பொருளடக்கம் பக்கம் செல்க


Holy Bible - Old Testament
Book 9. Samuel-I (in Tamil, Unicode/utf-8 format)

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்

விவிலியம் /பழைய ஏற்பாடு
புத்தகம் 9. சாமுவேல் - முதல் நூல்


அதிகாரம் 1.

1.     எப்ராயிம் மலைநாட்டைச் சார்ந்த இராமாத்தயிரம் சோப்பிமில் எல்கானா என்ற ஒருவர் இருந்தார். இவர் எப்ராயிமைச் சார்ந்த சூப்பின் மகனான தோகூவின் மைந்தனான எலிகூபின் புதல்வனான எரொகாமின் மகன்.
2.     அவருக்கு அன்னா, பெனின்னா என்ற இரு மனைவியர் இருந்தனர்: பெனின்னாவுக்குக் குழந்தைகள் இருந்தனர். அன்னாவுக்கோ குழந்தைகள் இல்லை
3.     எல்கானா ஆண்டுதோறும் சீலோவில் படைகளின் ஆண்டவரை வழிபடவும் அவருக்குக் பலி செலுத்தவும் தம் நகரிலிருந்து சென்று வருவார். அங்கே ஆண்டவரின் குருவான ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்னியும் பினகாசும் இருந்தனர்.
4.     எல்கானா, தாம் பலி செலுத்திய நாளில், தம் மனைவி பெனின்னாவுக்கும் அவளுடைய புதல்வர் புதல்வியர் அனைவருக்கும் பங்கு கொடுப்பதுண்டு.
5.     அன்னாவின் மீது அன்புகொண்டிருந்தும் அவருக்கு ஒரே பங்கைத்தான் அளித்தா+. ஏனெனில் ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார்.
6.     ஆண்டவர் அவரை மலடியாக்கியிருந்தார் அவருடைய சக்களத்தி அவரைத் துன்புறுத்தி வதைத்தாள்.
7.     இவ்வாறு ஆண்டுதோறும் நடந்தது: அவர் ஆண்டவரின் இல்லம் வந்த போதெல்லாம் அவள் அவரைத் துன்புறுத்துவாள். அன்னா உண்ணாமல் அழுவார்.
8.     அப்போது அவர் கணவர் எல்கானா அவரை நோக்கி அன்னா ந¨ ஏன் அழுகிறாய்? நீ ஏன் உண்ணவில்லை? நீ ஏன் மனவருத்தம் அடைகிறாய்? நான் உனக்குப் பத்துப் புதல்வரை விட மேலானவன் அன்¥றோ? என்பார்.
9.     ஒருநாள் அவர்கள் சீலோவில் உண்டு குடித்தபின், அன்னா எழுந்தார். குரு ஏலி,ஆண்டவரின் கோவில் முற்றத்தில் ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தார்.
10.     அன்னா மனம் கசந்து அழுது புலம்பி, ஆண்டவரிடம் மன்றாடினார்.
11.     அவர் பொருத்தனை செய்து வேண்டிக்கொண்டது: படைகளின் ஆண்டவரே! நீர் உம் அடியாளாகிய என் துயரத்தைக் கண்ணோக்கி. என்னை மறவாமல் நினைவு கூர்ந்து எனக்கு ஓர் ஆண் குழந்தையைத் தருவீரானால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவராகிய உமக்கு ஒப்புக்கொடுப்பேன். அவனது தலைமேல் சவரக் கத்தியேபடாது.
12.     அவர் இவ்வாறு ஆண்டவர் திருமுன் தொடர்ந்து மன்றாடிக் கொண்டிருந்தபோது, ஏலி அவருடைய வாயைக் கவனித்தார்.
13.     அன்னா தம் உள்ளத்தினுள் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய உதடுகள் மட்டும் அசைந்தன: குரல் கேட்கவில்லை, ஆகவே ஏலி அவரை ஒரு குடிகாரி என்று கருதினார்.
14.     ஏலி அவரை நோக்கி, எவ்வளவு காலம் நீர் குடிகாரியாய் இருப்பாய்? மது அருந்துவதை நிறுத்து என்றார்,
15.     அதற்கு அன்னா மறுமொழியாக, இல்லை உன் தலைவரே! நான் உள்ளம் நொந்த ஒரு பெண், திராட்சை இரசத்தையோ நான் அருந்தவில்லை, மாறாக, ஆண்டவர் திரு முன் என் உள்ளத்தைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன்,
16.     உம் அடியாளை ஒரு கீழ்த்தரப்பெண்ணாகக் கருதவேண்டாம், ஏனெனில், என் துன்ப துயரங்களின் மிகுதியால் நான் இதுவரை பேசிக்கொண்டிருந்தேன் என்று கூறினார்.
17.     பிறகு ஏலி, மனநிறைவோடு செல், இஸ்ரயேலின் கடவுள் நீ அவரிடம் விண்ணப்பித்த உனது வேண்டுகோளைக் கேட்டருள்வா+ என்று பதிலளித்தார்,
18.     அதற்கு அன்னா, உம் அடியாள் உம் கண்முன்னே அருள்பெறுவாளாக! என்று கூறித் தம் வழியே சென்று உணவு அருந்தினார். இதன்பின் அவர் முகம் வாடியிருக்கவலேலை,
19.     அவர்கள் காலையில் எழுந்து ஆண்டவர் திருமுன் வழிபட்டுவிட்டுத் திரும்பிச்சென்று இராமாவில் இருந்த தங்கள் இல்லம் அடைந்தனர். எல்கானா தம் மனைவி அன்னாவோடு கூடி வாந்தனர், ஆண்டவரும் அவரை நினைவு கூர்ந்தார்,
20.     உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகளைப் பெற்றெடுத்தார், நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன் என்று சொல்லி, அவர் அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டார்.
20.     எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனை¨யும் செலுத்தச் சென்றார்கள்,
22.     ஆனால், அன்னா செல்லவில்லை, அவர் தம் கணவரிடம், பையன் பால் குடி மறந்ததும் அவனை எடுத்ச செல்வேன், அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான் என்று சொன்னார்.
23.     அவர் கணவர் எல்கானா, உனக்குச் சிறந்தது எனப்படுவதைச் செய், பையன் பால் குடி மறக்கும் வரை இரு, ஆண்டவர் தம் வார்த்தையை உறுதிப்படுத்துவாராக! என்று அவரிடம் கூறினார், ஆகவே அவர் தங்கியிருந்து பால்குடி மறக்கும் வரை தம் மகனுக்குப் பாலூட்டி வந்தார்,
24.     அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக் கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார், அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான்,
25.     அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள்,
26.     பின் அவர் கூறியது: என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டிருந்த பெண் நானே.
27.     இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன், நான் ஆண்டவரிடம் வ§ண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேகட்டருளினார்,
28.     ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன், அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன், அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்,

அதிகாரம் 2.

1.     அப்பொழுது அன்னா மன்றாடிக் கூறியது: ஆண்டவரை முன்னிட்டு என் இதயம் மகிழ்கின்றது! ஆண்டவரில் என் ஆற்றல் உயர்கின்றது! என் வாய் என் எதிரிகளைப் பழிக்கின்றது! ஏனெனில் நான் நீர் அளிக்கும் மீட்பில் களிப்படைகிறேன்.
2.     ஆண்டவரைப் போன்ற தூயவர் வேறு எவரும் இலர்! உம்மையன்றி வேறு எவரும் இலர்! நம் கடவுளைப் போன்ற வேறு பாறை இல்லை,
3.     இறுமாப்புடன் இனிப்பேச வேண்டாம்! உங்கள் வாயில் வீம்பு வெளிப்பட வேண்டாம்! ஏனெனில், ஆண்டவர் அறிவின் இறைவன்! செயல்களின் அளவை எடை போடுபவர் அவரே!
4.     வலியோரின் வில்கள் உடைபடுகின்றன! தடுமாறினோர் வலிமை பெறுகின்றனர்!
5.     நிறைவுடன் வாழ்ந்தோர் கூலிக்கு உணவு பெறுகின்றனர். பசியுடன் இருந்தோர் பசி தீர்ந்தோர் ஆகியுள்ளனர்! மலடி எழுவரைப் பெற்றெடுத்துள்ளாள், பல புதல்வரைப் பெற்றவளோ தனியள் ஆகின்றாள்!
6.     ஆண்டவர் கொல்கிறார்: உயிரும் தருகின்றார்: பாதாளத்தில் தள்ளுகிறார்: உயர்த்துகின்றார்:
7.     ஆண்டவர் ஏழையாக்குகிறார்: செல்வராக்குகின்றார்: தாழ்த்துகின்றார்: மேன்மைப்படுத்துகின்றார்:
8.     புழுதியினின்று அவர் ஏழைகளை உயர்த்துகின்றார்: குப்பையினின்று வறியவரைத் தூக்கிவிடுகின்றார்: உயர்குடியினரோடு அவர்களை அமர்த்துகின்றார்! மாண்புறு அரியணையை அவர்களுக்கு உரிமையாக்குகின்றார்! உலகின் அடித்தளங்கள் ஆண்டவருக்கு உரியவை! அவற்றின் மேல் அவர் உலகை நிறுவினார்!
9.     தம்மில் பற்றுக்கொண்டோர் காலடிகளை அவர் காப்பார்! தீயோர், இருளுக்கு இரையாவார்! ஏனெனில் ஆற்றலால் எவரும் வலியவர் ஆவதில்லை!
10.     ஆண்டவரை எதிர்ப்போர் நொறுக்கப்படுவர்! அவர் அவர்களுக்கு எதிராக வானில் இடிமுழங்கச் செய்வார்! ஆண்டவர் உலகின் எல்லை வரை தீர்ப்பிடுவார்!
11.     எல்கானா இராமாவிலுள்ள தம் வீட்டிற்குச் சென்றார். சிறுவனோ குரு ஏலியின் முன்பாக ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான்.
12.     அப்போது ஏலியின் புதல்வர்கள் கீழ்த்தரமானவராக இருந்தனர். அவர்கள் ஆண்டவர்மீது அக்கறை கொள்ளவில்லை.
13.     அந்தக் குருக்களின் மக்களிடம் பின் வருமாறு நடந்து கொண்டனர். யாராவது பலி செலுத்தினால், இறைச்சி வேகும்போதே கையில் மூன்று பல் கொக்கியுடன் குருவின் பணியாள் வருவாள்.
14.     அவன் அதைக் கொப்பறையிலோ, அண்டாவிலோ, சட்டியிலோ, பானையிலோ விடுவாள். கொக்கியில் அகப்படுவதை எல்லாம் குருவுக்கென்று எடுத்துக்கொள்வான். சீலோவுக்கு வந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
15.     அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்தபவரிடம் வந்து, குருவுக்குச் கமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார் என்பான்.
16.     யாராவது அவனிடம் தற்போது கொழுப்பு எரியட்டும்: பிறகு நீ விரும்பியதை எடுத்துக்கொள் என்று சொன்னால் அதற்கு அவன், இல்லை. நீர் இப்பொழுதே கொடும், இல்லையேல், நான் வலிந்து எடுத்துக் கொள்வேன் என்று சொல்வான்.
17.     ஆகவே அந்த இளைஞரின் பாவம் ஆண்டவரின் திருமுன் மிகப் பெரியதாகவே இருந்தது. ஏனெனில் அவர்கள் ஆண்டவருக்குச் செலுத்தப்பட்ட படையல்களைத் துச்சமாகக் கருதினார்கள்.
18.     ஆண்டவர்முன் ஊழியம் செய்த சிறுவன் சாமுவேல் நார்ப்பட்டாலான ஏபோது அணிந்திருந்தான்,
19.     சாமுவேலின் தாய் அவனுக்காக ஆண்டுதோறும் ஒரு சிற்றாடை தைத்து தம் கணவரோடு ஆண்டுப்பலி செலுத்தச் சென்றபோது அவனிடம் கொடுப்பார்.
20.     எல்கானாவுக்கும் அவர் மனைவிக்கும் ஏலி ஆசி வழங்கி எல்கானாவை நோக்கி, ஆண்டவர் இப் பெண் வழியாக, இவள் அவருக்கு நேர்ந்தளித்தவனுக்குப் பதிலாக, உனக்கு வழிமரபை அருள்வாராக என்று கூறுவார். பிறகு அவர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்வர்.
20.     ஆண்டவர் அன்னாவைக் கடைக்கண் நோக்கினார். அவர் கருவுற்று மூன்று ஆண்களையும் இரண்டு பெண்களையும் பெற்றெடுத்தார். சிறுவன் சாமுவேலோ ஆண்டவர் திருமுன் வளரலானான்.
22.     ஏலி முதிர்ந்த வயதடைந்தார். தம் பிள்ளைகள் இஸ்லயேருக்கு எதிராகச் செய்த அனைத்தையும், சந்திப்புக் கூடார வாயிலில் ஊழியம் செய்து வந்த பெண்களோடு தகாத உறவு கொண்டிருந்ததையும் கேட்டறிந்தார்,
23.     அவர் அவர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? இவ்வனைத்தும் மக்களிடமிருந்தும் உங்கள் தீய நடவடிக்கைகளைப்பற்றிக் கேள்விப்படுகிறேனே!
24.     வேண்டாம் பிள்ளைகளே! ஆண்டவரின் மக்களிடையே பரவி இருப்பதாக நான் கேள்விப்படும் இச்செய்தி நல்லதல்ல.
25.     ஒருவர் மனிதருக்கு எதிராகப் பாவம் செய்தால் வேறெவராவது கடவுளிடம் அவருக்காகப் பரிந்து பேசலாம். ஆனால் ஒருவர் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தால் அவருக்காகப் பரிந்து பேசுவோர் யார்? இருப்பினும் அவர்கள் தங்கள் தந்தையின் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட வேண்டுமென்பது ஆண்டவரின் திருவுளமாக இருந்தது.
26.     சிறுவன் சாமுவேல் வளர்ந்து ஆண்டவருக்கும் மனிதருக்கும் உகந்தவனாய் இருந்து வந்தான்.
27.     அப்ஆபாது இறையடியார் ஒருவர் ஏலியிடம் வந்து கூறியது: ஆண்டவர், இவ்வாறு கூறுகிறார்: எகிப்து நாட்டில் பார்வோன் வீட்டாருக்கு உன் மூதாதை வீட்டார் அடிமைகளாக இருந்தபோது அவர்களுக்கு நான் என்னையே வெளிப்படுத்தினேன்.
28.     என் பீடத்தில் திருப்பணி புரியவும், தூபம் காட்டவும், என்முன் ஏபோது அணியவும், அவர்களை நான் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களினின்றும் தேர்ந்தெடுத்தேன். இஸ்ரயேல் மக்கள் எனக்குச் செலுத்திய நெருப்புப் பலிகள் அனைத்தையும் நான் உன் மூதாதை வீட்டாருக்கே கொடுத்தேன்.
29.     பின் நானே கட்டளையிட்ட பலிகளையும், படையல்களையும் துச்சமாய் மதிப்பது ஏன்? உன் புதல்வர்களை எனக்கு மேலாக உயர்த்தி, என் மக்கள் இஸ்ரயேல் செலுத்தும் ஒவ்வொரு படையலிலும் சிறந்தவற்றை எடுத்துக்கொண்டு உங்களையே கொழுக்க வைப்பதேன்?
30.     இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது: உன் வீடும் உன் மூதாதை வீடும் என்முன்பாக என்றென்றும் ஊழியம் புரிவீர் என வாக்களித்திருந்தேன். ஆனால் தற்போது ஆண்டவர் கூறுவது: இவ்வாக்கு என்னைவிட்டு அகல்வதாக! ஏனெனில், என்னை மதிப்போரை நான் மதிப்பேன் : என்னை இகழ்வோர் இகழ்ச்சி அடைவர்.
31.     இதோ! நாள்கள் நெருங்குகின்றன. அப்பொழுது, உன் ஆற்றலையும் உன் மூதாதை வீட்டாரின் ஆற்றலையும் நான் அழிப்பேன். உன் வீட்டில் ஒரு முதியவர்கூட இருக்கமாட்டார்.
32.     அப்போது ஏனைய இஸ்ரயேலருக்கு அருளப்படும் அனைத்து நலனையும் நீ பொறாமையோடு மனம் வெதும்பிப் பார்ப்பாய். உனது வீட்டிலோ என்றென்றும் ஒரு முதியவர் கூட இருக்கமாட்டார்.
33.     என் பீடப்பணியினின்று விலக்கி விடாமல் நான் வைத்துக் கொள்ளவிருக்கும் உங்களுள் ஒருவன் கண்கள் மங்கி, மனம் தளர்வடையுமட்டும் இருப்பான். ஆனால் உன் வீட்டில் வளரும் தலைமுறையினர் இளம் வயதில் சாவர்.
34.     உன் இரு புதல்வராக ஒப்னிக்கும் பினகாசுக்கும் ஏற்பட விருப்பது உனக்கு ஓர் அடையாளமாக இருக்கட்டும். ஒரே நாளில் அவர்கள் இருவரும் மடிவர்.
35.     என் திட்டத்திற்கும் விருப்பத்திற்கும் ஏற்பச் செயல்படும் நம்பிக்கைக்குரிய ஒரு குருவை நான் எழுப்புவேன். அவனுக்கு ஒரு நிலையான வீட்டைக் கட்டி எழுப்புவேன். அவன் எந்நாளும் என்னிடம் திருப்பொழிவு பெறுபவனுக்குப் பணி செய்வான்.
36.     எஞ்சியுள்ள உன் வீட்டார் அனைவரும் ஒரு வெள்ளிக் காசுக்கோ ஓர் அப்பத்துக்கோ அவனிடம் வந்து கையேந்தி நின்று தயைகூர்ந்து எனக்கு ஓர் அப்பம் கிடைக்குமாறு குருத்துவ ஊழியத்தில் என்னைச் சேர்த்தருளும் என்பார்கள்.

அதிகாரம் 3.

1.     சிறுவன் சாமுவேல் ஏலியின் மேற்பார்வையில் ஆண்டவருக்கு ஊழியம் செய்துவந்தான். அந்நாள்களில் ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்தது. காட்சியும் அவ்வளவாக இல்லை.
2.     அப்போது ஒரு நாள் ஏலி தம் உறைவிடத்தில் படுத்திருந்தார். கண் பார்வை மங்கிவிட்டதால் அவளால் பார்க்க முடியவில்லை.
3.     கடவுளின் விளக்கு இன்னும் அணையவில்லை. கடவுளின் பேழை வைக்கப்பட்டிருந்த ஆண்டவரின் இல்லத்தில் சாமுவேல் படுத்திருந்தார்.
4.     அப்போது ஆண்டவர், சாமுவேல் என்று அழைத்தார். அதற்கு அவன், இதோ! அடியேன் என்று சொல்லி,
5.     ஏலியிடம் ஓடி, இதோ! அடியேன் என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர், நான் அழைக்கவில்லை. திரும்பிச் சென்று படுத்துக்கொள் என்றார். அவனும் சென்றுபடுத்துக் கொண்டான்.
6.     ஆண்டவர் மீண்டும் சாமுவோல் என்று அழைக்க, அவன் ஏலியிடம் சென்று, இதோ அடியேன். என்னை அழைத்தீர்களா? என்று கேட்டான். அவரோ, நான் அழைக்கவில்லை மகனே! சென்று படுத்துக்கொள் என்றார்.
7.     சாமுவேல் ஆண்டவரை இன்னும் அறியவில்லை. அவனுக்கு ஆண்டவரின் வார்த்தை இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.
8.     மூன்றாம் முறையாக ஆண்டவர் சாமுவேல் என்று அழைத்தார். அவன் எழுந்து ஏலியிடம் சென்று இதோ அடியேன். என்ன¨ அழைத்தீர்களா? என்று கேட்டான். அப்பொழுது சிறுவனை ஆண்டவர்தாம் அழைத்தார் என்று ஏலி தெரிந்துகொண்டாள்.
9.     பின்பு ஏலி சாமுவேலை நோக்கி சென்று படுத்துக்கொள். உன்னை அவர் மீண்டும் அழைத்தால் அதற்கு நீ ஆண்டவரே பேசும் உம் அடியேன் கேட்கிறேன் என்று பதில் சொல் என்றார். சாமுவேலும் தம் இடத்திற்குச் சென்று படுத்துக் கொண்டான்.
10.     அப்போது ஆண்டவர் வந்து நின்று, சாமுவேல் சாமுவேல் என்று முன்பு போல் அழைத்தார். அதற்கு சாமுவேல், பேசும், உம் அடியேன் கேட்கிறேன் என்று மறு மொழி கூறினான்.
11.     ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: இதோ கேட்பார் அனைவரின் இரு காதுகளும் அதிர்ச்சியடையக்கூடிய ஒரு செயலை இஸ்ரயேலில் செய்யப்போகிறேன்.
12.     அந்நாளில் ஏலியிடம் நான் அவன் வீட்டுக்கு எதிராக பேசியது அனைத்தையும் தொடக்கத்திலிருருந்து முடிவுவரை நிறைவேற்றுவேன்.
13.     ஏனெனில் அவன் தன் புதல்வர்கள் கீழ்த்தரமாக நடந்து கொண்டதை அறிந்து கொண்டும் தடுக்காத குற்றத்திற்காக அவனது வீட்டிற்கு நீங்காத தண்டனைத் தீர்ப்பு வழங்குவேன் என்று அறிவித்தேன்.
14.     ஆகவே எலி வீட்டின் குற்றத்துக்கு பலியினாலோ படையல்களினாலோ என்றென்றும் கழுவாய் செய்யப்பட முடியாது என்று ஏலி வீட்டுக்கு ஆணையிட்டுக் கூறியுள்ளேன்.
15.     சாமுவேல் காலை வரை படும்மிருத்டதான். பிறகு ஆண்டவரது இல்லத்தின் கதவுகளைத் திறந்து வைத்தான். தான் கண்ட காட்சியை ஏலியிடம் சொல்ல அங்சினான்.
16.     பிறகு ஏலி சாமுவேல் என் மகனே!, என்று கூப்பிட, சாமுவேல். இதோ அடியேன் என்று பதில் சொன்னான்.
17.     அவர் அவனை நோக்கி உனக்கு அவர் சொன்ன வார்த்தை என்ன? தயவு செய்து என்னிடம் மறைக்காதே. அவர் உன்னிடம் பேசியதிலிருந்து நீ என்னிடம் ஏதாவது மறைத்தால், கடவுள் உனக்கு தகுந்தவாறும் அதற்கு மேலும் செய்வார் என்றார்.
18.     சாமுவேல் அவருக்கு எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அவரிடமிருந்து எதையும் மறைக்கவி¨ல்லை. அதற்கு அவர், அவர் ஆண்டவர் தான்! அவரது பார்வையில் எது நல்லதோ அதை அவர் செய்யட்டும் என்றார்.
19.     சாமுவேல் வளர்ந்தான்: ஆண்டவர் அவனோடு இருந்தார்: சாமுவேலது வார்த்தை எதையும் அவர் தரையில் விழவிடவில்லை.
20.     சாமுவேல் ஆண்டவரின் இறைவாக்கினராக நியமிக்கப்பட்டு விட்டார் என்று தாண் முதல் பெயேர்செபா வரையிலும் அனைத்தும் இஸ்ரயேலரும் அறிந்து கொண்டார்.
20.     ஆண்டவர் மீண்டும் சீலோவில் தோன்றினார். அங்கேதான் சாமுவேலுக்கு ஆண்டவர் தம் வார்த்தையை வெளிப்படுத்தினார்.

அதிகாரம் 4.

1.     அதைச் சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் எடுத்துரைத்தார். இஸ்ரயேலர் பெலிஸ்தியருக்கு எதிராகப் போர்த்தொடுத்து, எபனேசரில் பாளையம் இறங்கினார்.
2.     பெலிஸ்தியர் இஸ்ரேயலருக்கு எதிராக அணிவகுத்துச் செல்ல போர் மூண்டது. பெலிஸ்தியர் இஸ்ரயேலரை முறியடித்து அவர்களுக்குள் நாலாயிரம் பேரைப் போர்களத்தில் வெட்டி வீழ்த்தினர்.
3.     வீரர்கள் பாளையிற்குத் திரும்பிய போது, இஸ்ரயேலின் பெரியார் கூறியது: இன்று பெலிஸ்தியரிடம் நம்மை ஆண்டவர் தோல்வியுறச் செய்தது ஏன்? ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையை சீலோவினின்று நம்மிடையே கொண்டு வருவோ¡ம். அது நம்மிடையே வந்தால், நம் எதிரிகள்கையினின்று நம்மை காக்கும்.
4.     ஆகவே வீரர்கள் சீலோவுக்கு ஆள்களை அனுப்பி கெரும்புகளின் மீது வீற்றிருக்கும் படைகளின் ஆண்டவரது உடன்படிக்கைப் பேழையை அங்கிருந்து கொண்டு வரச் செய்தா+ ஏலியின் இரு புதல்வர்களான ஒப்புனியும் பினகாசும் கடவுளின் உடன்படிக்கைப் பேழையோடு இருந்தனர்.
5.     ஆண்டவரது உடன்படிக்கைப் பேழை பாழையத்திற்குள் வந்ததும், இஸ்ரயேல் அனைவரும் நிலமே அதிரும் அளவிற்குப் பெரும் ஆரவாரம் செய்தனர்.
6.     இந்த ஆரவாரத்தை கேட்டதும் பெலிஸ்தியர், எபிரேயரின் பாளையத்தில் இப்பெரும் ஆரவாரமும் கூச்சலும் ஏன்? என்று வினாவினார். ஆண்டவரது உடன்படிக்கை பேழை பாளயத்தினுள் வந்து விட்டது என்று அறிந்து கொண்டார்.
7.     அப்போது பெலிஸ்தியர் பேரச்சம் கொண்டு: கடவுள் பாளையத்திற்குள் வந்துவிட்டார். நமக்கு ஜயோ கேடு! இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை!
8.     நமக்கு ஜயோ கேடு! இத்துணை வலிமைமிகு கடவுளிடமிருந்து நம்மை காப்பவர் யார்? இக்கடவுள்தான் எகிப்தியரைப் பாலை நிலத்தில் பல்வேறு வதைகளால் துன்புறுத்தியவர்!
9.     பெலிஸ்தியரே! துணிவு கொள்ளுங்கள்! ஆண்மையோடு இருங்கள்! எபிரேயர் உங்களுக்கு அடிமைகளாக இருந்தும் போல, நீங்களும் எபிரேயேருக்கு அடிமைகளாக ஆகாதபடிக்கு ஆண்மையோடு போரிடுங்கள்! என்றார்.
10.     பெலிஸ்தியர் மீண்டும் போர் தொடுத்தார். இஸ்ரயேலர் தோல்வியுற, அவர்களுள் ஒவ்வொருவனும் தன் கூடாரத்திற்கு தப்பியோடினான். அன்று மாபெரும் உயிர் சேதம் ஏற்பட்டது.இஸ்ரயேலருள் முப்பதாயிரம் காலாட்படையினர் மாண்டனர்.
11.     கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது. ஏலியின் இரு புதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர்.
12.     போர்களத்தினின்று பென்யமின் குலத்தினன் ஒருவன் ஓடிச் சென்று அன்றே சீலோவை அடைந்தான். அவன் ஆடைகள் கிழிந்திருந்தன: தலையோ புழுதிபடிந்திருந்தன.
13.     அவன் வந்தபோது ஏலி வழியோரம் ஓர் இருக்கையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் கடவுளின் பேழையைப் பற்றி அவர் உள்ளம் கலக்கமுற்றிருந்தது. அம் மனிதன் நகரினுள் வந்து செய்தியை அறிவித்தபோது, நகர் முழுவதும் அழுதது,
14.     அழுகையின் குரல் கேட்ட ஏலி, ஏன் இந்தக் கூக்குரல்? என்று வினவ அம்மனிதன் விரைந்து சென்று ஏலிக்கு செய்தியைத் தெரிவித்தான்.
15.     அப்போது ஏலியின் வயது தொண்ணூற்று எட்டு. கண் பார்வை மங்கி இருந்ததனால் அவரால் பார்க்க முடியவில்லை.
16.     அம்மனிதன் ஏலியை நோக்கி நான் போர்களத்திலிருந்து வருகிறேன், இன்று தான் அங்கிருந்து ஓடி வருகிறேன் என்று சொல்ல, அதற்கு ஏலி, மகனே! செய்தி என்ன? என்று வினவினார்.
17.     அதற்கு அத்தூதன், இஸ்ரயேலர் பெலிஸ்தியர்முன் புற முதுக்கிட்டு ஓடினர். மேலும் மக்களிடையே பெரும் உயிர்சேதம் ஏற்பட்.டுவிட்டது. உம் இருபுதல்வர்கள் ஒப்பினியும் பினகாசும் மாண்டனர். கடவுளின் பேழையும் கைப்பற்றபட்டுவிட்டது என்று சொன்னான்.
18.     கடவுளின் பேழை பற்றி அவன் சொன்னதும் அவர் தம் இருக்கையின்று பின்புறம் கதவருகே விழுந்து, கழுத்து முறிந்து இருந்தார். ஏனெனில், அவர் வயது முதிர்ந்து உடல் பெருத்தவராய் இருந்தார். அவர் இஸ்ரயேலுக்கு நாற்பது ஆண்டுகள் நீதித் தலைவராய் இருந்தார்.
19.     அப்பொழுது பினகாசின் மனைவியான அவருடைய மருமகள் நிறைகர்ப்பினியாய் இருந்தாள். கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்து விட்டதையும் கேட்டு அவள் பேறுகால வேதனைக்குள்ளாகி, குனிந்து மகவைப் பெற்றெடுத்தாள்.
20.     அவள் சாகும் தருவாயில் இருந்தபோது அவள் அருகில் இருந்த தாதியர் அவளை நோக்கி, அஞ்சாதே, நீ ஒரு மகனை பெற்றெடுத்துள்ளாய் என்று கூறினர். அவளோ அதற்கு மறுமொழி கூறவில்லை: அதைப் பொருட்படுத்தவுமில்லை.
20.     கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டதையும் தன் மாமனாரும் கணவரும் இறந்ததையும் முன்னிட்டு இஸ்ரயேலினின்று மாட்சி அகன்று விட்டது என்னும் பொருள்பட அவள் தன் குழந்தைக்கு இக்க போது என்று பெயரிட்டாள்.
22.     அவள் கூறியது: இஸ்ரயேலினின்று மாட்சி அகன்றுவிட்டது, ஏனெனில் கடவுளின் பேழை கைப்பற்றப்பட்டது என்றாள்.

