பொருளடக்கம் பக்கம் செல்க


திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 10 (1049)
திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 10 (verse 1049)
tiruvAvaTuturai AtInattuk kuruparamparai akaval
In tamil script, unicode/utf-8 format

திருவாடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
பிரபந்தத்திரட்டு - பகுதி 10 (1049)
திருவாவடுதுரை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்.

1049 திருவளர் கைலைச் சிலம்பில்வீற் றிருக்கு
மருவளர் கடுக்கை மாலிகைப் பெருமா
னருள்பெறு நந்தி யடிகடம் பான்மெய்ப்
பொருள்பெறு கருணைப் புகழ்ச்சனற் குமாரர்
மற்றவ ரருளுறீஇ வையகத் தியங்கிய
5
நற்றவர் சத்திய ஞானதரி சனிக
ளவந்தெறு மன்னவ ரருளொருங் குற்றுப்
பவந்தெறு வாய்மைப் பரஞ்சோதி யடிக
ளத்தகு குரவ ரருளடைந் துயர்ந்த
வித்தகர் வெண்ணெய் மெய்கண்ட தேவ
10
ரிவர்முதற் குரவ ரியைந்ததிரு நாமந்
தவர்புகழ் சமாதித் தலமடை மதிநா
ளிவைமுறை யுரைப்பா மிசைத்தமெய் கண்டர்
சுவையமை வெண்ணெய் துலாமதி சோதி
தவலருங் கருணை தழையரு ணந்தியார்
15
கவலருந் துறையூர் கன்னிமதி பூரம்
படர்மறை ஞானசம் பந்தர்வண் டில்லை
வடகளாச் சேரி மடங்கன்மதி யுத்தரந்
திக்கொத் திறைஞ்சத் திகழுமா பதியார்
மெய்க்கொற் றவன்குடி மேடமதி யத்தம்
20
வாய்ந்தவரு ணமச்சி வாயதே சிகர்மேல்
வேய்ந்தகொற் றவன்குடி வின்மதி யாதிரை
திண்ணிய சித்தர் சிவப்பிர காசர்
நண்ணிய தலமதி நாளவர்க் கில்லை
யளவா வருளுற் றவிர்நமச் சிவாயர்
25
வளவா வடுதுறை மகரமதி முதனா
ணலமலி தருமறை ஞானர்மே லுரைத்த
வலமலி துறைசை மகரமதி சோதி
வளம்பயி லம்பல வாணர் மேலெடுத்து
விளம்பிய துறைசை மேடமதி யவிட்ட
30
மொருவா வருண்மலி யுருத்திர கோடிக
டிருவால வாய்விருச் சிகமதி யனுட
மணவிய வருள்வே லப்பர் திருப்பூ
வணநகர் விருச்சிக மதியுத்த ராடந்
தரமலி குமார சாமிகள் சுசீந்திரம்
35
வரமலி விருச்சிக மதியுத்த ராடந்
தரைசொல்பிற் குமார சாமிகள் சுசீந்திர
முரைமடங் கன்மதி யுத்தரட் டாதி
மருவுமெய்ஞ் ஞான மாசிலா மணியார்
வெருவில்வெண் காடு மேடமதி யுரோகிணி
40
யிராம லிங்கர்மு னிசைத்தகோ முத்தி
பராவு விருச்சிகம் படர்மதி யனுடந்
தாவில்வே லப்பர் சங்கர நயினார்
கோவில்வான் கன்னி குலாமதி மூலம்
பின்வே லப்பர் பெருந்துறை கோட்டிற்
45
பொன்வேய் சேமதி பூரட் டாதி
யாய்புகழ்த் திருச்சிற் றம்பல தேசிகர்
வேய்புகழ்த் துறைசை மிதுனமதி பரணி
யம்பல வாண ராவடு துறையே
50
நம்பலர் கொடுஞ்சிலை நகுமதி கேட்டை
வளமலி சுப்பிர மணிய தேசிக
ரளவரும் புகழ்த்திரு வாவடு துறையே
தெளிதர வொளிர்விருச் சிகமதி கார்த்திகை
வெளிதர வுரைத்தேன் வேணவா வானே.
55

குருபரம்பரையகவல் முற்றிற்று

தலைப்புக்கு செல்க