைச் சொல் அடியாகப் பிறந்த பெயரெச்ச வினைக்குறிப்பக்கள் எவை?
அவைகளிலே எது இடைச் சொல்?
தத்தம் பொருளை உணர்த்தும்
இடைச்சொற்கள்
298. பிறவாறு தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற
இடைச்சொற்கள், ஏ, ஒ, உம் முதலியவைகளாம்.
299. ஏகாரவிடைச் சொல், தேற்றமும்,
வினாவும், எண்ணும் பிரிநிலையும், எதிர்மறையும் இசைநிறையும், ஈற்றசையுமாகிய
ஏழுபொருளையுந் தரும்.
தேற்றம் உண்டேகடவுள், இங்கே உண்டென்பதற்கு
ஐயமில்லை
என்னுந் தெளிவுப்பொருளைத்
தருதலாற் றேற்றம்.
வினா நீயே கொண்டாய். இங்கே நீயா
கொண்டாய்
என்னும் பொருளைத் தருமிடத்து வினா
எண் நிலமே நீரே தீயே வளியே. இங்கே
நிலமும் நீருந்
தீயும் வளியும் எனப் பொருள்பட எண்ணி நிற்றல் எண்.
பிரிநிலை
அவருளிவனே கள்வன், இங்கே ஒரு கூட்டத்தி
னின்றும் ஒருவனைப் பிரித்து நிற்றலாற்
பிரிநிலை.
எதிர்மறை நானே கொண்டேன். இங்கே நான் கொள்கிலேன்
என்னும் பொருளைத்
தருமிடத்து எதிர்மறை.
இசைநிறை ’’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’ இங்கே வேறு
பொருளின்றிச் செய்யுளில் இசை நிறைத்து நிற்றலால் இசை நிறை.
ஈற்றசை ’’
என்றுமேத்தித் தொழுவோ மியாமே.’’ இங்கே
வேறு பொருளின்றி இறுதியிலே
சார்த்தப்பட்டு
நிற்றலால் ஈற்றசை.
300. ஒகாரவிடைச் சொல், ஒழியிசையும்,
வினாவும், சிறப்பும், எதிhடமறையும், தெரிநிலையும், கழிவும், பிரிநிலையும்,
அசைநிலையுமாகிய எட்டுப் பொருளையந் தரும்.
சிறப்பு உயர்வுசிறப்பும்
இழிவுசிறப்பும் என இரு வகைப்படும். உயர்வுசிறப்ப ஒரு பொருளினது இழிவைச்
சிறப்பித்தல. இங்கே சிறப்பித்தல் என்றது, உயர்வேயாயினும் இழிவேயாயினும்
இழிவேயாயினும் அதனது மிகுதியை
விளக்குதல்.
(உதாரணம்)
ஒழியிசை படிக்கவோ
வந்தாய். இங்கே படித்தற்கன்று
விளையாடுதற்கு வந்தாய் என ஒழிந்த
சொற்களைத்
தருவதால் ஒழியிசை
வினா குற்றியோ மகனோ. இங்கே குற்றியா மகனா என
வினாப் பொருளைத் தருதலால் வினா.
உயர்வு சிறப்பு ஒஓ பெரியன். இங்கே ஒருவனது
பெருமையாகிய
உயர்வின் மிகுதியை விளக்குதலால் உயர்வுசிறப்பு
இழிவு சிறப்பு ஒஓ
கொடியன். இங்கே ஒருவனது
கொடுமையாகிய இழிவின் மிகுதியை
விளக்குதலால் இழிவு
சிறப்பு
எதிர்மறை அவனோ கொண்டான். இங்கே கொண்டிலன்
என்னும் பொருளைத்
தருமிடத்து எதிர்மறை
தெரிநிலை ஆணோ அதுவுமன்று. பெண்ணோ அதுவுமன்று
இங்கே
அத்தன்மையில்லாமையைத் தெரிவித்து நிற்றலாத் தெரிநிலை.
கழிவு உறுதியுணராது
கெட்டாரை ஒஓ தமக்கோருறுதி யுணராரோ எனன்னுமிடத்துக் கழிவிரக்கப்பொருளைத் தருதலாற்
கழிவு. கழிவிரக்கம் - கழிந்ததற்கிரங்குதல்
பிரிநிலை இவனோ கொண்டான். இங்கே
பலருணின்றும் ஒருவணைப்பிரித்து நிற்குமிடத்துப் பிரிநிலை
அசை நிலை காணிய வம்மினோ
இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு நிற்றலால் அசை நிலை.
301. உம்
என்னுமிடைச் சொல், எதிர்மறையும், சிறப்பும், ஐயமும், எச்சமும், முற்றும், எண்ணும்,
தெரிநிலையும் ஆக்கமுமாகிய எட்டுப் பொருளையுந் தரும்.
எச்சம், இறந்தது தழீஇய
எச்சமும், எதிரது தழீஇய எச்சமும் என இரு வகைப்படும்.
உதாரணம்.
எதிர்மறை
களவு செய்யினும் பொய்கூறலை யொழிக.
இங்கே களவு செய்யலாகாது என்னும் பொருளைத்
தருதலால் எதிர்மறை
உணர்வு சிறப்பு குறவருமருளுங்குன்றம். இங்கே
குன்றியுனுயர்வைச் சிறப்பித்தலால் உயர்வுச் சிறப்பு.
இழிவு சிறப்பு புலையனும்
விரும்பாப் புன்புலால் யாக்கை. இங்கே உடம்பினிழிவைச் சிறப்பித்தலால் ஐயம்.
ஐயம்
அவன் வெல்லினும் வெல்லும். இங்கே துணியாமையை உணர்தலால் ஐயம்.
எச்சம் சாத்தனும்
வந்தான். இங்கே கொற்றன் வந்ததன்றி என்னும் பொருளைத்தந்தால் இறந்தது தழீஇயவெச்சம்.
இனிக் கொற்றனும் வருவான் என்னும் பொருளைத்தந்தால் எதிரது தழீஇயவெச்சம்.
முற்று
எல்லாரும் வந்தார். இங்கே எஞ்சாப்பொருளைத் தருதலால் முற்று.
எண் இராவும் பகலும்.
இங்கே எண்ணுதற்கண் வருதலால் எண்;.
தெரிநிலை ஆணுமன்று, பெண்ணுமன்று. இங்கே
இன்னதெனத் தெரிவித்து நிற்றலால் றெரிநிலை
ஆக்கம் பாலுமாயிற்று. இங்கெ அதுவே
மருதுமாயிற்று என்னும் பொருளைத்தருவதால் ஆக்கம்.
302.எதிர்மறை வினை அடுத்து
வருமிடத்து முற்றும்மை எச்சவும்மையுமாம்.
உதாரணம்.
எல்லாரும் வந்திலர். அவர்
பத்துங் கொடார்.
இங்கே, சிலர் வந்தார், சில கொடுப்பார் எனவும் பொருள்
படதலால், எச்சவும்மையுமாயிற்று.
303. எச்சவும்மையாற் றழுவப்படம் பொரட்
சொல்லில் உம்மையில்லையாயின், அச் சொல் எச்ச வும்மையோடு கூடிய சொற்கு முதலிலே
சொல்லப்படும்.
உதாரணம்.
சாத்தன் வந்தான்; கொற்றனும் வந்தான்.
இங்கே
சாத்தன் எச்சவும்மையாற் றழுவப்படு பொருள்
304. என, என்று என்னும் இரண்டிடைச்
சொற்களும் வினையும், பெயரும், எண்ணும், பண்பும், குறிப்பும், இசையும், உவமையும்
ஆகிய ஏழபொருளிலும் வரும்.
உதாரணம்.
வினை மைந்தன் பிறந்தானெனத்
தந்தையுவந்தான் இங்கே வினையோடியைந்தத.
பெயர் அழுக்கா றெனவொரு பாவி. இங்கே
பெயரோடியைந்நது.
எண் நிலமென நீரெனத் தீயென வளியென வானெனப் பூதங்களைந்து, இங்கே
என்ணோ டியைந்தது.
பண்பு வெள்ளென விளர்த்தது. இங்கே பண்போ டியைந்தது.
குறிப்பு
பொள்ளென வாங்கே புறம் வேரார். இங்கே குறிப்போ டியைந்தது.
இசை பொம்மென
வண்டலம்பும் புரிகுழலை. இங்கே இசையோ டியைந்தது.
உவமை புலி பாய்தெனப் பாய்ந்தான்.
இங்கே உவமையோ டியைந்தது.
என்று என்பதையும் இப்படியே இவைகளோடும்
ஒட்டிக்கொள்க
305. மேற்கூறிய ஏ, உம், என என்று என்னு நான்கிடைச்
சொற்களன்றியும், என்றா, எனா, ஒடு, என்னும் இம்மூன்றிடைச் சொற்களும் என்னுப்
பொருளில் வரும்.
உதாரணம்.
நிலலென்ற நீரென்றா தீயென்றா
நிலலென்னா நீரெனாத்
தீயெனா
நிலனொடு நீரொடு தீயொடு
306. பெயர்ச் செவ்வெண்ணும், எண்ணிடைச்
சொற்கள் ஏழனுள்ளும் ஏ, என்றா, எனா, என்னு மூன்றும், தொகைச் சொற் பெற்று வரும். உம்,
என்று, என, ஒடு, என்னு நான்கும், தொகைச் சொற் பெற்றும் பெறாதும்
வரும்.
பெயர்ச் சொவ்வெண்ணாவது, பெயர்களினிடத்தே எண்ணிடைச் சொற்றொக்கு நிற்ப
வருவது.
(உதாரணம்)
செவ்வெண் சாத்தன் கொற்ற னிருவரும்
வந்தார்.
ஏகாரவெண் சாத்தனே கொற்றனே யிருவரும் வந்தார்.
என்றாவெண் சாத்தனென்றா
கொற்றனென்றா விருவரும் வந்தார்.
எனாவெண் சாத்தனெனாக் கொற்றனெனா விருவரும்
வந்தார்.
உம்மையென் சாத்தனுங் கொற்றனு மிருவரும் வந்தார்.
என்றெண்
சாத்தனென்று கொற்றனெனன் றிருவருளர்.
எனவென் சாத்தனெனக் கொற்றனெனன
விருவருளர்.
ஒடுவெண் சாத்தனொடு கொற்றனொ டிருவருளர்.
உம்மையெண் சாத்தனுங்
கொற்றனும்; வந்தார்.
என்றெண் நிலனென்று நீரென்று தீயென்று காற்றென்றளவறு காயமென்
றாகிய வுலகம்.
எனவெண் நிலவென நீரெனத் தீயெனக் காற்றென வளவறு காயமென் வாகிய
உலகம்.
ஒடுவெண் நிலனொடு நீரொடு தீயொடு காற்றொ டவளறு காயமொடாகிய
வுலகம்.
307. என்று, என, ஒடு என்னும் இம் மூன்றிடைச் சொற்களும், எண்ணப்படும்
பொருட்டோறு நிற்றலேயன்றி ஒரிடத்து நிற்கவும் பெறும்; அப்படி நிற்பினும், பிரிந்து
மற்றைப் பொருடோறும் பொருந்தும்.
உதாரணம்.
என்றெண் வினைபகை யென்றிரண்டி
னெச்ச நினையுங்காற் றீயெச்சம் போலத் தெறும். இங்கே என்றென்பது வினையென்று பகை
யென்று என நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று பொருந்தியது.
எனவெண்
பகைபாவ மச்சம் பழியென நான்கு - மிகவாவா மில்லிறப்பான் கண். இங்கே என என்பது,
பகையெனப் பாவமென அச்சமெனப் பழியென என்று நின்ற விடத்துப் பிரிந்து பிறவழியுஞ்
சென்று பொருந்தியது..
ஒடுவெண் பொருள் கருவி காலம் வினையிடனொ டைந்து - மிருடீர
வெண்ணிச் செயல். இங்கே ஒடுவென்பது பொருளோடு கருவி யோடு காலத்தோடு வினையோடு இடனொடு
என நின்றவிடத்துப் பிரிந்து பிறவழியுஞ் சென்று
பொருந்தியது.
308.வினையெச்சங்கள், எண்ணப்படுமிடத்து ஏற்பன வாகிய எண்ணிடைச்
சொல் விரியப் பெறும், தொகாப்பெற்றும், ஒரிடத்து நின்று பிரிந்து கூடப் பெற்றும்
வரும். அவை தொகைபெறுதலில்லை.
உதாரணம்.
உம்மையெண் - கற்றுங் கேட்டுங்
கற்பனை கடந்தான்
என்றென் - உண்ணவென் றுடுக்கவென்று வந்தான்
எனவெண் - உண்ணவென
வுடுக்கவென வந்தான்
செவ்வென் - கற்றுக் கேட்டுக் கற்பனை கடந்தான்
பிரிந்து
கூடு மென் - உண்ண வுடுக்கவென்று வநதான்
309. அ, இ, உ, என்னு மூன்றிடைச்
சொற்களும் சுட்டுப்பொருளையும், எ, ஆ, யா, என்னு மூன்றிடைச் சொற்களும்
வினாப்பொருளையும் தரும்.
உதாரணம்.