அதிகாரம் 5.

1.     பெலிஸ்தியர் கடவுளின் பேழையைக் கைப்பற்றி, அதை எபனேசரிலிருந்து அஸ்தோதிற்குக் கொண்டு சென்றனர்.
2.     பெலிஸ்தியர் கடவுளின் பேழையைத் தாகோன் கோவிலுக்குத் தூக்கிக் கொண்டு வந்து, தாகோன் சிலை அருகில் வைத்தனர்.
3.     அஸ்தோதின் மக்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்தபோது, தாகோன் சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்த¨த்க் கண்டனர். அவர்கள் அதை எடுத்து அதன் இடத்தில் மீண்டும் நிறுத்தினார்கள்.
4.     அவர்கள் மறுநாள் அதிகாலையில் விழித்தெழுந்த போது தாகோன், சிலை ஆண்டவரின் பேழைக்கு முன் முகம் குப்புறத் தரையில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். ஆனால் அதன் தலையும், இருகைகளும் துண்டிக்கப்பட்டு, வாயிற்படியில் கிடந்தன. அதன் உடல் பகுதி மட்டும் எஞ்சியிருந்தது.
5.     ஆகவே தான் தாகோனின் கோவிலுக்குள் செல்லும் அனைவரும் அஸ்தோதிலிருக்கும். தாகோனின் வாயிற்படியை இந்நாள்வரை மிதிப்பதில்லை.
6.     அஸ்தோதின் மக்களை அழிக்கும் படியாக ஆண்டவரின் கை அவர்களை வன்மையாகத் தாக்கியது. அஸ்தோது வாழ் மக்களையும் அதன் எல்லைக்கு உட்பட்டவர்களையும் அவர் மூலக் கட்டிகளல் வாட்டி வைத்தனர்.
7.     அஸ்தோதின் மக்கள் இவ்வாறு நிகழ்ந்ததைக் கண்டபோது, இஸ்ரயேலின் கடவுளது பேழை நம்மிடையே இருக்கலாகாது. ஏனெனில் அவரது கை நம்மையும் நம் தெய்வம் தாகோனையும் வன்மையாகத் தாக்கியுள்ளது என்று பேசிக் கொண்டனர்.
8.     ஆகவே அவர்கள் ஆளனுப்பி பெலிஸ்தியத் தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை நாம் என்ன செய்வோம்? என்று கேட்டனர். அவர்கள், இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் காத்து நகருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுரைத்தனர். அவ்வாறே இஸ்ரயேலரின் கடவுளது பேழையை எடுத்துச் சென்றனர்.
9.     அதை அங்கு எடுத்துச் சென்ற பின், ஆண்டவரின் கை அந்நகரை வன்மையாகத் தாக்கி, மாபெரும் அழிவை ஏற்படுத்தியது. அவர் அந்நகர் மக்களை, சிறியோர் முதல் பெரியோர் வரை, மூலக் கட்டிகளால் வதைத்தார்.
10.     அவர்கள் கடவுளின் பேழையை எக்ரோனுக்கு அனுப்பினார்கள். கடவுளின் பேழை எக்ரோனுக்கு வரவே, எக்ரோனியர். எங்களையும் எங்கள் மக்களையும் அழிக்கவே இஸ்ரயேலரின் கடவுளது பேழையைக் கொண்டு வந்து விட்டார்கள் என்று கத்தினார்க்ள.
11.     எனவே அவர்கள் ஆள்அனுப்பி பெலிஸ்திய தலைவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களிடம், இஸ்ரயேலின் கடலுளது பேழையைத் திருப்பி அதன் இடத்திற்கே அனுப்பி விடுங்கள். எங்களையும் எங்கள் மக்களையும் அவர் கொல்லா திருக்கட்டும் என்று கேட்டுக் கொண்டனர். கடவுளின் கை அவர்களை தாக்கியதால், அந்நகர் எங்கும் மக்கள் இறந்தார்கள்.
12.     இறவாமல் இருந்த மக்கள் மூலக் கட்டிகளால் வதைக்கப்பட்டவர்கள். அந்நகரின் கூக்குரல்கள் வான் மட்டும் எழும்பியது.

அதிகாரம் 6.

1.     ஆண்டவரின் பேழை பெலிஸ்தியரின் நாட்டில் ஏழு மாதம் இருந்தது.
2.     பெலிஸ்தியர் அர்ச்சகர்களையும் குறி சொல்கிறவர்களையும் அழைத்து, ஆண்டவரின் பேழையை நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அதை எவ்வாறு அதன் இடத்திற்கு நாங்கள் அனுப்ப வேண்டுமென்று தெரிவியுங்கள் எனக் கேட்டனர்.
3.     அவர்கள் கூறியது: நீங்கள் இஸ்ரயேலரின் கடவுளது பேழையை அனுப்பினால் அதை வெறுமையாக அனுப்பலாகாது: குற்றநீக்கப்பலி கட்டாயமாக அவருக்குச் செலுத்தவேண்டும். அப்போது நீங்கள் குணமாக்கப் படுவீர்கள். அவரது கை உங்களைவிட்டு விலகாதிருறந்ததன் காரணத்தையும் அறிந்து கொள்வீர்கள்.
4.     அதற்கு அவர்கள், நாங்கள் அவருக்குச் செலுத்த வேண்டய குற்ற நீக்க பலி யாது? என்று கேட்க, அவர்கள் கூறியது: பெலிஸ்தியத் தலைவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஜந்து பொன் மூலக் கட்டிகளின் உருவங்களும் ஜந்து பொன் சுண்டெலிகளும் மட்டுமே. ஏனெனில் உங்கள் அனைவர் மீதும் உங்கள் தலைவர்கள் மீதும் ஒரே வாதைதான் ஏற்பட்டது.
5.     ஆகவே உங்கள் மூலக் கட்டிகளின் உருவங்களையும் நிலத்தைப் பாழ்படுத்தும் சுண்டெலிகளின் உருவங்களையும் செய்து இஸ்ரயேலரின் கடவுளைப் புகழுங்கள். அப்போது ஒருவேளை உங்கிளடமிருந்தும் உங்கள் தெய்வங்களிடமிருந்தும் நாட்டினின்றும் அவரது கை விலக்கும்.
6.     எகிப்தியரும் பார்வோனும் தங்கள் அதயங்களைக் கடிகப்படுத்தியது போல நீங்க்ள ஏன் உங்கள் இதயங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்? அவர்ளைத் துன்புறுத் அவர்களுத் இஸ்லயேலரைச் சொல்லுமாறு விட்டுவிட்னரே?
7.     இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டியைச் செய்யுங்கள். இதுவரை நுகம் பூட்டாத இரு கறவைப் பகக்¨ள் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டுங்கள். அவற்றின் கன்றுக்குட்டிகளை விலகிக்விட்டுச் செல்லுங்கள்.
8.     ஆண்டவரின் பேழையை எடுத்து அதை வண்டியின் மீது வைத்து குற்ற நீக்கப்பலி¡க நீங்கள் செலுத்தும் பொன் உருவங்களை அருகே ஒரு பெட்டியில் வையுங்கள். பிறகு வண்டியை அனுப்பிவிடுங்கள்: அது தானே செல்லட்டும்.
9.     பின் கவனியுங்கள்: அது தன் நாட்டு எல்லைக்குச் செல்லும் வழியாக பெத்சமேசுக்குச் சென்றால், இப்பெரிய தீங்கை நமக்கு இழைத்தவர் அவரே என்று அறியலாம். இல்லையேல், அவரது கை நம்மைத் தொடவில்லை, மாறாக அது நமக்குச் தற்செயலாக நாம் அறியலாம்.
10.     அவர்களும் அவ்வாறே செய்தனர். இரு கறவைப் பசுக்களைக் கொண்டு வந்து பூட்டினர். அவற்றின் கன்றுகளைத் தொழுவத்தில் அடைத்து வைத்தனர்.
11.     ஆண்டவரின் பேழையையும் பொன் சுண்டெகளும், மூலக்கட்டிகளின் உருவங்களுத் வைத்தி நத பெட்டியையும் அவ்வண்டியில் வைத்தனர்.
12.     பசுக்கள் பெத்சமேசுக்குச் செல்லும் பெருஞ்சாலையில் இடமோ வலிமோ விலகாமல் நேரே கத்திக் கொண்டே சென்றன. பெலிஸ்தியத் தலைவர்கள் அவற்றின் பின் பெத்சமேசு எல்லை வரை சென்றனர்.
13.     அப்போது பெத்சமேசு வாழ் மக்கள் பள்ளத்தாக்கில் கோதுமை அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கண்களை உயர்த்திய போது பேழையைக் கண்டு மகிழ்ச்சியுற்றனர்.
14.     பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலுக்குள் வண்டி வந்து நின்றது. அங்கே ஒரு பாறை இருந்தது. அவர்கள் வண்டியின் மரத்தை பிழந்து பசுக்களை ஆண்டவருக்கு எரி பலி செலுத்தினர்.
15.     லேவியர் ஆண்டவரின் பேழையையும் அதன் அருகில் இருந்த பொன் உருவங்களைக் கொண்டிருந்த பெட்டியையும் இறக்கி, பாறையின் மீது வைத்தனர். பெத்சமேசின் மக்கள் அன்றையதினம் எரி பலிகளையும் வேறு பலிகளையும் ஆண்டவருக்குச் செலுத்தினர்.
16.     பெலிஸ்தியரின் ஜந்து தலைவர்களும் இதைக் கண்டபின் அன்றே எக்ரோககுத் திருத்பினர்.
17.     பெலிஸ்தியர் குற்ற நீக்க பலியாக ஆண்டவருக்குச் செலுத்திய மூலக் கட்டிகளின் பொன் உருவங்கள் இவையே: அஸ்தோதுக்கு ஒன்று, காசாவுக்கு ஒன்று, அஸ்லோனுக்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று, எக்ரோனுக்கு ஒன்று.
18.     பொன் சுண்டெலிகள், அரண் சூழ் நகர்கள் தொடங்கி, நாட்டுப்புறச் சிற்றூர்கள் வரை ஜந்து தலைவர்க ககுச் சொந்தமான அனைத்து பெலிஸ்திய நகர்களின் எண்ணிக்கைக்குச் சரியாக இருந்தன. ஆண்டவரின் பேழையை வைக்கப்பட்ட அந்தப் பாறை இந்நாள் வரை பெத்சமேசைக் சார்ந்த யோசுவாவின் வயலில் உள்ளது.
19.     பெத்சமேசு வாழ் மக்களை ஆண்டவர் சாகடித்தார். ஏனெனில் அவர்கள் ஆண்டவரின் பேழைக்குள் உற்று நோக்கினர். மக்களுள் எழுபது பேரை அவர்வீழ்த்தினர். மக்களிடையே இப்பெரும் அழிவை ஏற்படுபடுத்தியதற்காக மக்கள் புலமபினார்கள்.
20.     பெத்சமேசு வாழ் மக்கள் இநதத் தூய கடவுளாகிய அண்டவர் திருமுன் நிற்கத் தகுந்தவன் யார்? நம்மிடமிருந்து அவர் யாரிடம் செல்லப் போகிறார்? என்றுக் கேட்டுக் கொண்டனர்.
20.     ஆகவே, கிரியத்து எயாரிம் வாழ் மக்களுக்கு ஆள்களை அனுப்பி, ஆண்டவரின் பேழையைப் பெலிஸ்தியர் திருப்பி அனுப்பிவிட்டார்கள். நீங்கள் வந்து அதை உங்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.

அதிகாரம் 7.

1.     கிரியத்து எயாரிமின் ஆள்கள் வந்து ஆண்டவரின் பேழையைத் தூக்கிச் சென்று, குன்றின் மீதிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். ஆண்டவா§ன் பேழையை காக்கும் படி அவன் மகன் எல்யாசரைத் திரு நிலைப்படுத்தினர்.
2.     பேழை கிரியத்து எயாரில் பலநாள்கள் தங்கியது: இருபது ஆண்டுகள் ஆயின. இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் ஆண்டவரை நினைத்துப் புலம்பிக்கொண்டிருந்தனர்.
3.     இஸ்ரயேல் வீட்டார் அனைவருக்கும் சாமுவேல் கூறியது: நீங்கள் முழுஉள்ளத்தோடு .ஆண்டவரிடம் திரும்பினால் வேற்றுத் தெய்வங்களையும் அஸ்தரோதையும் உங்களிடமிருந்து அகற்றி விடுங்கள். உங்கள் உள்ளங்களை ஆண்டவருக்காத் தயார் செய்யுங்கள். அவருக்கு மட்டுமே ஊழியம் செய்யுங்கள். பெலிஸ்தியர் கையிலினின்று அவர் உங்களை விடுவிப்பார்.
4.     இஸ்ரயேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோதையும் விலக்கிவிட்டு ஆண்டவருக்கு மட்டுமே ஊழியம் செய்தார்கள்.
5.     மேலும் சாமுவேல், இஸ்ரயேலர் அனைவரையும் மிஸ்பாவில் ஒன்று கூட்டுங்கள். உங்களுக்காக நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன் என்றார்.
6.     ஆகவே அவர்க்ள மிஸ்பாவில் ஒன்றுகூடி தண்ணீர் மொண்டு ஆண்டவர் திருமுன் ஊற்றி, அன்று நோன்பிருந்து ஆண்டவருக்கு எதிராக நாங்கள் பாவம் செய்துவிட்டோம் என்று அறிக்கையிட்டார். சாமுவேல் மிஸ்பாவில் தங்கி இஸ்ரயேல் மக்களுக்கு தலைவராய் இருந்தார்.
7.     இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவில் ஒன்று கூடியதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டடார். அப்போது பெலிஸ்திய தலைவர்கள் இஸ்ரயே
ககு புறப்பட்டார்கள். இதைக் கேட்ட இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரை முன்னிட்டு அச்சமுற்றார்கள்.
8.     இஸ்ரயேல் மக்கள் சாமுவேலிடம் கூறியது: நம் கடவுளாகிய ஆண்டவர் பெலிஸ்தியர் கையினின்று நம்மை காக்கும் படி அவரிடம் விடாமல் மன்றாடம் .
9.     ஆகவே பால் குடிக்கும் ஓர் ஆட்டுக் குட்டியை சாமுவேல் பிடித்து அதை ஆண்டவ ககு ஒரு முழு எரி பலியாக செலுத்தி, இஸ்ரயேலுக்காக அவரிடம் மன்றாடினார். ஆண்டவரும் அவருடைய மன்றாட்டை கேட்டார்.
10.     சாமுவேல் இவ்வாறு எரி பலி செலுத்திக் கொண்டிருந்த போது, பெலிஸ்தியர் இஸ்ரயேலுடன் போரிட நெருங்கினார். அன்று ஆண்டவர் பெலிஸ்தியர் மீது பேரிடி முழங்கச் செய்து அவர்களைக் கலங்கடிக்க, அவர்கள் இஸ்ரயேல் முன்பாகத் தோல்லியுற்றார்.
11.     இஸ்ரயேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டுப் பெத்கார் பள்ளத்தாக்கு வரை பெலிஸ்தியரைத் தூறத்திச் சென்று, அவர்களை வெட்டி வீழ்த்தினார்கள்.
12.     சாமுவேல் ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கு சொனாவுக்கும் நடுவில், ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்தார், என்று கூறி அதற்கு எபனேசர் என்று பெயரிட்டார்.
13.     பெலிஸ்தியர் சிறுமையுற்று அதன்பின் மீண்டும் இஸ்ரயேல் எல்லைக்குள் வரவில்லை. சாமுவேலின் வாழ் நாள் முழுவதும் ஆண்டவரின் பெலிஸ்தியருக்கு எதிராக இருந்தது.
14.     எக்ரோன் முதல் காத்துவரை இஸ்ரயேலிடமிருந்து பெலிஸ்தியர் கைப்பற்றியிருந்த நகர்கள் இஸ்ரயேலுக்கு திரும்பக் கிடைத்தன. பெலிஸ்தியர் கையினின்று இஸ்ரயேல் தங்கள் எல்லைப் பகுதியை மீட்டுக் கொண்டனர். மேலும் இஸ்லயேருக்கும் எமோரியருக்குமிடையே அமைதி நிலவிற்று.
15.     சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரயேலுக்குத் தலைவராய் இருந்தார்.
16.     அவர் ஆண்டு தோறும் சுற்றுப் பயணம் செய்து, மிஸ்பா ஆகிய இடங்களில் எல்லாம் இஸ்ரயேலுக்கு நீதி வழங்கினார்.
17.     பின்பு அவர் வீடு இருந்த இராமாவுக்குத் திரும்பி அங்கேயும் இஸ்ரயேலருக்கு நீதி வழங்கினார்: அங்கே ஆண்டவருக்கு ஒரு பலி பீடம் எழுப்பினார்.

அதிகாரம் 8.

1.     சாமுவேலுக்கு வயது முதிர்ந்த போது அவர் தம் புதல்வர்களை இஸ்ரயேலின் மீது நீதித் தலைவராக அமர்த்தினார்.
2.     அவருடைய தலைமகனின் பெயர் யோவேல்: இளையவனின் பெயர் அபியா: இவர்கள் பெயேர்செபாவில் நீதித்தலைவர்களாய் இருந்தனர்.
3.     ஆனால், அவருடைய புதல்வர்கள் அவர் தம் வழிமுறைகளில் நடவாமல், பொருளாச¨க்கு உட்பட்டு கையூட்டு வாங்கி, நீதியை வழங்கவில்லை.
4.     எனவே, இஸ்ரயேலின் பெரியோர் அனைவரும் ஒன்று கூடி சாமுவேலிடம் இராமாவுக்கு வந்தனர்.
5.     அவர்கள் அவரிடம், இதோ உனக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும் என்று கேட்டுக் கொண்டார்.
6.     எங்களுக்கு நீதி வழங்க ஊர் அரசனைத் தாரும் என்று அவர்கள் கேட்டதும் சாமுவேலுக்குத் தீயதெனப்பட்டது. சாமுவேல் ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டார்.
7.     ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: மக்கள் குரலையும், அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில், அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டார்.
8.     நான் அவர்களை எகிப்தினின்று கொண்டுவந்த நாள் முதல் இந்நாள் வரை அவர்கள் என்னைப் புறக்கணித்து வேற்றுத் தெய்வங்களுக்கு ஊழியம் அனைத்திலும் அவ்வாறே செய்தது போல் உனக்கும் செய்கிறார்கள்.
9.     இப்போது அவர்கள் குரலுக்குச் செவிகொடு. ஆனால் அவர்களைக் கண்டித்து எச்சரி. அவர்களை ஆளப் போகும் அரசனின் உரிமைகளைத் தெரியப்படுத்து .
10.     ஓர் அரசன் வேண்டுமென்று தம்மிடம் கேட்ட மக்களுக்கு சாமுவேல் ஆண்டவர் கூறிய அனைத்தையும் கூறினார்.
11.     உங்கள் மீது ஆட்சி செய்யும் உண்மைகளாவன: அவன் உங்கள் புதல்வர்ளை தன் தோரோட்டிகளாகவும் தன் குதிரை வீர்களாகவும் வைத்துக் கொள்வான். அவர்களைத் தன் தேர்களுக்கு முன் ஓடச் செய்வான் .
12.     அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும், ஜம்பதிமர் தலைவராகவும், தன் நிலத்தை உழுபவராகவும், தன் விள¨ச்சலை அறுவடை செய்வராகவும், தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான்.
13.     மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளப் தைலம் செய்கிறர்களாகவும், சமைப்பவர்களாகவும், அப்பம் சடுபவர்களாகவும், வைத்க கொள்வான்.
14.     அவன் உங்கள் வயல்களிலும், திராட்சைத் தோட்டங்களிலும், ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான்.
15.     உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும், பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் கொடுப்பான்.
16.     உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும், உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றை உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான்.
17.     உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளராய் இருப்பீர்கள்.
18.     அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீ+கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்.
19.     மக்களோ சாமுவேலின் குரலுக்கு செவி கொடுக்க மறுத்தது, இல்லை எங்களுக்குக் கட்டாயமாய் ஒர் அரசன் வேண்டும்.
20.     அனைத்து வேற்றின மக்கள் போலவே நாங்களும் இருப்போம். எங்கள் அரசன் எங்களுக்கு நீதி வழங்குவார். எங்கள் போர்களை முன்னிட்டு நடத்துவார். என்றனர்.
20.     மக்கள் கூறியவை அனைத்தையும் சாமுவேல் கேட்டு, அவற்றை ஆண்டவர் காதில் போட்டு வைத்தார்.
22.     ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது: அவர் குரலுக்கு செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும் என்றார்.

அதிகாரம் 9.

1.     பென்மியன் குலத்தில் கீசு என்ற ஆற்றல்மிகு வீரர் ஒருவர் இருந்தார். அவர் பென்மியனின் அபியாவுக்குப் பிறந்த பெர்ககோரத்தின் மகனான செரோரின் மகன் அபியேலுக்குக் பிறந்தவர்.
2.     அவருக்குச் சவுல் என்ற இளமையும் அழகும் கொண்ட ஓர் மகன் இருந்தார். இஸ்ரயேலின் புதல்வருள் அவரைவிட அழகு வாய்ந்தவராய் எவரும் இலர். மற்ற அனைவரையும் விட அவர் உயரமானவர். மற்ற அனைவரும் அவர் தோள் உயரமே இருந்தனர்.
3.     சவுலின் தந்தை கீசின் கழுதைகள் காணாமற் போயின. கீசு தம் மகன் சவுலை அழைத்து, பணியாளன் ஒருவனை உன்னோடு கூட்டிக் கொண்டு கழுதைகளைத் தேடிப்போ என்றார்.
4.     அவர் எப்ராயிம் மலைநாட்டையும் சாலிசா பகுதியையும் கடந்து சென்றார். அவற்றைக் காணவில்லை: சாலிம் நாட்டு வழியே சென்றார். அங்கும் அவை இல்லை. பென்யமின் நாட்டைக் கடந்து சென்றார். அங்கும் அவை தென்படவில்லை.
5.     பிறகு அவர்கள் சூபு நாட்டுககு வந்தபோது, சவுள் தம் பணியாளிடம், வா, நாம் திரும்பிச் செல்வோம். ஏனெனில் என் தந்தை கழுதைகளை மறந்துவிட்டு கவலைக் கொள்வார்.
6.     அதற்குப் பணியாள் இதோ, இந்நகரில் கடவுளின் அடியவர் ஒருவர் இருக்கிறார். அவர் பெருமதிப்புக்கு உரியவர். அவர் சொல்வதெல்லாம் அப்படியே நடக்கிறது. ஆகவே நாம் செல்வோம். ஒரு வேளை நாம் செல்ல வேண்டிய வழி எதுவென்று அவர் நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.
7.     சவுல் தம் பணியாளிடம் சரி செல்வோம். ஆனால் அவருக்கு நாம் என்ன கொடுப்போம்? ஏனெனில் நம் பைகளிலிருந்த அப்பம் தீர்ந்து விட்டது. கடவுளின் அன்பருக்கு அன்பளிப்புத் தர எதுவும் இல்லையே! என்ன செய்வோம்? என்றார்.
8.     பணியாள் சவுலை நோக்கி, இதோ! என்கையில் இன்னும் மூன்று கிராம் அளவுள்ள வெள்ளி இருக்கிறது. அதைக் கடவுளின் அடியாருக்குத் தருவேன். அவர் நம் வழியை நமக்கு எடுத்துரைப்பார் என்றான்.
9.     அக்காலத்தில் இஸ்ரயேலில் கடவுளின் திருவுள்ளத்தை நாடிச் செல்வோர் வாருங்கள் திருக்காட்சியாளரிடம் செல்வோம் என்பர். ஏனெனில் இன்றைய இறைவாக்கினர் அன்று திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டார்.
10.     சவுல் தம் பணியாளரிடம், நீ சொன்னது சரியே, வா செல்வோம் என்றார். அவர்கள் கடவுளின் அடியாள் இருந்த நகருக்குள் சென்றனர்.
11.     அவர்கள் நகரில் மேட்டில் ஏறிக் கொண்டிருந்தபோது இளம் பெண்கள் தண்ணீர் எடுத்து வருவதைக் கண்டு அவர்களிடம் திருக்காட்சியாளர் இங்கே இருக்கிறாரா?என்று கேட்டனர்.
12.     அதற்கு அவர்கள் ஆம், உங்களுக்கு முன்பே வந்துவிட்டார். விரைந்து செல்லுங்கள். இன்று அவர் நகருக்குள் வந்துள்ளார். இன்று தொழுகை மேட்டில் மக்களுக்காகப் பலி செலுத்தப்படுகிறது.
13.     நீங்கள் நகருக்குள் நுழையும் போது, உண்பதற்காக அவர் தொழுகைமேட்டிற்கு ஏறிச் செல்வதற்கு முன்பே அவரை நீங்கள் காண்பீர்கள். ஏனெனில் அவர் பலிக்கு சென்று ஆசி வழங்கும் வரை மக்கள் உண்ண மாட்டார்கள்: பிறகு தான் உழைக்கப்பட்டோர் உண்பர். உடனே சென்றால் இப்போதே நீங்கள் அவரைக் காணலாம் என்றனர்.
14.     அவ்வாறே அவர்கள் நகருக்குள் சென்றனர். அவர்கள் நகரின் மையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, தொழுகை மேட்டுக்கு வந்துகொண்டிருந்த சாமுவேல் அவர்களுக்கு எதிரே வந்தார்.
15.     சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பே சாமுவேல் செவியில் விழும் படிஆண்டவர் வெளிபடுத்தியது.
16.     நாளை இந்நேரம் பென்யமின் நாட்டின் ஒருவனை உன்னிடம் அனுப்புவேன். என் மக்களான இஸ்ரயேலின் தலைவனாக அவனை நீ திருப்பொழிவு செய். பெலிஸ்தியரின் கையின்று அவன் என் மக்களை விடுவிப்பான். என் மக்களான அவர்களின் கூக்குரல் என்னிடம் வந்துள்ளது.
17.     சாமுவேல் சவுலை கண்டதும்¥¥¥¥. ஆண்டவர் அவரிடம் இதோ நான் உனக்குச் சொன்ன மனிதன் இவனே என் மக்கள் மீது ஆட்சிபுரிவான் என்றார்.
18.     சவுல் வாயிலின் நடுவே சாமுவேலை நெருங்கி, திருக்காட்சியாளரின் வீடு எங்கே? தயைகூர்ந்து சொல்லும் என்று கேட்டார்.
19.     சாமுவேல் சவுலுக்கு கூறியது: நானே திருக்காட்சியாளன். எனக்கு முன்பாக தொழுகை மேட்டுக்குச் செல். இன்று என்னோடு உண்ண வேண்டும். உன் உள்ளத்தில் இருப்பது அனைத்தையும் நாளைக் காலையில் நான் உனக்கு எடுத்துரைத்து உன்னை அனுப்பிவிடுகிறேன்.
20.     மூன்று நாளுக்குமுன் காணாமற் போன கழுதைகளைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஏனெனில் அவை அகப்பட்டுவிட்டன. இஸ்ரயேலின் முழு விருப்பமும் யார் மீது? உன் மீது உன் தந்தையின் வீட்டார் அனைவர் மீதும் அன்றோ?
20.     சவுல் மறுமொழியாக கூறியது: இஸ்ரயேலில் மிகச் சிறிதான பென்யமின் குலத்தில் சார்ந்தவனன்றோ நான்? பென்யமின் குலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் என்னுடையது மிகச் சிறந்ததன்றோ! பின்பு, நீர் ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகின்றீர்?
22.     பின்னர், சாமுவேல் சவுலையும் அவருடைய பணிகளையும் உணவறைக்குக் கூட்டிவந்து, அழைக்கப்பட்டிருந்த ஏறத்தாழ முப்பது ஆள்களுள் அவர்களுக்கு முதலிடம் கொடுத்தார்.
23.     மேலும் சாமுவேல் சமையல் காரனை நோக்கி, நான் உன்னிடம் ஒரு பங்கைக் கொடுத்து, பத்திரப் படுத்தச் சொல்லியிருந்தேனே அதைக் கொண்டு வந்து வை என்றார்.
24.     சமையல்காரன் ஒரு தொடையை அதன் மேற்பாதியோடு எடுத்து வந்து சவுலுக்குமுன் வைத்தான். அப்போது சாமுவேல் இதோ! உனக்கு முன்பாக வைத்தி பபதை சாப்பிடு. நான் மக்களை விருந்துக்கு அழைத்தது முதல், இது உனக்காக எடுத்து வைக்கப்பட்டிருந்தது என்றார். அன்று சவுல் சாமுவேலுடன் உண்டார்.
25.     பிறகு அவர்கள் தொழுகை மேட்டிலிருந்து இறங்கி நகருக்கு வந்தார். சாமுவேல் சவுலுடன் மாடியில் பேசிக் கொண்டிருந்தார்.
26.     அவர்கள் வைகறையில் துயில் எழுத்தனர். சாமுவேல் மாடியில் இருந்த சவுலை அழைத்து, எழுந்திரு நான் உன்னை அனுப்பிவிடுகிறேன் என்றார். சவுல் எழுந்தார். பின் அவரும் சாமுவேலும் இருவருமாக வெளியே சென்றனர்.
27.     அவர்கள் நகரில் எல்லை வரை வந்த போது, சாமுவேல் சவுலை நோக்கி, பணியாளை நமக்கு முன் நடந்து போகச் சொல் என்றார். அவ்வாறே அவனும் முன்னே நடந்து சென்றான். அப்பொழுது சாமுவேல் சவுலிடம் நீ சற்று நில். கடவுளின் வார்த்தையை நான் உணர்த்தி வைக்க வேண்டும் என்றார்.

அதிகாரம் 10.

1.     அப்போது சாமுவேல் தைலக் குப்பியை எடுத்து, அவர் தலைமீது வார்த்து அவரை முத்தமிட்டு கூறியது: ஆண்டவர் நம் உரிமைச் சொத்துக்கு தலைவனாக இருக்கும் படி உன்னைத் திருப் பொழிவு செய்துள்ளார் அன்றோ?
2.     இன்று நீ என்னைவிட்டு செல்லும் போது பென்யமின் எல்லையாம் செல்குயில்ராகேலின் கல்லறையருகே இரு மனிதரைக் காண்பாய். அவர்கள் என்னிடம் நீங்கள் தேடிப்போன கழுதைகள் அகப்பட்டுவிட்டன: இதோ உன் தந்தை கழுதை பற்றி கவலையை விட்டு உனக்காக ஏங்கி என் மகனுக்காக என் செய்வேன்? என்று கூறிக் கொண்டிருக்கிறார் என்று சொல்வார்கள்.
3.     நீ அங்கிருந்து மேலும் கடந்து சென்று
4.     அவர்கள் உன் நலம் கேட்டு உன்னிடம் இரண்டு அப்பங்களைத் தர அவர்கள் கைகளினின்று நீயும் பெற்றுக் கொள்வாய்.
5.     அதன் பிறகு பெலிஸ்தியரின் எல்லைக் காவல் இருக்கும் கடவுளின் மலைக்குச் செல்வாய். அங்கு நகருக்குள் நுழையும் போது தொழுகை மேட்டிலிருந்து இறங்கிவரும் ஒர் அறைவாக்கினர் குழுவைச் சந்திப்பாய். அவர்களுககு முன்பாக யாழும், மேளமும், நாதசுரமும், சுரமண்டலமும் செல்லும். அவர்கள் பரவரமடைந்து பேசுவார்.
6.     பிறகு ஆண்டவரின் ஆவி உன் மேல் வலிமையோடு வரும். நீயும் அவர்களோடு பரவசமடைந்து பேசுவாய். நீயும் வேறு மனிதனாய் மாற்றப்படுவாய்.
7.     இந்த அறிகுறிகள் உனக்கு நேரிடும் போது, உன் கைக்கு வந்ததை நீ செய்து கொள். ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
8.     பிறகு நீ எனக்கு முன்பாக கில்காலுக்கு இறங்கிச் செல். எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளையும் ஒப்புக் கொடுப்பதற்காக நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வந்து நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்கும் வரை ஏழு நாள்கள் காத்திரு.
9.     சவுல் சாமுவேலை விட்டு திரும்பிய பொழுது கடவுள் அவரின் உள்ளத்தை மாற்றினார். அன்றே இந்த எல்லா அறிகுறிகளும் நிறைவேறின.
10.     அவர்கள் அந்த மலையை அடைந்த போது, இறைவாக்கினர் குழு அவரை எதிர் கொண்டது. கடவுளின் ஆவி அவரை வழிமையோடு ஆட்கொள்ள, அவர் அவர்கள் நடுவே பரவசம் அடைந்து பேசினார்.
11.     அவரை ஏற்கெனவே அறிந்தவ+கள் அவர் இறைவாக்கினறோடு பரவசமடைந்து பேசுவதைக் கண்டார்கள். மக்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, கீசின் மகனுக்கு என்ன நேரிட்டது? சவுலுக்கு இறைவாக்கினருள் ஒருவனோ? என்று கேட்டுக் கொண்டார்.
12.     அதற்கு அங்கிருந்தவள் ஒருவன், இவர்கள் தந்தை யார்? என்று கேட்டான். ஆகவே, சவுலும் இறைவாகினருள் ஒருவானோ? என்ற பழமொழி உருவாயிற்று.
13.     அவர் பரவசமடைந்து பேசி முடிந்தபின் தொழுகை மேட்டுக்கு வந்தார்.
14.     அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? என்று வினவ, அவர், நாங்கள் கழுதையை தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே சாமுவேலிடம் சென்றோம். என்ன சொன்னார்.
15.     சவுலின் சிற்றப்பன், சாமுவேல் உனக்குக் கூறியதை தயைகூர்ந்து எனக்குச் சொல் என்றார்,
16.     சவுல் தம் சிற்றப்பனிடம், கழுதைகள் அகப்பட்டனவென்று அவர் எங்களுக்கு உறுதியாகச் சொன்னார். என்றார். ஆனால் அரசு பற்றி சாமுவேல் சொன்ன செய்தியை அவருக்குச் சொல்லவில்லை.
17.     சாமுவேல் மக்களை மிஸ்பாவில் ஆண்டவர் திருமுன் அழைத்தார்.
18.     பின்னர் அவர் இஸ்ரயேல் மக்களை நோக்கிக் கூறியது: இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். நான் இஸ்ரயேல் எகிப்தினின்று கொண்டு வந்தேன் எகிப்தியர் கையினின்று உங்களைத் துன்புறுத்திய அனைத்து அரசுகளின் கைகளினின்று நான் உங்களை விடுவித்தேன்.
19.     நீங்களோ உங்கள் துன்ப துயரங்களில் உங்களுக்கு மீட்பாராக இருந்த கடவுளை புறக்கணித்து விட்டு எங்கள் மீது ஓர் அரசனை ஏற்படுத்தும் என்று அவரிடம் கேட்கிறீர்கள். ஆகவே குலங்கள் வாரியாகவும் குடும்பங்கள் வாரியாகவும் ஆண்டவர் திருமுன் வந்து நில்லுங்கள்.
20.     பிறகு ஆண்டவர் அனைத்து இஸ்ரயேல் குலங்களையும் ஒருங்கே கொண்டு வர, பென்யமின் குலத்தின் மீது சீட்டு விழுந்தது.
21.     பென்யமின் புலத்ததை அதன் குடும்பங்கள் வாரியாக ஒருங்கே கொண்டு வர, மதிரி குடும்பத்தின் மீது சீட்டு விழுந்தது. அவரைத் தேடிய போது அவரைக் காணவில்லை.
22.     ஆள் இங்கே வந்துவிட்டானா? என்று அவர்கள் ஆண்டவரை வினவ, ஆண்டவர் ஆம்! அவன் பொருட்குவியலிடையே ஒளிந்துள்ளேன் என்று கூறினார்.
23.     அவர்கள் ஓடிச் சென்று அங்கிருந்து அவரைப் பிடித்துக் கொண்டு வந்தனர். மக்கள் நடுவே நின்ற போது அவர் அனைவரிலும் உயரமாக இருந்தார். மக்கள் அவர் அனைவரும் தோளுயரமே இருந்தார்கள்.
24.     சாமுவேல் மக்கள் அனைவரையும் நோக்கி, ஆண்டவர் தேர்ந்தெடுத்ததைப் பாருங்கள். மக்கள் அவரைப்போல் வேறொருவரும். உண்டா? என்றார். அப்போது மக்கள் அனைவரும் அரசர் நீடூழி வாழ்க! என்று ஆர்பரித்தார்.
25.     சாமுவேல் அரசரின் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைத்து, அவை ஓர் ஏட்டில் எழுதி, ஆண்டவர் திருமுன் வைத்தார். பிறகு மக்கள் அனைவரையும் அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைத்தார்.
26.     சவுலும் கிபியாவிலிருந்த தம் வீட்டிற்குச் சென்றார். கடவுளால் தூண்டப்பட்ட வீரர்கள் அவரோடு சென்றார்கள்.
27.     ஆனால் தீயோர் சிலர், இவன் நம்மை எவ்வாறு மீட்க முடியும்? என்று கூறி, அவரைப் புறக்கணித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு எதுவும் தரவில்லை. அவரோ அமைதியாக இருந்தா+.

அதிகாரம் 11.

1.     அக்காலத்தில் நாகாசு என்னும் அம்மோனியன் வந்து, கிலயாதில் உள்ள யாபோசை முற்றுக்கையிட்டான். யாபோசிலிருந்து மக்கள் அனைவரும் நாகாசிடம் சென்று, எங்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளும். நாங்கள் உங்களுக்கு பணிந்திருப்போம். என்றனர்.
2.     அம்மோனியன் நாகாசு அவர்களை நோக்கி, நான் உங்களோடு செய்யும் உடன்படிக்கை: உங்களுக்குள் எவ்வொருவனின் வலக் கண்ணும் பிடுங்கிடும். இஸ்ரயேலர் அனைவரையும் அவமானத்திற்கு உள்ளாக்குவேன் என்றான்.
3.     யாபேசின் பெரியோர்அவனிடம் கூறியது: ஏழு நாள்கள் எங்களுக்கு தவணை தாரும். நாங்கள் இஸ்ரயேல் எல்லை முழுவதும் தூதர்களை அனுப்புவோம். எங்களை மீட்பர் எவரும் இல்¨யெனில் நாங்கள் உங்களிடம் சரணடைவோம்.
4.     தூதர்கள் சவுலின் ஊராகிய கிபயாவுக்கு வந்து மக்கள்செவிபடச் செய்தியை சொல்ல, மக்கள் அனைவரும் குரலெழுப்பி அழுதனர்.
5.     அப்போது சவுல் வயலினின்று மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்தார். மக்களுக்கு என்ன நேரிட்டது? அவர்கள் ஏன் அழுகிறார்கள்? என்று சவுல் கேட்டார். யாபோசின் ஆள்கள் அவரிடம் சொன்னதை சொன்னார்.
6.     இச்செய்தியை அவர் கேட்டுக் கொண்டிருந்தபோது, கடவுளின் ஆவி அவரை வலிமையுடன் ஆட்கொள்ள, அவரது சினம் கனன்றது.
7.     அவர் ஒரு சோடி மாடுகளை பிடித்து, துண்டுகளாக வெட்டி, அவற்றை தூதர்கள் வழியாக இஸ்ரயேல் எல்லை முழுவதும் அனுப்பி, சவுலின் பின்னும் சாமுவேலின் பின்னும் வராதவனின் மாடுகளுக்கு இவ்வாறு நேரிடும் என்று சொல்லியனுப்பினார். அப்போது ஆண்டவர் பற்றிய அச்சம் மக்களை ஆட் கொண்டது. அவர்கள் ஒன்றுதிரண்டு வந்தார்கள்.
8.     அவர் அவர்களை பெசேக்கில் கணக்கெடுத்தபோது இஸ்ரயேலின் மக்கள் மூன்று இலட்சம் பேரும் யூதாவினர் முப்பதாயிரம் பேரும் இருந்தனர்.
9.     வந்திருந்த தூதர்களிடம், நாளை வெயில் ஏறும்முன் உங்களுக்கு மீட்பு கிடைக்கும் என்று கிலயாதிலுள்ள யாபோசின் மக்களுக்கு தெரிவியுங்கள் என்று அறிவிக்கப்பட்டது. தூதரும் இவ்வாறே யாபோசின் மக்களிடம் சொல்ல, அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்.
10.     ஆகவே யாபோசின் ஆட்கள் நாளை நாங்கள் உம்மிடம் சரணடைவோம். உம் விருப்பப்படியே எங்களுக்குச் செய்யும் என்றனர்.
11.     மறுநாள் சவுல் மக்களை மூன்று படையாள்களாக பிரித்தார். கீழ்வானம் வெளுத்தபோது அவர்கள் பாளையத்தினுள் வந்து, வெயில் ஏறுவதற்குள் அம்மோனியரை வெட்டி வீழ்த்தினர். இருவர் கூட இணையாதபடி எஞ்சி இருந்தவர்கள் சிதறடிக்கப்கபட்டார்கள்.
12.     பிறகு மக்கள் சாமுவேலை நோக்கி, சவுலா எங்களை ஆள்வது? ஔனறு கேட்டவர்களை கொண்டு வாருங்கள். அவர்க¨ள்க கொன்று போடுவோம் ஔனறனர்.
13.     ஆனால் சவுல், இன்று யாரையும் கொல்லக் கூடாது. ஏனெனில் ஆண்டவர் இஸ்ரயேலுக்கு மீட்பு அளித்துள்ளார் என்றார்.
14.     சாமுவேல் மக்களை நோக்கி, வாருங்கள் கில்கதலுக்கு சென்று, அங்கே அரசாட்சியை உறுதிப்படுத்துவோம். என்றார்.
15.     மக்கள் அனைவரும் கில்கா
கச சென்று அங்கே ஆண்டவர் திருமுன் சவுலை அரசராக்கி, நல்லுறவுப் பலிகளைச் செலுத்தினார்கள். சவுலும் இஸ்ரயேலும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

அதிகாரம் 12.

1.     அப்போது சாமுவேல் இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறியது: நீங்கள் கேட்டுக் கொண்ட அனைத்தின் படிநடந்து, உங்கள் குரலுக்குச் செவிகொடுத்து, உங்களுக்காக ஓர் அரசனை ஏற்படுத்தினேன்.
2.     இதோ! ஓர் அரசர்! இவர் உங்களை வழிநடத்துவார். எனக்கோ வயதாகித் தலைநரைத்து விட்டது. என் புதல்வர்தாம் இருக்கின்றனர். என் இளமைமுதல் இந்நாள்வரை நான் உங்களை வழி நடத்தியிருக்கிறேன்.
3.     இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன். ஆண்டவர் முன்பும் அவர் திருப்பொழிவு செய்தவர். முன்பும் என்மீது குற்றம் சாட்ட முடியுமா? யாருடைய மாட்டையாவது நான் எடுத்துக் கொண்டோனா? யாருடைய கழுதையாவது நான் எடுத்துக் கொண்டேனா? யாரையாவது நான் ஏமாற்றினேனா? யாரையாவது நான் ஒடுக்கினேனா? யாரிடமிருந்தாவது நான் கைப்பூட்டுப் பெற்று நான் அநீதியைக் கண்டுகொள்ளாமல் இருந்தேனா? சொல்லுங்கள். நான் திருப்பித் தந்து விடுகிறேன்.
4.     அதற்கு அவர்கள் நீர்எங்களை ஏமாற்ற வில்லை, ஒடுக்கவில்லை, கைப்பூட்டு யாரிடமும் பெறவில்லை என்றார்கள்.
5.     அவர் அவர்களை நோக்கி, நீங்கள் என்னிடம் எக்குற்றமும் காணவில்லை என்பதற்கு இன்று ஆண்டவர் சாட்சி. அவர் திருப்பொழிவு செய்தவரும் சாட்சி.! அதற்கு அவர்கள், அவரே சாட்சி! என்றார்கள்.
6.     மீண்டும் சாமுவேல் மக்களிடம் கூறியது: ஆண்டவர் தம் மோசையையும் ஆரோனையும் நியமித்து, உங்கள் மூதாயதரை எகிப்து நாட்டினின்று கொண்டு வந்தார்.
7.     ஆண்டவர் திருமுன் நில்லுங்கள். உங்களுக்காகவும் உங்கள் மூதாதையருக்காகவும் ஆண்டவர் செய்த அனைத்து மீட்பின் செயல்களையும் முன் வைத்து அவர் முன்னிலையில் உங்களோடு வழக்காடுவேன்.
8.     யாக்கோபு எகிப்திற்குச் சென்ற பின்,உங்கள் மூதாதையர் ஆண்டவரிடம் கூக்குரலிட்டபோது, அவர் மோசையையும் ஆரோனையும் அனுப்பினர். அவர்கள் உங்கள் மூதாயதரை எகிப்தினின்று கொண்டுவந்து இவ்விடத்தில் குடியேறவைத்தனர்.
9.     உங்கள் மூதாதையர் கடவுளாகிய ஆண்டவரை மறந்தபோது, அவர் அவர்களை ஆசோரின் படைத்தலைவன் சீசராவின் கையிலும், பெலிஸ்தியரின் கையிலும் மோவாபு அரசரின் கையிலும் விட்டு விட்டார். இவர்கள் அவர்களோடு போரிட்டனர்.
10.     அவர்கள் ஆண்டவரிடம் கூக்குரலிட்டு, நாங்கள் ஆண்டவரை புறக்கணித்தோம். பாகால்களையும் அஸ்தரோத்துகளையும் வழிப்பட்டு பாவம் செய்துள்ளோம். இப்போது எங்களை எங்கள் எதிரிகளிடமிருந்து விடுவியும். நாங்கள் உங்களையே வழிபடுவோம் என்றனர்.
11.     ஆண்டவர் எருபாகால், பேதான், இப்தாகு, சாமுவேல் ஆகியோரை அனுப்பி, சுற்றிலுமிருந்த உங்கள் எதிரிகளின் கையினின்று உங்களை விடுவித்தார். நீங்களும் அச்சமின்றி வாழ்ந்தீர்கள்.
12.     அம்மோனிய அரசன் நாகாசு உங்களை எதிர்த்து வருவதைக் கண்டபொழுது நீங்கள், இல்லை, எங்களை அரசாள எங்களுக்கு ஓர் அரசர் வேண்டும்! என்று உன்னிடம் கூறினீர்கள்.
13.     இதோ நீங்கள் விரும்பிக் கூர்ந்து கொண்ட அரசர்! நீங்கள் வேண்டியவாறு உங்களை ஆள ஆண்டவர் ஓர் அரசரைத் தந்துள்ளார்.
14.     நீங்கள் ஆண்டவருக்கு அஞ்சி, அவருக்கு பணிந்து, அவர் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் கட்டளைக்கு எதிராகக் கலக்கம் விலைவிக்காமல் இருந்தால், நீங்களும் உங்களை ஆளும் அரசரும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரைப் பின்பற்றுபவராக இருப்பீர்கள்.
15.     ஆனால் நீங்கள் ஆண்டவர் குரலுக்குச் செவிக் கொடுக்காமல், அவர் தம் கட்டளைக்கு எதிராக கலங்கம் விளைவித்தால், ஆண்டவரின் கை உங்கள் மூதாதையருக்கு எதிராக இருந்தது போல், உங்களுக்கும் எதிராகவும் இருக்கும்.
16.     இப்பொழுது ஆண்டவர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யவிருக்கும் மாபெரும் நிகழ்ச்சியை நின்று பாருங்கள்.
17.     இன்று கோதுமை அறுவடையன்றோ? இடியும் மழையும் அனுப்பும்படி நான் ஆண்டவரிடம் மன்றாடுவேன். எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்டது, ஆண்டவன் கண்முன் நீங்கள் செய்த மாபெரும் குற்றம் என்பதை இதனால் நீங்கள் கண்டுணர்வீர்கள்.
18.     சாமுவேல் ஆண்டவரிடம் மன்றாட, ஆண்டவர் அன்று இடியும் மழையும் அனுப்பினார். மக்கள் அனைவரும் ஆண்டவரிடமும் சாமுவேலிடமும் மிகுந்த அச்சம் கொண்டனர்.
19.     அனைத்து மக்களும் சாமுவேலை நோக்கி, நாங்கள் சாகாவண்ணம், உம் அடியார்களுக்காக உம் கடவுளாகிய ஆண்டவரிடம் மன்றாடும். ஏனெனில் நாங்கள் செய்த பாவங்கள் அனைத்தோடும் எங்களுக்காக ஓர் அரசனைக் கேட்ட இந்தக் குற்றமும் சேர்ந்துக் கொண்டது என்றார்.
20.     பின் சாமுவேல் மக்களிடம் கூறியது: அஞ்ச வேண்டாம்?, நீங்கள் இக்குற்றங்களை எல்லாம் செய்திருப்பினும் ஆண்டவரைப் பின்பற்றுவதிலிருந்து விலகாமல் அவரையே உங்கள் முழு மனத்தோடு வழிபடுங்கள்.
21.     பயணற்ற, விடுவிக்க இயலாத சிலைகளை நாடிச் செல்லவேண்டாம். அவை வீணே.
22.     தம் மாபெரும் பெயரின் பொருட்டு ஆண்டவர் தம் மக்களைப் புறங்கணிக்கமாட்டார். ஏனெனில் உங்களை தம் மக்களாக அவரே திருவுளங் கொண்டார்.
23.     என்னைக்பொருத்தமட்டில்,உங்களுக்காகமன்றாடுவதைநிறுத்துவதனால் ஆண்டவருக்கு எதிராக புரியும் குற்றம் என்னை விட்டு விலகி இருக்கட்டும். நான் உங்களுக்கு நல்ல, நேரிய வழியைக் காட்டிக் கொடுப்பேன்.
24.     ஆண்டவருக்கு மட்டும் அஞ்சி நடந்து, உங்கள் முழு மனத்தோடு உண்மையாகவே அவருக்கு ஊழியம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு ஆற்றிய மாபெரும் செயல்களை நினைத்து பாருங்கள்.
25.     ஆனால் நீங்கள் தொடர்ந்து தீமை செய்தால் நீங்களும் உங்கள் அரசனும் அழிந்து விடுவீர்கள்.

அதிகாரம் 13.

1.     சவுல் அரசராகி ஓராண்டு ஆனபின், இஸ்ரயேல் மீது இரண்டாம் ஆண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தார்.
2.     அப்பொழுது சவுல் தமக்காக இஸ்ரயேலிருந்து மூவாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார். மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும் சவுலுடன் இரண்டாயிரம் பேர் இருந்தனர். பென்யமினைச் சார்ந்த கிபயாவில் யோனாத்துடன் ஆயிரம் பேர் இருந்தனர். எஞ்சிய மக்களை அவர் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தார்.
3.     யோனத்தான் கெபாவில் எல்லைக் காவலில் இருந்த பெலிஸ்தியரை வெட்டி வீழ்த்தினர். பெலிஸ்திய மக்கள் அதைக் கேள்வியுற்றனர். எபிரேயரும் இதைக் கேட்கட்டும் என்று நாடெங்கும் சவுல் எக்காளம் ஊதுவித்தார்.
4.     சவுல் பெலிஸ்தியரின் எல்லைக் காவலரை வெட்டி வீழ்த்தியதையும் அதனால் பெலிஸ்தியருக்கு இஸ்ரயேல்மீது கடும்பகை ஏற்பட்டதையும் அறிந்து இஸ்ரயேலர் அனைவரும் சவுலோடு சேர்ந்து கொண்டு கில்காலுக்குச் சென்றனர்.
5.     பெலிஸ்தியர் இஸ்ரயேலோடு போரிட முப்பதாயிரம் தேர்களோடும் ஆறாயிரம் குதிரை வீரர்களோடும் கடற்கரை மணலளவு வீரர்களோடும் திரண்டு வந்து பெத்தேலுக்குக் கிழக்கே மிக்மாசில் பாளையம் இறங்கினார்கள்.
6.     இஸ்ரயேலர் தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியினால் இன்னலுற்று குகைகளிலும், புதர்களிலும், பாறைகளிலும், கல்லறைகளிலும், பள்ளங்களிலும் ஒளிந்து கொண்டனர்.
7.     எபிரேயர் சிலர் யோர்தனைக் கடந்து காத்து, ஓகிலயாது நாடுகளுக்குச் சென்றனர். சவுல் இன்னும் கில்காலில் இருந்தார். மக்கள் அனைவரும் நடுங்கிக் கொண்டே அவரைப் பின்சென்றனர்.
8.     அவர் சாமுவேல் குறிப்பிட்ட படி ஏழு நாள் காத்திருந்தார். ஆனால் சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை. ஆகவே மக்கள் அவரைவிட்டுச் சிதறத் தொடங்கினர்.
9.     அப்போது சவுல் எரிபலியையும் நல்லுறவுப் பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி எரிபலி செலுத்தினார்.
10.     அவர் எரிபலி செலுத்தி முடிந்த வேளை சாமுவேல் அங்கு வந்தார். சவுல் அவரை சந்திக்கச் சென்று வரவேற்றார்.
11.     சாமுவேல், நீர் என்ன செய்தீர்? என்று கேட்க அதற்கு சவுல் கூறியது: மக்கள் என்னிடமிருந்து சிதறிப் போவதைக் கண்டேன். நீரும் குறித்த காலத்தில் வரவில்லை. பெலிஸ்தியரும் மிக்ஸ்பாவில் ஒன்று திரண்டு கொண்டிருந்தார்கள்.
12.     அப் பொழுது பெலிஸ்தியர் எனக்கு எதிராகக் கில்காலுக்கு இறங்கி வருவர்: நானோ இன்னும் ஆண்டவரின் தயவை நாடவில்லை என்று உணர்ந்ததால், நான் எரிபலி செலுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானேன்.
13.     சாமுவேல் சவுலை நோக்கி, நீர் அறிவீனமாய்ச் செயல்பட்டீர். உம் கடவுளாகிய ஆண்டவரின் கட்டளைப்படி நீர் நடக்கவில்லை. இல்லையேல் ஆண்டவர் இஸ்ரயேல் மீது உமது அரசை என்றென்றும் நிறுவியிருந்திருப்பார்.
14.     ஆனால் உமது அரசு நிலைக்காது. ஆண்டவர் தம் மனதிற்கு ஏற்ப ஒருவரைத் தமக்கெனத்தேடி அவரையே தம் மக்களின் தலைவராய் நியமித்துள்ளார். ஏனெனில் ஆண்டவர் கட்டளையின் படி நீர் நடக்கவில்லை என்றார்.
15.     சாமுவேல் எழுந்து கில்காலிலிருந்து பென்யமினைச் சார்ந்த கிபயாவுக்கு சென்றார். சவுல் தம்மோடு இருந்த வீரர்களைக் கணக்கெடுத்தார். அவர்கள் ஏறத்தாழ அறுநூறு பேர்.
16.     சவுலும் அவர் மகன் யோனத்தானும், அவரோடு இருந்த வீரர்கள் பென்யமினைச் சார்ந்த கொபாவில் தங்கினர். பெலிஸ்தியரோ மிக்மாசில் பாளையம் இறங்கியிருந்தார்கள்.
17.     பெலிஸ்தியரின் பாளையத்திலிருந்து மூன்று படைகளாகக் கொள்ளைக்காரர் புறப்பட்டு வந்தனர். ஒரு படையினர் ஒபிரா வழியாகச் சூவால் நாட்டிற்குப் பிரிந்து சென்றனர்.
18.     இன்னொரு படையினர் பெத்கோரோன் வழியாகச் சென்றனர். வேறொரு படையினர் பாலைநில கெபோயிமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லை வழியில் சென்றனர்.
19.     எபிரேயர் தங்களுக்காக வாள்களையும் ஈட்டிகளையும் செய்து கொள்ளக் கூடாது என்று பெலிஸ்தியர் திட்டமிட்டுயிருந்தால், இஸ்ரயேல் நாடெங்கும் கொல்லன் எவனும் காணப்படவில்லை.
20.     இஸ்ரயேலர் அனைவரும் தங்கள் கலப்பைக் கொழுக்களையும் மண்வெட்டிகளையும், கடப்பாரைகளையும், கோடாரிகளையும், அரிவாள்களையும் தீட்டுவதற்காகப் பெலிஸ்தியரிடமே சென்றனர்.
21.     தீட்டுவதற்கான கூலி கலப்பைக் கொழு மண்வெட்டி, முக்கூர்க்கருவி, கோடாரி தாற்றுக்கோல் ஆகிய ஒவ்வொன்றும் எட்டுகிராம் அளவுள்ள நாணயம் ஆகும்.
22.     ஆகவே போரிடும் நாள் வந்த போது சவுலோடும் யோனத்தானோடும் இருந்த வீரர் கையில் வாளோ ஈட்டியோ கிடையாது. சவுலும் யோனத்தானும் மட்டும் அவற்றை வைத்திருந்தார்கள்.
23.     பெலிஸ்தியரின் எல்லைக் காவல் மிக்மாசு கணவாய் வரை நீடித்திருந்தது.

அதிகாரம் 14.