அக்கொற்றான், இக் கொற்றான்,
உக்கொற்றான்
எக்கொற்றன், கொற்றனா, யாவன்
310.கொல் என்னும் இடைச்சொல்,
ஐயமும் அசை நிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.
உதாரணம்.
ஐயம்
இவ்வுருக் குற்றிகொன் மகன்கொல். இற்கே குற்றியோ மகனோ என்னும் பொருளைத் தருதலால்
ஐயம்.
அசைநிலை கற்றதனா லாய பயனென்கொல். இங்கே வேறு பொருளின்றிச் சார்த்தப்பட்டு
நிற்றலால் அசை நிலை
311. மற்று என்னும் இடைச்சொல், வினைமாற்றும், பிறிதும்,
அசைநிலையுமாகிய இரண்டு பொருளையுந் தரும்.
இங்கே வினைமாற்றென்றது கருதியதற்கு
இனமாகிய மறுதலை வினை; பிறிதென்றது கருதியதற்கு இனமாகிய
பிறிது.
(உ-ம்)
வினைமுற்று மற்றறிவா நல்வினை யாமிளைய மென்னாது.
இஙங்கே கருதிய வினையாவது நல்வினையை வினைந்தறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலை
வினையாவது நல்வினையை விரையாதறிவாம் என்பது. அதற்கு இனமாகிய மறுதலைவினையாவது
நல்வினையை விரையாதறிவாம் என்பது. மற்றென்றது, இங்கே விரையாதறிவாம் என்னும்
மறுதலைவினையைத் தருதலால், வினைமாற்றுப் பொருளில் வந்தது.
பிறிது ஊளிற்
பெருவலியாவுள மற்றொன்று, இங்கே கருதியதாவது ஊழொன்றென்பது.
அதற்கினமாகிய
பிநிதாவது ஊழல்லதொன்றென்பது மற்றென்றது இங்கே ஊழல்லதொன்றென்னும் பொருளைத் தருதலால்
பிறிதென்னும் பொருளில் வந்தது.
அசை நிலை மற்றென்னையாள்க. இங்கே வேறு
பொருளின்றிச் சார்த்தபப்பட்டு நிற்றலால் அசை நிலை
312. மன் என்னும்
இடைச்சொல், ஒழியிசையும், ஆக்கமும், கழிவும், மிகுதியும், அசை நிலையுமாகிய ஐந்து
பொருளையும் தலுஷரும்.
உதாரணம்.
ஒழியிசை கூரியதோர் வாண்மன் இங்கே இரும்பை
அறத்துணித்தது என்னும் ஒழிந்த சொற்களைத் தருதலால் ஒழியிசை
ஆக்கம் பண்டு காடுமன்
இங்கே இன்று வயலாயிற்று என்னும் ஆக்கர் பொருளைத் தருதலால் ஆக்கம்
கழிவு சிறியகட்
பெறினே யெமக்கீயு மன்னே. இங்கே இப்பொழுது அவன் இறந்ததனால் எமக்குக் கொடுத்தல்
கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் கழிவு.
மிகுதி எந்தை யெமக்கருளுமன இங்கே
மிகுதியும் அருளுவன் என்னும் பொருலைத் தருதலால் மிகுதி
அசைநிலை அதுமற்
கொண்கன்றேரே. இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு நிற்றலால் அசைநிலை.
313.
கொன் என்னும் இடைச்சொல், அச்சமும், பயனிலையும், காலமும், பெர்மையும் ஆகிய நான்கு
பொருளையுந் தரும்.
உதாரணம்.
அச்சம் கொன்வாளி இங்கே அஞ்சும் வாளி என்னும்
பொருளைத் தருதலால் அச்சம்.
பயனின்மை கொன்னே கழிந்தன் றிளமை இங்கே பயனின்றிக்
கழிந்தது என்னும் பொருளைத் தருதலாற் பயனின்மை.
காலம் கொன்வரல் வடை இங்கே காதலர்
நீங்கிய காலம் அறிந்து வருதலையுடைய வாடை என்னும் பொருளைத் தருதலாற் காலம்
பெருமை
கொன்னுர் துஞ்சினும் இங்கே பெரிய வூருறங்கினும் என்னும் பொருனைத் தருதலாற்
பெருமை
314. அந்தில் என்னும் இடைச்சொல், ஆங்கென்னும் இடமும்,
அசைநிலையுமாகிய இரண்டு பொருளைத்தரும்.
உதாரணம்.
ஆங்கு வருமே - சேயிழை
யந்திற் கொழுநற் காணிய இங்கே அவ்விடத்து வரும் என்னும் பொருளைத் தருதலால்
ஆங்கு.
அசை நிலை அந்திற் கழலினன் கச்சினன் இங்கே வேறு பொருளின்றிச் சார்ததப்படடு
நிற்றலால் அசைநிலை.
315. மன்ற என்னும் இடைச் சொல், தெளிவுப்பொருளைத்
தரும்.
உதாரணம்.
தெளிவு இரத.தலி னின்னாது மன்ற இங்கே தலையாக என்னும்
பொருளைத் தருதலாற் றெளிவு.
316. அம்ம என்னும் இடைச் சொல், ஒன்று சொல்வேன்
கௌ; என்னும் பொருளிலும், எரையசைப் பொருளிலும் வரும்.
உரையசை - கட்டுரைக்கண்
வரும் அசை நிலை
ஒன்று சொல்வேன் கேள் - அம்ம வாழி ’’தோழி“
உரையசை - ’’ அது
மற்றம்ம’’
317. ஆங்க என்நும் இடைச் சொல், உரையசைப் பொருளில்
வரும்.
உதாரணம்.
உரையசை - ’’ஆங்கத்திறனல்ல யாங்கழற’’
318. ஆர்
என்னும் இடைச் சொல், உயர்தற் பொருளிலும், அசைநிலைப் பொருளிலும்
வரும்.
உயர்த்தற்பொருட்டு வரும் போது ஒரமைச் சொல்லீற்றில் வரும். அசை
நிலையாகும் போது உம்மை முன்னும், உம்மீற்று வினைமுன்னும்
வரும்.
(உதாரணம்)
உயர்தற் பொருள் தொல்காப்பபியனார் வந்தார்.
தந்நையார் வந்தார்.
அசை நிலை பெயரினாகிய தொகையுமா ருளவே. இங்கே ஆர் அசை நிலையாக
உம்மை முன் வந்தது. எல்லா வுயிரோடுஞ் செல்லுமார் முதலே. இங்கே ஆர் அசைநிலையாக
உம்ம{ற்று வினைமுன் வந்தது.
319. தொறும், தோறும், என்னும் இவ்விரண்டிடைச்
சொற்களும், இடப்பன்மைப் பொருளையுந் தொழிற் பயில்வுப் பொருளையுந்
தரும்.
உதாரணம்.
இடப்பன்மை - சோழநாட்டி லூர்தொறுஞ்
சிவாலயம்
தொழிற்பயில்வு - படிக்குந் தொறு மறிவு வளறும்
தோறும் என்பதையும்
இப்படியே இவைகளோடும் ஒட்டிக் கொள்க.
320. இனி என்னும் இடைச்சொல்,
காலவிடங்களின் எல்லைப் பொருளைத் தரும்.
உதாரணம்.
காலவெல்லை - இனி
வருவேன்
இடவெல்லை - இனியெம்மூர்
321. முன், பின் என்னும் இடைச் சொற்கள்,
காலப் பொருளையும், இடப்பொருளையுந் தந்து, ஏழாம் வேற்றுமைப் பொருள்பட
வரும்.
உதாரணம்.
காலம் - முன் பிறந்தான். பின் பிறந்தான்
இடம் -
முன்னிருந்தான், பின்னிருந்தான்
முன். பின் என்பவைகள், முன்பு, பின்பு,
எ-ம்.
முன்னை, பின்னை, எ-ம். முன்னர், பின்னர், எ-ம்.
விகாரப்பட்டும்
வழங்கும்.
322. வளா, சும்மா என்னும் இடைச்சொற்கள், பயனின்மைப் பொருளைத்
தரும்.
உதாரணம்.
வளா விருந்தான், சும்மா வந்தான்
323. ஆவது, ஆதல்,
ஆயினும், தான் என்னம் இடைச் சொற்கள் விகற்பப் பொருளைத் தரும்.
விகப்பமாவது,
அது அல்லது இது என்னும் பொருள்பட வருவது.
உதாரணம்.
ஆவது - தேவாரமாவது
திருவாசகமாவது கொண்டு வா
ஆதல் - சோறாதல் கூழாதல் கொடு
ஆயினும் -
வீட்டிலாயினுங் கோயிலிலாயினும் இருப்பேன்
தான் - பொன்னைத்தான் வெள்ளியைத்தான்
கொடுத்தானா
324. அந்தோ, அன்னோ, ஐயோ, அச்சோ, அஆ, ஆஅ, ஒஓ, என்றாற் போல வருவன,
இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
325. சீ, சீசீ, சிச்சீ, சை
என்றாற்போல வருவன, இகழ்ச்சிப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
326. கூ,
கூகூ, ஐயோ, ஐயையோ என்றாற்போல வருவன, அச்சப் பொருளைத் தரும் இடைச்
சொற்களாம்.
327.ஆஅ, ஆகா, ஓஒ, ஓகோ, அம்மா அம்மம்மா, அச்சோ என்றாற் போல வருவன,
அதிசயப் பொருளைத் தரும் இடைச் சொற்களாம்.
தேர்வு வினாக்கள் - 298. பிறவாறு
தத்தமக்குரிய பொருள்களை உணர்த்தி வருமென்ற இடைச் வொற்கள் எவை? 299. ஏகாரவிடைச் சொல்
எப்பொருளைத் தரும்? 300. ஒகார விடைச்சொல் எப்பொருளைத் தரும்? சிறப்பு எத்தனை
வகைப்படும்? உயர்வு சிறப்பாவது யாது? இழிவு சிறப்பாவது யாது? இங்கே
சிறப்பித்தலென்றது என்னை? 301. உம் என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத் hரும்?
எச்சம் எத்தனை வகைப்படும்? 302. ஒரு பொருளில் வரும் உம்மை மற்நொரு பொருளையுந்
தருமோ? 303. எச்சவும்மையாற் றழுவப்படும் பொருட் சொல்லில் உம்மையில்லையாயின் அச்சொல்
எச்சவும்மையோடு கூடிய சொற்கு முதலிலே சொல்லப்படுமோ ஈற்றிலே சொல்லப்படுமோ? 304. என,
என்று என்னும் இரண்டிடைச்சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? 305. எண்ணுப் பொருளில்
வரும் இடைச் சொற்கள் எவை? 306. எவ்வௌ; எண்கள் தொகைச் சொற் பெற்று வரும்? எவ்வௌ;
வெண்கள் தொகைச் சொற் பெற்றும் பெறாதும் வரும்? பெயர்ச் செவ்வெண்ணாவது யாது? 307.
எண்ணிடைச் சொற்கள் எணப்படும் பொருடோரும் நிற்கவே பெறுமோ? 308. வினை,
எணப்படுமிடத்து, எண்ணிடைச் சொற் பெறாதோ? 309. அ, இ, உ, எ-ம். ஆ, யா, எ-ம். வரும்
இடைச் சொற்கள் எவ்வௌ; பொருனைத் தரும்? 310. கொல் னெ;னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத்
தரும்? 311. மற்று என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? இங்கே வினை
மாற்றென்றது என்ன? பிறிதென்றது என்ன? 312. மன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத்
தரும்? 313. கொன் என்னும் இடைச்சொல் எவ்வௌ; பொருனைத் தரும்? 314. அந்தில் என்னும்
இடைச்சொல் எவ்வௌ; பொருளைத் தரும்? 315. மன்ற என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளைத்
தரும்? 316. அம்ம என்னும் இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்? 317. ஆங்க என்னும்
இடைச் சொல் எவ்வௌ; பொருளில் வரும்? 318. இது உயர்தற் பொருட்டு வரும் போது
எவ்விடத்து வரும்? அசைநிலையாகும் போது எவ்விடத்து வரும்? 319. தொறும், தோறும்,
என்னும் இரண்டிடைச் சொற்களும் எவ்வௌ; பொருளைத் தரும்? முன், பின், என்னம் இடைச்
சொற்கள் எப்பொருளைத் தரும்? 320. இனி என்னும் இடைச் சொல் எப்பொருளைத் தரும்? 322.
வாளா, சும்மா என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 323. ஆவது, ஆதல், ஆயினும்,
தான் என்னும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? விகற்பமாவது என்ன? 324. இரக்கப்
பொருளைத் தரும் இடைச் சொற்கள் எப்பொருளைத் தரும்? 325. இகழ்ச்சிப் பொருளைத் தரும்
இடைச் சொற்கள் எவை? 326. அச்சுப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 327. அதிசயப்
பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை?
குறிப்பின் வரும்
இடைச்சொற்கள்
328. அம்மென், இம்மென, கோவென, சோவென, துடுமென, ஒல்லென, கஃறென,
சுஃறென, எ-ம். கடகடென, களகளென, திடுதிடென, நெறுநெறென, படபடென, எ-ம். வருவன,
ஒலிக்குறிப்புப் பொருளைத்தரும் இடைச் சொற்களாம்.