1.     ஒருநாள் சவுலின் மகன் யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திருந்த ஊழியனை நோக்கி வா நமக்கு எதிரே அந்தப்பக்கம் இருக்கின்ற பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்வோம். என்றார். ஆனால் தம் தந்தையிடம் சொல்லவில்லை.
2.     சவுல் கிபாவின் எல்லையில் மிக்ரோனிலிருந்து ஒரு மாதுளை மரத்தின் கீழ் காத்திருந்தார். அவறோடு இருந்த மக்கள் ஏறக்குறைய அறுநூறு பேர்.
3.     அப்போது ஆண்டவரின் குரு ஏலியின் மகன் பினகாசுக்குப் பிறந்த இக்காபோதின் சகோதரனான அகிப்தூபின் மகன் அகியா ஏபோதை அணிந்திருந்தான். யோனத்தான் சென்றிருந்தது மக்களுக்கு தெரியாது.
4.     யோனத்தான் பெலிஸ்தியரின் எல்லைக் காவலுக்கு செல்ல முயன்ற கணவாயில் இப்பக்கமும் அப்பக்கமும் செங்குத்தான பாறைகள் இருந்தன. ஒன்று போட்சேசு மற்றொன்று செனே என்றும் அழைக்கப்பட்டன.
5.     ஒரு தூண் பாறை வடக்கே மிக்மாககு எதிரிலும், மற்றொன்று தெற்கே கிபாவுக்கு எதிரிலும் இருந்தன.
6.     யோனத்தான் தம் படைக்கலன்களை வைத்திரந்த ஊழியனை நோக்கி வா, இந்த விருத்தசேதனம் அற்றோரின் எல்லைக்காவலுக்கு கடந்து செல்வோம். ஒரு வேளை ஆண்டவர் நம் சார்பாகச் செயல்படுவார். ஏனெனில் சிலரைக் கொண்டோ பலரைக் கொண்டோ மீட்பு அளிப்பதில் ஆண்டவருக்கு தடையில்லை என்றார்.
7.     அதற்கு அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவேன். உம் மனம் போல் செய்யும். நீர் முதலில் செல்லும். உம் மனதிற்கேற்ப செய்யுமாறு நான் உம்மோடு இருக்கிறேன் என்று சொன்னான்.
8.     பிறகு யோனத்தான், இதோ! நாம் கடந்து அம்மனிதரிடம் சென்று, நம்மையே அவர்களுக்கு வெளிப்படுத்துவொம்.
9.     அவர்கள் நம்மிடம் நாங்கள் உங்களிடம் வரும்வரை அங்கேயே நில்லுங்கள் என்று கூறினால், நாம் அவர்களிடம் சொல்லாமல் நம் இடத்திலேயே நிற்போம்.
10.     மாறாக, எங்களிடம் வாருங்கள் என்று சொன்னால் நாம் அவர்களிடம் சொல்வோம். ஆண்டவர் அவர்களை நம்மிடம் ஓப்படைத்துள்ளார் என்பதற்கு இதுவே அடையாளமாய் இருக்கும்.
11.     ஆகவே இருவரும் பெலிஸ்தியரின் எல்லைக் காவலக்குச் சென்று தங்களையே வெளிப்படுத்த, பெலிஸ்தியர், இதோ! தாங்கள் ஒளிந்திருந்த குழிகளைவிட்டு எலிரேயர் வெளியே வருகின்றனர். என்று கூறினர்.
12.     எல்லைக் காவலர் யோனத்தானுக்கும் அவர் தம் படைக்கலன்களைத் தாங்குவோனுக்கு மறுமொழி கூறி, எம்மிடம் வாருங்கள் உங்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என்றனர்.அப்போது யோனத்தான் தம் படைகளைக் தாங்குவேனிடம், என் பின்னால் வா ஏனெனில் ஆண்டவர் அவர்களை இஸ்ரயேலின் கையில் ஒப்புவைத்துள்ளார் என்றார்.
13.     யோனத்தான் தன் கைகளாலும் கால்களாலும் ஊர்ந்து மேலே செல்ல அவர் தம் படைக்கலன்களை தாங்குவேன் பின்னால் சென்றான். யோனத்தான் அவர்களைத் தாக்க அவர்தம் படைக்கலன்களைத் தாக்குவோன் அவருக்குப் பின் வந்து அவர்களைக் கொன்றான்.
14.     யோனத்தானும் அவர்தம் படைக்கலன்களைத் தாக்குவோனும் நடத்திய முதல் தாக்குதலில் ஏறக்குறைய இருவது பேர், அரை ஏர் நிலப்பரப்பில் வீழ்த்தினார்கள்.
15.     அப்போது பாளையத்திலும் நிலவொளியிலும் மக்கள் அனைவரிடத்திலும் நடுக்கம் ஏற்பட்டது. எல்லைக் காவலர்களும் கொள்ளையிடுவோரும் கூட நடுநடுங்கினர். நிலமும் நடுங்கிற்று. அது ஆண்டவரால் ஏற்பட்ட நடுக்கமாக இருந்தது.
16.     பென்யமின் பகுதியிலுள்ள கிபயாவில் இருந்த சாமக் காவலர் பெலிஸ்தியர் கூட்டம் இன்னும் அங்கும் சதறிக் கரைந்து விட்டதை கண்டார்கள்.
17.     சவுல் தம் ஆள்களை நோக்கி, கணக்கெடுத்து நம்மைவிட்டுச் சென்றவர் யார் என்று பாருங்கள் என்றார். அவர்கள் கணக்கெடுத்து பார்க்க யோனத்தானும் அவர்தம் படைக்கலன்கலைத் தாக்குவோனும் இல்லை என்று கண்டனர்.
18.     பிறகு சவுல் அகியாவை நோக்கி, கடவுளின் பேழையைக் கொண்டு வா என்றார். ஏனெனில் அக்காலத்தில் பேழை இஸ்ரயேல் மக்களோடு இருந்தது.
19.     குருவிடம் சவுல் பேசிக்கொண்டிருந்த போது பெலிஸ்தியரின் பாளையத்தில் ஏற்பட்ட குழப்பம் மிகுதியாயிற்று. சவுல் குருவிடம் உன் கையை விலக்கிக் கொள் என்றார். அதன்பின் சவுலும் அவரோடிருந்த ஆள்கள் அனைவரும் ஒன்று திரண்டு போருக்குச் சென்றனர். இதோ, பெலிஸ்தியர் ஒருவனுக்கு ஒருவன் வாளெடுக்க அவர்களிடையே மாபெரும் அச்சம் ஏற்பட்டது.
20.     ஏற்கெனவே பெலிஸ்தியரோடு சேர்ந்து கொண்டு அவர்களோடு பாளையத்தில் திரிந்துவந்த எபிரேயரும் சவுலோடும் யோனாத்தானோடும் இருந்த இஸ்ரயேலுடன் இணைந்து கொண்டனர்.
21.     எக்ராயிம் மலைநாட்டில் ஒளிந்து கொண்டிருந்த இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியர் தப்பியோடுவதைக் கேள்வியுற்று அவர்களும் அவர்களைத் துரத்திதாக்கினார்கள்.
22.     அன்று ஆண்டவர் இஸ்ரயேலை விடுவித்தார். போர் பெத்தாவேனையும் தாண்டி நடந்தது.
23.     இஸ்ரயேல் மக்கள் அன்று தோல்வியுற்றனர். ஏனெனில் சவுல் அவர்களை நோக்கி, நான் என் எதிரிகளை பழிவாங்க வேண்டும். ஆகவே மலைக்குள் யாராவது உணவு கொண்டால் அரசன் சபிக்கப்படுவான் என்று ஆணையிட்டுக் கூறினார். மக்களில் அன்று எவரும் உண்ணவில்லை.
24.     பின்பு நாட்டின் மக்கள் அனைவரும் ஒரு காட்டினுள் வந்தனர். அங்கே தரையில் தேன் காணப்பட்டது.
25.     மக்கள் காட்டினுள் நுழையும் போது தேன் ஒழுகிக் கொண்டிருந்தது. ஆனால் எவனும் தன் வாயில் தன் கையை வைக்கவில்லை. ஏனெனில் மக்கள் சாபத்திற்கு அஞ்சினார்கள்.
26.     ஆனால், தன் தந்தை மக்களுக்கு ஆணையிட்டுச் சொன்னதை யோனத்தான் கேள்விப் படவில்லை. ஆகவே அவர் தம் கையிலிருந்த கோலை நீட்டி, அதன் நுனியில் தேன் கூட்டைக் குத்தி, கையில் எடுத்ததைத் தன் வாயில் வைத்தார். அவர் கண்கள் தெளிவடைந்தன.
27.     அதற்கு வீரர்களுள் ஒருவர் கூறியது: இன்றைக்கு உணவு கொள்பவன் சபிக்கப்பட்டவன் என்று உம் தந்தை உறுதியாக ஆணையிட்டார். மக்களும் சேர்ந்துள்ளார்கள்.
28.     அபபோது யோனத்தான், என் தந்தை நாட்டைக் குழப்புகிறார். பாருங்கள்: நான் சிறிதளவு தேனைச் சுவைத்தேன். இப்போது என் கண்கள் தெளிவடைந்துள்ளன. இன்று மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொருள்களை நன்றாக உண்டிருந்தால், பெலிஸ்தியருக்கு பெரிய அழிவு ஏற்பட்டிருக்கும் என்றார்.
29.     அன்று வீரர்கள் பெலிஸ்தியரை மிக்காசு முதல் அய்யலோன்வரை முறியடித்தனர். எனவே அவர்கள் மிகவும் சோற்வுற்றிருந்தார்கள்.
30.     அப்போது வீரர்கள் கொள்ளைப் பொருள்கள் மேல் பாய்ந்து ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையில் போட்டு, அடித்து, அவற்றை இரத்ததோடே உண்டார்கள்.
31.     வீரர்கள் இரத்தத்தோடு உண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்று சவுலிடம் அறிவிக்கப்பட்டது. அதற்குச் சவுல் நீங்கள் வஞ்சித்து விட்டீர்கள் இப்போதே ஒரு பெரும் கல்லை என்னிடம் உருட்டிக் கொண்டு வாருங்கள் என்றார்.
32.     மேலும் சவுல் கூறியது: நீங்கள் வீரர்கிளடையே சென்று, ஒவ்வொருவனும் தன் மாட்டையோ ஆட்டையோ என்னிடம் கொண்டு வந்து இங்கே அடித்துச் சாப்பிடட்டும்.
33.     இரத்தத்தோடு உண்ட ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்ய வேண்டாம் எனச் சொல்லுங்கள் , ஆகவே ஒவ்வொருவனும் அன்று இரவே தன் மாட்டைக் கொண்டு வந்து அங்கே அடித்தான்.
34.     சவுல் ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பினார். அதுவே அவர் ஆண்டவருக்கு எழுப்பிய முதல் பலிபீடம்.
35.     அதற்கு பின் சவுல் இரவில் பெலிஸ்தியரைக் பிக் தொடர்ந்து சென்று விடியற் காலை அவர் அவர்களைக் கொள்ளையடிப்போம்.
36.     அவர்களுள் ஒருவரையும் விட மாட்டோம் என்றார். அதற்கு வீரர்கள், உமக்கு நல்லதெனப் பட்டத்தைச் செய்யுங்கள். குருக்களோ, நாம் இங்கே கடவுளை அனுகுவோம் என்றார்கள்.
37.     சவுல் கடவுளை நோக்கி, நான் பெலிஸ்தியரைப் பின் தொடரலாமா? அவர்களை இஸ்ரயேலிடம் ஒப்படைப்பீரோ? என்று கேட்டார்.
38.     ஆனால் அன்று அவர் மறுமொழி கூறவில்லை.எனவே சவுல், வீரர்கள் தலைவர்களே, நீங்கள் அனைவரும் இங்கேவாருங்கள்: இன்று இப்பாவம் எவ்வாறு ஏற்பட்டது என்று கவனியுங்கள்.
39.     இஸ்ரயேலை விடுவிக்கும் ஆண்டவர் மீது ஆணையாகச் சொல்கிறேன். இதற்குக் காரணமாக மகன் யோனத்தான் இருந்தாலும் அவன் கட்டாயம் சாவான் என்றார். எனினும் அவனும் மறுமொழி கூறவில்லை.
40.     மேலும் அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம். என்று கூற வீரர்களும், உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும் என்று சவுலிடம் சொன்னார்கள்.
41.     ஆகவே சவுல், இஸ்ரயேலின் கடவுலாகிய ஆண்டவரே! முன் உண்¨மையை வெளிப்படுத்தும் என்று மன்றாட, யோனத்தான் மீதும் சீட்டு விழுந்தது: வீரர்களோ தப்பினர்.
42.     பிறகு சவுல், எனக்கும் என் மகன் யோனத்தானுக்கும் இடையே சீட்டு போடுங்கள், எனச் சொல்ல, யோனத்தான்மீது சீட்டு விழுந்தது.
43.     சவுல் யோனத்தானை நோக்கி நீ என்ன செய்தாய்? சொல் என வினவ, அதற்கு யோனத்தான், என் கையில் இருந்த கோலின் நுனியால் கொஞ்சம் தேன் எடுத்து சுவைத்தேன். இதோ நான் சாகத் தயார் என்று கூறினார்.
44.     அதற்குச் சவுல், யோனத்தான் நீ சாகத்தான் வேண்டும். இல்லையேல் கடவுள் எனக்கு அப்படியே செய்யட்டும்: அதற்கு மேலும் செய்யட்டும் என்றார்.
45.     ஆனால் மக்கள் சவுலை நோக்கி, இஸ்ரயேலுக்காக இவ்வளவு பெரிய விடுதலையைக் கொணர்ந்த யோனத்தான் சாகலாமா? அது கூடவே கூடாது! ஆண்டவர் மேல் ஆணை! அவர் தலையிலிருந்து ஒரு முடி தரையில் விழக்கூடாது. ஏனெனில் கடவுளின் கருணையோடுத்தான் இன்று அவர் செயல்பட்டார். என்றார்க்ள. இவ்வாறு வீரர்கள் அவரை சாவினின்று தப்புவித்தார்கள்.
46.     சவுல் பெலிஸ்தியரை பின் தொடராமல் செல்ல, பெலிஸ்தியர் தாங்கள் இடத்துக்குச் சென்றார்.
47.     இவ்வாறு சவுல் இஸ்ரயேல் மீது ஆட்சி செலுத்தி மோவாபியர், அம்மோனியர், ஏதோமியர், பெலிஸ்தியர் ஆகிய சுற்றிலுமிருந்த எதிரிகளிமிருந்து அனைவருக்கும் எதிராக போர்தொடுத்தார். அவர் திரும்பிய இடமெல்லாம் அழிவை விளைவித்தார்.
48.     அவர் வீருகொண்டெழுந்து அமலேக்கியரை முறியடித்து, கொள்ளையிடுவோரின் கையினின்று இஸ்ரயேலை விடுவித்தார்.
49.     சவுலுக்கு பிறந்த புதல்வர் யோனத்தான், இஸ்வி, மல்கிசுவா. அவருடைய புதல்வியரின் பெயர்களாவன: மூத்தவள் மேராபு: இளையவள் மீக்கால்.
50.     சவுலின் மனைவியர் பெயர் அகினோவாம். அவர் அகிமாசின் மகள் அப்பேனர் படைத்தலைவனாக இருந்தான்.
51.     சவுலின் தந்தை கீசும், அப்னேரின் தந்தையான நேரும் அரியேலின் புதல்வர்.
52.     சவுலின் வாழ் நாள் முழுவதும் பெலிஸ்தியரோடு கடும் போர் நடந்து வந்தது. வீரனையும் வலிபனையும் கண்டபோது சவுல் அவர்கள் எல்லோரையும் தம்மோடு சேர்த்துக் கொள்வதுண்டு.

அதிகாரம் 15.

1.     சாமுவேல் சவுலை நோக்கி, கூறியது: ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ரயேலின் அரசராக உம்மைத் திருப்பொழிவு செய்ய என்னை அனுப்பினார். ஆகவே இப்பொது ஆண்டவரினட வார்த்தைகளைக் கேளுங்கள்.
2.     படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார். இஸ்ரயேலர் எகிப்தினின்று வெளிவந்தபோது அமலேக்கியர் அவர்களை வழிமறித்தாதற்காக அவர்களை நான் தண்டிக்கப் போகிறேன்.
3.     ஆகவே சென்று அமலேக்கியரை தாக்கி, அவர்கள் உடைமைகளை அனைத்தையும் அழித்தொழியும். அவர்கள் மீது இறக்கம்காட்டாமல் ஆண்களையும், பெண்களையும், பிள்ளைகளையும, பாலகர்களையும்,காடுகள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் அனைத்தையும் கொன்று விடும் .
4.     சவுல் வீரர்களைத் திரட்டி அவர்களை தெலாயிமில் கணக்கெடுத்தார். இரண்டு இலட்சம் காலன் படையினரும், பத்தாயிரம் யூதரும் இருந்தனர்.
5.     சவுல் அமலேக்கியரின் நகரை வந்தடைந்து ஒரு பள்ளத்தாக்கில் பதுங்கியிருந்தார்.
6.     சவுல் கோனியரை நோக்கி, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் எகிப்தினின்று வெளிவந்த போது நீங்கள் இரக்கம் காட்டீனீர்கள். ஆகவே நீங்கள் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்று விடுங்கள். ஏனெனில் அவர்களோடு நான் உங்களையும் அழிக்க வேண்டியிருக்கும் என்றார். எனவே கேனியர் அமலேக்கியரிடமிருந்து விலகிச் சென்றார்.
7.     பின்னர் சவுல் அவிலா தொடங்கி எகிப்துக்குக் கிழக்கே இருக்கம் சூருக்குச் செல்லும் வரை இருந்த அமலேக்கியரைத் தாக்கினார்.
8.     அமலேக்கியரின் மன்னன் ஆகாகை அவர் உயிரோடு பிடித்தார். ஆனால் மக்கள் அனைவரும் வாளுக்கு இரையாக்கினர்.
9.     சவுலும் வீரர்களும் ஆகாகைக் கொல்லாமல் விட்டனர். மேலும் ஆடு மாடுகளில் முதல் தரமானவைகளையும் ஆட்டுக் குட்டிகளையும், நல்லவை அனைத்தையும் அழிக்கவில்லை. அற்பமானவைகளையும் பயனற்றவைகளையும் முற்றிலும் அழித்து விட்டார்.
10.     அப்பொது ஆண்டவரின் வார்த்தை சாமுவேலுக்கு அருளப்பட்டது. அவர் கூறியது,
11.     சவுலை அரசனாக்கியதற்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவன் என்னை பின்பற்றாமல் விலகிவிட்டான். என் வார்த்தைகளின்படி நடக்கிவல்லை. சாமுவேல் மனம்வருந்தி இரவெல்லாம் மன்றாடினார்.
12.     சவுலை சந்திப்பதற்காக சாமுவேல் வைகறையில் துயிலெழுந்தார். அப்போது சவுல் கர்மேலுக்கு வந்ததாகவும் தமக்கென ஒரு நினைவுச் சின்னம் அமைத்ததாகவும், கில்காலுகு கடந்து சென்றுவிட்டதாகவும் சாமுவேலுக்கு தெரிவிக்கப்பட்டது.
13.     சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுல் அவரை நோக்கி, நீர் ஆண்டவரால் ஆசி பெற்றவர்! ஆண்டவரின் வார்த்தையை நான் நிறைவேற்றிவிட்டேன் என்றார்.
14.     அதற்கு சாமுவேல், அப்படியானல் நான் கேட்கும் ஆடுகளின் ஒலியும் மாடுகளின் இரைச்சலும் என்ன? என்று கேட்டார்.
15.     சவுல் மறுமொழியாக, அவை அமலேக்கியரிடமி நது கொண்டுவரப்பட்டவை. வீரர்கள் முதல் தரமான ஆடுகளையும் மாடுகளையும் கடவுளாகிய ஆண்டவருக்காகப் பலி செலுத்துவதற்காக விட்டுவைத்துள்ளார். எஞ்சியவற்றை நாங்கள் முற்றிலும் அழித்து விட்டோம் என்றார்.
16.     அப்பொது சாமுவேல் சவுலை நோக்கி, நிறுத்தும், இன்றிரவு ஆண்டவர் எனக்கு கூறியவற்றை உமக்குச் சொல்கிறேன் என சவுல், சொல்லுங்கள் என்றார்.
17.     சாமுவேல் கூறியது: நீர் உமது பார்வைக்கே சிறியவராய் இருந்தபோதல்லவா இஸ்ரயேல் குலங்கலுக்குத் தலைவர் ஆனீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ரயேலுக்கு அரசராகத் திருப்பொழிவு செய்தார்.
18.     ஆண்டவர் உமக்கு வழிகாட்டி, நீ சென்ற அந்தப் பதவிகளான அமலேக்கியரை அழித்து விட்டு வா. இறுதிவரை போரிட்டு அவரை ஒழித்துவிடு என்று சொன்னார்.
19.     அப்படியிருக்க, நீர் ஏன் ஆண் டவரின் குரலுக்குச் செவி கொடுக்கவில்லை? கொள்ளைப் பொருள் மீது பாய்ந்து ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தேன்?
20.     அதற்குச் சவுல், சாமுவேலை நோக்கி, ஆண்டவரின் குரலுக்கு நான் செவி கொடுத்தேன். அவர் காட்டிய வழியிலும் நான் சென்றேன். அமலேக்கியரின் மன்னன் ஆகாகைக் கொண்டு வந்தேன். ஆனால் அமலேக்கியரை அழித்துவிட்டேன்.
21.     ஆனால் வீரர்கள் உம் கடவுளாகிய ஆண்டவருக்குக் கில்காலில் பலி செலுத்த, தடை செய்யப்பட்ட கொள்ளைப் பொருளினின்று சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் கொண்டு வந்தனர் என்றார்.
22.     அப்பொது சாமுவேல் கூறியது: ஆண்டவருக்கு மகிழ்ச்சி தருவது எரி பலிகள் பிற பலிகள் வெலுத்துவதா? அவரது குரலுக்கு கீழ்ப்படிவதா? கீழ்படிதல் பலியைவிடச் சிறந்தது. கீழ்படிதல் ஆட்டுக் கிடாய்களின் கொழுப்பை விட மேலானது!
23.     கலகம் சூனியத்திற்கு நிகரான பாவம்! முரட்டுத்தனம் சிலை வழிப்பாட்டுக்கு ஒப்பான குற்றம். நீர் ஆண்டவரின் வார்த்தையை புறங்ணித்தீர்! அவரும் உம்மை அரசப் பதவியினின்று நீக்கிவிட்டார்.
24.     அப்பொது சவுல் சாமுவேலை நோக்கி, நான் பாவம் செய்து விட்டேன். வீரர்களுக்கு அஞ்சி அவர்களின் குரலுக்குச் செவி கொடுத்து, ஆண்டவரின் வாய்மொழியையும் உம் வார்த்தையையும் மீறிவிட்டான்.
25.     தயைகூர்ந்து இப்போது என் பாவத்தை மன்னியும். என்னோடு திரும்பி வாரும். நான் ஆண்டவரைப் பணிந்து தொழுவேன் என்றார்.
26.     அப்போது சாமுவேல் சவுலிடம் நீர் ஆண்டவரின் வார்த்தையைப் புறங்கணித்துவிட்டதாலும், ஆண்டவர் இஸ்ரயேல் மீது அரசு செலுத்துவதினின்று உம்மை விலகிவிட்டதாலும், நான் உம்மோடு திரும்ப வர மாட்டேன் என்றார்.
27.     சாமுவேல் செல்லத் திரும்பியபோது,சவுல் அவரது ஆடையின் விளிம்பைப் பிடிக்க, அது கிழிந்தது.
28.     அப்போது சாமுவேல் ஆண்டவர் இன்று இஸ்ரயேல் அரசை உம்மிடமிருந்து கிழித்து உம்மைவிடச் சிறந்த, உமக்கு நெருங்சிய ஒரவனுக்கு அதைத் தந்துவிட்டார்.
29.     மேலும், இஸ்ரயேலின் மாட்சி ஏமாற்ற மாட்டார். மனம் மாறவும் மாட்டார். மனம் மாறுவதற்கு அவர் என்ன மனிதரா? என்று அவரிடம் கூறினார்.
30.     மீண்டும் சவுல், நான் தவறிவிட்டேன். என் மக்களின் பெரியோருக்கு முன்பாகவும், இஸ்ரயேலுக்கு முன்பாகவும் தயைகூர்ந்து என்னைப் பெருமைப்படுத்தும். உம் கடவுளாகிய ஆண்டவரைப் பணிந்து வாரும் என்றார்.
31.     சாமுவேல் திரும்ப சவுலின் பின்னே செல்ல, சவுலும் ஆண்டவரைப் பணிந்து தொழுவார்.
32.     பிறகு சாமுவேல், அமலேக்கியரின் மன்னன் ஆகாகை என்னிடம் கொண்டு வாரும் என்றார். ஆகாகு அவரிடம் வந்து மகிழ்ச்சியுடன் உறுதியாகச் சாவின் கொடுமை அகன்றுவிட்டது என்றான்.
33.     அதற்குச் சாமுவேல் பெண்கள் உனது வாளால் பிள்ளையற்றோர் ஆகியது போல, உன் தாயும் பெண்களுக்கு பிள்ளையற்றவள் ஆகட்டும் என்று கூறி, கில்காலில் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாக வெட்டினார்.
34.     அதன் பின் சாமுவேல் இராமாவுக்குச் சொந்த ஊரான கிபியாவிலிருந்த தம் வீட்டுக்குச் சென்றார்.
35.     சாமுவேல் தாம் இறக்கும் நாள் வரை சவுலை மீண்டும் பார்க்கவில்லை. ஆனால் அவர் சவுலுக்காகத் துக்கம் கொண்டாடினார். ஆண்டவரும் சவுலை இஸ்ரயேல்மீது அரசராக்கியதற்காக மனம் வருந்தினார்.

அதிகாரம் 16.

1.     ஆண்டவர் சாமுவேலை நோக்கி, இஸ்ரயேலின் அரசராகத் சவுல் இல்லாதவாறு நான் அவனைப் புறங்கணித்ததை நீ அறிந்திருந்தும், நீ எவ்வளவு காலம் அவனுக்காகத் துக்கம் கொண்டுவருவாய்? உன்னிடமுள்ள கொம்பை எண்ணெயால் நிரப்பிக் கொண்டு போ. பெத்லகேமைச் சார்ந்த ஈசாயிடம் உன்னை அனுப்புகிறேன்: ஏனெனில் அவர் புதல்வருள் ஒருவனை அரசனாகத் தேர்ந்துள்ளேன் என்றார்.
2.     அதற்குச் சாமுவேல் எப்படிப்போவேன்? சவுல் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுவிடுவானே? என்றார். மீண்டும் ஆண்டவர் நீ ஒரு கன்றுக்குட்டியை எடுத்துச் செல்! ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன் என்று சொல்:
3.     ஈசாயைப் பலிக்க அழைத்திடு: அப்போது நீ என்ன செய்யவேண்டியதென்று நான் உனக்கு அறிவிப்பேன்: நான் உனக்கு காட்டுகிறவனை நீ எனக்குத் திருப்பொழிவு செய் என்றார்.
4.     ஆண்டவர் கட்டளையிட்டவாறு சாமுவேல் செய்து பின் பெத்லகேமுக்குச் சென்றார். அப்பொழுது அவ்வூரின் பெரியோர்கள் அஞ்சி நடுங்கி அவரை எதிர் கொண்டு வந்து, உங்கள் வருகையின் நோக்கம் சமாதானம் தானே என்று கேட்டார்.
5.     அதற்கு அவர், ஆம் சமாதானம்தான்: ஆண்டவருக்குப் பலி செலுத்த வந்துள்ளேன்: உங்களையே தூய்மையாக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள் என்றார். மேலும் ஈசாயையும் அவர் புதல்வரையும் தூய்மைப்படுத்திப் பலியிட வருமாறு அழைத்தார்.
6.     அவர்கள் வந்தபோது அவர் எலியாவைப் பார்த்தவுடனே, ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவன் இவனாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்.
7.     ஆனால் ஆண்டவர் சாமுவேலிடம், அவன் தோற்றத்தையும், உயரத்தையும் பார்க்காதே: ஏனெனில் நான் அவனைப் புறங்கணித்துவிட்டேன். மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை. மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்: ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் என்றார்.
8.     அடுத்து, ஈசாய் அரினதாபை அழைத்து சாமுவேல் முன்பாக நடந்துப்போகச் செய்தார். அவர், இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என் று கூறினார்.
9.     பிறகு ஈசாய் சம்மாகுவைக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் சேர்த்துக் கொள்ளவில்லை என்றார் சாமுவேல்.
10.     இவ்வாறு ஈசாய் தம் ஏழு புதல்வரைச் சாமுவேல் முன்பாகக் கடந்து போகச் செய்தார். இவர்களையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை என்றார் சாடுவேல்.
11.     தொடர்ந்து சாமுவேல் ஈசாயைப் பார்த்து, என் பிள்ளைகள் இத்தனைப் பேர்தானா? என்று கேட்க, இன்னொரு சிறுவன் இருக்கிறான்: அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருகிறான் என்று பதிலளித்தார் ஈசாய். அதற்குச் சாமுவேல் அவரிடம் ஆளனுப்பி அவனை அழைத்து வா, ஏனெனில் அவன் வரும்வரை நான் உணவருந்த மாட்டேன் என்றார்.
12.     ஈசாய் ஆளனுப்பி அவனை அழைத்து வந்தார். அவன் சிவந்த மேனியும் ஒளிரும் கண்களும் கொண்டு அழகிய தோற்றத்துடன் இருந்தான். ஆண்டவர் சாமுவேலிடம் தேர்ந்துக் கொள்ளப்பட்டவன் இவனே! எழுந்து இவனைத் திருப்பொழிவு செய்! என்றார்.
13.     உடனே சாமுவேல் எண்ணெய் நிறைந்த கொம்பை எடுத்து அவன் சகேதரர் முன்னிலையில் அவனைத் திருப் பொழிவு செய்தார். அன்று முதல் ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் இராமாவுக்கு புறப்பட்டுச் சென்றார்.
14.     ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.
15.     அப்பபொழுது சவுலின் பணியாளர்கள் அவரிடம், ஜயா, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம்மைக் கலக்கமுறச் செய்கிறதே!
16.     உம் முன் நிற்கும் உம் பணியாளர்களாகிய நாங்கள் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை அழைத்து வர எங்களுக்குக் கட்டளையிடும்! ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி உம் மீது இறங்கும் பொழுது அவன் யாழ் மீட்டுவான்! என்றனர்.
17.     எனவே சவுல் தம் பணியாளரிடம் யாழ் மீட்டுவதில் வல்லவன் ஒருவனை கண்டுபிடித்து என்னிடம் அழைத்து வாருங்கள் என்றார்.
18.     பணியாளர்களில் ஒருவன் இதோ பெதலரகேமைச் சார்ந்த ஈசாயின் மகனைப் பார்த்தேன்: அவன் யாழ் மீட்டுவதில் வல்லவன்: வீரமுள்ளவன்: போர்த்திறன் பெற்றவன்: பேச்சுத் திறன் பெற்றவன்: அழகானவன்: மேலும் ஆண்டவர் அவனோடு இருக்கிறார் என்றார்.
19.     அதைக் கேட்ட சவுல் ஈசாயிடம் தம் தூதுர்களை அனுப்பி, ஆட்டு மந்தையை மேய்க்கும் உன் மகன் தாவீதை என்னிடம் அனுப்பும் என்று தெரிவித்தார்.
20.     அதைக் கேட்ட ஈசாய் கொஞ்சம் அப்பத்தையும் ஒரு தோற்பை நிறைய திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் கழுதை ஒன்றின் மேல் ஏற்றி தம் மகன் தாவீது மூலம் சவுலுக்கு அனுப்பினார்.
21.     தாவீது சவுலிடம் வந்தவுடன் அரசவைப் பணியில் சேர்ந்து விட்டார். சவுல் அவர் மீது மிகவும் அன்பு கொண்டு அவரை தம் படைக்கலன்கொண்டு தாக்குவோனாக நியமித்தார்.
22.     தாவீது என் அவையிலேயே இருக்கட்டும்: ஏனெனில் என் கண்களில் அவனுக்கு தயவு கிடைத்துள்ளது எனறு சவுல் ஈசாயிடம் சொல்லியனுப்பினார்.
23.     அதன் பின் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மீது இறங்கிய போதெல்லாம் தாவீது யாழ் எடுத்து மீட்டுவார். தீய ஆவியும் அவரை விட்டு அகலும்: சவுலும் ஆறுதலடைந்து நலமடைவார்.