329. துண்ணென, துணுக்கென,
திட்கென, திடுக்கென, என்றாற் போல்வன, அச்சக்குறிப்புப் பொருளைத்தரும்
இடைச்சொற்களாம்.
330. பொள்ளென, பொருக்கென, கதுமென, ஞெரேலென, சரேலென என்றாற்
போல்வன, விரைவுக் குறிப்புப் பொருளைத்தரும்.
தேர்வு வினாக்கள் - 328.
ஒலிக்குறிப்புப் பொருளைத் தரும் இடைச் சொற்கள் எவை? 329. அச்சக்குறிப்புப் பொருளைத்
தரும் இடைச்சொற்கள் எவை? 330. விரைவுக் குறிப்புப் பொருளைத் தரும் இடைச்சொற்கள்
எவை?
இசைநிறை
331. ஒடு, தெய்ய என்பன, இசை நிறையிடைச்
சொற்களாம்.
தேர்வு வினா - இசைநிறைச் சொற்கள் எவை?
அசைநிலை
332. மா என்பது, வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச்
சொல்லாம்.
333. மியா, இக, மோ, மதி, அத்தை, இத்தை, வாழிய, மாள, ஈ, யாழ
என்னும் பத்தும், முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசையிடைச்
சொற்களாம்.
334. யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது, இகும், சின், குரை,
ஓரும், போலும், அன்று, ஆம், தாம், தான், இசின், ஐ, ஆல், என், என்ப என்னும்
இருபத்தொன்றும், மூவிடத்துக்கும் வரும் அசைநிலையிடைச் சொற்களாம்.
தேர்வு
வினாக்கள் - 332. வியங்கோளைச் சார்ந்து வரும் அசை நிலையிடைச் சொல் எது? 333.
முன்னிலை மொழியைச் சார்ந்து வரும் அசைநிலையிடைச் சொற்கள் எவை? 334. மூவிடத்துக்கும்
வரும் அசையிடைச் சொற்கள் எவை?
இடையியல் முற்றிற்று
4.
உரியியல்
335. உரிச்சொல்லாவது, பொருட்கு உரிமை பூண்டு நிற்கும் பண்பை
உணர்த்துஞ் சொல்லாம்.
336. உலகத்துப் பொருள், உயிர்ப் பொருளும், உயிரல்
பொருளும் என, இரு வகைப்படும்.
337. இப்பொருள்களுக்குரிய பண்பு, குணப்பண்புந்
தொழிற்பண்பும் என இரு வகைப்படும்.
338. உயிர்ப் பொருள்களின்
குணப்பண்புகளாவன: அறிவு, அச்சம், மானம், பொறுமை, மயக்கம், வருப்பு, வெறுப்பு,
இரக்கம், நன்மை, தீமை முதலியனவாம்.
339. உயிர்ப்பொருள்களின் றொழில்
பண்புகளாவன: உண்ணல், உடுத்தல், உறங்கள், அணிதல், தொழுதல், நடத்தல், ஆக்கல்,
காத்தல், அழித்தல் முதலியனவாம்.
340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகளாவன:
பல்வகை வடிவங்களும், இரு வகைநாற்றங்களும், ஐவகை நிறங்களும், அறு வகைசுவைகளும்,
எண்வகைப் பரிசங்களுமாம்.
பல்வகை வடிவங்களாவன: வட்டம், இருகொணம், முக்கோணம்,
சதுர முதலியன.
இருவகை நாற்றங்களாவன: நறு நாற்றம், தீநாற்றம்
என்பவைகளாம்.
ஐவகை நிறங்களாவன: வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை
என்பவைகளாம்.
அறு வகைசுவைகளாவன: கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு,
கார்ப்பு, இனிப்பு என்பவைகளாம்.
எண்வகைப் பரிசங்களாவன: வெம்மை, தண்மை,
மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழு மெனல், சருச்சரை என்பவைகளாம்.
341.
உயிர்ப்பொருள், உயிரல் பொருள் என்னும் இரு வகைப் பொருள்களுக்கும் உரிய
தொழிற்பண்புகளாவன: தோன்றல், மறைதல், வளர்தல், சுரங்கள், நீங்கள், அடைதல், நடுங்கள்,
ஒலித்தல் முதலியவைகளாம்.
342. மேற்கூறிய குணப்பண்பும், உண், உறங்கு முதலிய
முதனிலையளவிற் பெறப்படுந் தொழிற்பண்பும், ஆகிய பொருட் பண்பை உணர்த்துஞ் சொற்கள்
வினைச் சொற்கள் எனப்படும்.
343. இவ்வுரிச் சொற்கள், ஒரு குணத்தையும் பல
குணத்தையும் பல குணத்தையும் உணர்த்தி வரும்.
344. சால், உறு, தவ, நனி,
கூர், கழி, என்பன, மிகுதி என்னும் ஒரு குணத்தை உணர்த்தும்
உரிச்சொற்களாம்.
உதாரணம்.
சால் - தென்மலை யிருந்த சீர்சான் முனிவரன்
உறு
- உறுயுனறந் துலகூட்டி
தவ - ஈயாது வீயு முயிர் தவப் பலவே
நனி - வந்து நனி
வருந்தினை வாழிய நெஞ்சே
கூர் - துணிகூ ரெவ்வமொடு
கழி - கழிகண்
ணோட்டம்
345. செழுமை என்பது வளனுங் கொழுப்பும் என்னும் இரு குணத்தை
உணர்த்தும் உரிச்சொல்லாம்.
உதாரணம்.
வளம் - செழும் பல் குன்றம்
கொழுப்பு
- செழுந் தடிதின்ற செந்நாய்
இவ்வாறே ஒரு குணத்தையும் பல குணத்தையும்
உணர்த்தி வரும் உரிச்சொற்களெல்லாவற்றையும் நிகண்டு வாயிலாக அறிந்து
கொள்க.
தேர்வு வினாக்கள் - 335. உரிச் வொல்லாவது யாது? 336. உலகத்துப்
பொருள் எத்தனை வகைப்படும்? 337. இப்பொருள்களுக்குரிய பண்பு எத்தனை வகைப்படும்? 338.
உயிர்ப் பொருள்களின் குணப்பண்புகள் எவை? 339. உயிர்ப் பொருள்களின் றொலிற்பண்புகள்
எவை? 340. உயிரல் பொருள்களின் குணப்பண்புகள் எவை? 341. உயிர்ப்பொருள், உயிரல்
பொருள் என்னம் இரு வகைப் பொருள்களுக்குமுரிய தொழிற்பண்புகள் எவை? 342. தொழிற்
சொல்லை மேலே வினைச் சொல்லென்றும் இங்கே உரிச்சொல்லென்றுஞ் சொல்லியது என்னை? 343.
இவ்வுரிச் சொற்கள் பொருட் குணங்களை எவ்வாறு உணர்த்தி வரும்? 345. பல குணங்களை
உணர்த்தும் உரிச் சொல் எது?
உரியியல் முற்றிற்று.
சொல்லதிகாரம்
முற்றுப் பெற்றது.
மூன்றாவது
தொடர்மொழியதிகாரம்
(1) தொகை
நிலைத் தொடரியல்
346. தொடர் மொழியாவது, ஒன்றோடொன்று பொருள் படத் தொடர்ந்து
நிற்கும் இரண்டு முதலிய சொற்களினது கூட்டமாம்.
347. சொல்லோடு சொற்றொடருந்
தொடர்ச்சி, தொகைநிலைத் தொடர், தொகா நிலைத் தொடர் என இரு வகைப்படும்.
348.
தொகைநிலைத் தொடராவது, வெற்றுமையுருபு முதலிய உருபுகள் நடுவே கெட்டு நிற்ப, இரண்டு
முதலிய சொற்கள் ஒரு சொற்றன்மைப்பாட்டுத் தொடர்வதாம்.
ஒரு
சொற்றன்மைப்பட்டுதலாவது பிளவு படாது நிற்றல்.
தேர்வு வினாக்கள் - 346. தொடர்
மொழியாவது யாது? 347. சொல்லோடு சொற்றொடருந் தொடர்ச்சி எத்தனை வகைப்படும்? 348.
தொகைநிலைத் தொடராவது யாது?
தொகைநிலைத் தொடர்ப்பாகுபாடு
349.
அத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை,
உம்மைத் தொகை, அன்மொழித் தொகை என, அறு வகைப்படும்.
தேர்வு வினா - 349. தொகை
நிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
வேற்றுமைத் தொகை
350. வேற்றுமைத்
தொகையாவது, ஐ, முதலிய ஆறு வேற்றுமையுருபும் இடையிலே கெட்டு நிற்கப், பெயரோடு
பெயரும் பெயரோடு பெயரும் பெயரோடு வினை வினைக்குறிப்புப் பெயர்களுந்
தொடர்வதாம்.
உதாரணம்.
நிலங்கடந்தவன் - இரண்டாம்
வேற்றுமைத்தொகை
தலைவணங்கினவன் - மூன்றாம்; வேற்றுமைத்தொகை
சாத்தன்மகன் -
நான்காம் வேற்றுமைத்தொகை
ஊர்நீங்கினவன் - ஐந்தாம் வேற்றுமைத்தொகை
சாத்தன்கை -
ஆறாம் வேற்றுமைத்தொகை
குன்றக்கூகை - ஏழாம் வேற்றுமைத்தொகை
கையையுடைய
களிறு என்பது கைக்களிறு எனவும், பொன்னாற் செய்தகுடம் என்பது பொற்குடம் எனவும்,
வருவன, உருபும் பொருளும் ஒருங்கு கெட்ட வேற்றுமைத் தொகை எனக் கொள்க.
351.
ஐயுருபுங் கண்ணுருபும், தொடர் மொழியின் இடையிலன்றி, இறுதியிலுங் கெட்டு
நிற்கும்.
உதாரணம்.
கடந்தானிலம் - ஐயுருபு தொக்கது
இருந்தான்மாடத்து -
கண்ணுருபு தொக்கது
இவ்வாறு வருவனவெல்லாம், உருபு கெட்டு நிற்கினும் ஒரு
சொற்றொன்மைப் படாது பிளவுபட்டு நிற்றலினாலே, தொகாநிலைத் தொடரெனவே
கொள்ளப்படும்.
352. வேற்றுமையுருபுகள், விரிந்து நிற்குமிடத்து எப்பொருள்
படுமோ அப்பொருள் படுமிடத்தே, தொக்கு நிற்கப் பெறும்; அப்பொருள் படாவிடத்தே தொக்கு
நிற்கப் பெறவாம்.
உதாரணம்.
சாத்தனை யடித்தான் என ஐயுருபு விரிந்து
நிற்குமிடத்துச் செயப்படு பொருள் படுதல் போலச் சாத்தானடித்தான் என ஐயுருபு தொக்கு
நிற்குமிடத்து அப்பொருள் படாமையால், இங்கே ஐ யுருபு தொக்கு நிற்கப்பெறா
தென்றறிக.
சாத்தனொடு வந்தான் என ஒடுவுருபு விரிந்து நிற்குமிடத்து
உடனிகழ்ச்சிப் பொருள் படுதல்போலச் சாத்தன் வந்தான் எனத் தொக்கு நிற்குமிடத்து
அப்பொருள் படாமையால், இங்கே ஒடுவுருபு தொக்கு நிற்கப் பெறாதென்றறிக.
தேர்வவு
வினாக்கள் - 350. வேற்றுமைத் தொகையாவது யாது? 351. தொடர்மொழியின் இடையிலன்றி,
இறுதியிலுங் கெட்டு நிற்கும் உருபுகள் உளவோ? 352. வேற்றுமையுருபுகள் எவ்விடத்துந்
தொகாப்பெறுமோ?
வினைத் தொகை
353. வினைத் தொகையாவது, பெயரெச்சத்தின்
விகுதியுங் காலங்காட்டும் இடைநிலையுங் கெட்டு நிற்க, அதன் முதனிலையோடு பெயர்ச் சொற்
றொடர்வதாம்.
உதாரணம்.
நேற்றுக் கொல் களிறு
முன் விடு கணை இறந்தகால
வினைத்தொகை
இன்று கொல் களிறு
இப்பொழுது விடு கணை நிகழ்கால
வினைத்தொகை
நாளைக் கொல் களிறு
பின் விடு கணை எதிர்கால வினைத்தொகை
இவை,
விரியுமிடத்துக் கொன்ற, கொல்கின்ற, கொல்லும், எ-ம். விட்ட, விடுகின்ற, விடும்.
எ-ம். விரியும் எனக் கொள்க.
கொள்களிறு, விடுகணை என்றாற் போல் வன,
முக்காலமும் பற்றி வரின், முக்காலவினைத் தொகை எனப்படும்.
வருபுனல், தருகடர்,
நடந்திடு குதிரை என வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை வரும்.
தேர்வு
வினாக்கள் - 353. வினைத் தொகையாவது யாது? கொல்களிறு முதலியன, முக்காலமும் பற்றி
வரின், எவ்வாறு பெயர் பெறும்? வினைப்பகுதி விகாரப்பட்டும் வினைத் தொகை
வருமோ?