அதிகாரம் 17.

1.     பெலிஸ்தியர் போருக்குப் படைகளை யூதாவிலுள்ள சோக்கோவில் ஒன்று திரட்டினார். சோக்காவுக்கும் அசேக்காவுக்கும் இடையேயுள்ள எபெசுதம்மில் அவர்கள் பாசறை அமைத்தார்.
2.     சவுலும் இஸ்ரயேல் மக்களும் ஒன்றுதிரண்டு ஏலா என்ற பள்ளத்தாக்கில் பாசறை அமைத்து பெலிஸ்தியருக்கு எதிராக போரிட அணிவகுத்தார்.
3.     பெலிஸ்தியர் அப்பக்கம் ஒரு மலையின் மீதும், இஸ்ரயேல் இப்பக்கம் ஒரு மலையின் மீதும் நின்றிருக்க அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது.
4.     அப்பொழுது காத்து நகரைச் சார்ந்த கோலியாத்து என்ற வீரன் பெலிஸ்தியர் பாசறையிலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் உயரம் ஆறரை முழம்.
5.     அவன் வெண்கலம் தலைக்கவசமும் ஜம்பத்தேழு கிலோ வெண்கல்தாலான மீன் செதிலைப் போன்ற மார்புக் கவசமும் அணிந்திருந்தான்.
6.     காலகளில் வெண்வலக் கவசமும் தோள்களுக்கிடையில் வெண்கல எறிவேலும் அவன் அணிந்திருந்தான்.
7.     அவனது ஈட்டிக்கோல் தறிக்கட்டை போல் பெரிதாயிருந்தது. அவனது ஈட்டியின் முனை ஏழு கிலோ அரும்பால் ஆனது. அவனுடைய கேடயம் தாங்குவோன் அவனுக்கு முன்பாக நடப்பான்.
8.     அவன் இஸ்ரயேல் படைகளுக்கு எதிராக நின்று உரத்த குரலில் நீங்கள் போருக்கா அணிவகுத்து வந்தீர்கள்? நான் ஒரு பெலிஸ்தியன்! நீங்கள் சவுலின் அடிமைகள் அல்லவா! உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். அவன் என்னிடம் வரட்டும்.
9.     அவன் என்னிடம் போரிட்டு என்னைக் கொன்றால் நாங்கள் உங்களுக்கு அடிமைகளாவோம்: நான் அவனை வென்று அவனைக் கொன்று விட்டால் நீங்கள் அடிடைகளாகி எங்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றான்.
10.     மேலும் அந்தப் பெலிஸ்தியன், இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள் என்றான்.
11.     சவுலும் இஸ்ரயேலர் அனைவரும் பெலிஸ்தியனின் இவ்வார்த்தைகளைக் கேட்டுக் கலங்கிப் பெரிதும் அச்சமுற்றனர்.
12.     தாவீது யூதாவின் பெத்லகேமைச் சார்ந்த எப்ராத்தியரான ஈசாய் என்பவரின் மகன். ஈசாய்க்கு எட்டு புதல்வர்கள் இருந்தனர்: சவுலின் காலத்திலேயே ஈசாய் மிகவும் மூதிர்ந்தவராய்யிருந்தார்.
13.     இவருடைய மூத்த புதல்வர் மூவர் போருக்குச் சென்றிருந்தனர். அம் மூவரில் மூத்தவர் பெயர் எலியாபு, அடுத்தவன் பெயர் அபினதாபு, மூன்றாமவன் பெயர் சம்மாகு.
14.     சாவீது எல்லோருக்கும் இளையவன். மூத்தவர்களாகிய அம்மூவர்களே சவுலோடு சென்றிருந்தனர்.
15.     ஆனால் தாவீது சவுலை விட்டுச் சென்று பெத்லகேமில் தன் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.
16.     அந்தப் பெலிஸ்தியன் காலையிலும், மாலையிலும் நாற்பது நாள்கள் இவ்வாறு சவால் விட்டான்.
17.     ஈசாய் தம் மகன் தாவீதிடம் உன் சகோதரர்களுக்காக இந்த இருபதுபடி அளவுள்ள ஒரு மரக்கால் மாலையும் பத்து அப்பத்துண்டுகளையும் எடுத்துக் கொண்டு பாளையத்தில் இருக்கும் உன் சகோதரனிடம் விரைந்து செல்.
18.     இந்தப் பத்து பால் கட்டிகளை ஆயிரத்தவர் தலைவனிடம். அளித்து விட்டு உன் சகோதரர் நலமுடன் இருக்கிறார்களா என்று கேட்டு அவர்களிடம் ஒரு அடையாளம் ஒன்று பெற்றுவா: என்று கூறினார்.
19.     அப்பொழுது சவுலும் அவர்களும் இஸ்ரயேலர் எல்லோரும் ஏலா பள்ளத்தாக்கில் பெலிஸ்தியருடன் போரிட்டுக் கொண்டிருந்தனர்.
20.     தாவீது விடியற் காலையில் எழுந்து ஆடுகளைக் காவலன் ஒருவனிடம் ஒப்படைத்துவிட்டு, உணவுப் பொருள்களை எடுத்துக் கொண்டு, ஈசாய் தமக்குக் கட்டளையிட்டவாறு புறப்பட்டுச் சென்று பாசறையை அடைந்தார்: அப்பபொழுது இஸ்ரயேல் படைகள் அணிவகுப்பு நடத்திப் போர்க்குரல் எழுப்பினர்.
21.     இஸ்ரயேலரும் பெலிஸ்தியரும் எதிர் எதிராக அணிவகுத்து நின்றனர்.
22.     தாவீது தாம் கொண்டுவந்தவற்றை பொருள்களைப் பாதுகாக்கும் காவலன் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு போர்களத்திற்குள் ஓடினார். அங்கு தம் சகோதரர்களைக் கண்டு நலம் விசாரித்தார்.
23.     அவர் அவரோடு பேசிக்கொண்டிருக்கையில் இதோ காத்து நக¨ரைச் சார்ந்த பெலிஸ்திய வீரனான கோலியாத்து என்பவன் பெலிஸ்தியர் அணிகலினின்று தோன்றி தான் முன்பு சொன்ன வார்த்தைகளையே மீண்டும் சொன்னான்: தாவீது அதைக் கேட்டார்.
24.     அவனைக் கண்ட இஸ்ரயேல் அனைவரும் மிகவும் அச்சமுற்று அவன் முன்னின்று ஓடினர்.
25.     இதோ நிற்கிற இம்மனித்தனைப் பார்த்தீர்களா? இஸ்ரயேலை உண்மையாகவே இழிவுப்படுத்த இவன் வந்துள்ளான். இவனைக் கொல்பவனுக்கு அரசர் மிகுந்த செல்வம் அளித்துத் தம் மக்களை மணம் முடித்துக் கொடுப்பார். அத்துடன் இஸ்ரயேலருக்கு அவன் தந்தை வீட்டாருக்கு மட்டும் வரிவிலக்குச் செய்வார் என்று இஸ்ரயேலர் தங்களுக்குள் பேசிக் கொண்டார்.
26.     இப்பொழுது தாவீது தம்மருகில்யிருந்தவர்களை நோக்கி, இந்தப் பெலிஸ்தியனை கொன்ற இஸ்ரயேலின் இழிவை நீக்குகிறவனுக்கு என்ன கிடைக்கும்? வாழும் கடவுளின் படைகளைப் பழிப்பவனுக்கு விருத்த சேதனம் இல்லாத பெலிஸ்தியனாகிய இவன் யார்? என்று கேட்டார்.
27.     அதற்கு மக்கள், அவனைக் கொல்பவனுக்கு இவை அனைத்தும் அளிக்கப்படும் என்று முன்பு சொன்னவாறே பதிலளித்தார்.
28.     மக்களோடு அவர் பேசிக் கொண்டிருந்ததை அவர் மூத்த சகோதரன் எலியாபு கேட்டு, தாவீதின் மேல் வெஞ்சினமுற்று நீ ஏன் இங்கு வந்தாய்? அந்தச் சில ஆடுகளையும் பாலையத்தில் நீ யாரிடம் ஒப்படைத்தாய்? உன் செருக்கையும் ஆணவத்தையும் நான் அறிவேன்: ஏனெனில் போரை வேடிக்கைப் பார்க்கத்தான் நீ வந்துள்ளாய் என்றான்.
29.     அதற்குத் தாவீது இப்பொழுது நான் என்ன செய்து விட்டேன்? ஒரு கேள்வித்தானே கேட்டேன்? என்று கூறி.
30.     அவனைவிட்டு வேறொருவனிடம் சென்று அவனிடம் கேட்டார். மக்களும் முன்போலவே அவருக்குப் பதிலளித்தார்.
31.     தாவீது கூறிய வார்த்தைகளைக் கேட்டவர்கள் இவற்றைச் சவுலிடம் தெரிவித்தார். அப்பொழுது சவுல் அவரை வரவழைத்தார்.
32.     தாவீது சவுலை நோக்கி, இவன் பொருட்டு யாருடைய இதயமும் கலங்க வெண்டியதில்லை: உம் அடியானாகிய நானே அந்தப் பெலிஸ்தியனோடு போரிடுவேன் என்றார்.
33.     அதற்குச் சவுல் தாவீதிடம் இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் முடியாது. நீயோ இளைஞன் ஆனால் அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன் என்றார்.
34.     தாவீது சவுலை நோக்கி உம் அடியானகிய நான் என் தந்தையின் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது, சிங்கமோ அல்லது கரடியோமந்தையில் புகுந்து ஆட்டைக் கவ்விக் கொண்டு ஓடினால்,
35.     நான் பின் தொடர்ந்து ஓடி அதை அடித்து அதன் வாயினிற் ஆட்டைவிடுவிப்பேன்: அது என் மீது பாய்ந்தால் அதன் தாடியை பிடித்து நன்றாக அடித்துக் கொல்வேன்.
36.     உம் அடியானகிய நான் சிங்கங்களையும் கரடிகளையும் இவ்வாறு கொன்று இருக்கிறேன். விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தியனும் அவற்றில் ஒன்றைப் போல்தான்: ஏனெனில் அவன் வாழும் படைகளை இழிவுப்படுத்தியுள்ளான். என்றார்.
37.     மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார் என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னொடு இருப்பார் என்றார்.
38.     பின்பு சவுல் தாவீதுக்குத் தம் உடைகளை அணிவித்து, வெண்கலத் தலைக்கவசத்தை அவர் தலைமேல் வைத்து மார்புக் கவசத்தையும் அவருக்கு அணிவித்தார்.
39.     தாவீது சவுலின் வாளைத் தம் உடையின் மீது கட்டிக் கொண்டு தமக்குப் பழக்கமில்லாததால் நடந்து பார்த்தார். தாவீது சவுலை நோக்கி, இவற்றுடன் என்னால் நடக்கவியலாது, ஏனெனில் இதில் எனக்குப் பழக்கம் இல்லை. என்று அவரை கலைத்து விட்டார்.
40.     தாவீது தம் கோலைப் கையில் எடுத்துக் கொண்டார். நீரோடையிலிருந்து வழுவழுப்பான ஜந்து கூழாங்கற்களைத் தேர்ந்தெடுத்து இடையனுக்குரிய தம் கையில் போட்டுக் கொண்டார். தம் கவணைக் கையில் பிடித்துக் கொண்டு பெலிஸ்தியனை நோக்கிச் சென்றார்.
41.     தன் கேடயமேந்துபவன் முன் செல்ல, அந்தப் பெலிஸ்தியனும் தாவீதை நோக்கி நடந்து அவரை நெருங்கினான்.
42.     பெலிஸ்தியன் தாவீதை கூர்ந்து பார்த்து ஏளனம் செய்தான்: ஏனெனில் அவன் சிவந்த மேனியும் அழகிய தோற்றம் உடைய இளைஞனாய் இருந்தான்.
43.     அப்பெலிஸ்தியன் தாவீதைப் பார்த்து, நீ கோலுடன் என்னிடம் வர நான் என்ன நாயா? என்று சொல்லி தெய்வங்களின் பெயரால் தாவீதை சபிக்கத் தொடங்கனான்.
44.     மீண்டும் பெலிஸ்தியன் தாவீதை நோக்கி அருகே வா, வானத்துப் பறவைகளுக்கும் விளங்குகளுக்கும் உன் உடலை இறையாக்குவேன் என்றான்.
45.     அப்பொழுது தாவீது பெலிஸ்தியனிடம் நீ வாளோடும் ஈட்டியோடும் எறிவேலோடும் என்னிடம் வருகிறாய் நானோ நீ இகழ்ந்த இஸ்ரயேலின் படைத்திரளின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர்தம் பெயரால் வருகிறேன் இன்றே ஆண்டவர் உன்னை என் கையில் ஒப்புவிப்பார்.
46.     நான் உன்னை வீழ்த்தி உன் உடலைத் துண்டிப்பேன் பெலஸ்தியரின் பிணங்களை வானத்துப் பறவைகளுக்கும் பூவுலக விலங்குகளுக்கும் கையளிப்பேன்: இஸ்ரயேலரிடையே கடவுள் இருக்கிறார் என்பதை உலகிலுள்ள எல்லாரும் இதனால் அறிந்துகொள்வர்.
47.     மேலும் ஆண்டவர் வாளினாலும் ஈட்டினாலும் மீட்கின்றவர் அல்லர் என்று இந்த மக்கள்கூட்டம் அறிந்து கொள்ளட்டும் ஏனெனில் இது ஆண்டவரின் போர் அவரே உங்களை எங்கள் கையில் ஒப்புவிப்பார் என்றார்.
48.     பெலிஸ்தியன் எழுந்து தாவீதை நோக்கி புறப்படுகையில் தாவீது அவனுடன் போரிட பெலிஸ்தியப் படைத்திரளை நோக்கி விரைந்து ஓடினார்.
49.     தாவீது தம் பையில் கை வைத்து ஒரு கல்லை எடுத்தார் அதை கவணில் வைத்து சுழற்றிப் பெலிஸ்தியனுடைய நெற்றியை குறி பார்த்து எறிந்தார். அந்த கல்லிலும் அவனது நெற்றிக்குள் தாக்கிப் பதியவே அவன் தரையில் முகம் குப்புற விழுந்தான்.
50.     இவ்வாறு தாவீது கையில் வாளேதும் இன்றிக் கவணும் கல்லும் கொண்டு அவனை வீழ்த்திக் கொன்றார்.
51.     உடனே தாவீது ஓடி அந்தப் பெலிஸ்த்தியனின்மேல் ஏறிநின்றார்: அவனது வாளை அதன் உறையிலிருந்து உருவி அவனைக் கொன்று அவன் தலையை கொய்தார்.
52.     யூதா மக்களுக்கு இஸ்ரயேல் மக்களும் எழுந்து ஆர்ப்பரித்து எக்ரோன் வாயில் மட்டுமுள்ள காத்து பள்ளத்தாக்கு வரை துரத்திச்சென்றனர். சாராயி மின் சாலையில் காத்து எக்ரோன் எல்லை வரையிலும் பெலிஸ்தியர் வெட்டுண்டு கிடந்தனர்.
53.     இஸ்ரயேலர் பெலிஸ்தியரைப் பின்தொடர்வதை நிறுத்தி விட்டு அவர்களது பாசறையைக் கொள்ளையடித்தனர்.
54.     தாவீது அப் பெலிஸ்தியனின் தலையை எடுத்து எருசலேமுக்குக் கொண்டு சென்றார். ஆனால் தம் படைக்கலன்களைத் தம் கூடாரத்தில் வைத்தார்.
55.     பெலிஸ்தியனுக்கு எதிராகத் தாவீது சென்றதை சவுல் கண்டபோது அவர் படைத்தலைவன் அப்னேரிடம் அப்னேர் இந்த இளைஞன் யாருடைய மகன்? என்று கேட்டார்.அப்னேர் அதற்கு அரசே உம் உயிர் மேல் ஆணை! அதை நான் அறியேன் என்றார்.
56.     மீண்டும் அரசர், இவ்விளைஞன் யாருடைய மகன் என்று விசாரித்து வா என்றார்.
57.     தாவீது பெலிஸ்தியனைக் கொன்றுவிட்டு திரும்பிய போது அப்னேர் அவரை சவுலிடம் அழைத்துச் சென்றார்: அப்பொழுது அவர் கையில் பெலிஸ்தியனின் தலை இருந்தது.
58.     சவுல் அவரிடம் இளைஞனே நீ யாருடைய மகன்? என்று கேட்டார்.

அதிகாரம் 18.

1.     தாவீது சவுலிடம் பேசி முடித்த போது யோனத்தானின் உள்ளம் தாவீதின் உள்ளத்தோடு ஒன்றுப்பட்டது. யோனத்தான் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
2.     அன்று சவுல் தாவீதை தம்முடன் அழைத்துச் சென்றார். அவருடைய தந்தை வீட்டுக்கு திரும்பிப் போக இசைவு அழிக்கவில்லை.
3.     பின்பு யோனத்தான் தாவீதுடன் உடன்படிக்கை செய்து கொண்டார். ஏனெனில் அவரை தம் உயிரெனக் கருதி, அவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
4.     யோனத்தான் தான் அணிந்திருந்த மேலங்கியைச் சுழற்றி தாவிதுக்குக் கொடுத்தார். அத்துடன் தம் அங்கி, வாள் வில், கச்சை ஆகியவற்றையும் கொடுத்தார்.
5.     தாவீது சவுல் தம்மை அனுப்பிய இடமெல்லாம் சென்று வெற்றியைக் கொடுத்தார். அதனால் சவுல் அவரை படைத்தலைவராக்கினார். மக்கள் எல்லோரும் மற்றும் சவுலின் அலுவலர்களும் இதைப் பெரிதும் விரும்பினர்.
6.     தாவீது பெலிஸ்தியனைக் கொன்ற பின், வீரர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, இஸ்ரயேலின் எல்லா நகர்களிலிருந்தும் பெண்கள் ஆடல் பாடலுடன் அரசர் சவுலை சந்திக்க வந்தார். அவர்கள் கஞ்சிராக்களோடும் நரம்பிசைக் கருவிகளுடன் மகிழ்ச்சிப் பாடல் எழுப்பினர்.
7.     அப்பெண்பள் அப்படி ஆடிப்பாடுகையில் சவுல் ஆயிரம் பேரைக் கொன்றார். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றார். என்று பாடினார்.
8.     இந்த வார்த்தைகள் சவுலுக்கு அறவே பிடிக்கவில்லை: அவர் மிகவும் சினமுற்று, அவர்கள் தாவீதுக்குப் பதினாயிரம் பேர் என்றனர். எனக்கோ, ஆயிரம் பேர் என்றனர். அவனுக்கு இன்னும் குறைவாக இருப்பது ஆட்சி ஒன்று தான்! என்று கூறினார்.
9.     அன்று முதல் சவுல் தாவீதைப் பொறாமைக் கொண்டு பார்க்கலானார்.
10.     மறுநாளே கடவுல் அனுப்பிய தீய ஆவி சவுலை ஆட்கொள்ள, அவர் தம் வீட்டில் பிதற்றினார். அப்போது தாவீது ஒவ்வொரு நாளும் செய்வது போல் யாழ் எடுத்து மீட்டினார். சவுலின் கையில் ஈட்டி இருந்தது.
11.     நான் தாவீதை சுவரோடு சேர்த்துக் குத்துவேன் என்று சவுல் நினைத்துத் தம் ஈட்டியை அவர் மேல் எறிந்தார். ஆனால் தாவீது அதை இருமுறை தவிர்த்து விட்டார்.
12.     ஆண்டவர் தம்மிடமிருந்து விலகி, தாவீதுடன் இருந்ததனால் அவருக்குச் சவுல் அஞ்சினார்.
13.     ஆதலால் சவுல் அவரைத் தம் முன்னின்று அகற்றி, ஆயிரவர் தலைவராக்கினார். தாவீது வீரர்களை முன்னின்று நடத்தினார்.
14.     ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார்.
15.     அவர் பெரும் வெற்றியை குவிப்பதைக் கண்ட போது, சவுல் அவருக்கு இன்னும் அஞ்சினார்.
16.     ஆனால் இஸ்ரயேலரும் யூதா மக்கள் அனைவரும் தாவீதின் மீது அன்பு செலுத்தினர். ஏனெனில் அவர் அவர்களை முன்னின்று நடத்திச் சென்றார்.
17.     பின்பு சவுல், என்கை அவன் மேல் படாமல் பெலிஸ்தியர் கை அவன் மேல் படட்டும் என்று எண்ணி, தாவீதை நோக்கி, இதோ என் மூத்த மகன் மோராபு! அவனை எனக்கு மனம் முடித்துக் கொடுப்பேன். நீ மட்டும் வீரம்முள்ளவனாக செயல்பட்டு ஆண்டவரின் படைகளை நடத்திச் செல் என்றார்.
18.     அப்பொழுது தாவீது சவுலிடம், அரசனின் மருமகன் ஆவதற்கு நான் யார்? என் உறவினர் யார்? இஸ்ரயேல் என் தந்தையின் குலம் என்ன? என்று கேட்டார்.
19.     சவுலின் மகள் மேராபைத் தாவீதுககு மனம் முடிக்கவிருந்த நேரத்தில், அவள் மெகொலாயனாகிய அதிரியேலுக்கு மனம் முடிக்கப்பட்டாள்.
20.     அதன் பின், சவுலின் மகள் மீக்கால் தாவீதின் மீது காதல் கொண்டாள். இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது சவுல் மகிழ்ச்சியுற்றார்.
21.     நான் அவளை அவனுக்கு கொடுப்பேன் அவளும் அவனுக்கு மனைவியாய் இருப்பாள் பெலிஸ்தியரும் அவனுக்கு எதிராக எழுவார் என்று சவுல் நினைத்து, தாவீதை நோக்கி, இப்பொழுது என் இரண்டாம் மகள்மூலம் நீ என்மருமகனாய் ஆவாய் என்று கூறினார்.
22.     சவுல் தம் பணியாளர்களிடம் தாவீதோடு இரகசியமாய் பேசி, இதோ! அரசர் உம்மீது விருப்பம் கொண்டுள்ளார். அவர்கள் அலுவலர்கள் எல்லோரும் உம்மீது அன்பு கொண்டுள்ளனர். ஆதலால் நீ இப்போது அரசருக்கு மருமகனாய் இரும் என்று செல்லுங்கள் என்றார்.
23.     சவுலின் பணியாளர்கள் அந்த வார்த்தைகளை தாவீதின் காதில் ஓதினர். அப்பபொழுது தாவீது, அரசருக்கு மருமகனாய் ஆவது உங்களுக்கு அவ்வளவு எளிதானதாய் தோன்றுகிறதா? நான் எளியவனும் தாழ்ந்தவனுமாய் உள்ளேன் அன்றோ? என்றார்.
24.     சவுலின் பணியாளர்கள் அவரிடம், தாவீது இவ்வார்த்தைகளை சொன்னான் என்றார்.
25.     பின்பு சவுல், தாவீதிடம் இவ்வாறு சொல்லுங்கள்: அரசர் திருமணப் பரிசும் எதுவும் விரும்பவில்லை: அரசருடைய எதிரிகளை பழிவாங்கி, பெலிஸ்தியரின் நூறு நுனித்தோல்களை நீ கெண்டுவந்தால் போதும் என்று சொல்லுங்கள் என்றார். தாவீது பெலிஸ்தியனின் கையில் அகப்பட்டு மடியவேண்டுமென்பதே சவலின் திட்டம்.
26.     சவுலின் பணியாளர்கள் தாவீதுக்கு அந்த வார்த்தைகளை கூறிய போது, அரசருக்கு மருமகனாய் ஆவது பற்றி மகிழ்ச்சியுற்றார்.
27.     திருமணநாள் நெருங்குமுன் தாவீது தம் ஆள்களுடன் சென்று பெலிஸ்தியரில் இருநூறு பேரைக் கொன்றார். பின்னர் தாவீது அவர்களின் நுனித் தோல்களைக் கொண்டுவந்து, அரசனின் மருமகனாய் ஆகும் பொருட்டு, அவற்றை அவரிடம் சரியாக எண்ணிவைத்தார். எனவே சவுல் தம் மகளை மீக்காலைத் தாவீதுக்கு மணம்முடித்துக் கொடுத்தார்.
28.     ஆனால் ஆண்டவர் தாவீதோடு இருப்பதையும், இஸ்ரயேல் முழுவதும் அவர் மீது அன்புக் கொண்டுள்ளதையும், சவுல் தெளிவாகக் கண்டுணர்ந்தார்.
29.     எனவே சவுல் தாவீதுக்கு மிகவும் அஞ்சினார். சவுல் தாவீதை என்றென்றும் தம் எதிரியாக கருதினார்.
30.     பின்பு பெலிஸ்திய படைத் தலைவர்கள் போரிடுமாறு புறப்பட்டு வந்தனர். அப்படி அவர்கள் வந்தபோதெல்லாம் சவுலின் மற்ற எல்லாத் தலைவர்களைவிடத் தாவீது மிகுதியான வெற்றி அடைந்தார். அதனால் தாவீதின் புகழ் மேலோங்கியது.

அதிகாரம் 19.

1.     தாவீதைக் கொல்ல வேண்டுமென்று தன் மகன் யோனத்தானிடம் தம் அலுவலர் எல்லோரிடமும் சவுல் தெரிவித்தார். ஆனால் சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மீது அதிகமாக அன்புக் கொண்டிருந்தார்.
2.     ஆதலால் தாவீதைப் பார்த்து யோனத்தான், என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார். ஆதலால் எச்சரிக்கையான இரு. காலையிலேயே புறப்பட்டு ஓர்யிடத்திற்குச் சென்று ஒளிந்துக் கொள்.
3.     நீ வெளியில் இருக்கம் சமயத்தில் நான் என் தந்தையின் அருகில் இருந்துக் கொண்டு, உன்கைப் பற்றி அவரிடம் பேச்சுக் கொடுப்பேன்: அப்படி நான் அறிகிறதையெல்லாம் உனக்குத் தெரிவிப்பேன் ஔனறார்.
4.     யோனத்தான் தாவீதைப் பற்றித் தம் தந்தையிடம் நல்லவிதமாகப் பேசி, அரசர் தம் அடியான் தாவீதின் பொருட்டு பாவம் ¦ச்யய வேண்டாம்: ஏனெனில் அவன் உமக்குத் எந்டத தீங்கு செய்ததில்லை: மேலும் அவனுடைய அரசியல் உமக்கு பயனுடையதாய் இருந்தன.
5.     அவன் தன் உயிரைப் ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பெலிஸ்தியனைக் கொன்றான். ஆதலால் ஆண்டவர் பெலிஸ்தியர் எல்லோருக்கும் பெரும் வெற்றியை அளித்தார். நீர் அதைக் கண்டு மகிழ்ச்சியுற்றீர். அப்படியிருக்க எக்காரணமும் இல்லாமல் தாவீதைக் கொள்வதன் மூலம் குற்றமற்ற இரத்தத்திற்டகு எதிராக நீ ஏன் பாவம் செய்ய வேண்டும்? ஔனறு கூறினார்.
6.     சவுல் யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்டார். அதனால் சவுல் ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப்படமாட்டான் ஔனறார்.
7.     பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவருக்குக் கூறினார். மேலும் யோனத்தான் தாவீதை சவுலிடம் அழைத்துச் செல்ல, முன்பு போலவே சவுல் அவரது பணியில் ஈடுபட்டார்.
8.     மீண்டும் போர் மூண்டது: தாவீது புறப்பட்டு பெலிஸ்தியருடன் போரிட்டு அவர்கிளல் மிகுதியனோரை வெட்டி வீழ்த்தினார். அதனால் அவர்கள் சிதறி ஓடினர்.
9.     பின்னர் ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி சவுலின் மேல் இறங்கியது. அப்பொழுது அவர் தம் வீட்டில் ஈட்டியுடன் வீற்றிருக்க, தாவீது யாழ் எடுத்து மீட்டிக் கொண்டிருந்தார்.
10.     அப்போது சவுல் தாவீதை ஈட்டியால் சுவரோடு குத்த முயன்றார். ஆனால் சவுலின் ஈட்டி குறியிலிருந்து விலகியதனால் சுவரில் பாய்ந்தது. அன்றிரவே தாவீது அங்கிருந்து தப்பி ஓடினார்.
11.     உடனே சவுல் தாவீதை அவர் வீட்டில் கண்காணித்து மறுநாள் காலையில் கொன்றுவிடுமாறு காவலர்களை அனுப்பினர். ஆனால் தாவீதின் மனைவி மீக்கால் அவரிடம், நீர் இன்றிரவே உம் உயிலைக் காப்பற்றிக் கொள்ளவிட்டால் நாளை நீர் கொள்ளப்படுவீர் என்றாள்.
12.     ஆதலால் மீக்காலை தாவீதை பலகலணி வழியே இறக்கிவிடவே அவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
13.     மீக்கால் குடும்பச் சிலையை எடுத்து அதை படுக்க¨யில் கிடத்தினாள். அதன் தலைபாகத்தில் ஒரு வெள்ளாட்டுத்தோலைவைத்து ஒர போர்வையால் மூடினாள்.
14.     தாவீதைப் பிடித்து வரச் சொல்லி தூதர்களை சவுல் அனுப்பிய போது அவள் அவர் நோயுற்றிருக்கிறார் என்றாள்.
15.     மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும் படி தூதர்களை அனுப்பி, நான் கொல்லுமாறு அவனைப் படுக்கையோடு கொண்டு வாருங்கள் என்றார்.
16.     அவர்க்ள வந்தபோது இதோ படுக்க¨யின் மேல் குடம்பச் சிலையும் அதன் ஆமல் வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டார்.
17.     சவுல் மீக்காலிடம் என் பகைவனை தப்பிக்குமாறு அனுப்பி, ஏன் ஔனனை வஞ்சித்தாய்? ஔனறு கேட்டார். அதற்கு மீக்கால் சவுலிடம், ஔனனை போகவிடு: இல்லையெனில் என்னைக் கொன்று விடுவேன்: என்று அவர் மிரட்டினார் என்ற மறுமொழி கூறினாள்.
18.     அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பியபடியே இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு ¦ச்யத யாவற்¨றுய கூறனார். பின்னா அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.
19.     இதோ இராமாவில் உள்ள நாவோத்தில் தாவீது இருக்கிறார். என்று சவுலுக்கு தெரிவிக்கப்பட்டது.
20.     உடனே சவுல் தாவீதை பிடித்து வர ஆள்களை அனுப்பினார். அவர்கள் சென்ற போது இறைவாக்கினர் இறைவாக்குறைப்பதையும், சாமுவேல் அவர்களுக்க தலைமைத் தாங்கி நிற்பதையும் கண்டார். அத்துடன் சவுலின் ஆள்கள் மேலும் கடவுலின் ஆவி இறங்கி வரவே அவர்களுத் இறைவாக்குரைத்தார்.
21.     சவுலுக்க இது தெரி¢வக்கப்பட்டபோது அவர் மூன்றாம் முறையாக ஆள்களை அனுப்ப அவர்களும் இறைவாக்குரைத்தார்.
22.     அடுத்து அவரே இராமாவுக்கு ¦ச்னறு, சேக்குவிலிருக்கம் பெரிய கிணற்றே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே?, ஔனறு கேட்டார். இதோ இராமாவிலுள்ள நாவோத்தில் அவர்களைக் காணலாம் என்றான்.
23.     ஆதலால் அவர் அங்கிருந்து இரதமாவிலிருந்த நாவோத்துக்குப் புறப்பட்டார். கடவுலின் ஆவி மேலும் இறங்கி வரவே, ராமாவின் நாவோத்துக்குச் சென்றடையும் வரை அவரும் இறைவாக்குரைத்தார்.
24.     அவரும் தம் மேலுடையைக் களைத்துவிட்டு சாமுவேலின் முன் அவரும் இழறவாக்குரைத்தார். அன்ற பவல் இரவு முழுவதும் ஆடையணியாமல் விழுந்துக் கிடந்தார். அதனால் தான் சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ? என்ற சொல் வழங்கலாயிற்று.

அதிகாரம் 20.

1.     பின்பு, தாவீது இராமாவிலிருந்த நாவோத்திலிருந்து புறப்பட்டுச் சென்று யோனத்தானிடம் வந்து, நான் செய்தது என்ன? நான் செய்து குற்றம் என்ன? உன் தந்தைக்கு எதிராக நான் செய்த பாவம் என்ன? பின்பு, ஏன் என்னை கொள்ளத் தேடுகிறார்? என்று கேட்டார்.
2.     அதற்கு அவர், ஒருக்காலும் இல்லை. நீ சாக மாட்டாய். என்னொடு கலந்தாலோசிக்காமல் என் தந்தை பெரிதோ சிறிதோ எதுவும் செய்யமாட்டார். இச்செயலை மட்டும் ஔன தந்தை மட்டும் மறைப்பானே? அப்படி மறக்காது என்றார்.
3.     அதற்குத் தாவீது, என் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்துள்ளது என்று உன் தந்தைக்கு நன்கு தெரியும். ஆகையால் உனக்கு யோனத்தான் இதை அரிய நேர்ந்தால் அவன் வேதனையடைவான் என்று அவர் நினைக்கிறார். ஆனால் எனக்கும் என் சாவுக்கும் ஓர் அடித் தூரம் உள்ளது. வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் மேலும் ஆணை! என்றார்.
4.     அப்பொழுது யோனத்தான் தாவீதிடம் உன் விருப்பப்படி நான் உனக்கு எதுவும் செய்யத் தயார். என்றார்.
5.     தாவீது யோனத்தானை நோக்கி, இதோ! நாளை அமாவாசை: அரவரோடு நான் பந்தியிலிருக்கும் நாள். ஆனால் மூன்றாம் நாள் மாலைவரை வெளியில் சென்று ஒளிந்திருக்க எனக்கு விடை கொடு.
6.     உன் தந்தை என்னைக் காணாது பற்றி விசாரித்தால் தாவீது தன் சொந்த நகரான பெத்லகேமுக்குச் சென்றுள்ளான்: அவன் குடும்பத்தார் அனைவருக்கும் அன்று ஆண்டுப் பலி இருக்கிறதாம்! அங்கே விரைந்து செல்ல என்னிடம் அனுமதி கேட்டான் என்று சொல்.
7.     அவர் நல்லது என்று சொன்னால் உன் அடியான் அமைதியடைவான்: அவர் எனக்குத் தீங்கு செய்ய முடிவு செய்துள்ளார் என அறிந்துகொள்வாய்.
8.     ஆண்டவர் திருமுன் நீ உன் அடியானுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின்பொருட்டு என் மேல் இரக்கம் வை. நான் குற்றவாளியாயின் நீயே என்னைக் கொன்று விடு. நீ ஏன் என்னை உன் தந்தையிடம் கொண்டுபோக வேண்டும்? என்றார்.
9.     அதற்கு யோனத்தான், அப்படி உனக்கு நேராது உனக்குத் த¨ங்கு செய்ய என் தந்தை முடிவுசெய்துள்ளார் என நான் அறிந்தால் உனக்கு சொல்லாமல் இருப்பேனா? என்றார்.
10.     பின்பு தாவீது யோனத்தானை நோக்கி உன் தந்தை உன்னிடம் கடுமையான பதிலளித்தால் அதையார் எனக்குத் தெரிவிப்பார். என்று கேட்டா+.
11.     அதற்குயோனா¡த்தான் தாவீதிடம் வெளியில் செல்வோம் வா! என்றார். இருவரும் வயல்வெளிக்குச் சென்றனர்.
12.     யோனாத்தான் தாவீதை நோக்கி இஸ்ரயேல் கடவுளாகிய ஆண்டவர் சான்று பகர்வாராக! நாளை இதே நேரத்தில் அல்லது மூன்றாம் நாளில் என் தந்தையின் கருத்தை அறிவேன்: அது தாவீதுக்கு சாதகமாய் இருந்ததால் உனக்கு அதைத் தெரிவிக்க ஆள்னுப்பமாட்டேனா?
13.     ஆனால் என் தந்தை உனக்கு தீங்கு செய்ய விரும்பியுள்ளதை அறிந்து, அதை நான் உனக்கு வெளிப்படுத்தி உன்னைப் பாதுகாப்புடன் அனுப்பிவைக்காவிடில் ஆண்டவர் என்னைத் தண்டிப்¡ராக! ஆண்டவர் என் தந்தையுடன் இருந்தது போல் உன்னோடு இருப்பாராக!
14.     நான் தொடர்ந்து உயிருடன் இருந்தால் நான் சாகாதவாறு ஆண்டவரின் பொருட்டு என்மேல் இரக்கம் வை.
15.     ஆண்டவர் தாவீதின் எல்லா எதிரிகளையும் இம்மண்ணிலிருந்து அழித்தொழிக்கும் போது என் வீட்டாரை அழிக்காதிருக்கும்படி இரக்கம் வை.
16.     ஆண்டவர் தாவீதின் எதிரிகளுக்குத் தகுந்த பதிலளிப்பாராக என்று கூறி யோனத்தான் தாவீதின் வீட்டாருடன் உடன்படிக்கை செய்தார்.
17.     தாவீதின் மேல் கொண்டுள்ள அன்பின் பெயரால் யோனத்தான் மீண்டும் அவருக்கு ஆணையிட்டுக் கூறினார். ஏனெனில் அவர் தாவீதின் மேல் தம் உயிரென அன்புக் கொண்டிருந்தார்.
18.     பின்பு யோனத்தான் நாளை அமாவாசை: உனது இருக்கை காலியாக இருப்பதைக் கண்டு விசாரித்தார்.
19.     மூன்றாம் நாள் உன்னைக் கண்டிப்பாக தேடுவார். ஆதலால் நீ முன்பு ஒளிந்திருக்கும் இடத்திற்கே போ: அங்கே ஏசேல் கல் அருகே ஒளிந்துக் கொண்டிரு.
20.     நான் குறி வைத்து அம்பு விடுவது போல் மூன்று அம்புகளை எய்வேன்.
21.     பின்பு, போய் அம்புகளைத் தேடிவா என்று ஒரு பையனை அனுப்புவேன். இதோ அம்புகள் இப்பக்கம் கிடக்கின்றன. அவற்றைக் கொண்டு வா, என் பேனாகில் நீ என்னிடம் வா. ஏனெனில் ஆண்டவன் மீது ஆணை! உனக்குப் பாதுகாப்பு உண்டு. ஆபத்து நேராது.
22.     மாறாக, இதோ அம்புகள் உனக்கு இப்பக்கம் கிடக்கின்றன. என்று அந்தப் பையனிடம் சொல்வேனாகில் நீ ஓடி விடு: ஏனெனில் ஆண்டவரே உன்னை அனுப்பி வைக்கிறார்.
23.     நீயும் நானும் பேசியவற்றிற்கு உனக்கும் எனக்கும் ஆண்டவரே என்றென்றும் சாட்சியாக இருப்பார் என்றார்.
24.     ஆதலால் தாவீது வயல் வெளியில் ஒளிந்து கொண்டார். அமாவாசை நாள் வந்தபோது உணவருந்த அரசர் அமர்ந்தார்.
25.     அரசர் சுவரோரம் இருக்கும் தமது இருக்கையில் வழக்கம் போல் அமர்ந்தார். சவுலுக்கு எதிரில் யோனத்தானும் பக்கவாட்டில் அப்னேரும் அமர்ந்தனர். ஆனால் தாவீதின் இருக்கை காலியாயிருந்தது.
26.     இருப்பினும் அவனுக்கு ஏதோ நேர்ந்துள்ளது, அவன் தூய்மையின்றி இருக்கலாம், கண்டிப்பாக அவன் தீட்டாயிருக்க வேண்டும். என்று நினைத்து சவுல் அன்று சவுல் ஏதும் சொல்லவில்லை.
27.     ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாளும் தாவீதின் இருக்கை காலியாக இருந்தது. அப்பொழுது சவுல் யோனத்தனை நோக்கி, ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் உணவருந்த வராதது ஏன்? என்று கேட்டார்.
28.     யோனத்தான் சவுலிடம், தான் பெத்தலேகம் செல்ல வேண்டுமென்று வருந்திக் கேட்டுக் கொண்டான்.
29.     நான் செல்ல விடைக்கொடு: ஊரில் என் குடும்பத்தார் பலிக் செலுத்துகிறார்கள். மேலும் என் சகோதரர்கள் அங்கிருக்க வேண்டுமென்று எனக்கு கட்டளையிட்டுள்ளார். ஆதலால் என் கண்களில் எனக்கு இரக்கம் கிடைத்தால் என் சகோதரர்களைக் காண போகவிடு: என்றான். இக்காரணத்தினால் தான் அவன் அசைப்பந்திக்கு வரவில்லை என்று பதிலளித்தா+.
30.     அப்பொழுது யோனத்தான் மீது சவுல் கடும் சினமுற்று அவரைப் பார்த்து, பொய்யும் புரட்டும் நிறைந்த பெண்ணின் மகன் நீ. நீ உனக்கு மானங்கெட்ட தாய்க்கும் அவமானமாய் இருக்கும்படி நீ ஈசாயின் மகன் மீது அன்புக் கொண்டுள்ளாய் என்பதை நான் அறியேனோ?
31.     ஈசாயின் மகன் உயிரோடு வாழும் வரை நீயும் நிலைத்துயிருக்கமாட்டாய்.: உன் ஆட்சியும் நிலை பெறாது: ஆதலால் ஆளனுப்பி அவனை என்னிடம் கொண்டு வா: அவன் சாகவே வேண்டும் என்றார்.
32.     அப்பொழுது யோனத்தான் தம் தந்தை சவுலிடம், அவன் ஏன் சாகவேண்டும்? அவன் என்ன செய்தான் என்று கேட்டார்.
33.     ஆனால் அவரைக் குத்தி வீழ்த்த எண்ணி அவரை நோக்கி தம் ஈட்டியை எறிந்தார்: ஆதலால் தாவீதை கொன்று விட தம் தந்தை முடிவு எடுத்துவிட்டார் என்று யோனத்தான் அறிந்து கொண்டார்.
34.     உடனே யோனத்தான் வெஞ்சினமுற்று பந்நியைவிட்டு எழுந்துவிட்டார். அமாவாசையின் மறுநாளகிய அன்று அவர் உணவு அருந்தவில்லை. ஏனெனில் தன் தந்தை இழிவுப்படுத்தியது குறித்து அவர் மிகவும் மனம் வருந்தினார்.
35.     அடுத்த நாள் காலை யோனத்தான் தாவீதை சந்திக்குமாறு ஒரு பையனை அழைத்துக் கொண்டு வயல்வெளிக்குச் சென்றார்.
36.     அவர் அப்பையனிடம், நீ ஓடி நான் எய்கிற அம்புகளை எடுத்து வா என்றார். அப்பபையன் ஓடும் போது அவனுக்கு அப்பால் ஓர் அம்பை எய்தார்.
37.     யோனத்தான் எய்த அம்பு கிடந்த இடத்திற்கு அப்பையன் சென்ற போது, யோனத்தான் அவனைக் கூப்பிட்டு உனக்கு அப்பால் அல்லவா அம்பு கிடக்கிறது, என்றார்.
38.     மீண்டும் பையனை உரத்த குரலில் கூப்பிட்டு நிற்காதே, விரைந்து செல். என்றார். அப்போது யோனத்தானின் பையன் அம்புகளை பொறுக்கிக் கொண்டு தன் தலைவனிடம் திரும்பினான்.
39.     யோனத்தானுக்கும் தாவீதுக்கும் மட்டுமே அந்தப் பொருள் தெரியும்: ஆனால் அப்பையனுக்கோ ஒன்றும் தெரியாது.
40.     பின்பு யோனத்தான் படைக் கலன்களைப் பையனிடம் கொடுத்து, இதை நகருக்கு எடுத்துச் செல் என்று பணிந்தார்.
41.     பையன் அங்கிருந்து சென்றவுடன், தாவீது தென்புறம் தாம் ஒளிந்திருந்த இடத்தினின்று வெளியே வந்து குப்புற விழுந்து மூன்று முறை வணங்கினார். அதன் பின் அவர் ஒருவரை ஒருவர் முத்தம் செய்து அழுதார்கள். தாவீது மிகவும் அழுதார்கள்.
42.     பின்பு யோனத்தான் தாவீதிடம், நீ சமாதானமாய்ச் செல், ஆண்டவர் நாமிருவரும் செய்து கொண்ட உடன்படிக்கையினன் பொருட்டு ஆண்டவர் உனக்கும் எனக்கும், உன் வழிமரபிற்கும் என் வழிமரபிற்கும் நடுவே என்றென்றும் சாட்சியாய் இருப்பாராக! என்றார். பின்னர், தாவீது தன் வழியே சென்றார். யோனத்தான் நகருக்குத் திரும்பினார்.

அதிகாரம் 21.

1.     பின்பு தாவீது இருந்த குரு அகிமெலக்கிடம் சென்றார். அகிமெலங்கு தாவீதை நோக்கி நடுக்கத்துடன் வந்து அவரிடம், நீ ஏன் தனியே இருக்கிறாய்? உன்னுடன் யாரும் வரவில்லையே? என்றார்.
2.     அதற்கு தாவீது குரு அமெலக்கிடம் அரசர் எனக்கு ஒரு பணியைக்கட்டளையிட்டுள்ளார். நான் உனக்கு அனுப்பிய நோக்கத்தையும் உனக்கு அளித்த கட்டளைய¨யும் ஒருவரும் அறியக்கூடாது என்று அரசர் கட்டளையிட்டுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோற்றியுள்ளார். எனவே ஒரு குறிப்பிட்ட இடத்தில் என்னைச் சந்திக்குமாறு என் தோழற்களுக்குச் சொல்லியுள்ளேன்.
3.     உண்பதற்கு இப்பொழுது உன்னிடம் என்ன இருக்கிறது.? இரண்டு, மூன்று அப்பங்களோ வேறு என்ன உம்மிடம் உள்ளதோ எனக்குத் தாரும் என்றார்.
4.     குரு தாவீதை நோக்கி, தூய அப்பம் உன்னிடம் உள்ளது: சாதரணமாக அப்பங்கள் இல்லை. இளைஞர்களான நீங்கள் பெண்களோடு உறவு கொள்ளாமல் இருந்தால் நீங்கள் அதை உண்ணலாம், என்றார்.
5.     தாவீது குருவை நோக்கி, சாதாரண பயணத்தின் போதே இந்த இளைஞர்கள் உறவுக்கொள்ளவில்லை:இன்றோ சிறப்புப் பணியை மேற்கொள்வதால் நேற்றும் முந்தின நாளும் தூய்மைக் காத்துள்ளார் என்றனர்.
6.     ஆதலால் குரு அவருக்கு தூய அப்பத்தை அவருக்கு அளித்தார்: ஏனெனில் ஆண்டவனின் திரு முன்னிலையில் அப்பத்தைத் தவிர வேறு அப்பம் அங்கு இல்லை.அது எடுக்கப்படும் நாளில் அங்கு சூடான அப்பம் அங்கு வைக்கப்படும்.
7.     சவுல் பணியாளர்களில் ஒருவனும் ஆண்டவரால் தடைசெய்யப்பட்டவனுமான தோயேகு என்ற ஏதோமியன் அந்நாளில் அங்கு இருக்க நேர்ந்தது. அவன் சவுலின் இடையர்களுக்கு தலைவன்.
8.     அப்பொழுது தாவீது அகிமெலக்கிடம், இங்கு ஈட்டியோ வாளோ உம்மிடம் உள்ளதா? அரசனின் கட்டளை அவசரமானதாய் இருந்ததால் என் வாளையோ என் படைக்கலன்களையோ கையோடு கொண்டு வரவில்லை, என்றார்.
9.     குரு அவரிடம் ஏலா பள்ளத்தாக்கில் நீ கொன்ற பெலிஸ்தியன் கோலியாத்தின் வாள், அதோ, ஏபாத்துக்கு பின்னால் துணிகளில் பொதிந்து வைக்கப்பட்டுள்ளது. நீ விருமம்பினால் அதை எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர வேற வாள் இங்கு இல்லை. என்று கூறினார். அதற்கு தாவீது, அதற்கு நிகரானது வேறு எதுவும் இல்லை. அதை எனக்குத் தாரும் என்றார்.
10.     பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார்.
11.     ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். என்று பெண்கள் நடனமாடிப் பாடிக் கொள்ளவில்லையா? என்றனர்.
12.     தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினர்.
13.     அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக் காரண் போல் நடித்தார்.
14.     அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், இதோ அம்மனிதனைப் பாருங்கள்.: இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்?
15.     என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா? என்று சினமுற்றான்.

அதிகாரம் 22.

1.     தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்கு தப்பியோடினார்: அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் அதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றார்.
2.     ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்: அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர்.
3.     தாவீது அங்கிருந்து மோவாபிலுள்ள மிஸ்போக்குச் சென்று, அங்கே மோவாபு மன்னனைப் பார்த்து, கடவுள் எனக்கு என்ன செய்யவிரும்புகிறார் என்பதை நான் அறியுமட்டும் என் தந்தையும் தாயும் உம்மிடம் தங்கியிருக்க எனக்கு அனுமதி தாரும், என்று வேண்டினார்.
4.     பின்பு அவர் அவர்களை மோவாபு மன்னன் பொறுப்பில் விட்டுச் சென்றார். தாவீது குகையில் இருந்த நாளெல்லாம் அவர்கள் மன்னனிடம் தங்கியிருந்தார்.
5.     பின்பு இறைவாக்கினர் காது தாவீதைக் கண்டு நீ குகையில் தங்காதே! யூதா நாட்டுக்குப் புறப்பட்டுப்போ! என்றார். எனவே தாவீது புறப்பட்டு எரேத்து என்ற காட்டிற்குச் சென்றார்.
6.     தாவீதும் அவருடன் இருந்த வீரர்களும் கண்டுபிடிக்கப்பட்டதைச் சவுல் கேள்விப்பட்டார். கிபாவிலிருந்த மலைமீது தமாரிஸ்கு மரத்தின் கீழ் சவுல் கையில் தன் ஈட்டியை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருடைய எல்லா அலுவலர்களும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.
7.     சவுல் தன்னைச் சூழ்ந்து நின்ற பணியாளர்களை நோக்கி, பென்யமின் புதல்வர்களே! கேளுங்கள்: ஈசாயின் மகன் உங்கள் ஒவ்வொருவருக்கும் வயல்களையும் திராட்சைத் தோட்டங்கள¨யும் கொடுப்பானோ? அதனால் எங்கள் எல்லோரையும் ஆயிரவர் தலைவர்களாகவும், நூற்றுவர் தலைவர்களாகவும் ஏற்படுத்த முடியும்?
8.     பின் எப்படி எனக்கெதிராக நீங்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்தீர்கள்? ஈசாயின் மகனுடன் என் மகன் உடன்படிக்கை செய்த போது அதை உங்களில் எவனும் எனக்கு வெளிப்படுத்தவில்லை: என்மேல் மனமிரங்கி அதை எனக்கு தெரிவிக்க உங்களில் ஒருவனும் வரவில்லையே! இந்நாளில் உள்ளதுபோல் எனக்கெதிராகச் சதிசெய்ய என் பணியாளனையே என் மகன் எனக்கு எதிராகத் தூண்டிவிட்டான் என்றான்.
9.     அப்பபொழுது சவுலின் பணியாளருடன் நின்ற ஏதோமியனாகிய தோயோகு, நோபில் உள்ள அகித்தூபின் மகன் அகிமெலக்கிடம் ஈசாயின் மகன் தாவீது வருவதை நான் கண்டேன்.
10.     அகிமெலங்கு அவனுக்காக ஆண்டவரிடம் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தார். மேலும் அவனுக்கு வழியுனவும், பெலிஸ்தியன் கோலியாத்தின் வாளும் கொடுத்தார் என்றான்.அதைக் கேட்ட அரசர், அகித்தூபின் மகனாகிய குரு அகிமெலக்கையும், நோபிலிருக்கிற அவர் தந்தையின் குடும்பத்துக் குருக்கள் அனைவரையும் வரவழைத்தார். எல்லோரும் அரசிடம் வந்தனர்.
11.     அப்பொழுது சவுல், அகிப்தூபின் மகனே கேள் , என அவரும், இதோ உள்ளேன் தலைவரே! என்றார்.
12.     சவுல் அவரிடம், நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்சி செய்தீர்கள்? இந்நாள் வரை அவன் எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்து, அவனுக்காக கடவுளின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தாய்? என்று கேட்டார்.
13.     அதற்கு அகிமெலக்கு அரசரிடம், உம் பணியாளர் அனைவரும் தாவீதைப் போல் உண்மையுள்ளவன் யார்? அரசராகிய உமக்கு மருமகனும் மெய்காப்பாஅரசர் தளர் தலைவனுமாகிய அவன் உம் வீட்டரையே மேன்மைப் பெற்றவர் அன்றோ?
14.     அவனுக்காக நான் கடவுலின் திருவுள்ளத்தைக் கேட்பது இன்று தான் முதல்தடைவையா? இல்லை.
15.     அரசர் தம் பணியாளர் மேலும் என் தந்தை வீட்டார் எவர் மேலும் குற்றம் சுமத்த வேண்டாம்: ஏனெனில் உம் பிணயாளனாகிய எனக்கு இக்காரியம் குறித்து எதுவும் தெரியாது என்று பதிலளித்தார்.
16.     அரசர் அவரிடம் அகிமெலக்கு நீயும் உம் தந்தை வீட்டாரும் கண்டிப்பாகச் சாக வேண்டும் என்றார்.
17.     அரசர் தம்மைச் சூழந்து நின்ற காவலர்களிடம், நீங்கள் சென்று ஆண்டவரின் குருக்களை கொன்று விடுங்கள்: ஏனெனில் அவர்கள் தாவீது ஓடிப்போனதை அறிந்தும் எனக்கு அறிவிக்கவில்லை.
18.     அப்போது அரசர் தோயோகிடம், நீ சென்ற தாவீதுக்கு உடன்பட்ட குருக்களை வீழ்த்து , என்று கட்டளையிட்டார். உடனே ஏதோமியன் தோயோகு சென்று குருக்களை வெட்டி வீழ்த்தினார். அன்றுமட்டும் அவன் நார்பட்டு ஏபோது அணிந்திருந்த எண்பத்தைந்து பேரைக் கொன்றான்.
19.     மேலும் அவன் குருக்கள் நகராகிய நோபில் ஆண், பெண், சிறுவர், பாலகர், ஆடுமாடுகள், கழுதைகள் ஆகியவற்றை வாளுக்கு இரையாக்கினார்.
20.     ஆனால் அகித்தூபின் மகனான அகிமெலக்கின் புதல்வர்களில் ஒருவரான அபியத்தார் தப்பியோடித் தாவீதை அடைந்தார்.
21.     ஆண்டவரின் குருக்களை சவுல் கொன்றுவிட்டார் என்று அபியத்தார் தாவீதிடம் கூறினார்.
22.     தாவீது அபியத்தாரிடம், ஏதோமியன் தோயோகு அங்கு இருந்ததால், அவன் கண்டிப்பாகச் சவுலிடம் அறிவிப்பான் என்பதை அன்றே அறிவித்திருந்தேன்: உன் தந்தை வீட்டார் அனைவரும் இறப்பதற்கு நானே காரணம்!
23.     என்னோடு தங்கு! அஞ்சாதே! என் உயிரைப் பறிக்கத் தேடுவான்: ஆனால் என்னோடு நீ இருந்தால் பாதுகாப்புடன் நீ இருப்பாய் என்றார்.

அதிகாரம் 23.