பண்புத் தொகை
354. பண்புத் தொகையாவது, ஆகிய என்னும் உருபு
கெட்டு நிற்கப் பண்புப் பெயரோடு பண்பிப்பெயர் தொடர்வதாம்.
பண்பு, வண்ணம்
,வடிவு, அளவு, சுவை, முதலியனவாம்.
ஆகிய என்பது, பண்புக்கும், பண்பிக்கும்,
உளதாகிய ஒற்றுமையை விளக்குவதோரிடைச்
சொல்.
(உதாரணம்)
செந்தாமரை
கருங்குதிரை வண்ணப்
பண்புத்தொகை
வட்டக்கல்
சதுரப்பலகை வடிவுப்
பண்புத்தொகை
ஒருபொருள்
முக்குணம் அளவுப்
பண்புத்தொகை
துவர்க்காய்
இன்சொல் சுவைப் பண்புத்தொகை
இவை,
விரியுமிடத்துச் செம்மையாகிய தாமரை, வட்டமாகிய கல், ஒன்றாகிய பொருள், துவர்ப்பாகிய
காய் என விரியும்.
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாவது, ஆகிய என்னும்
பண்புருபு கெட்டு நிற்கப், பொதுப்பெயரோடு பொதுப் பெயராயினும் ஒரு பொருண்மேல் வந்து
தொடர்வதாம்.
உதாரணம்.
ஆயன் சாத்தன் - பொதுப்பெயரோடு சிறப்புப் பெயர்
சாரைப்பாம்பு - சிறப்புப் பெயரோடு பொதுப்பெயர்
இவை விரியுமிடத்து,
ஆயனாகிய சாத்தன், சாரையாகிய பாம்பு என விரியும். ஆயன் சாரை என்பன பண்பல்லவாயினும்
பண்பு தொக்க தொகைபோல விசேடிப்பதும் விசேடிக்கப்படுவது மாகிய இயைபுபற்றி , இவை
போல்வனவும் பண்புத்தொகை எனப்பட்டன.
தேர்வு வினாக்கள் - 354. பண்புத்
தொகையாவது யாது? பண்பென்பன எவை? ஆகிய என்பது என்ன சொல்? இரு பெயரொட்டுப் பண்புத்
தொகையாவது யாது?
உவமைத் தொகை
355. உவமைத் தொகையாவது, போல முதலிய
உவமவுருபு கெட்டு நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச்
சொற்றொடர்வதாம்.
இவ்வுவமை, வினை, பயன், மெய், உரு, என்பன பற்றி
வரும்.
(உதாரணம்)
புலிக்கொற்றன் - வினையுவமைத் தொகை
மழைக்கை -
பயகுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருபுவமைத்
தொகை
இவை விரியுமிடத்துப், புலிபோலுங் கொற்றன், மழை போலுங் கை, துடி போலு
மிடை, பவளம் போலும்வாய் என விரியும்.
தேர்வு வினாக்கள் - 355.
உவமைத்தொகையாவது யாது? இவ்வுவமை எவை பற்றி வரும்?
உம்மைத் தொகை
356.
உம்மைத் தொகையாவது, எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நால்வகையளவைகளாற்
பொருள்களை அளக்குமிடத்து, எண்ணும்மை இடையிலும் இறுதியிலுங் கெட்டு நிற்கப், பெயரோடு
பெயர் தொடர்வதாம்.
உதாரணம்.
இராப்பகல்
ஒன்றேகால் எண்ணலளவையும்மைத்
தொகை
கழஞ்சேகால்
தொடியேகஃசு எடுத்தலளவையும்மைத்
தொகை
கலனேதுணி
நாழியாழாக்கு முகத்தலளவையும்மைத் தொகை
சாணரை
சாணங்குலம்
நீட்டலளவையும்மைத் தொகை
இவை விரியுமிடத்து, இராவும் பகலும், ஒன்றுங் காலும்,
கழஞ்சுங் காலும், காலனுந் தூணியும், சாணுமரையும் என விரியும்.
357. உயர்திணை
யொருமைப்பாலில் வரும் உம்மைத் தொகைகள், ரகரமெய்யுங் கள்விகுதியுமாகிய பலர்பால்
விகுதியுடையனவாய் வரும்.
உதாரணம்.
சேரசோழ
பாண்டியர்
தேவன்றேவிகள்
அஃறிணையொருமைப் பாலிலும் பொதுத் திணை விகுதி
பெறாதும், பெற்றம் வரும்.
உதாரணம்.
நன்மை தீமை நன்மை தீமைகள்
தந்தை தாய்
தந்தை தாய்கள்
தேர்வு வினாக்கள் - 356. உம்மைத் தொகையாவது யாது? 357.
உயர்திணையொருமையில் வரும் உம்மைத் தொகைகள், ஒருமை விகுதியோடு நிற்குமோ பரர்பால்
விகுதி பெறுமோ? அஃறிணை யொருமைப் பாலிலும் பொதுத்திணையொருமைப் பாலிலும் வரும்
உம்மைத்தொகைகள் பன்மைவிகுதி பெற்ற வரவோ?
அன்மொழித் தொகை
358.
அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம்
பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் படத்,
தொகுவதாம்.
உதாரணம்.
1 பூங்குழல் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகைநிலை
கலத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பூவையுடைய குழலினையுடையாள் என விரியும்
போற்கொடி என்பது மூன்றாம் வேற்றுமைத் தொகை நிலைக்கலத்துப் பிறந்த அன்மொழித்
தொகை. இது பொன்னாலாகிய தொடியினையுடையாள் என விரியும்
கவியிலக்கணம் என்பது
நான்காம் வேற்றுமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது
கவிக்கிலக்கணஞ் சொல்லப்பட்ட நூல் என விரியும்.
பொற்றாலி என்பது ஐந்தாம்
வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது பொன்னாகிய
தாலியினையுவடயாள் என விரியும்.
கிள்ளிக்குடி என்பது ஆறாம் வேற்றுமைத்
தொகைநிலைக்ளத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது கிள்ளியினது குடியிருக்குமூர் என
விரியும்.
கீழ்வயிற்றுக்கழலை என்பது ஏழாம் வேற்றுமைத் தொகைநிலைக்ளத்துப் பிறந்த
அன்மொழித் தொகை. இது கீழ் வயிற்றின்கண் எழுந்த கழலைபோல்வான் என விரியும்.
2
தாழ்குழல் என்பது வினைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தாழ்ந்த
குழலினையுடையாள் என விரியும்.
3 கருங்குழல் என்பது பண்புத் தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித் தொகை. இது கருமையாகிய குழலினை யுடையாள் என விரியும்.
4
தேன்மொழி என்பது உவமைத் தொகை நிலைக்களத்துப் பிறந்த அன்மொழித் தொகை. இது தேன் போலு
மொழியினை யுடையாள் என விரியும்.
5 உயிர்மெய் என்பது உம்மைத் தொகை நிலைக்களத்துப்
பிறந்த அன்மொழித் தொகை. இது உயிருமெய்யுங் கூடிப்பிறந்த எழுத்து என விரியும்.
தேர்வு வினா - 358. அன்மொழித் தொiயாவது யாது?
தொகைநிலைத் தொடர்
மொழிகள் பலபொருள் படுதல்
359. தொகைநிலைத் தொடர் மொழிகளை விரித்துப் பொருள்
கொள்ளுமிடத்து, ஒரு பொருளைத் தருவன வன்றி, இரண்டு முதல் ஏழெல்லையாகிய பல
பொருள்களைத் தருவனவும் உளவாம்.
உதாரணம்.
(1) தெய்வ வணக்கம் - இரண்டு
பொருள்
1. தெய்வத்தை வணங்கும் வணக்கம், 2. தெய்வத்திற்கு வணங்கும்
வணக்கம்.
(2) தற்சேர்ந்தார் - மூன்று பொருள்
1. தன்னைச் சேர்ந்தார், 2.
தன்னோடு சேர்ந்தார், 3. தன்கட் சேர்ந்தார்.
(3) சொல்லிணக்கம் - நான்கு
பொருள்
1. சொல்லினதிலக்கணம், 2. சொற்கிலக்கிணம், 3. சொல்லின் கணிலக்கணம் 4.
சொல்லினதிலக்கணஞ் சொன்ன நூல்.
(4) பொன்மணி - ஐந்து பொருள்
1. பொன்னாலாகிய
மணி, 2. பொன்னாகிய மணி, 3. பொன்னின் கண் மணி, 4. பொன்னோடு சேர்ந்த மணி, 5. பொன்னு
மணியும்.
(5) மர வேலி - ஆறு பொருள்
1. மரத்தைக் காக்கும் வேலி, 2.
மரத்திற்கு வேலி, 3. மரத்தினது வேலி, 4. மரத்தின புறத்து வேலி, 5. மரத்தாலாகிய
வேலி, 6. மரமாகிய வேலி.
(6) சொற்பொருள் - ஏழு பொருள்
1.
சொல்லாலறியப்படும் பொருள், 2. வொல்லினது பொருள், 3. சொற்குப் பொருள், 4. சொல்லின்
கட் பொருள், 5. சொல்லும் பொருளும், 6. வொல்லாகிய பொருள், 7. சொல்லானது
பொருள்.
தேர்வு வினாக்கள் - 359. தொகை நிலைத் தொடர்மொழிகளை விரித்துப்
பொருள் கொள்ளுமிடத்து, அவைகளுள், ஒரு பொருளைத் தருவனவன்றிப் பல பொருள்களைத்
தருவனவும் உளவோ?
தொகைநிலைத் தொடர்மொழிகளிற் பொருள் சிறக்கும்
இடங்கள்
360. தொகைநிலைத் தொடர்மொழிகளுள்ளே, வேற்றுமைத் தொகையிலும்,
பண்புத்தொகையிலும், முன் மொழியிலாயினும், பின் மொழியிலாயினும் பொருள் சிறந்து
நிற்கும்; வினைத் தொiயிலும், உவமைத் தொகையிலும், முன் மொழியிற் பொருள் சிறந்து
நிற்கும்; உம்மைத் தொகையில் அனைத்து மொழியிலும் பொருள் சிறந்து நிற்கும்; அன்மொழித்
தொகையில் இரு மொழியுமல்லாத புற மொழியிற் பொருள் சிறந்து
நிற்கும்.
(உதாரணம்)
வேங்கைப்பூ, வெண்டாமரை என வரும் வேற்றுமைத் தொகை
பண்புத் தொகைகளிலே, முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம் முன் மொழிகளிற் பொருள்
சிறந்தன.
கண்ணிமை, செஞ்ஞாயிறு என வரும் வேற்றுமைத் தொகை பண்புத் தொகைகளிலே,
முன் மொழிகள் இனம் விலகுதலின்றி நிற்றலால், பின் மொழிகளிற் பொருள்
சிறந்தன.
ஆடு பாம்பு, வேற்கண் என வரும் வினைத் தொகை எவமைத் தொகைகளிலே,
முன்மொழிகள் இனம் விலக்கி நிற்றலால், அம்முன் மொழிகளிற் பொருள்
சிறந்தன.
இராப்பகல், சேரசோழ பாண்டியர் என வரும் உம்மைத் தொகைகளிலே, அனைத்து
மொழிகளும் இனம் விலக்கலும் விலாக்காமையுமின்றி நிற்றலால், அவ்வனைத்து மொழிகளிலும்
பொருள் சிறந்தன.
பொற்றொடி, உயிர்மெய் என வரும் அன்மொழித் தொகைகளிலே,
வொல்லுவொனுடைய கருத்து இவ்விரு மொழிப் பொருண் மேலதகாது, இவ்விரு மொழியுமல்லாத
உடையாண் முதலிய புறமொழிப் பொருண்மேலேதாதலால், அப்புற மொழிகளிற் பொருள்
சிறந்தன.
தேர்வு வினா - 368. தொகைநிலைத் தொடர்மொழிகளுள், எந்தெந்தத் தொடரில்
எந்தெந்த மொழியிற் பொருள் சிறந்து விளங்கும்?
தொகைநிலைத் தொடரியல்
முற்றிற்று.
2. தொகாநிலைத் தொடரியல்
361. தொகநிலைத் தொடராவது, இடையே
வேற்றுமையுருபு முதலிய உருபுகள் கெடாமலும்., ஒரு சொற்றன்மைப்படாமலும், சொற்கள்
பிளவு படத் தொடர்வதாம்.
தேர்வு வினா - தொகாநிலைத் அதாடராவது யாது?
தொகா நிலைத் தொடர்ப்பாகுபாடு
362. அத்தெபாக
நிலைத்தொடர், எழுவாய்த் தொடர், விளித் தொடர், வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்,
வினைமுற்றுத் தொடர், பெயரெச்சத் தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற் றொடர், அடக்குத்
தொடர் என ஒன்பது வகைப்படும்.
உதாரணம்.