1.     பின்னர், பெலிஸ்தியர் கெயிலாவுக்கு எதிராகப் போர் தொடுத்துக் களஞ்சியங்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது.
2.     ஆதலால் தாவீது, நான் சென்று இப்பெலிஸ்தியரை முறியடிக்கலாமா? என்று ஆண்டவரிடம் ஆலோசனை கேட்டதற்கு, ஆண்டவர் தாவீதிடம், நீ போய் பெலிஸ்தியரை முறியடித்துக் கெயிலாவைக் காப்பாற்று! என்று பதிலளித்தார்.
3.     ஆனால் தாவீதின் வீரர்கள் அவரை நோக்கி, நாம் யூதாவில் இருக்கும் போதே இப்படி அஞ்சுகிறோம். பெலிஸ்தியர் படைகளுக்கு எதிராக நாம் கெயிலாவுக்கு சென்றால் இன்னும் எவ்வளவு அஞ்வோம்? என்றன+.
4.     தாவீது மீண்டும் ஆண்டவரிடம் கேட்டார்: ஆண்டவர் மீண்டும் மறுமொழியாக, கெயிலாவுக்குப் புறப்பட்டுப் போ! ஏனெனில் பெலிஸ்தியரை உன்னிடம் ஒப்புவிப்பேன் என்றார்.
5.     பின்பு தாவீதும் அவர்தம் வீரர்களும் கெயிலாவுக்குச் சென்று, பெலிஸ்தியரோடு போரிட்டனர். அவர் அவர்களுக்குப் பேரிழப்பை உண்டாக்கி அவர்களின் கால்நடைகளை ஓட்டிச்சென்றனர்.இவ்வாறு தாவீது கெயிலாவாழ் மக்களை விடுவித்தார்.
6.     அகிமெலக்கின் மகன் அபியத்தார் தாவீதிடம் ஓடிவந்த போது ஓர் ஏபோதை தம்முடன் எடுத்து வந்திருந்தார்.
7.     பின்னர் தாவீது கெயிலாவுக்கு வந்திருப்பது பற்றிச் சவுலுக்கு தெரிவிக்கப்பட்டபோது, சவுல் கடவுள் அவனை என்னிடம் ஒப்புவித்துள்ளார். ஏனெனில் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள நகரில் நுழைந்து அவன்மாட்டிக் கொண்டான் என்றார்.
8.     அடுத்து, கெயிலாமீது படையெடுத்த தாவீதையும் அவர் வீரர்களையும் முற்றுக்கையிடுமாறு சவுல் தம் எல்லோரையும் போருக்கு அழைத்தார்.
9.     சவுல் தமக்குத் தீங்கு செய்யத்திட்டமிடுகிறார் என்று தாவீது அறிந்து, குரு அபியத்தாரிடம், ஏபோதை இங்குக் கொண்டுவா என்றார்.
10.     பிறகு தாவீது, இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே, என் பொருட்டு சவுல் கெயிலாவுக்கு வந்து அந்நகரை அழிக்க திட்டமிட்டுள்ளதை உம் அடியான் நான் பன்முறை கேள்விப்பட்டேன்.
11.     கெயிலாவின் குடிமக்கள் என்னை அவரிடம் ஒப்புவிப்பார்களா? உம் அடியோன் கேள்விப்பட்டது போல் சவுல் வருவாரா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவன் வருவான் என்று பதிலளித்தார்.
12.     மீண்டும் தாவீது, கெயிலா மக்கள் என்னையும் என் வீரர்களையும் சவுலிடம் ஒப்புவிப்பார்களா? என்று கேட்டார். அதற்கு ஆண்டவர், அவர்கள் உங்களை ஒப்புவிப்பார்கள் என்றார்.
13.     பின்பு தாவீதும் அவருடன் இருந்த சுமார் அறுநூறு பேரும் கெயிலாவைவிட்டுப் புறப்பட்டு இடமாறிச் சென்று கொண்டிருந்தார்கள். தாவீது தப்பிவிட்டதைக் கேள்விப்பட்ட சவுல் மேலும் தொடர்வதைக் கைவிட்டார்.
14.     தாவீது பாளைவனத்தில் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். மலை நாடான சீபு பாலை நிலப் பகுதிகளில் தங்கியிருந்தவரைச் சவுல் ஒவ்வொரு நாளும் தேடியும் கடவுள் அவரிடம் ஒப்புவிக்கவில்லை.
15.     சவுல் தம்மைக் கொலைச் செய்யத் தேடுகிறார் என்று அறிந்த தாவீது மிகுந்த அச்சம் கொண்டார்: ஆதலால் ஓர்சாவில் உள்ள சீபு பாலைநிலத்தில் தங்கியிருந்தார்.
16.     சவுலின் மகன் யோனத்தான் புறப்பட்டு ஓர்சாவில் இருந்த தாவீதிடம் வந்து கடவுள் அவரைப் பாதுகாப்பார் என்று அவரைத் திடப்படுத்தினார்.
17.     அவர் தாவீதிடம் அஞ்சாதே! என் தந்தை உன்னைக் கண்டு பிடிக்கமாட்டார். நீ இஸ்ரயேலுக்கு அரசனாவாய்: அப்பொழுது நான் உனக்கு அடுத்த இடத்தை வகிப்பேன்: என் தந்தை சவுல் கூட இதை அறிவார் என்றார்.
18.     ஆண்டவர் திருமுன் இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். தாவீது ஓர்சாவிலேயே இருக்க, யோனத்தான் வீடுதிரும்பினான்.
19.     பின்பு சீபியர் கிபாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எங்கள் பகுதியில் எசிமேனுக்குத் தெற்கே உள்ள அக்கிலா என்ற மலைநாட்டில் ஓர்சாவின் பாதுகாப்பான இடத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறான் அல்லவா?
20.     அரசே, உம் விருப்பத்தின் படி இப்பொழுதே வாரும்: அவனை நாங்களே அரசரிடம் ஒப்புவிக்கிறோம் என்று கூறினார்.
21.     சவுல் அவர்களைப் பார்த்து, நீங்கள் என் மீது இரக்கம் காட்டியதால் ஆண்டவரின் ஆசியைப் பெறுவீர்களாக!
22.     நீங்கள் போய் நடமாடுகிற இடம் எதுவென்றும், யார் அவனை அங்கு பார்த்தவன் என்றும் இன்றும் நன்றாக ஆய்ந்து அறியுங்கள்: ஏனெனில் அவன் மிகவும் சூழ்ச்சிமிக்கவன் என்று எனக்குத் தெரிய வந்தது.
23.     ஆதலால் அவன் ஒளிந்துக் கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் குறித்துக் கொண்டு, எல்லாத் தகவல்களுடன் என்னிடம் திரும்பி வாருங்கள். அப்பொழுது நான் உங்களோடு செல்வேன். அவன் நாட்டில் இருந்தால் பல்லாயிர யூதா மக்கள் வாழும் பகுதியிலும் அவனைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன் என்றார்.
24.     அவர்கள் சவுலுக்கு முன்னரே சீபுக்குப் புறப்பட்டுச் சென்றனர். பின்பு தாவீதும் அவர்தம் ஆள்களும் எசிமோனுக்குத் தெற்கே, அராபாவிலுள்ள மாவோன் பாலைநிலத்தில் இருந்தனர்.
25.     சவுலும் அவர் ஆள்களும் அவரைத் தேடிச் சென்றனர். தாவீது இதை அறிந்து மாவோன் பாலைநிலத்தில் உள்ள பாறைக்குச் சென்றார். சவுல் இதை கேள்வியுற்று, அவரும் மாவோன் பாலைநிலத்தில் தாவீதைச் தேடிச் சென்றார்.
26.     சவுல் மலையின் ஒரு பக்கத்தில் செல்ல, தாவீதும் அவர் ஆள்களும் மலையின் மறுப்பக்கத்தில் நடந்தனர். சவுலிடமிருந்து தப்பித்துக்கொள்ள தாவீது விரைந்து சென்ற போதும், சவுலும் அவர்தம் ஆள்களும் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் பிடிப்பதற்கு வளைத்துக் கொண்டார்.
27.     அவ்வேளையில் ஒரு தூதன் சவுலிடம் வந்து, விரைந்து வாரும்! பெலிஸ்தியர் நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றார்.
28.     அதனால் சவுல் தாவீதைக் தொடர்வதைக் கைவிட்டு, பெலிஸ்தியரை எதிர்க்கச் திரும்பச் சென்றார். ஆதலின் அவ்விடம், பிரிக்கும் பாறை என்று அழைக்கப்பட்டது.
29.     தாவீது அங்கிருந்து புறப்பட்டு ஏன்கேதிலுள்ள பாதுகாப்பான இடத்தில் தங்கினார்.

அதிகாரம் 24.

1.     சவுல் பெலிஸ்திரைத் தொடர்வதைக் கைவிட்டுத் திரும்பிய போது: இதோ ஏன்கேதிப் பாலைநிலத்தில் தாவீது இருக்கிறான் என்று தெரிவிக்கப்பட்டது.
2.     சவுல் இஸ்ரயேல் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் தாவீதையும் அவர்தம் ஆள்களையும் தேடி வரையாடுகளின் பாறைகளுக்கு எதிர்புறம் சென்றனர்.
3.     அவர் சென்ற போது வழியோரத்தில் ஆட்டுப் பட்டிகளைக் கண்டார்: அதனருகில் ஒரு குகை இருந்தது. இயற்க்கைகடன் கழிப்பதற்கு சவுல் அதனுள் சென்றார். அப்பொழுது தாவீதும் அவர்தம் ஆள்களும் அக்குகையின் உட்பகுதியில் இருந்தனர்.
4.     தாவீதின் ஆள்கள் அவரிடம், இதோ! உன் எதிரியை உன்னிடம் ஒப்புவிப்பேன். உன் விருப்பத்திற்கு ஏற்ப அவனுக்குச் செய், என்று ஆண்டவர் சொன்ன நாள் இதுவே! என்றனர். உடனே தாவீது தவழ்ந்து சென்று சவுலின் மேலங்கியின் தொங்கலை அவருக்குத் தெரியாமல் அறுத்தார்.
5.     தாவீது சவுலின் தொங்கலை அறுத்தப்பின் அதற்காக மனம் வருந்தினார்.
6.     அவர் தம் ஆள்களை பார்த்து, ஆண்டவர் திருப்பொழிவு செய்த என் தலைவருக்கும் எத்தீங்கும் ¦ச்யயாதவாறு ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரானால் நான் அவர் மேல் கைவைக்ககூடாது என்றார்.
7.     ஆதலின் தம் ஆள்கள் சவுலைத் தாக்கதவாறு தாவீது இவ்வார்த்தைகளால் அவர்களைத் தடைசெய்தார். பின்பு சவுல் எழுந்து குகையை விட்டு தம் வழியே சென்றார்.
8.     அதன்பின் தாவீது எழுந்து குகையிலிருந்து வெளியேறிச் சவுலைப் பின் தொடர்ந்து, அரசே, என் தலைவரே! என்று அழித்தார். சவுல் பின்புறம் திரும்பிய போது தாவீது தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கினார்.
9.     பின்பு தாவீது சவுலை நோக்கி, தாவீது உமக்குத் தீங்கு செய்யத் தேடுகிறான் என்று சொல்லும் மனிதனின் வார்த்தைகளைக் கேட்கலாமா?
10.     இதோ! குகையில் ஆண்டவர் என்னிடம் ஒப்புவித்தார் என்பதை இன்று எம் கண்களே கண்டன: உம்மைக் கொல்ல வேண்டுமெனச் சிலர் என்னை வற்புறுத்தினார்கள்: ஆனால் அவர் ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பெற்றவர்: என் தலைவருக்கு எதிராக நான் கை ஓங்கக் கூடாது என்று சொல்லி நான்தான் உம்மைக் காப்பாற்றினேன்.
11.     என் தந்தையே பாரும்! என் கையிலிருக்கும் உம் மேலங்கியின் தொங்கலைப் பாரும். உம்மைக் கொல்லாமல் உம் மேலங்கியின் தொங்கலை மட்டும் அறுத்து எடுத்துள்ள என் செயலைப் பார்த்தாலே என்னிடம் யாதொரு குற்றமோ துரோகமோ இல்லையென்பதை நீர் அறிவீர்! நீர் என் உயிரைப் பறிக்கத் தேடினாலும், உமக்கெதிராக நான் ஒரு குற்றமும் செய்யவில்லை.
12.     உமக்கு எனக்கும் ஆண்டவர் நடுவராய் இருப்பாராக! என்பொருட்டு ஆண்டவரே உமக்கு நீதி வழங்கட்டும்: ஆனால் உமக்கு எதிராக என் கை எழாது.
13.     முன்னோரின் வாய்மொழிக்கேற்ப, தீயோரிடமிருந்தே தீமை பிறக்கும் ஆதலால் உம் மேல் நான் கைவைக்க மாட்டேன்.
14.     இஸ்ரயேலின் அரசர் யாரைத் தேடிப் புறப்பட்டார்? யாரைப் பின் தொடர்கிறீர்? ஒரு செத்த நாயை அன்றோ? ஒரு தெள்ளுப் பூச்சியை அன்றோ?
15.     ஆண்டவர் நடுவராயிருந்து உமக்கும் எமக்கும் நீதி வழங்குவாராக! அவரே எனக்காக வழக்காடி உம் கையினின்று என்ன¨ விடுவிப்பாராக! என்றார்.
16.     தாவீது இவ்வாறு சவுலிடம் பேசி முடித்தப்பின் சவுல், என்மகன் தாவீதே! இது உன் குரல்தானா! என்று சொல்லி உரத்த குரலில் அழுதார்.
17.     அவர் தாவீதிடம், நீ என்னிலும் நீதிமான். நீ எனக்கு நன்மை செய்தாய்: ஆனால் நானோ உனக்கு தீங்கு செய்தேன்.
18.     ஆண்டவர் என்னை உன்னிடம் ஒப்புவித்திருந்தும் நீ என்னைக் கொல்லவில்லை. இதனால் நீ எனக்கு நன்மையே செய்து வந்திருப்பதை இன்று நீ வெளிப்படுத்தியிருக்கிறாய்.
19.     ஏனெனில் ஒருவன் தன் எதிரியைக் கண்ட பின் அவன் நலமுடன் செல்ல அனுமதிப்பானா? இன்று நீ எனக்கு செய்த நன்மைக்கு ஈடாக ஆண்டவரும் உனக்கு நன்மை செய்வாராக!
20.     இதோ, நீ எனக்கு திண்ணமாய் அரசனாவாய் என்றும் இஸ்ரயேலின் அரசை நீ உறுதிப்படுத்துவாய் என்று நான் அறிகிறேன்.
21.     ஆதலால் பின்வரும் என் வழிமரபை நீ வேரறுப்பதில்லை என்றும் என் தந்தை வீட்டாரிலிருந்து என் பெயரை அழிக்கமாட்டாய் என்றும் ஆண்டவர் மேல் எனக்கு ஆணையிட்டுக் கூறு என்றார்.
22.     அவ்வாறே தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கூறினார். பின்னர் சவுல் வீடு திரும்ப, தாவீதும் அவர் தம் ஆள்களும் பாதுகாப்பான இடம் நோக்கிச் சென்றனர்.

அதிகாரம் 25.

1.     சாமுவேல் இறந்தார்: இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர். தாவீது புறப்பட்டு பாரான் பாலைநிலத்திற்குச் சென்றார்.
2.     கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.
3.     அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்: அவன் கணவனோ முரடனும் இழிந்தவனுமாய் இருந்தான். அவன் ஒரு காலோபியன்.
4.     நாபால் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்ததிப்பதற்காகத் தாவீது பாலைநிலத்தில் கேள்வியுற்றார்.
5.     தாவீது அங்கே பத்து இளைஞர்களை அனுப்ப எண்ணி, அப் பத்துப் பேரை அழைத்து. நீங்கள் கர்மேலுக்குச் சென்று அங்கே நாபாலைக் கண்டு என் பெயரால் அவனுக்கு சமாதான வாழ்த்து கூறுங்கள்.
6.     அவனை நோக்கி, உமக்கும், எம் குடும்பத்துக்கும், உமக்கு உள்ள அனைத்துக்கும் நலம் உண்டவதாக!
7.     ஆடுகள் உரோமம் கத்தரிப்பவர்கள் உம்மிடம் இருக்கிறார்கள் என்று கேள்வியுற்றேன்! உம் இடையர்க்ள எம்மோடு இருந்தார்கள்: நாங்கள் அவர்களை துன்புறுத்தியதில்லை: கர்மேலில் அவர்கள் இருந்த காலம் மெல்லாம் எதையும் இழக்கவில்லை.
8.     உம் பணியாளர்களை கேளும்: அவர்கள் உமக்கு சொல்வார்கள். ஆதலால் இந்த இளைஞர்களுக்கு உம் கண்களில் தயவு கிடைக்கட்டும். ஏனெனில் நாங்கள் ஒரு திருவிழா நாளில் வந்துள்ளோம். உம்மால் கொடுக்க முடிந்ததை உம் அடியார்களுக்கு உம் புதல்வன் தாவீதுக்கும் தந்தருள்க! எனக் கூறுங்கள் என்று சொல்லியனுப்பினார்.
9.     தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்ற¨யும் கூறிக் காத்திருந்தனர்.
10.     நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.
11.     என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா? என்று பதிலளித்தான்.
12.     ஆதலால் தாவீதின் இளைஞர்கள் அவரிடம் எல்லாவற்றையும் அப்படியே கூறினர்.
13.     தாவீது தம் ஆள்களை நோக்கி, நீங்கள் அவரவர் வாளை எடுத்துக் கட்டிக்கொள்ளுங்கள், என்றார். அதன்படி அவர்கள் ஒவ்வொருவனும் தன் வாளை கட்டிக்கொண்டான்: தாவீதும் கட்டிகொண்டார். அவருடன் நானூறு பேர் செல்ல, இருநூறு பேர் பயணமூட்டைகளின் அருகில் இருந்தனர்.
14.     நாபாலுடைய பணியாள்களின் ஒருவன் அவன் மனைவி அபிகாலிடம், இதோ நம் தலைவருக்கு வாழ்த்துச் சொல்ல பாலைநிலத்திலிருந்து தாவீது தூதர்களை அனுப்பினார். அவர்களை இவர் அவம்மானப்படுத்தினார்.
15.     இருப்பினும் அந்த ஆள்கள் எங்களுக்கு நன்மையே செய்தார்: எங்களைத் துன்புறுத்தியதில்லை, நாங்கள் வயல் வெளியில் அவர்களோடு நடமாடிய காலமெல்லாம் எதையும் இழக்கவில்லை.
16.     நாங்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டு அவர்களோடு வாழ்நத நாள் முழுவதும் அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றி சுவராக இருந்தார்.
17.     எனவே இதையறிந்து நீ யோசித்து என்ன செய்ய முடியுமென்று பாரும்: ஏனெனில் நம் தலைவர் மேலும் அவர் வீட்டார் மேலும் கண்டிப்பாக தீமை வரவிருக்கிறது. இவரோ யாருமே அவரோடு பேசத்துணியாத அளவுக்கு தீய குணமுடையவராய் இருக்கிறார் என்றனர்.
18.     இதைக் கேட்ட அபிகாயில் இருநூறு அப்பங்கள், இரண்டு துருத்தி திராட்சைப்பழ இரசம், தோலுரித்த ஜந்து ஆடுகள், ஜந்து படி வறுத்த பயறு, திராட்சைப் பழ அடைகள் நூறு அத்திப்பழ அடைகள் இருநூறு ஆகியவ்றறை விரைந்தே எடுத்து ஒரு கழுதை மேல் ஏற்றினார்.
19.     அவர் தம் பணியாளர்களை நோக்கி, நீங்கள் எனக்கு முன்னே செல்லுங்கள், நான் உங்களுக்குப் பின் வருகிறேன், என்றார்.
20.     அவர் கழுதை மேல் ஏறிப் பயணமாகி, மலைச் சரிவுப் பாதையில் இறங்கி வருகையில் தாவீது அவருடைய ஆள்களும் அவரை நோக்கி இறங்கி வந்தனர். அவர் அவர்களை சந்தித்தார்.
21.     அப்பொழுது தாவீது, இந்த மனிதனுக்குப் பாலைநிலத்தில் இருந்ததையெல்லாம் நான் காப்பாற்றியது வீண்தான்! அவனுடைய பொருள் எதையும் அவன் இழக்கவில்லை. இருப்பினும் நன்மைக்குப் பதிலாக அவன் தீமையே செய்தான்.
22.     அவனுக்குச் சொந்த மாணவர்களில் ஒர் ஆண்மகன் கூடப் பொழுது விடியும் உயிரோடு விட்டு வைத்தால், கடவுள் அதற்கும் அதற்கு மேலும் அவரைத் தண்டிப்பாராக என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
23.     அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார்.
24.     அவர் தாவீதின் காலில் விழுந்து, என் தலைவரே பழி என் மேல் மட்டும் இருக்கட்டும்! உம் அடியவள் நீ சொல்லப் போவதை நீர் செவிக் கொடுத்துக் கேட்க வேண்டுகிறேன்.
25.     என் தலைவரே, அந்தத் தீய குணமுடைய மனிதராகிய நாபாலைப் பொருட்படுத்த வேண்டாம் ஏனெனில் அவர் தம் பெயருக்கேற்ப ஒரு மூடர். நாபால் என்பது அவருடைய பெயர்: அதன் படி மூடத்தணமும் அவருக்குண்டு. இளைஞர்களை உம் அடியவள் பார்க்கவில்லை.
26.     இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறு, நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்கு தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!
27.     இப்பொழுது உம் அடியவள் என் தலைவருக்கு கொண்டு வந்துள்ள காணிக்கைகளை ஏற்றுக் கொண்டு என் தலைவரின் அடிச்சுவட்டைப் பின் தொடரும் இவ்விளைஞர்களிடம் அளிப்பாராக!
28.     உம் அடியவளின் குற்றத்தை மன்னிக்க வேண்டுகிறேன்: என் தலைவரே நீர் ஆண்டவரின் போர்களை நடத்துவதால், என் தலைவராகிய ஆண்டவர் உமக்கு ஒரு நிலையான வீட்டை உறுதியாக கட்டிய¦ழுப்புவார். உம் வாழ்நாள் முழுவதும் எத்தீங்கும் உன்னை அணுகாது!
29.     உம்மைத் தாக்கவும் உம்மைக் கொல்லவும் யாராவது எப்பொழுதாவது எழுந்தால், என் தலைவரின் உயிர் உம் கடவுளாகிய ஆண்டவரின் பாதுகாப்பில் வாழ்வோரின் கட்டுகளில் இருக்கட்டும். உம் எதிரிகிளன் உயிர் கவனத்தில் வைத்து எறிந்தார்போல் எறியப்படும்.
30.     ஆண்டவர் தலைவாராகிய உம்மைக் குறித்துத்தாம் வாக்களித்த நன்மைகளை எல்லாம் செய்து இஸ்ரயேலின் அரசராக ஏற்படுத்துவார்.
31.     அப்பொழுது காரணமின்றி இரத்தம் சிந்தினது குறித்தோ, என் தலைவர் பழிக்குப் பழி வாங்கியது குறித்தோ, என் தலைவருக்கு துயரமோ மனவருத்தமோ உண்டாகாது. எம் தலைவராகிய ஆண்டவர் உமக்கு வெற்றியளிக்கின்றபோது உம் அடியவளை நினைவு கூர்ந்தருளும்! என்றார்.
32.     தாவீது அபிகாயிலை நோக்கி, இன்று உன்னை என்னிடம் அனுப்பிய இஸ்லயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!
33.     இரத்தப் பழிக்குற்றத்திலிருந்தும் பழித்தீர்ப்பதிலிருந்தும் என்னை தடை செய்த நீ ஆசிப்பெறுவதாக! உன் நுண்ணறிவும் ஆசிப்பெறுவதாக!
34.     நீ என்னை விரைவாக சந்திக்க வராதிருந்தால் பொழுது விடியலுக்குள் நாபாலுக்குச் சொந்தமான வயல்களில் ஓர் ஆண்மகனைக் கூட உயிரோடு விட்டு வைத்திருக்க மாட்டேன். இதை உனக்கு தீங்கு செய்வரிலிருந்து என்னைத் தடுத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உறுதியாகச் சொல்கிறேன்! என்றார்.
35.     பின்பு அபிகாலில் தாம் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, சமாதனத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவிக் கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.
36.     அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.
37.     காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.
38.     ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.
39.     நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! நாபாலின் தீமைகள் அவன் தலைமேல் விழுமாறு ஆண்டவர் அதைத் திருப்பிவிட்டார். பின்பு அபிகாயிலை மணந்துக்கொள்வதற்காக தாவீது அவரிடம் தூதனுப்பினார்.
40.     தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.
41.     அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ! உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக! என்றாள்.
42.     உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஜவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார்.
43.     இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமையும் தாவீது மணந்து கொண்டார்: அவர்கள் இருவரும் அவருக்கு மனைவியானார்கள்.
44.     சவுல் தம் புதல்வியையும் தாவீதின் மனைவியான மீக்காலைக் கல்லிம் ஊரானாகிய இலாயிசின் மகன் பல்திக்கு மணமுடித்துக் கொடுத்திருந்தார்.

அதிகாரம் 26.

1.     பின்னர் சீபியர் கிபாயாவிலிருந்த சவுலிடம் சென்று, தாவீது எசிமேனுக்கு எதிரே உள்ள அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான் என்று கூறினார்.
2.     ஆதலால் சவுல் சீபு பாலைநிலத்தில் தாவீதைத் தேடுவதற்காக இஸ்ரயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் பேருடன் அதை நோக்கி புறப்பட்டு ¦ச்னறார்.
3.     சவுல் எசிமேனுக்கு எதிரே சாலையோரம் அக்கிலா குன்றின் மேல் பாசறை அமைத்தார். ஆனால் தாவீது பாலைநிலத்திலேயே இருந்தார். சவுல் பாலை நிலத்தில் தன்னை பின் தொடர்வதை அறிந்து,
4.     தாவீது ஒற்றர்களை அனுப்பி சவுல் வந்தது உண்மைத்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.
5.     உடனே தாவீது எழுந்து சவுல் பாளையம் இறங்கியிருந்த இடத்திற்கே சென்றார்: சவுலும் அவர் படைத்தலைவனும் நேரின் மகனுமான அப்னேரும் படுத்திருந்த இடத்தைப் பார்த்தார்: சவுல் பாசறையினுள் படுத்திருக்க, அவர்தம் வீரர்கள் அவரைச் சுற்றிலும் படுத்திருந்தனர்.
6.     அப்பொழுது தாவீது இத்தியன் அகிமெலக்கையும் செரூயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் நோக்கி, சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்? என்று கேட்க நான் வருகிறேன் என்று அபிசாய் பதிலளித்தார்.
7.     ஆதலால் தாவீதும் அபிசாயும் இரவில் அப்பாளையத்திற்குச் சென்றனர்: சவுல் கூடாரத்தினுள் தூங்குவதையும் அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி குத்தியிருப்பதையும் கண்டனர்: அப்னேரும் அவரது படைவீரர்களும் அவரைச் சுற்றிக் படுத்து உறங்கினர்.
8.     அபிசாய் தாவீதிடம் இந்நாளில் கடவுள் உம் எதிரியை உம்மிடம் ஒப்புவித்துள்ளார். ஆதலால் இப்பொழுது நான் அவரை ஈட்டியால் இரண்டு முறைக் குத்தாமல் ஒரே குத்தாய் நிலத்தில் பதியப்போகிறேன் என்றான்.
9.     ஆனால் தாவீது அபிசாயியை நோக்கி, அவரைக் கொல்லாதே! ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் கைவைத்துவிட்டுக் குற்றமற்று இருப்பவன் யார்? என்று சொல்லித் தடுத்தார்.
10.     மேலும் தாவீது வாழும் ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவரே அவரைக் கொல்லட்டும். அவர் காலம் நிறைவுற்று தாமதமாக இருக்கட்டும் அல்லது போரில் சென்று அவர் மடியட்டும்!
11.     ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கைவைக்காதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக! எனவே அவர் தலைமாட்டில் இருக்கும் ஈட்டியையும் தண்ணீர் குவளையையும் எடுத்துக் கொண்டு புறப்படுவோம் என்றார்.
12.     அவ்வாறே தாவீது தலைமாட்டில் இருந்த ஈட்டியையும் தண்ணீர்க் குவளையையும் எடுத்துக் கொண்டப்பின், அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர்களில் ஒருவரும் விழிக்கவில்லை: அதைக் காணவுமில்லை: அறியவுமில்லை: ஆண்டவர் அவருக்கு ஆழ்ந்த உறக்கத்தை அளித்திருந்தபடியால் அவர்கள் எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
13.     பின்பு தாவீது கடந்துச் சென்று தொலைவிலிருந்த ஒரு குன்றின் மீது ஏறி நின்றார். அவர்களிடையே மிகுந்த இடைவெளி இருந்தது.
14.     அங்கிருந்து படைவீரர்களையும் நேரின் மகன் அப்னோரையும் தாவீது கூப்பிட்டு, அப்பேனர், நீ மறுமொழி சொல்ல மாட்டாயா? என்று கேட்டார்? அப்னேர் அதற்கு அரசரை நேராக அழைக்க நீ யார்? என்று கேட்டான்.
15.     அப்பொழுது தாவீது அப்னேரிடம், நீ வீரன் அல்லவா? இஸ்ரயேலில் உனக்கு நிகரானவன் யார்? பின் ஏன் உன் தலைவராகிய விழித்திருந்து காக்கவில்லை? மக்களில் ஒருவன் என் தலைவரைக் கொல்ல அங்கு வந்தானே!
16.     நீ செய்த இச்செயல் சரியல்ல: ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்ட உங்கள் தலைவரை நீங்கள் விழித்திருந்து காக்கத் தவறியதால், நீ சாவுக்கு உள்ளாவாய் என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன். அரசரின் ஈட்டியையும் அவர் தலைமாட்டிலிருந்த குவளையையும் இப்பொழுது எங்கே உள்ளன என்று பார் என்றார்.
17.     சவுல் தாவீதின் குரலை அறிந்துக் கொண்டு, என் மகன் தாவீதே, இது உன் குரல்தானா?என்று கேட்க அதற்குத் தாவீது என் தலைவராகிய அரசே! இது என் குரல் தான் என்றார்.
18.     மீண்டும் அவர், என் தலைவராகிய நீர் உம் அடியனைப் இப்படிப் பின் தொடர்ந்து வருவது ஏன்? நான் என்ன செய்தேன்? என்னிடமுள்ள குற்றம் தான் என்ன?
19.     ஆதலால் இப்பொழுது அரசராகிய என் தலைவர் அடியானின் வார்த்தைகளைக் கேட்பாராக! ஆண்டவர் உம்மை எதிராக ஏவி விட்டிருப்பின், அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்: மனிதர்க்ள அப்படிச் செய்திருந்தால் அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுக! ஏனெனில் நீ சென்று வேற்றுத் தெய்வங்களை வழிப்படு என்று அவர்கள் கூறி நான் ஆண்டவருடைய உரிமையில் பங்கு பெருவதிலிருந்து என்னைத் துரத்திவிட்டார்.
20.     ஆதலால் ஆண்டவர் திருமுன்னிலைக்கு வெகு தொலைவில் உள்ள நிலத்தில் என் இரத்தம் சிந்தப்படாதிருக்கட்டும்! ஏனெனில் மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவதுபோல் இஸ்ரயேலின் அரசர் ஒரு தொள்ளுப்பூச்சியைத் தேடி வந்துள்ளார் என்றார்.
21.     அப்பொழுது சவுல் நான் பாவம் செய்துள்ளேன் என் மகன் தாவீதே! திரும்பி வா, என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்தபடியால் இனி நான் உனக்கு எத்தீங்கும் செய்யமாட்டேன். இதோ, நான் மூடத்தனமாய் நடந்து பெரும் தவறு இழைக்கிறேன் என்றார்.
22.     தாவீது மறுமொழியாக, அரசே உம் ஈட்டி இதோ உள்ளது: இளைஞரில் ஒருவன் வந்து இப்போது அதைக் கொண்டு போகட்டும்.
23.     அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் ஏற்ப ஆண்டவர் உம்மை ஒப்புவித்து ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் மேல் நான் கை வைக்கவில்லை.
24.     இன்று உம் உயிர் என் கண்களில் மிகவும் மதிப்பு மிகுந்ததாக இருந்தது, போல் என் உயிரும் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருப்பதாக! அவரே என்னை இக்கட்டிலிருந்து விடுவிப்பாராக! என்றார்.
25.     அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி, என் மகன் தாவீதே! நீ ஆசி பெறுவாயாக! நீ பலக் காரியங்களை செய்வாய்: அவையனைத்திலும் வெற்றி பெறுவாய்! என்று வாழ்த்தினார். பின்னர் தாவீது தம் வழியே செல்ல, சவுல் தம் இருப்பிடம் திரும்பினார்.