1 சாத்தன் வந்தான் எழுவாய்த்
தொடர்
2 சாத்தா வா விளித்தொடர்
3 குடத்தை வனைந்தான்
வாளால்
வெட்டினான்
இரப்போர்க்கீந்தான்
மலையினிழிந்தான்
சாத்தனது கை
மணியின்க
ணொளி வேற்றுமைத் தொகா நிலைத் தொடர்
4 உண்டான் சாத்தன்
குழையன் கொற்றன்
வினைமுற்றுத் தொடர்
5 உண்ட சாத்தன்
காரிய சாத்தன் பெயரெச்சத் தொடர்
6
உண்டு வந்தான்
இன்றி வந்தான் வினையெச்சத் தொடர்
7 மற்றொன்று இடைச் சொற்
தொடர்
8 கடிக்கமலம் உரிச்சொற் தொடர்
9 பாம்பு பாம்பு அடுக்குத்
தொடர்
363. வேற்றுமைத் தொi, விரிந்த விடத்து வேற்றுமைத் தொகாநிலைத்
தொடராம். வினைத் தொகை, விரிந்த விடத்து பெயரெச்சத் தொகாநிலைத் தொடராம்.
பண்புத்தொகையும், உண்மைத் தொகையும் விரிந்த விடத்து முன்னது இடைச்சொற்றொடரும்,
பின்னது இடைச்சொல்லடியாகப் பிறந்த பெயரெச்ச வினையெச்சச் தொடருமாம். அன்மொழித் தொகை
விரிந்தாவிடத்து வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் முதலேற்பனவாம்.
தேர்வு
வினாக்கள் - 362. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்? 363. வேற்றுமைத் தொகை
விரிந்த விடத்து என்ன நிலைத் தொடராம்? வினைத் தொகை விரிந்த, விரிந்த விடத்து என்ன
தொகாநிலைத் தொடராம்? பண்புத் தொகையும், உம்மைத் தொகையும் விரிந்த விடத்து என்ன
தொடராம்? உவமைத் தொகை, விரிந்த விடத்து என்ன தொடராம்? அன்மொழித் தொகை, விரிந்த
விடத்து என்ன தொடராம்?
எழுவாய்த் தொடர்க்கும் வினைமுற்றுத் தொடர்க்கும்
வேற்றுமை
364. எழுவாய்க்கு வினைமுற்றைப் வினைமுற்றைப் பயிலையாகக்
கொள்ளுமிடத்து, வினைமுதல் விசேடணமாக வினைமுக்கிய பொருளாம்.
உதாரணம்.
சாத்தன் வந்தான்: இங்கே சாத்தன் இது அசய்தான் என வினைமுதல்
விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.
வந்தான் சாத்தன்: இங்கே சாத்தன் இது
அசய்தான் என வினைமுதல் விசேடணமாக வினை முக்கியப் பொருளாயிற்று.
தேர்வு வினா
- 364. சாத்தான் வந்தான் என்னம் எழுவாய்த் தொடர்க்கும், வந்தான் சாத்தன் என்னும்
வினைமுற்றுத் தொடர்க்கும் வேற்றுமை என்ன?
இடைப்பிற வரல்
365.
வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும், வினையெச்சங்களுங் கொண்டு
முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, வருமொழியோடு இயைத்தக்க பிற செற்கள் வரவும்
பெறும்.
உதாரணம்.
1 சாத்தன் (வயிரார) உண்டான்
அறத்தை (அழகுஅபறச்)
செய்தான்
வாளான் (மாய) வெட்டினான்
தேவர்க்கு (செல்வம் வேண்டிச்)
சிறப்பெடுத்தான்.
மலையினின்று (உருண்டு) வீழ்ந்தான்
சாத்தனது (இத்தடக்கை)
யானை
ஊர்க்கண் (உயர்ந்த வொளி) மாடம்
சாத்தா (விரைந்து) ஒடி வா
வேற்றுமையுருபு
2 வந்தான் (அவ்வூர்க்குப்போன) சாத்தன் வினைமுற்று
3 வந்த
(வடகாசி) மன்னன் பெயரெச்சம்
4 வந்து (சாத்தனின்றவனூர்க்குப்) போயினான்
வினையெச்சம்
உண்டு விருந்தோடு வந்தான் என்னுமிடத்து, இடையில் வந்த
விருந்தென்னும் சொல் வருமொழியோடு இயைதலன்றி, விருந்தோடுண்டு வந்தான் என
நிலைமொழியோடும் இயைதலால், இது போல்வன இடையில் வரப்பெறாவென்றறிக.
தேர்வு
வினாக்கள் - 365. வேற்றுமையுருபுகளும், வினைமுற்றுக்களும், பெயரெச்சங்களும்,
வினையெச்சங்களுங் கொண்டு முடியும் பெயர்க்கும் வினைக்கும் இடையே, பிற சொற்கள்
வருதல் உண்டோ?
முடிக்குஞ் சொன்னிற்கு மிடம்.
366. ஆறனுபொழிந்த
வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள்,
அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.
உதாரணம்.
1 வுந்தான்
சாத்தன்
வெட்டினான் மரத்தை
வெட்டினான்
வாளால்
கொடுத்தானந்தணர்க்கு
நிங்கினானூரின்
சென்றான் சாத்தன் கண்
வா
சாத்தா வேற்றுமையுருபு
2 சாத்தன் போயினான் வினைமுற்று
3 போயினான் வந்து
வினையெச்சம்
தேர்வு வினா - 366. வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும்,
வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன்
வருதலுமுண்டோ?
தொகாநிலைத் தொடரியல் முற்றிற்று.
3.
ஒழியியல்
தொடர்மொழிப் பாகுபாடு
367. தொடர் மொழி,முற்றுத் தொடர்
மொழியும் எச்சத்தொடர் மொழியும் என இருவகைப்படும்.
368. முற்றுத் தொடர்
மொழியாவது, எழுவாயுஞ் செயப்படுபொருண் முதலிவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும்
முடிபு பெற்று நிற்குந் தொடர் மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கிய
மென்பார்.
உ-ம்
சர்தன் வந்தான்
சாத்தன் சோற்றையுண்டான்
369.
எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர் மொழிக்கு உறுப்பாக வருந்
தொடர் மொழியாம்.
உதாரணம்.
யானைக் கோடு
யானையாவது கோடு
தேர்வு
வினாக்கள் - 367. தொடர்மொழி எத்தனை வகைப்படும்? 368. முற்றுத் தொடர் மொழியாவது
யாது? 369. எச்சத் தொடர்மொழியாவது யாது?
வாக்கியப் பொருளுணர்வுக்குக்
காரணம்
370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி,
அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம.
371. அவாய் நிலையாவது, ஒரு சொற்
றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி
நிற்றலாம்.
உதாரணம்.
ஆவைக்கொணா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக்
கொணாவெண்பது சொல்லாவிடினும், கொணாவெண்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது
சொல்லாவிடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல அறிக.
372. தகுதியாவது,
பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம்.
உதாரணம்.
நெருப்பானனை என்னுமிடத்து
நனைலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. அவ்வுணர்ச்சி
இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.
நீலானனை என்னுமிடத்து
நனைலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை: ஆகவே தகுதி காரணமக வாக்கியப்
பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
373. அண்மையாது, காலம் இடையின்றியும் வாக்கயப்
பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ்
சொல்லப்படுதலாம்.
உதாரணம்.
ஆவைக்கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாக
சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச்
சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
மலையுண்டானெருப்புடையது
தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும்
பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டாக் என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக
நின்றது: உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக்
காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி
இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது: உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின, அண்மை
காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
374. கருத்துணர்ச்சியாவது,
ஒரு சொல் எப்பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச்
சமயவிசேடத்தால் அறிதலாம்.
உதாரணம்.
மாவைக் கொண்டுவா என்னுமிடத்து மாவெண்பது
பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற்
சொல்லப்படிற் றின்னுமாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை
யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப்படும். அப்போது
அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
தேர்வு
வினாக்கள் - 370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற் காரணம் என்ன? 371. அவாய்நிலையாவது
யாது? 372. தகுதியாவது யாது? 373. அண்மையாவது யாது? 374. கருத்துணர்ச்சியாவது யாது?
உருபும் வினையும் அடுக்கி முடிதல்
375. வேற்றுமையுருபுகள்
விரிந்தாயினும் மறைந்தாயினும் ஒன் பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும்,
வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பரவுந்
தம்மை முடித்தற் குறிய ஒரு சொல்லைக் கொண்டு
முடியும்.
உதாரணம்.
சாத்தனையுங் கொற்றனையும்
வாழ்த்தினான்.
சாத்தனுக்குங் கொற்றனுக்குந் தந்தை.
அருளற முடையன். உருபுகள் விரிந்தும்
மறைந்தும் ஒன்று பல வடுக்கல்
அரசன் பகைவனை வாளால் வெட்டினான். அரசன் வாள் கைக்
கொண்டான். உருபுகள் விரிந்தும் மறைந்தும் கலந்து பல வடுக்கல்
ஆடினான் பாடினான்
சாத்தன் இளையண் வினைமுற்று ஒன்று பல வடுக்கல்
கற்ற கேட்ட பெரியோர்
நெடிய
கரிய மனிதன் பெயரெச்சம் ஒன்று பல வடுக்கல்
கற்றுக் கேட்டறிந்தார் விருப்பின்றி
வெறுப்பின்றியிருந்தார். வினையெச்சம் ஒன்று பல வடுக்கல்
376.
வேற்றுமையுருபு, ஒன்று பல வடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற
பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லா வற்றினுந் தொக்கு வருதலு
முண்டு.
உதாரணம்.
பொருளின் பங்களைப் பெற்றான்
சேசோழபாண்டியர்க்கு
நண்பன்
தந்தை hகயி னீங்கினான்
377. ஒரு தொடரினுள் ஒரு பொருளுக்கே பல
பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும்,
பொருலொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை.
உதாரணம்.
சங்கரனை யென்குணனைச்
சம்புவைநால் வேதனொரு
கங்கரனை நெஞ்சே கருது.
தேர்வு வினாக்கள் - 375.
வேற்றுமையுருபுகள் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும்,
வினைமுற்றம் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவும்
எப்படி முடியும்? 376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு
தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றப்
பெயர்களௌ;லாவற்றிலுந் தொக்க வருதலும் உண்டோ? 377. ஒரு தொடரினுள்ளே ஒரு பொருளுக்கே
பல பெயர் வருதலும், அப் பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?
திணைபாலிட முடிபு
378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ்
சொல்லானது, திணைபால் இடங்களின் மாறு படாது இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து
நில்லாதாயின் வழுவாம்.
உதாரணம்.
நம்பி வந்தான்
நங்கை
வந்தான்
அந்தனர் வந்தார்
நான்வந்தேன்
நீ வந்தாய் வழாநிழை
நம்பி
வந்தது
நங்கை வந்தான்
அவன்வந்தான் தியைவழு
பால்வழு
இடவழு
379.
இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை எழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப்
பயனிலை கொண்டு முடியும். இரணடு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின்,
பலர்பாலின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.
உதாரணம்.
நம்பியு
நங்கையும் வந்தார்
யானையுங் குதிரையும் வந்தன
380. முன்னிலையெழுவாயோடு
படர்க்கை எழுவாய் அடுக்கிவரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது
உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.
உதாரணம்.
நீயு மவனும்
போயினீர்.
381. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயேனும் படர்க்கை
யெழுவாயுமேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை
கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.
உதாரணம்.
யானு
நீயும் போயினோம்
யானு மவனும் போயினோம்
யானு நீயு மவனும்
போயினோம்.
382. திணையைந் தோன்றிய விடத்து உருபு வடிவு என்னும் பொதுச்
சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பண்மைச் சொல்லாலும்,
அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறிணைச் சொல்லாலுங் கூறல்
வேண்டும்.
உதாரணம்.
1 குற்றியோ மனுடனோ
அங்கு தோன்றுகிற உரு?
....
திணையையம்
2 ஆண்மகனோ
பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? ...
உயர்திணைப்பாலையம்
3 ஒன்றோ பலவோ அங்கு வந்த குதிரை? ...
அஃறிணைப்பாலையம்
383. இரு திணையில் உருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒரு
பால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல்
வேண்டும். இது சுரங்கள் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற்
சிறப்புடையதாம்.
உதாரணம்.
1 (குற்றியெனின்)
(மனுடனெனின்)
மனுடனன்று
குற்றியல்லன் எ-ம்.
எ-ம்.
2 (ஆண்மகனெனின்)
(பெண்மகனெனின்)
பெண்மகளல்லன்
ஆண்மகனல்லன் எ-ம்.
எ-ம்.
3 (ஒற்றெனின்)
(பலவெனின்)
பலவன்று
ஒன்றல்ல எ-ம்.
எ-ம். கூறுக.
தேர்வு வினாக்கள் - 378.
முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்?
379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு
முடியும்? இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கிவரின், எப்பயனிலை கொண்டு
முடியும்? 380. முன்னிலையெழுவாயோடு படர்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு
முடியும்? 381. தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும்
இவ்விரண்டெழுவாயேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்? 382.
திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்த சொல்லாற் கூறல் வேண்டும்? 383. இருதிணையில்
ஒரு திணை துணிந்த விடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல்
வேண்டும்?
திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி
384. திணை பாலிடங்கட்குப்
பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்பு
விணையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை
யுணர்த்தும்.