அதிகாரம் 27.

1.     பின்னர் தாவீது இங்கே சவுலின் கையில் ஒருநாள் மடிவது திண்ணம். ஆதலால் பெலிஸ்தியர் நாட்டுக்குச் சென்று தப்பித்துக் கொள்வதைவிட எனக்கு வேறு வழியில்லை: அப்பொழுது தான் இஸ்ரயேலின் எல்லைக்குள் என்னைக் கண்டு பிடிக்கலாமென்ற நம்பிக்கை அற்றுப் போகும்: நானும் அவர் கையிலிருந்து தப்பி விடுவேன் என்று தமக்குள் சொல்லிக் கொண்டார்.
2.     பின் தாவீது அவருடன் அறுநூறு ஆள்களும் புறப்பட்டுச் சென்று மாவோசின் மகனும் காத்து மன்னருமான ஆக்கிசு என்பவரிடம் சேர்நதனர்.
3.     அங்கே தாவீது அவர் தம் ஆள்களும் அவரவர் குடும்பத்தாரும் தாவீதோடு அவரது இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், நாபாலின் மனைவியும் கர்மேலைச் சார்ந்தவருமான காத்து நகரில் ஆக்கிசுடன் தங்கினார்.
4.     தாவீது காத்து நகருக்கு ஓடிவிட்டார் என்று சவுலுக்கு அறிவித்தார். அதன் பின் அவர் அவரைத் தேடிச்செல்லவில்லை.
5.     தாவீது ஆக்கிசை நோக்கி, என் மேல் உமக்கு இரக்கம் இருந்தால் நான் குடியிருக்க நாட்டுப் புற ஊர்கள் ஒன்றில் எனக்கு இடம் தாரும்: உம் அடியன் ஏன் தலைநகரில் வாழ வேண்டும்? என்றார்.
6.     ஆதலால் அன்று ஆக்கிசு அவருக்குச் சிக்லாகைக் கொடுத்தார்: அதனால் இந்நாள் வரை சிக்லாகு யூதா அரசருக்கு உரியதாய் இருக்கிறது.
7.     தாவீது பெலிஸ்திய எல்லைக்குள் ஓர் ஆண்டும் நான்கு மாதங்களும் குடியிருந்தார்.
8.     பின்னர் தாவீதும் அவர் தம் ஆள்களும் புறப்பட்டுக் கெசூரியர், கிர்சியர், அமலேக்கியர் ஆகியேரைக் கொள்ளையடித்துச் சென்றனர். ஏனெனில் சூர் தொடங்கி எகிப்து நாடுவரை உள்ள நிலப்பகுதியில் பண்டைக்காலந்தொட்டு இவர்கள் குடியிருந்தனர்.
9.     தாவீது அந்நாட்டைத் தாக்கியபோது ஆண் பெண் எவரையும் விட்டுவைக்கவில்லை: ஆனால் ஆடு, மாடுகள் கழுதைகள், எருது, ஒட்டகங்கள், ஆடைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆக்கிசிடம் திரும்பினார்.
10.     ஆக்கிசு அவரிடம், .இன்று நீ யாரைக் கொள்ளையடித்தீர்? என்று கேட்க தாவீது மறுமொழியாக, யூதாவின் தென் பகுதியில், அல்லது எரகு மவேலரின் தென்பகுதியில் அல்லது கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன் என்பார்.
11.     தாவீது ஆண் பெண் எவரையும் உயிரோடு விட்டுவைப்பதில்லை: ஏ¦னினல் அவர்கள் யாராவது காத்துக்குச் செய்தி கொண்டுவந்தால், இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான் என்று மன்னரிடம் தம்மைப் பற்றித் தெரிவித்துவிடுவார்கள் என்று தாவீது நினைத்தார். அவர் பெலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த நாளில் இதுவே அவரது வழக்கமாய் இருந்தது.
12.     ஆக்கிசு தாவீதின் மேல் நம்பிக்கை வைத்தார்: ஏனெனில் அவர் இஸ்ரயேலராகிய தம் மக்களின் முழு வெறுப்புக்கு ஆளாகியுள்ளதால், அவர் என்றும் என் பணியாளராய் இருப்பார் என்று நினைத்தார்.

அதிகாரம் 28.

1.     அக்காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போர் தொடுக்க தங்கள் படைகளை உன்று திரட்டினார். அப்பொழுது ஆக்கிசு தாவீதிடம், நீரும் உம் ஆள்களும் என்னோடு போர்க்களம் வரவேண்டும் என்பதை அறிந்து கொள்ளும் என்றார்.
2.     அதற்குத் தாவீது ஆக்கிசை நோக்கி, உம் பணியாளன் செய்யப்போவதை நீர் அறிந்து கொள்வீர் என்றார். ஆக்கிசு தாவீதிடம், எனக்கு என்றும் மெய்க்காப்பளராய் இருக்ககும்படி உம்மை நான் நியமிக்கிறேன் என்று சொன்னார்.
3.     சாமுவேல் இறந்தார். இஸ்ரயேலர் அவருக்காகத் துக்கம் கொண்டாடியப்பின் அவரது நகரான இராமாவில் அவரை அடக்கம் செய்தனர். சவுல் சூனியாக்காரரையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தியிருந்தார்.
4.     பெலிஸ்தியர் ஒன்று திரண்டு வந்து சூனேமில் பாளையம் இறங்கினர். சவுல் இஸ்லயேரர் அனைவரையும் ஒன்று திரட்ட அவர்கள் கில்போவாவில் பாளைமிறங்கினர்.
5.     பெலிஸ்தியரின் படையைக் கண்ட போது சவுல் அச்சம் கொண்டார்: அவருடைய உள்ளம் பெரிதும் திகிலுற்றது.
6.     சவுல் ஆண்டவரிடம் ஆலோசனைக் கேட்க, ஆண்டவர் கனவு மூலமோ, ஊரிம் மூலமோ அவருக்கு பதிலளிக்கவில்லை.
7.     பின்பு சவுல் தம் பணியாளரிடம் குறி சொல்லும் ஒரு பெண்ணை என்னிடம் அழைத்து வாருங்கள்: நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும் என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, இதோ ஏன்தோரில் குறி சொல்பவர் ஒருத்தி இருக்கிறாள் என்றார்.
8.     சவுல் மாறுவேடமிட்டு வேற்றுடைஅணிந்து கொண்டார். அவரும் அவருடன் இரு ஆள்களும் இரவில் புறப்பட்டு அப்பெண்ணிடம் சென்றனர். அவர் அவளை நோக்கி, ஏதாவதொரு ஆவியின் துணைக்கொண்டு குறிகேட்டுச் சொல். நான் பெயரிட்ச சொல்பவனை எனக்காக எழுப்பு, என்றார்.
9.     அப்பெண் அவரை நோக்கி,சவுல், சூனியக்காரர்களையும் குறிச்சொல்பவர்களையும் நாட்டிலிருந்து துரத்தி விட்ட செய்தியை நீர் அறிவீர்: என்னைக் கொல்லத்தானே இப்பொழுது என் உயிருக்குக் கண்ணிவைக்கிறீர்? என்றாள்.
10.     அதற்கு சவுல் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! இது குறித்து எத்தண்டனையும் உனக்கு வராது! என்று ஆண்டவர் மேல் ஆணையிட்டுக் கூறினார்.
11.     பின்பு அப்பெண், நான் உமக்காக யாரை எழுப்ப வேண்டும்? என்று கேட்க, அவர் சாமுவேலை எழுப்பு என்று பதிலளித்தார்.
12.     அப்பெண்ணின் பார்வையில் சாமுவேல் பட்டவுடன் உரத்த குரலில் கதறி, நீர் தாமே சவுல், ஏன் என்னை ஏமாற்றினீர்? என்று சவுலை நோக்கிக் கூறினாள்.
13.     அதற்கு அரசர் அவளை நோக்கி, அஞ்சாதே நீர் பார்ப்பது என்ன? என்று கேட்க அதற்கு அவள் சவுலிடம், நிலத்திலிருந்து ஒரு தெய்வ உருவம் வெளிவருவதைக் காண்கிறேன் என்றாள்.
14.     அவர் அவளிடம் அவள் தோற்றம் என்ன? என்று கேட்க அவள் முதியவர் ஒருவர் எழுந்து வருகிறார். அவர் ஒர் போர்வை அணிந்திருக்கிறார், என்றாள். அவர் சாமுவேல் தான் என்று சவுல் அறிந்து முகம் குப்புறத் தரையில் வீழ்ந்து வணங்கினார்.
15.     அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி, என்னை எழுப்பி நீ ஏன் தொந்தரவு செய்கிறாய்? என்று கேட்க அதற்குச் சவுல் நான் பெரும் இக்கட்டில் இருக்கிறேன்? ஏனெனில் பெலிஸ்தியர் எனக்கெதிராக போர் தொடுத்து வந்துள்ளனர். கடவுள் என்னை விட்டு அகன்று சென்று விட்டார்: இறைவாக்கினர் மூலமாகவோ அவர் எனக்குப் பதில் சொல்வதில்லை: ஆதலால் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு அறிவிக்கும்படி உன்னை நான் அழைத்தேன் என்றார்.
16.     அதற்குச் சாமுவேல், ஆண்டவர் உன்னை விட்டு விலகி என் பகைவராய் மாறியப்பின் என்னிடம் ஏன் ஆலோசனைக் கேட்கிறாய்?
17.     ஆண்டவர் என் மூலம் உரைத்தது போல் உனக்குச் செய்தார்: அரசை உன் கையினின்று பறித்து உனக்கு அடுத்திருப்பவராகிய தாவீதிடம் கொடுப்பார்.
18.     நீ ஆண்டவர் வார்த்தையைக் கேளாமலும், அமலேக்கின் மேல் அவருக்கு இருந்த வெஞ்சினத்திற்கு ஏற்ப நீ நடந்துகொள்ளாமலும் இருந்ததால், ஆண்டவர் இன்று அதைச் செய்துள்ளார்.
19.     மேலும் ஆண்டவர் உன்னையும் உன்னோடு இருக்கும் இஸ்ரயேல் மக்களையும் பெலிஸ்தியரிடம் ஒப்புவிப்பார். நாளை நீயும் என் புதல்வர்களும் என்னுடன் இருப்பீர்கள்: ஆண்டவர் இஸடரயேல் பெலிஸ்தியர் கையில் ஒப்புவிப்பார்.
20.     சாமுவேலின் வார்த்தைகளினால் அச்சமுற்ற, சவுல் உடனே என்னை நெடுங்கிடையாய் விழுந்தார். மேலும் அவர் இரவு பகலாய் ஒன்றும் உண்ணாது இருந்தமையால் வலிமையற்றிருந்தார்.
21.     அப்பெண் சவுலிடம் நெருங்கி வந்து, அவர் மிகவும் கலக்கமுற்றிருப்பதைக் கண்டு அவரை நோக்கி, இதோ உம் அடியான் உம் சொல்லைக் கேட்டு, என் உயிரைப் பொருட்படுத்தாது நீர் சொன்ன உம் வார்த்தைகளுக்கு கீழ்ப் படிந்தேன்.
22.     ஆதலால் இப்பொழுது நீரும் உம் அடியான் வார்த்தைகளும் கேளும். நான் உமக்கு முன் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன். வழிப் பயணத்திற்கான வலிமையை நீர் பெறுவதற்கு அதை நீர் உண்ணும் என்றாள்.
23.     அதற்கு அவர் நான் உண்ண மாட்டேன் என்று மறுத்தார். அதனால் அவர் தரையிலிருந்து எழுந்து படுக்கையின் மேல் உட்கார்ந்தார்.
24.     அப்பெண் வீட்டில் ஒரு கொழுத்த கன்றுக்குட்டி வைத்திருந்தாள்: அதை விரைவில் அடித்து, மாவை எடுத்துப் பிசைந்து புளிப்பற்ற அப்பங்கள் சுட்டாள்.
25.     அவள் அவற்றை சவுலுக்கும் அவர்தம் பணியாளர்களுக்கும் முன்னே வைத்தாள். அவர்களும் உண்டனர்: பின்னர் அவர்கள் எழுந்து அன்றிரவே புறப்பட்டுச் சென்றார்.

அதிகாரம் 29.

1.     பெலிஸ்தியர் தங்கள் படைகளை எல்லாம் அபேக்கில் ஒன்றுத்திரட்டினார்: இஸ்ரயேலர் இஸ்ரயேலில் உள்ள நீருற்றின் அருகே பாளையம் இறங்கினார்.
2.     பெலிஸ்தியரின் தலைவர்கள் நூற்றுவர் படைகளுடனும் அணிவகுத்துச் சென்றார். தாவீது அவருடைய ஆள்களும் ஆக்கிசோடு கடைக்கோடியில் சென்றார்.
3.     அப்பொழுது பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் இந்த எபிரேயர் இங்கு என்ன செய்கின்றனர்? என்று கேட்க அதற்கு ஆக்கிசு அவர்களை நோக்கி, இஸ்ரயேலின் அரசர் சவுலின் பணியாளராய் இருந்த இந்தத் தாவீது பல நாள்களாக, ஆண்டுகளாக என்னோடு வந்ததுமுதல் இந்நான் வரை அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை என்றார்.
4.     ஆனால் பெலிஸ்திய படைத்தலைவர்கள் அவர்மீது சினமுற்று அவரை நோக்கி, நீர் குறித்துக் கொடுத்துள்ள இடத்திற்கே இந்தத் தாவீதை திருப்பி அனுப்பும்: நம்மோடு அவன் போருக்கு வரலாகாது. போரில் அவன் நமக்கு எதிராக எழலாம் அன்றோ? இவன் எதனால் தன் தலைவனோடு நல்லுறவு கொள்வான்? இங்கிருக்கும் ஆள்களின் தலைகளை வெட்டுவதால் அல்லவா?
5.     சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான்: ஆனால் தாவீது பதினாயிரம் பேரைக் கொன்றான் என்று சொல்லிப் பெண்கள் தங்களுக்குள் பாடி ஆடியது இந்த தாவீதைக் குறித்தது அன்றோ? என்றனர்.
6.     அப்பொழுது தாவீது ஆக்கிசு தாவீதை அழைத்து அவரிடம் வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நீர் நேர்மை மிக்கவர்: நீர் போருக்கு என்னோடு செல்வது சரியாக தோன்றுகிறது: ஏனெனில் நீர் என்னிடம் வந்தால் முதல் இறுதிவரை உம்மிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை. இருப்பினும் நீர் வருவதை தலைவர்கள் விரும்பவில்லை.
7.     ஆதலால் இப்பொழுது திரும்பிச் செல்லும்: பெலிஸ்தியரின் தலைவர்கள் மனம் வருந்துமாறு எதையும் செய்யாதீர். சமாதானமாயச் செல்லும் என்றார்.
8.     ஆனால் தாவீது அவரிடம் நான் செய்தது என்ன? நான் மன்னராகிய என் தலைவரும் எதிரிகளுடன் போரிட்டுச் செல்லாதவாறு நான் உம்மிடம் வந்தநாள் முதல் இன்று வரை, அடியேனிடம் நீர் கண்டது என்ன? என்று கேட்டார்.
9.     அதற்கு ஆக்கிசு தாவீதை நோக்கி, கடவுளின் தூதரைப் போல் நீர் என் பார்வையில் குற்றமற்றவர் என்று எனக்குத் தெரியும்: இருப்பினும் இவன் என்னோடு போருக்கு வரலாகாது என்று பெலிஸ்தியப் படைத்தலைவர்கள் சொல்கிறார்கள்.
10.     ஆதலால் உம்முடன் பிரிந்துவந்த உம் தலைவர் சவுலின் பணியாளர்களுடன் நீர் அதிகாலையில் எழுந்து விடிவதற்குள் புறப்பட்டுச் செல்லும் என்றார்.
11.     ஆதலால் தாவீது தம் ஆள்களுடன் அதிகாலையில் புறப்பட்டு பெலிஸ்திய நாட்டுக்கு திரும்பினார்: ஆதலால் பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்குச் சென்றனர்.

அதிகாரம் 30.

1.     மூன்றாம் நாள் தாவீது அவர் தம் ஆள்களும் சிக்லாவை அடைவதற்குள் அமலேக்கியர் நெகேபு: சிக்லாகு ஆகிய பகுதிகளைக் கொள்ளையடித்தனர். சிக்லாவைத் தாக்கி தீக்கிரையாக்கினார்.
2.     அங்கிருந்த பெண்கள் சிறியோர் பெரியோர் அனைவரையும் சிறைப்பிடித்து, ஒருவரையும் கொன்றுவிடாமல், அவர்களை கூட்டிக் கொண்டு தங்கள் வழியே சென்றனர்.
3.     தாவீதும் அவர்தம் ஆள்களும் நகருக்கு வந்த போது அது நெருப்பினால் அழிக்கப்பட்டிருப்பதையும், தங்கள் மனைவியர், புதல்வர் மற்றும் புதல்வியர் சிறைப்பட்டிருப்பதையும் அறிந்தார்.
4.     அப்பொழுது தாவீது அவருடன் வந்த மக்களும் வலிமை உள்ள மட்டும் ஓலமிட்டு அழுதனர்.
5.     தாவீதின் இருமனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம் பெண்ணான அபிகாயிலும்கூடச் சிறைக்கப்பட்டிருந்தனர்.
6.     தாவீது மிகவும் மன வருத்தமடைந்தார்: வீரர் அனைவரும் தங்கள் புதல்வர் புதல்வியர் பொருட்டு மிகவும் துயருற்றதால் அவரைக் கல்லால் எறிய வேண்டும் எனப் பேசிக் கொண்டனர். ஆனால் தாவீது கடவுளாகிய ஆண்டவரின் வலிமைப் பெற்றிருந்தார்.
7.     பின்பு தாவீது, அகிமலக்கின் மகன் அபயத்தாரிடம் ஏபோதை என்னிடம் கொண்டுவாரும்! என்று கூறவே அபியத்தார்ஏபோதைக் தாவீதிடம் கொண்டு வந்தார்.
8.     அப்பொழுது தாவீது, நான் கொள்ளைக் கூட்டத்தாரைப் பின் தொடரட்டுமா? நான் வெற்றி கொள்வேனா? என்று ஆண்டவரிடம் வினவினார். அதற்கு அவர் பின்தொடர்! நீ வெற்றியடைவது உறுதி! என்று பதிலளித்தார்.
9.     ஆதலால் தாவீது அவருடன் இருந்த அறுநூறு பேரும் புறப்பட்டு, பெசோர் என்ற ஓடைக்கு வந்தார். களைப்படைந்தோர் அங்கேயே தங்கிவிட்டனர்.
10.     எனவே தாவீது அவர்களை நானூறு பேரோடு அவர்களை பின்தொடர்ந்தார்: களைப்படைந்த இருநூறு பேர் பெசோர் ஓடையை கடக்க இயலாமல் அங்கேயே தங்கிவிட்டார்.
11.     வயல் ¦விளயில் ஓர் எகிப்தியனை கண்டு, அவனைத் தாவீதிடம் அழைத்து வந்தனர்: உண்பதற்கு அப்பமும் குடிப்பதற்கும் தண்ணீரும் கொடுத்தார்.
12.     மேலும் அவர்கள் அத்திப்பழ அடையின் ஒருத் துண்டையும், வற்றலான திராட்சைப்பழ அடைகள் இரண்டையும் அவனுக்கு கொடுத்தார். அவன் இதை சாப்பிட்டப்பின் புத்துயிர் பெற்றான். ஏனெனில் அவன் இரவு பகல் மூன்று நேரமும் உண்ணாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
13.     தாவீது அவனை நோக்கி, நீ யாரைச் சேர்ந்தவன்? எங்கிருந்து வருகிறாய்? என்று கேட்டார். அதற்கு அவன், நான் ஒர் எகிப்திய இளைஞன்: ஓர் அமலேக்கிய மனிதன் பணியாள்: நான் நோயுற்றதால் மூன்று நாள்களுக்கு என் தலைவர் என்னை விட்டுச் சென்றார்.
14.     நாங்கள் கிரேத்தியரின் தென்பகுதியையும், யூதாவின் தென்பகுதியையும் காலேபின் தென்பகுதியையும் கொள்ளையடித்துச், சிக்லாவைத் தீக்கிரையாக்கியிருக்கிறோம் என்று பதிலளித்தான்.
15.     தாவீது அவனிடம் அக்கொள்ளைக் கூட்டத்தாரிடம் என்னை அழைத்துச் செல்வாயா? என்று கேட்க என்னைக் கொல்லவோ அல்லது என்னை என் தலைவனிடம் ஒப்புவிக்கவோமாட்டீர் என்று ஆண்டவர் பெயரால் என்னிடம் ஆணையிட்டுக் கூறுங்கள்: அப்பொழுது அக்கூட் டத்தாரிடம் உங்களை அழைத்துச் செல்வேன் என்றான்.
16.     அவ்வாறே அவன் தாவீதை அழைத்துச் சென்ற போது, இதோ, தாங்கள் பெலிஸ்தியர் நாட்டினின்றும் யூதா நாட்டினின்றும் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை முன்னிட்டு அவர்கள் வெளியில் கும்பல் கும்பலாய் உண்டு குடித்து, நடனமாடிக் கொண்டிருந்தனர்.
17.     தாவீது அன்று காலை தொடங்கி மறுநாள் வரை அவர்களோடு போரிட்டார்: ஒட்டகங்கள் மீது ஏறிய நானூறு வீரர்களைத்தவிர அவர்களுள் ஒருவனும் தப்பவில்லை.
18.     அமலேக்கியர் கொண்டு சென்ற எல்லாவற்றையும், தாவீது மீட்டதுடன், தம் மனைவியர் இருவரையும் விடுவித்தார்.
19.     அவர்கள் சிறைப்பிடித்த ஒருவருள் சிறுவரோ முதியவரோ புதல்வரோ புதல்வியரோ எவரும் விடுபடாமல் அவர் மீட்டார். கொள்ளைப் பொருள்கள் அனைத்தையும் தாவீது மீட்க கொண்டு வந்தார்.
20.     ஆடு மாடுகள் எல்லாவற்ற¨யும் தாவீது கைப்பற்றினார். அந்தக் கால்நடைகளைத் தாவீதுக்குமுன் ஓட்டிவந்த மக்கள் இது தாவீதின் கொள்ளைப் பொருள் என்றார்.
21.     பின்பு களைப்பு மிகுதியினால் தாவீதைப் பின்தொடராமல் பெசோர் ஓடை அருகே தங்கிவிட்ட இருநூறு பேரிடம் தாவீது வந்தார்: அப்போது தாவீது அவரிடம் இருந்த மக்களையும் சந்திக்க எதிர் கொண்டு வந்தார். தாவீது மக்களை நெருங்கிபோது அவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறினார்.
22.     ஆனால் தாவீதோடு சென்றவர்களில் இருந்த தீயவர் மற்றும் கயவர் எல்லாரும், அவர்கள் நம்முடன் வராததால் நாம் மீட்டுக் கொண்டு வந்த கொள்ளைப் பொருள்களை ஒன்றும் அளிக்க மாட்டோம்: அவர்களுள் ஒவ்வொருவரும் தம் மனைவியையும் பிள்ளைகளையும் மட்டும் அழைத்துச் செல்லட்டும் என்றார்.
23.     அதற்கு தாவீது என் சகோதரர்களே, ஆண்டவர் நமக்கு அளித்துள்ளவற்றிலிருந்து இப்படியெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது:
24.     இதன் பொருட்டு நீங்கள் சொல்வதைக் யார் கேட்பார்கள்? ஏனெனில் போரிடச் செல்வோரின் பங்கு எவ்வளவோ அதே அளவு நான் போர் பொருள்களை காத்தவரின் பங்கும் இருக்கும் என்றார்.
25.     இந்த முறையை இன்று வரை உள்ளதுபோல், இஸ்ரயேலர் பின்பற்றும்படி தாவீது நியமக் கட்டளையுமாக ஏற்படுத்தினார்.
26.     தாவீது சிக்லாகுக்கு வந்த போது கொள்ளைப் பொருள்களின் ஒரு பகுதியை யூதாவின் பெரியோர்களான தம் நண்பர்களுக்கு அனுப்பிவைத்துக் கூறியது: இதோஆண்டவரின் எதிரிகளிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களுள் ஒரு பகுதியை உங்களுக்கு என் அன்பளிப்பாய் அனுப்புகிறேன் என்றார்.
27.     பின்வரும் தம் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்: பெத்தேல், இராமோத்தின் தென்பகுதி, யாத்திர் ஆகியவற்றில் இருந்தார்.
28.     அரோயேர், சிப்மேத்து, எசுத்தமோகு ஆகியவற்றில் இருந்தோர்.
29.     இராக்கால், எரகுமவேலரின் நகர்கள், கேனயரின் நகர்கள் ஆகியவற்றில் இருந்தோர்:
30.     ஓர்மா, பொராசான், அத்தாகு ஆகியவற்றில் இருந்தோர்:
31.     எபிரோனில் தாவீதும் அவர் தம் ஆள்களும் நடமாடிய எல்லா இடங்களில் இருந்தோர்.

அதிகாரம் 31.

1.     பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்: பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுக்கிட்டு ஓடினர்: பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்த்தினார்.
2.     பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர்.
3.     சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது: வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார்.
4.     அப்பொழுது சவுல் தம் படைவீரர்களை தாங்குவோனை நோக்கி, இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு, என்றார். ஆனால் அவருடைய படைக்கலன் தாக்குவோன் மிகவும் அஞ்சியாதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால் சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார்.
5.     சவுல் இறந்துவிட்டதைக் கண்ட அவருடைய படைக்கலன் தாங்கு வோனும் தன் வாள்மீது விழுந்து அவரோடு மடிந்தான்.
6.     இவ்வாறு சவுலும் அவரின் மூன்று புதல்வர்களும் அவருடைய படைக்கலன் தாங்குவோனும் மற்றும் அவர் ஆள்கள் எல்லோரும் அதே நாளில் ஒன்றாக இறந்தனர்.
7.     இஸ்ரயேல் புறமுதுகிட்டு ஓடிவிட்டனர் என்றும் சவுலும் அவர்தம் புதல்வர்களும் மடிந்தனர் என்றும் பள்ளத்தாக்கு அருகே யோனத்தானும் கிழக்கேயும் இருந்த இஸ்ரயேலர் கண்டபோது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டுவிட்டு ஓடினார். அதனால் பெலிஸ்தியர் வந்து அங்கே குடியேறினர்.
8.     வெட்டுண்டவர்களைக் கொள்ளையிடப் பெலிஸ்தியர் மறுநாள் சென்ற போது, சவுலும் அவரின் மூன்ற புதல்வர்களும் கில்போவா மலையின் மேல் ஏறி இறந்துகிடப்பதைக் கண்டார்கள்.
9.     அவர்களை சவுலின் தலையைக் கொய்து, அவர் படைக்கலன்களை எடுத்துக் கொண்டபின், தங்கள் சிலைகளின் கோவில்களிலும் மக்களிடையிலும் இந்தச் செய்தியை அறிவிக்கம் பொருட்டும், பெலிஸ்தியர் நாடெங்கும் தூதர்களை அனுப்பினர்.
10.     அவர்கள் அவர்தம் படைகலன்களை அஸ்தரோத்துக்கு கோவிலில் வைத்தனர். அவரது சடலத்தை பெத்சான் சுவரில் தொடங்கிவிட்டார்.
11.     பெலிஸ்தியர் சவுலக்கு செய்ததைக் கிலயாது நாட்டு யாபேசு நகர மக்கள் கேள்விப்பட்டபோது,
12.     அவர்களுள் வலிமை மிகு வீரர்கள் அனைவரும் இரவில் புறப்பட்டுச் சென்று, சவுலின் சடலத்தையும், அவர்தம் புதல்வர்களின் சடலத்தையும் பெத்சான் சுவரிலிருந்து இறங்கி யோபாசுக்குக் கொண்டுவந்து, அங்கே அவற்றை எரிந்தார்.
13.     பின்பு அவர்களுடைய எலும்புகளை எடுத்து யோபாசில் தமரிஸ்கு மரத்தின் அடியில் புதைந்துவிட்டு, ஏழு நாள்கள் நோன்பு இருந்தனர்.
தலைப்புக்கு செல்க