உதாரணம்.
சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்:
சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி
உரு திணையை யுணர்த்தின.
ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம்
வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும்
வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.
யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம்
போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும்
பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.
வாழ்க அவன்,
அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின்
வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும்
உணர்த்தின.
385. பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும்
பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து,
அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது
துணியப்படும்.
உதாரணம்.
ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து,
மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும்
பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால்
துணியப்பட்டது.
பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர்
என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை
யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால்
துணியப்பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும்
ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந்
தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.
இப்பெற்ற முழவொழிந்தன
என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும்
அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு
துணியப்பட்டது.
தேர்வு வினாக்கள் - 384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய
பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை? 385. பெயர் வினை
இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து,
அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?
உயர்திணை தொடர்ந்த
அஃறிணை
386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக
நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.
உ-ம் நம்பி
பொன்பெரியன்
நம்பி நாடு பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நம்பி மூக்குக்
கூரியன்
நம்பி குடிமை நல்லன்
நம்பி நடை கடியன் இங்கேஉயர்திணையெழுவாயின்
பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக
மாடு கோடு கூரிது என்னுமிடத்தும்,
மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப்
பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.
தேர்வு வினா - 386. உயர்திணை
யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப்
பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?
கலந்த திணை பால்களுக்கு ஒரு
முடிபு
387. இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண்,
என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு
முடிபைப் பெறும்.
உதாரணம்.
’’திங்களுஞ் சான்றோரு மொப்பர்’’ என் இருதிணைப்
பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத்
தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.
’’பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார்
மூத்தோர் குழவியெனு மிவர்கள்’’ என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை
முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே
மிகுதி.
’’மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா’’ என இருதிணைப்பொருள்கள் கலந்து
இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.
தேவதத்தன்
மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான்
முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.
தேர்வு வினா-
387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு
பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி
முடியும்?
திணை பால் வழுவமைதி
388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு,
கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப்
பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ்
சொல்லப்படும்.
உதாரணம்.
ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால்
அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.
பசுங்கிளியார் தூது சென்றார் என்ற
விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.
’’தம்பொருளெம்ப
தம்மக்கள்’’ என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச்
சொல்லப்பட்டது.
பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது
என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
நாங்களுடமை
என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.
தன்புதல்வனை
என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.
ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச்
சொல்லப்பட்டது.
தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால்
பெண்பாலாகச் சொல்லப்பட்டது.
‘எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந்
தேரான் பிறனில் புகல்’ என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக
சொல்லப்பட்டது.
பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால்
ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.
தேர்வு வினா - 388. ஒரு திணைப்பொருள்
வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ்
சொல்லப்படுமோ?
ஒருமை பன்மை மயக்கம்
389. ஒருமைப்பாலிற்
பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச்
சொல்லுதலும் உண்டு.
உதாரணம்.
வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து,
வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து
சொல்லப்பட்டது.
இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும்
ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.
தேர்வு வினா - 389. ஒருமைப்பாலிற்
பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?
இடவழுவமைதி
390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச்
செல்லுதலும் உண்டு.
உதாரணம்.
சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமடத்து,
யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப் படர்க்கைச் சொற் சேர்த்து
சொல்லப்பட்டது. சாத்தன்றாயாகிய யான் என்பது பொருள்.
’’எம்பியை யீங்கப்
பெற்றே னென்னெனக் கரிய தென்றான்.’’ என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு
முன்னிலையிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சோர்த்துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய
உன்னை என்பது பொருள்.
யானோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யாரிது
செய்தார்;
நீயோ யானோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யானோ யாரிது
செய்தார்;
என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக்
கொள்க.
தேர்வு வினா - 390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச்
செல்லுதலும் உண்டோ?
காலவழுவமைதி
391. முக்காலத்தினுந் தந்தொழில்
இடையறாமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத்
தகும்.
உதாரணம்.
மலை நிற்கின்றது
தெய்வமிருக்கின்றது
கடவு
ளளிக்கின்றார்
மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு
அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.
392. விரைவு, மிகுதி, தெளிவு,
என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம்
வேறொருகாலமாகச் சொல்லவும் படும்.
உதாரணம்.
உண்பதற்கிருப்பவனும்
உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டு போக அழைப்பவனுக்கு,
உண்டேன்
உண்டேன்; வந்தேன் வந்தேன் என்ற விடத்து, விரைவு பற்றி எதிர்காலமும்
நஜகழ்காலமும், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன.
களவு செய்ய நினைப்போன்
கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால்,
எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்புண்ணல் தவறிறுந் தவறுமாதலால்
மிகுதிணெனப்பட்டது.
எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்ற
விடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழைபெய்தல் தெளிவாதலால்,
nதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.
யாம் பண்டு விளையாடுவ திச்சோலை;
யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லாமலே, இறந்தகாலம்,
எதிர்காலம் நிகழ்காலம், சொல்லப்பட்டன.
தேர்வு வினாக்கள் - 391.
முக்காலத்தினுந் தந்தொழில் இடையறமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொரள்களின் வினையை
எக்காலத்தாற் சொல்லத் தகும்? 392. ஒரு காலம் வேறொரு காலமாகச்
சொல்லப்படுமோ?
வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்
393.
செயப்படுபொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல்
போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும்
உண்டு.
உதாரணம்.
இம்மாடியான் கொண்டது -
செயப்படுபொருள்
இவ்வெழுத்தாணியானெழுதியது - கருவி
இவ்வீடியானிருநடதது -
இடம்
இத்தொழில் யான் செய்தது - செயல்
இந்நாள் யான் பிறந்தது -
காலம்
தேர்வு வினா - 393. செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும்
செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு
ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?
அடைமொழி
394. பொருள், இடம், காலம், சினை,
குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப்
பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.
அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி
எனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும்
விசேடியமெனினும்
பொருந்தும்.
(உதாரணம்)
இனமுள்ளன
நெய்க்குடம்
குளநெல்
கார்த்திகை
விளக்கு
பூமரம்
செந்தாமரை
ஆடுபாம்பு
இனமில்லா
உப்பளம்
ஊர்மன்று
நாளரும்பு
இலைமரம்
செம்போத்து
தோய்தயிர்
பொருள்
இடம்
காலம்
சினை
குணம்
தொழில்
தேர்வு வினா - 394.
பொருளாதியாறும், இனமுள்ள பொரள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும்
அடைமொழிகளாய் வருமோ?
சிறப்புப் பெயர் இயற்பெயர்
395. ஒரு காரணம்
பற்றிவருஞ் சிறப்புப்பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற் பெயரினாலும், ஒரு
பொருளைச் சொல்லமிடத்துச், சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல்
சிறப்பாம்.
உதாரணம்.
சோழியன் கொற்றன்
பாண்டியன்
குழசேகரன்
தமிழ்ப்புலவன் கம்பன்
இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர்
முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன்
கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.
தேர்வு வினாக்கள் -
395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும்
இயற்பெணரினாலும் ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், எதை முன்வைத்து எதைப் பின் வைத்தல்
சிறப்பாம்? இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன்
வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?
வினாவிடை
396.
வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை
அறிவிப்பதாம்.
வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு,
உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.
397. வினாவையும் விடையையும் வழுவாமற்
காத்தல் வேண்டும்.
உதாரணம்.
உயிரெத்தன்மைத்து
வினாவழாநிலை
உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை
கறக்கின்ற வெருமை
nhலோ
சினையோ? வினாவழு
தில்லைக்கு வழியாது?
எனின் சிவப்புக்காளை
முப்பது பணம்
என்பது விடைவழு
398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என
அறுவகைப்படும்.
உதாரணம்.
1 ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? அறியாமை
வினா
2 குற்றியோ மகனோ? ஐயவினா
3 மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது?
அறிவினா
4 பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா
5 தம்பிக்காடையில்லையா?
கொடைவினா
6 தம்பீ யுண்டாயா? ஏவல்வினா
399. விடை, சுட்டு, எதிர்மறை
உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு
வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும்
பயப்பன.
(உதாரணம்)
வினா விடை
1 தில்லைக்கு வழி யாது? இது
சுட்டு
2 இது செய்யவா? செய்யேன் எதிர்மறை
3 இது செய்யவா? செய்வேன்
உடன்பாடு
4 இது செய்யவா? நீ செய் ஏவல்
5 இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர்
வினாதல்
6 இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல்
7 இது செய்யவா? உடம்பு
நோம் உறுவது கூறல்
8 இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி
தேர்வு
வினாக்கள் - 396. வினாவாவது யாது? விடையாவது யாது? 397. வினாவையும் விடையையும்
எவ்வாறு காத்தல் வேண்டும்? 398. வினா எத்தனை வகைப்படும்? 399. விடை எத்தனை
வகைப்படும்?
சுட்டு
400. படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர்
சேர்ந்துவரின், அப்படர்க்கைப் பெயர் முடிக்குஞ் சொற் கொள்ளுமிடத்து அதற்குப்பின்
வரும்: முடிக்குஞ் சொற் கொள்ளாவிடத்து அதற்றுப் பின்னு முன்னும்
வரும்.
உதாரணம்.
(1) நம்பி சந்தான்; அவனுக்குச் சோறிடுக
எருது வந்த்
அதற்குப் புல்லிடுக
(2) நம்பியவன்; அவனம்பி
தேர்வு வினா - 400.
படர்க்கைப் பெயரோடு சுட்டுப் பெயர் சேர்ந்துவரின், அச் சுட்டுப்பெயர் அப்படர்க்கைப்
பெயர்க்கு எவ்விடத்து வரும்?
மரபு
401. மரபாவது, உலக வலக்கிலுஞ்
செய்யுள் வழக்கிலுஞ் எப்பொருட்கு எப்பெயர் வழங்கி வருமோ, அப்பொருளை அச் கொல்லாற்
கூறுதலாம்.
உதாரணம்.
ஆணைமேய்ப்பான் பாகன் குதிரைக்குட்டி
ஆடுமேய்ப்பான்
இடையன் பசுக்கன்று
ஆனையிலண்டம் கீரிப்பிள்ளை
ஆட்டுப்புழுக்கை
கோழிக்குஞ்சு
யானைக்குட்டி தென்னம்பிள்ளை
யானைக்கன்று
மாங்கன்று
தேர்வு வினா - 401. மரபாவது யாது?
முற்றும்மை
402.
இத்தனையென்று தொகையுற்று நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத
பொருளும், முடிக்குஞ் சொல்லைப் பெற்று வருமிடத்து, முற்றும்மைபெற்று
வரும்.
உதாரணம்.
(1) தமழ் நாட்டு மூவேந்தரும் வந்தார்
(2)
ஒளிமுன்னிருள் எங்குமில்லை
தேர்வு வினா - 402. இத்தனையென்று தொகையுற்று
நிற்கும் பொருளும், எக்காலத்தும் எவ்விடத்தும் இல்லாத பொருளும், முடிக்குஞ்
சொல்லைப் பெற்று வருமிடத்து, எவ்வாறு வரும்?
ஒரு பொருட் பன்மொழி
403.
சொல்லின்பந் தோன்றுதற் பொருட்டு ஒரு பொருண்மேல் இரு சொற்கள் காரணமின்றித் தொடர்ந்து
வருதலும் உண்டு.
உதாரணம்.
நாகிளங்கமுகு மீமிசைஞாயிறு
புனிற்றிளங்கன்று
உயர்ந்தோங்கு பெரு வரை
தேர்வு வினா - 403. ஒரு பொருண்மேல் இரு சொற்கள்
காரணமின்றித் தொடர்ந்து வருதலும் உண்டோ?
அடுக்குச் சொல்
404.ஒரு
சொல், விரைவு, வெகுளி, உவகை, அச்சம், துன்பம் முதலிய காரணம்பற்றி இரண்டு முதல்
மூன்றளவு அடுக்கிக் கூறப்படும்.
உதாரணம்.
1 உண்டேனுண்டேன்; போ போ போ
விரைவு
2 எய்யெய்; எறி எறி எறி கோபம்
3 வருக வருக் பொலிக பொலிக பொலிக
உவகை
4 பாம்பு பகம்பு; தீத் தீத் தீ அச்சம்
5 உய்யேனுய்யேன்; வாழேன் வாழேன்
வாழேன் துன்பம்
அசைநிலைக்கு இரண்டளவும், இசைறிறைக்கு இரண்டு முதல்
நான்களவும் அடுக்கிக் கூறப்படும்.
உதாரணம்.
1 அன்றேயன்றே அசைநிலை
2
ஏயெயம்பன் மொழிந்தனன் யாயே
நல்குமே நல்குமே நல்குமே நாமகள்
பாடுகோ பாடுகோ
பாடுகோ பாடுகோ இசைநிலை
சலசல, கலகல, என்பவை முதலியன பிரியாது இரட்டைச்
சொல்லாகவே நின்று பொருள் படுதலால், அடுக்கிய சொல்லல்ல.
தேர்வு வினாக்கள் -
404. அடுக்குத் தொடருள், ஒரு சொல்லே அடுக்கிக் கூறப்படும் போது, எவ்வௌ; விடத்தில்
எத்தனை எத்தனை அடுக்கிக் கூறப்படும்? இக்காரணங்களின்றி ஒரு சொல் இங்ஙனம் அடுக்கிக்
கூறப்படுதல் இல்லையோ? சலசல, கலகல என்பவை முதலியன அடுக்கிய
சொல்லல்லவோ?
சொல்லெச்சம்
405. சொல்லெச்சமாவது, வாக்கியத்தில் ஒரு
சொல் எஞ்சி நின்று வருவித் துரைக்கப்படுவதாம்.
உதாரணம்.
பிறவிப் பொருங்கட
னீந்நுவர் நீத்தா
ரிறைவ னடிசேரா தார்
இதிலே சேர்ந்தார் பிறவிப்
பெருங்கடல் நீந்துவர் எனச் சேர்ந்தார் என்னும் ஒரு சொல் வருவித்துரைக்கப்படுதலாற்
சொல்லெச்சம்.
தேர்வு வினா - 405. சொல்லெச்சமாவது
யாது?
இசையெச்சம்
406. இசையெச்சமாவது, வாக்கியத்தில் அவ்வவ்
இடத்திற்கேற்ப் இரண்டு முதலிய பல சொற்கள் எஞ்சி என்று
வருவித்துரைக்கப்படுவதாம்.
உதாரணம்.
’’அந்தாமரையன்னமே
நின்னையானகன்றாற்றுவனோ’’
இதிலே என்னுயிரினுஞ் சிறந்த நின்னை எனப் பல
சொற்கள் வருவித்துரைக்கப்படுதலால் இசையெச்சம்.
தேர்வு வினா - 406.
இசையெச்சமாவது யாது?
ஒழியியல் முற்றிற்று
தொடர்மொழியதிகாரம் முற்றுப்
பெற்றது.
பகுபத முடிபு
பெயர்ப்பகுபதங்கள்
அவன் என்னுஞ்
சுட்டுப்பொருட் பெயர்ப்பகுபதம். ஆ என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால்
விகுதியும் பெற்று, இடையில் வகர மெய் தோன்றி, அம்மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி
முடிந்தது.
தமன் என்னுங் கிளைப்பொருட் பெயர்ப் பகுபதம், தாம் என்னம்
பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதி குறுகி, இறுகி மகர
மெய்யின் ஆமல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
பொன்னன் என்னும் பொருட்பெயர்ப்
பகுபதம் பொன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று
பகுதியீற்று னகரமெய் இரட்டித்து இரட்டித்த னகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி
முடிந்தது.
நிலத்தன் என்னும் இடப்பெயர்ப் பகுபதம், நிலம் என்னும் பகுதியும்,
அன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே அத்துச்சாரியையும் பெற்று
பகுதியீற்று மகரமெய்யுஞ் சாரியையின் முதல் அகரமும் ஈற்று உகரமுங் கெட்டு, உகரங்கெட
நின்ற மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேஙி முடிந்தது.
பிரபவன் என்னங்
காலப்பெயர்ப்பகுபதம், பிரபவம் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால், விகுதியும்
பெற்று, பகுதியீந்நு அம் குறைந்து வகர மெய்யீராக நின்று, அவ்வகர மெய்யின் மேல்
விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
திணிதொளன் என்னுஞ் சினைப்பெயர்ப்
பகுபதம்,திணிதோன் என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று,
பகுதியீற்று ளகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
நல்லன்
என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், நன்மை என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால்
விகுதியும் பெற்று, பகுதியீற்று மைவிகுதி கெட்ட நல்ல என நின்று, லகர மெய்
இரட்டித்து, இரட்டித்த லகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி
முடிந்தது.
கரியன் என்னுங் குணப்பெயர் பகுபதம், கருமை என்னும் பகுதியும்,
அன் என்னும் ஆண் பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு, இடை உகரம்
இகரமாகத் திரிந்து, யகரவுடம்படுமெய் தோன்றி, அம் மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி
முடிந்தது.
செய்யன் என்னுங் குணப்பெயர்ப் பகுபதம், செம்மை என்னும்
பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும் பெற்று, பகுதியீற்று மை விகுதி கெட்டு,
இடை நின்ற மகர மெய் யகரமெய்யாய் திரிந்து, அது இரட்டித்து, இரட்டித்த மெய்யின் மேல்
விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
ஓதுவான் என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், ஓது
என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே
வகரவிடைநிலையும் பெற்று, இடைநிலை மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
ஓதுலுடையவன் என்பது பொருள்.
w ஓதுவான் என்பது எதிர்காலத் தெரிநிலைமுற்றுப்
பகுபதமாயின்: ஓது பகுதி: ஆன் விகுதி: வகரமெய் எதிர்காலவிடைநிலை.
எதிர்காலவினையெச்சப்பகுபதமாயின், ஓது பகுதி: வான் எதிர்கால வினையெச்ச
விகுதி.
நன்மை என்னும் பண்புப் பெயர் பகுபதம், நல் என்னும் பண்புப் பெயர்
விகுதியும் பெற்று, பகுதியீற்று லகரமெய் னகரமெய் னகரமெய்யாகத் திரிந்து
முடிந்தது.
வருதல் என்னுந் தொழிற்பெயர் பகுபதம், வா என்னும் பகுதியும், தல்
என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, பகுதி முதல் குறுகி ரகரவுகரம் விரிந்து
முடிந்தது.
உடுக்கை என்னுந் தொழிற்பெயர்ப் பகுபதம், உடு என்னும் பகுதியும்,
கை என்னும் தொழிற்பெயர் விகுதியும் பெற்று, விகுதிக் ககரமிகுந்து,
முடிந்தது.
உடுக்கை என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உடு என்னும்
பகுதியும், ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதியும், அவைகளுக்கிடையே குச்சாரியையும்
பெற்று, சாரியைக் ககரம் மிகுந்து. சாரியையீற்றுகரங்கெட்டு, உகரங்கெட நின்ற
ககரவொற்றின் மேல் விகுதி ஐகாரவுயிரேறி, முடிந்தது.
எழுத்து என்னுஞ் செயற்படு
பொருட் பெயர்ப்பகுபதம், எழுது என்னும் பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படுபொருள் விகுதி
புணர்ந்து, அவ்விகுதி கெட்டுக், கெட்டவிடத்துத் தகரமிரட்டித்து
முடிந்தது.
ஊண் என்னுஞ் செயற்படு பொருட் பெயர்ப்பகுபதம், உண் என்னும்
பகுதியோடு ஐ என்னுஞ் செயற்படு பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி கெட்டு, பகுதி
முதல் நீண்டு, முடிந்தது.
காய் என்னும் வினைமுதற்பொருட் பெயர்ப்பகுபதம்,
காய் என்னும் பகுதியோடு இ என்னும் வினை முதற்பொருள் விகுதி புணர்ந்து, அவ்விகுதி
கெட்டு முடிந்தது.
வினைமுற்றுப் பகுபதங்கள்
உண்டான் என்னும்
இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும்
ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் டகரவிடை நிலையும்
பெற்று, இடைநிலை டகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி
முடிந்தது.
உண்கின்றான் என்னும் நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம்,
உண் என்னும் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு கின்று என்னும்
நிகழ்கால விடைநிலையும் பெற்று, இடைநிலையீற்று உகலங்கெட்டு, உகரங்கெட நின்ற
றகரமெய்யின் மேல் விகுதி, ஆகாரவுயிரேறி முடிந்தது.
உண்ணுவான் என்னும்
எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், உண் என்னும் பகுதியும், ஆன் என்னும்
ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங் காட்டும்வகரவிடைநிலையும்,
பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே உகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று ணகரமெய்
இரட்டித்து, இரட்டித்த ணகரமெய்யின் மேற் சாரியைஉகரமேறி, இடைநிலை வகரமெய்யின் மேல்
விகுதி ஆகாரவுயிரேறி, முடிந்தது.
நடந்தனன் என்னும் இறந்தகாலத் தெரிநிலை
வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும் ஆண்பால் விகுதியும்,
அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டுந் தகரவிடை நிலையும், இடைநிலைக்கும்
விகுதிக்கும் இடையே அன்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரமிகுந்து, மிகுந்த
தகரவல்லொற்று
• உண்ணுவான் என்பது எதிர்கால வினையெச்சப் பகுபதமாயின், உண்
பகுதி: உ சாரியை: வான் எதிர்கால வினையெச்ச விகுதி.
மெல்லொற்றாக
விகாரப்பட்டு, இடைநிலைத் தகர மெய்யின்மேற் சாரியை அகரவுயிரேறிச், சாரியை யீற்று
னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
வருகின்றனன் என்னும்
நிகழ்காலத் தெரிநிலை வினைமுற்றப் பகுபதம், வா என்னும் பகுதியும் அன் என்னும்
ஆண்பால் விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னும் நிகழ்கால விடைநிலையும்,
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அன் சாரியையும் பெற்று, பகுதி முதல் குறுகி,
ரகரவுகரம் விரிந்து, இடைநிலையீற்று உகரங்கெட்டு, உகரங்கெட நின்ற றகரவொற்றின் மேற்
சாரியை அகரவுயிரேறிச், சாரியையீற்று னகரமெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி
முடிந்தது.
நடப்பான் என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட
என்னம் பகுதியும், ஆன் என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிர்காலங்
காட்டும் பகர விடைநிலையும் பெற்று, இடைநிலைப் பகரம் மிகுந்து, இடைநிலைப்
பகரமெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
நடந்தது என்னும்
இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், து என்னும்
ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங்காட்டுந் தகர விடைநிலையும்,
இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே அகரச்சாரியையும் பெற்று, இடைநிலைத் தகரம்
மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு, இடைநிலைத் தகர
வல்லொற்றின் மேற் சாரியை அகரவுயிரேறி முடிந்தது.
நடப்பித்தான் என்னும்
பிறவினைப் பகுபதம், நட என்னும் பகுதியும், பி என்னும் பிறவினைப் விகுதியும் பெற்று
விகுதி பகரமிகுந்து, அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும் ஆண்பால்
விகுதியும், பகுதிக்கும் விகுதிக்கும் இடையே இறந்த காலங் காட்டுந் தகர விடைநிலையும்
பெற்று, இடைநிலைத் தகரம் மிகுந்து, இடைநிலைத் தகர மெய்யின் மேல் விகுதி
ஆகாரவுயிரேறி முடிந்தது.
அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப்
பகுபதம் அடி என்னும் பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும்,
அவைகளுக்கு அடிக்கப்பட்டான் என்னுஞ் செயற்பாட்டு வினைமுற்றுப் பகுபதம் அடி என்னும்
பகுதியும், படு என்னுஞ் செயப்பாட்டு வினை விகுதியும், அவைகளுக்கு இடையே
குச்சாரியையும், அகரச்சாரியையும். பெற்று, சாரியைச் சகரம் மிகுந்து, பகரமிகுந்து,
சாரியையீற்று உகலங்கெட்டு உகரங்கெட நின்ற ககரமெய்யின் மேலே சாரியை அகரவுயிரேறி,
விகுதி பகர மிகுந்து, அடிக்கப்படு என அனைத்தும் ஒரு பகுதியாய் நின்று, ஆன் என்னும்
ஆண்பால் விகுதி பெற்று, படு என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய்யின் மேல் விகுதி
ஆகாரருயிரேறி முடிந்தது.
நடவான் என்னும் எதிர்மறைத் தெரிநிலை வினை முற்றுப்
பகுபதம், நட என்னும் பகுதியும், ஆன் என்னும் விகுதியும், அவைகளுக்கு இடையே எதிhமறை
ஆகார விடைநிலையும் பெற்று, அவ்விடைநிலை கெட்டு, வகரவுடம்படு மெய் தோன்றி,
அம்மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
நடக்கின்றிலன் என்னும்
எதிர்மறைத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், நட என்னும் பகுதியும், அன் என்னும்
விகுதியும், கின்று என்னும் நிகழ்கால விடை நிலையும், இல் என்னும் எதிர்மறையிடை
நிலையும் பெற்று, கின்றிடை நிலையின் ககரம் மிகுந்து, ஈற்றுகரங் கெட்டு, உகரங்கெட
நின்ற றகர மெய்யின் மேல் எதிர்மறையிடை நிலை இகரமேறி, அவ்விடை நிலையீற்று லகர
மெய்யின் மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
எழுந்திட்டான் என்னும்
இறந்தகாலத் தெரிநிலை வினைமுற்றுப் பகுபதம், ஏழு என்னும் பகுதியும், இடு என்னும்
பகுதிப்பொருள் விகுதியும், அவைகளுகடகு இடையே துச்சாரியையும் பெற்று, சாரியைத் தகர
மிகுந்து, மிகுந்த தகர வல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டுச் சாரியையீற்றுகரங்
கெட்டு, உகரங் கெட நின்ற தகர மெய்யின் மேல் விகுதி இகரவுயிரேறி, எழுந்திடு என
அனைத்தும், ஒரு பகுதியாக நின்று, ஆன் என்னும் ஆண்பால் விகுதி பெற்று, இடு
என்பதனுடைய உகரமூர்ந்த டகரமெய் இரட்டி உகரவுயிர் கெட்டு, உகரங்கெட நின்ற டகர
மெய்யின் மேல் விகுதி ஆகாரவுயிரேறி முடிந்தது.
கழிந்தின்று என்னும்
எதிர்மறை இறந்தகாலத் தெரிநலைமுற்றுப் பகுபதம், கழி என்னும் பகுதியும் று என்னும்
ஒன்றன் பால் விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்த காலங் காட்டுந் தகரவிடைநிலையும்,
அவ்விடைநிலைக்கும், விகுதிக்கும் இடையே இல் என்னும் எதிர்மறையிடை நிலையும் பெற்று,
காலவிடை நிலைத் தகரம் மிகுந்து, மிகுந்த தகரவல்லொற்று மெல்லொற்றாக விகாரப்பட்டு,
இடைநிலைத் தகரமெய்யின் மேல் எதிர்மறையிடைநிலை இகரவுயிரேறி, இடைநிலையீற்று லகரமெய்
னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது. கழிந்திலது என்பது பொருள்.
கோடும்
என்னும் எதிர்காலத் தெரிநிலை வினைமற்றுப் பகுபதம், கொள் என்னும் பகுதியும், தும்
எந்நுந் தன்மைப்பன்மை எதிர்கால விகுதியும் பெற்று, பகுதி முதல் நீண்டு, பகுதஜயீற்று
ளகரங் கெட்டு, விகுதித் தகரம் டகரமாகத் திரிந்து முடிந்தது.
அற்று என்னுங்
குறிப்பு விணைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன் பால்
விகுதியும் பெற்று, விகுதி றகரவல்லொற்று மிகுந்து முடிந்தது.
அன்னையர்
எனனுங் குறிப்பு வினைமுற்றுப் பகுபதம், அ என்னும் பகுதியும் அர் என்னும் பலர்பால்
விகுதியும், இவைகளுக்கு இடையே னகரச்சாரியையும் ஐகாரச்சாரியையும் பெற்று, சாரியை
னகரமெய்யின்மேற் சாரியை ஐகாரவுயிரேறி, யகரவுடம்படு மெய் தோன்றி, அம்மெய்யின் மேல்
விகுதி அகரவுயிரெறி முடிந்தது.
இன்று என்னுங் குறிப்பு வினைமுற்றுப்
பகுபதம், இல் என்னும் பகுதியும், று என்னும் ஒன்றன்பால் விகுதியும் பெற்று,
பகுதியீற்று லகரமெய் னகரமெய்யாகத் திரிந்து முடிந்தது.
உயர்த்துகிற்பன்
என்னும் எதரிகாலத் தெரிநிலைமுற்றுப் பகுபதம், உணர்ந்து என்னும் பகுதியும், அன்
என்னும் ஆண்பால் விகுதியும், அவைகளுக்கு இடைNயு எதிர்காலங் காட்டும்
பகரவிடைநிலையும், பகுதிக்குங் காலவிடைநிலைக்கும் இடையே கில் என்னும் ஆற்றல்
இடைநிலையும் பெற்று, ஆற்றலிடைநிலையீற்று லகர மெய், றகரமெய்யாகத் திரிந்து,
இடைநிலைப் பகரத்தின்மேல் விகுதி அகரவுயிரேறி முடிந்தது.
செய் என்னும்
முன்னிலை யேலொருமை வினைமுற்றுப் பகுபதம், செய் என்னும் பகுதியோடு ஆய்
என்னும்
• அற்று என்பது இறந்தகால வினையெச்சப் பகுபதமாயின், அறு பகுதி;
உகரமூர்த்த றகரமெய் இரட்டித்து முடிந்தது எனக்கொள்க.
முன்னிலையேவல் விகுதி
புணர்ந்து, அவ்விகுதி கெட்டு முடிந்தது
பெயரெச்சப் பகுபதங்கள்
அடித்த
என்னும் இறந்தகாலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னம் பகுதியும், அ என்னும் பெயரெச்ச
விகுதியும், அவைகளுக்கு இடையே இறந்தகாலங் காட்டும் தகரவிடைநிலையும் பெற்று,
இடைநிலைத்தகரம் மிகுந்து, இடைநிலைத் தகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறி
முடிந்தது.
அடிக்கின்ற என்னும் நிகழ்காலப் பெயரெச்சப் பகுபதம், அடி என்னும்
பகுதியும், என்னும் பெயரெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே கின்று என்னம்
நிகழ்காலவிடைநிலையும் பெற்று, இடைநிலைக் ககரம் மிகுந்து, இடைநிலைறீற்றுகரங் கெட்டு,
உகரங்கெட, நின்ற றகரமெய்யின்மேல் விகுதி அகரவுயிரேறிமுடிந்தது.
வினையெச்சப்
பகுபதங்கள்
நின்று என்னும் இறந்தகால வினையெச்சப் பகுபதம், நில் என்னும்
பகுதியும், உ என்னும் வினையெச்ச விகுதியும், அவைகளுக்கிடையே இறந்தகாலங்காட்டும்
றகரவிடைநிலையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் இடைநிலை றகர மெய்க்கு இனமாகிய
னகரமெய்யாகத் திரிந்து, இடை நிலை றகரமெய்யின் மேல் விகுதி உகரவுயிரேறி
முடிந்தது.
நிற்க என்னும் முக்காலத்திற்கும் உரிய வினையெச்சப் பகுபதம், நில்
என்னும் பகுதியும், இன் என்னும் எதிர்கால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே
குச்சாரியையும் பெற்று, பகுதியீற்று லகரமெய் றகர மெய்யாகத் திரிந்து, சாரியையீற்று
உகரங்கெட்டு, உகரங் கெட நின்ற அகரமெய்யின் மேல் இகரவுயிரேறி
முடிந்தது.
தோன்றியக்கால் என்னும் எதிர்கால வினையெச்சப் பகுபதம், தோன்று
என்னும் பகுதியும், கால் என்னும் எதிhகால வினையெச்ச விகுதியும், அவைகளுக்கு இடையே
இன் சாரியையும் அகரச்சாரியையும் பெற்று, பகுதியீற்று உகரங் கெட்டு, உகலங் கெட நின்ற
றகர மெய்யின்மேற் சாரியை இகரவுயிரெறி, சாரியையீற்று னகரமெய் குறைந்து,
யகரவுடம்படுமெய் தோன்றி, அம்மெய்யின் மேற் சாரியை அகரவுயிரேறி, விகுதிக்
ககரமிகுந்து முடிந்தது.
• நிற்க என்பது வியங்கோள் வினைமுற்றுப் பகுபதமாயின்,
நில் பகுதி, கூ வியங்கோள் விகுதி.
பின்வரும் பொதுப் பகுபதங்களை
முடிக்க:-
சாவான்: 1) 2) 3) உடன்பாட்டு தெரிநிலை வினைமுற்று
எதிர்மறை
தெரிநிலை வினைமுற்று
எதிர்கால வினையெச்சம்
செய்யாய்: 1) 2) முன்னிலையேவற்
பன்மைவினைமுற்று
முன்னிலையொருமை யெதிர்மறை வினைமுற்று
செய்யீர் 1) 2)
முன்னிலையேவற் பன்மை வினைமுற்று
முன்னிலைப் பன்மையெதிர்மறை
வினைமுற்று
தழைப்ப: 1) 2) 3) பலர்பாற் படர்க்கை வினைமுற்று
பலவின்பாற்
படர்க்கை வினைமுற்று
செயவெனெச்சம்
அன்ன: 1) 2) குறிப்பு
வினைமுற்று
குறிப்புவினைப்பெயரெச்சம்
செவ்விய: 1) 2) குறிப்பு
வினைமுற்று
குறிப்புவினைப்பெயரெச்சம்
வேட்கும்: 1) 2) எதிhகால
வினைமுற்று
எதிhகாலப் பெயரெச்சம்
வந்து: 1) 2) தன்மையொருமை
வினைமுற்று
இறந்தகால வினையெச்சம்
உண்டு: 1) 2) 3) தன்மையொருமை
வினைமுற்று
இறந்தகால வினையெச்சம்
அஃறிணையொன்றன்பாற் படர்க்கைக் குறிப்பு
வினைமுற்று
தேடிய: 1)
2) 3) 4) இறந்தகால வினைமுற்று
வியங்கோள்
வினைமுற்று
இறந்தகால பெயரெச்சம்
எதிhகால
வினையெச்சம்
சொல்லினங் கூறுதல்
அவன் வந்தான்
அவன்,
எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைச் சுட்டுப் பெயர்; திரிபின்மையாகிய
எழுவாய்யுரு பேற்றது; அது வந்தான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.
வந்தான்,
எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யயிறந்தகால எடன்பாட்டுத் தெரிநிலை வினை
முற்று; அது அவன் என்னும் எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
கொலை செய்தவன்
நரகத்தில் வீழ்ந்து வருந்துவான்
கொலை, எ-து. தொழிற்பெயர்; ஆக்கப்படு
பொருளில் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது செய்தவன் என்னும் வினை
கொண்டது.
செய்தவன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கையிறந்தகால
உடன்பாட்டுத் தெரிநிலை விணையாலணையும் பெயர்; திரிபின்மையாகிய எழுவாயுருபேற்றது; அது
வருந்துவான் என்னும் வினைப் பயனிலை கொண்டது.
நரகம், எ-து. பால்பகாவஃறிணைப்
படர்க்கைப் பெயர்; பிறிதின்கிழமைப் பொருட்கு இடமிடமாக நிற்கும் இடப்பொருளில் வந்த
அல் என்னும் ஏழனுருபேற்றது; அது வீழ்ந்து என்னும் வினை கொண்டது.
அத்து,
எ-து. சாரியையுருபிடைச் சொல். வீழ்ந்து, எ-து. செய்தென்வாய்ப்பாட்டிறந்தகால
உடன்பாட்டுத் தெரிநிலைவிணை வினையெச்சம்; வருந்துவான் என்னும் வினை
கொண்டது.
வருந்துவான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கை யெதிர்கால
உடன்பாட்டுத் தெரிநிலை வினைமுற்று; செய்தவன் என்னும் எழுவாய்குப் பயனிலையாய்
நின்றது.
கொற்றனானவன் தன்னை யெதிர்த்த பகைவரை வாளான்மாய
வெட்டினான்.
கொற்றன், எ-து. உயர்திணையாண்பாலொருமைப் படர்க்கைப் பெயர், ஆனவன்
என்னும் எழுவாய்ச் சொல்லுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினைப் பயனிலை
கொண்டது.
தான், எ-து. ஒருமைப் படர்க்கைப் பொதுப் பெயர்; அடையப்படுபொருளில்
வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது எதிர்த்த என்னும் வினை
கொண்டது.
எதிர்த்த, எ-து. செய்தவென்வாய்ப்பாட்டிறந்தகால உடன்பாட்டுத்
தெரிநிலைவினைப் பெயரெச்சம்; பகைவர் என்னும் வினைமுதற் பெயர்
கொண்டது.
பகைவர், எ-து. உயர்திணைப் பலர் பாற் படர்க்கைப் பெயர்;
அழிக்கப்படுபொருள் வந்த ஐ என்னும் இரண்டனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை
கொண்டது.
வாள், எ-து. பால்பகாவஃறிணைப் படர்க்கைப் பெயர்; கருவிப் பொருளில
வந்த ஆல் என்னும் மூன்றனுருபேற்றது; அது வெட்டினான் என்னும் வினை
கொண்டது.
மாய, எ-து. செயவென்வாய்ப்பாட்டு முக்காலத்திற்கு முரிய
தெரிநிலைவினை வினையெச்சம்; இங்கே காரியப் பொருளில் வந்தமையால் எதிர்காலத்து;
வெட்டினான் என்னும் வினை கொண்டது.
வெட்டினான், எ-து. உயர்திணையாண்பாலொருமைப்
படர்க்கையிறந்தகால உடன்பாட்டுத் தெரிநிலை வினை முற்று; கொற்றன் என்னும்
எழுவாய்க்குப் பயனிலையாய் நின்றது.
சொற்றொடரிலக்கணங் கூறுதல்
அவன்
வந்தான் - அல் வழிச்சந்தியில் எழுவாய்த் தொடர்.
கொலை செய்தவன் - வேற்றுமைச்
சந்தியில் இரண்டாம் வேற்றுமைத் தொகை
செய்தவன் நரகத்தில் - அல்வழிச்
சந்தியில் தழாத் தொடராகிய எழுவாய்த்தொடர்.
நரகத்தில் வீழ்ந்து - வேற்றுமைச்
சந்தியில் ஏழாம் வேற்றுமை விரி.
வீழ்ந்து வருந்துவான் - அல் வழிச் சந்தியில்
வினையெச்சத் தொடர்.
தாழாத்தொடராவது சிலைமொழியானது வருமொழியைப்
பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் பொருட்பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு
தொடர்.
முற்றுப்பெற்றது